ஏப்ரல் 15, 2013

ஒரு வரி விமர்சனங்கள்


கும்கிகும்கி படம் பார்த்தாச்சு. நானும் ரொம்ப நேரமா கதை வரும், வரும்ன்னு காத்திட்டே இருந்தேனா...!

நாயகன் கும்கி. கொம்பன் antagonist; கும்கிக்கு அல்ல, மனிதர்களுக்கு. கொம்பன் வருவதை சிம்பாலிக்காவே காட்டிட்டு இருக்காங்க. கடேசில, கொம்பன் வந்தாரா! கொம்பனும் கும்கியும் க்ராபிக்ஸ்ல ஒரு மினி ஃபைட் போட்டு மனிதர்களின் சுயநலத்தை உணர்த்துறாங்க. இடையிடையே எங்களை எண்டர்டெயின் செய்ய ஒரு ஆணும் பெண்ணும் பாட்டு பாடுறாங்க.


நீதானே என் பொன்வசந்தம்


 
 
முதலாளித்துவப் பொருளாதாரம் உருவாக்கிய border line நடுத்தரவர்க்கம், சராசரிக்கும் மேலான நடுத்தரவர்க்கம் இதுபோன்ற பின்னணிகளிலிருந்து
வரும் இருவருக்கிடையே உருவாகும் காதலின் போராட்டங்களை (!!) அடியும் விளங்காமல், தலைப்பும் விளங்காமல்; பிரச்சனைகளின் மூலங்களைப் பேசாமல் எல்லோருமே ஏதோ flash back-monotone voice இல் பேசி ஒப்பேத்துகிறார்கள். கடுப்பேத்துகிறார்கள்.

காதல் சொல்ல வந்தேன்

பாதிக்கு மேல இயக்குனர் தான் என்ன சொல்ல வந்தேன்னு அவரே மறந்துட்டாரு போல. ஒரு பாட்டு என்ன, என்ன ஆகிறேன் அமைதியான இசையில் இயல்பாய் அழகாய் படமாக்கப்பட்டிருக்கு.

மங்காத்தா

அடி ஆத்தா, ஒண்ணுமே இல்லாத ஒரு கதைக்களத்துக்கு ஏகப்பட்ட சண்டை, குட்டை காற்சட்டைப் பெண்கள், கவர்ச்சி நடனம், த்ரிஷா, அஞ்சலி.

துப்பாக்கி

தமிழ் திரையுலகில் இதுபோல் கொடுமை எல்லாம் எப்பிடி படம்ன்னு அனுமதிக்கிறாங்களோ.
 
சமர்
 
ஏன்பா தமிழர்கள் அடித்துக்கொள்ள தமிழ் நாட்டில் ஒரு இடமா இல்லை. ஏன் பாங்காக், தாய்லாந்து என்றெல்லாம் போய் பணக்கார கேனத்தன விளையாட்டுகள். ஒரு த்ரில்லர் மசாலாவுக்குரிய அம்சங்கள் உண்டு சமரில்.
 
சரி, அப்படின்னா எந்தப் படம் தான் உனக்கு நல்லாருக்குன்னு கேட்கிறவர்களுக்கு.....
 
நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம்அரிதாரம் பூசிக்கொண்டு வயதை மறைத்தோ அல்லது மறைக்காமலோ காதலிக்க வேண்டும், டூயட் பாடவேண்டும், க்ராஃபிக்ஸ் இல் சண்டை போடவேண்டும், நாட்டைக் காப்பாற்றவேண்டும், ஏழைமக்களின் ஆண்டாண்டு கால அன்றாடப் பிரச்சனையை ஒரே காட்சியில் தீர்த்துவைக்க வேண்டும். இப்படி வியாபாரக் குறியீடுகளான நாயகர்களின் வேலைப்பளுக்கள் சினிமாவில் அதிகம்.

இதுபோன்ற சினிமாக்களே தேவையில்லை என்பதல்ல. அதை யதார்த்தபூர்வமாக காணமுடிவதில்லை அல்லது சொல்லப்படுவதில்லை என்பதே பொருள்.

இதிலிருந்து விலகி, இரண்டு வார்த்தைகளில் தீம் சொல்வதானால் கெழுதகை நட்பு, இதுதான் நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம். மிகவும் இயல்பாய் படத்தோடு ஒன்றிப்போய்ப் பார்த்தேன்.

எல்லாமே சிறப்பாய் இருந்தது என்று சொல்லத்தான் விருப்பம். ஆனால், இடையிடையே இசையில் வார்த்தைகள் தெளிவில்லாமற் போனதைத் தவிர்த்திருக்கலாம். அது கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது.

எல்லா நடிகர்களும், நடிகைகளும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். You are good looking, so you can get away என்பதைப் போலவே சினிமாவிலும் அழகாய் இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கு நடிப்பு வரவில்லை என்றாலும் அவர்களை மேலும் வளரவைத்து விடுகிறார்கள்.

நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் என்னைக் கவர்ந்தவர் சரஸ் என்கிற பிறேம் கதாபாத்திரத்தின் நண்பர் தான், good looking and acting well. அவர் பெயர் என்ன! இன்னும் நிறைய முயற்சிகளுக்கும், வெற்றிகளுக்கும் இந்த டீமுக்கு என் வாழ்த்துக்கள்.
 
Image: Google.

 

4 கருத்துகள்:

kaliya raj சொன்னது…

இத்தன படம் எத்தனநாளா பாத்தீங்க ரதி...இதுல துப்பாக்கி கும்கி வெற்றிபடம் சொன்னாங்க...நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாராட்டுனாங்க...

Rathi சொன்னது…

தவறு, இந்தப் படங்களெல்லாம் இங்கே தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது பார்த்தது, துப்பாக்கி, நீ.எ.பொ.வ., கும்கி, மங்காத்தா, கா.சொ.வ.

பெயரில்லா சொன்னது…

akka nanum நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் parthan nice flim ena

Siva sankar சொன்னது…

:)