ஏப்ரல் 12, 2013

அம்மணத் தமிழனும் அமெரிக்க தீர்மானமும்

ஈழம் குறித்த செய்திகளில் அவ்வப்போது ஏதோவொரு விடயம் எப்போதும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டிய தேவையை உருவாக்குகிறது யதார்த்த உலகம். நாங்கள் எம் அரசியல் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசும்போது எம்மண், எம்மக்கள் இன்னல்கள், எம் உரிமைகள் குறித்த ஆயிரம் பொய்யான கட்டுக்கதைகள் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டவர்களால் உருவாக்கப்படுகிறது. அதனாலேயே பேசிக்கொண்டே இருக்கவேண்டிய தேவை எமக்கிருக்கிறது.

செய்திகளை படிக்கும்போது அதுகுறித்த பழைய செய்திகள் நினைவுக்கு வருவதும் தவிர்க்கமுடியாதது எனவும் ஆகிப்போகிறது. ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையின் 22வது கூட்டத்தொடரில் ஐக்கிய அமெரிக்காவால் இலங்கை மீதான தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்பதை எழுதினாலும் தீராதது. என்னதான் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து அதன்படி படிப்படியாக அமெரிக்காவின் காலைப்பிடித்துக்கொண்டே தமிழீழம் கிடைக்க உழைக்கவேண்டும்....மன்னிக்கவும் உழல வேண்டும் என்று ஒருசாரார் சொல்கிறார்கள். அமெரிக்காவின் இலங்கை மீதான தீர்மானம் குறித்து படிக்கும் போது எப்போதும் மனதில் ஓடுவது இதுதான். இலங்கை அரசு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்கிற தமிழர்கள் - சிங்களர்க்களுக்கிடையேயான நல்லிணக்கம் போன்ற தீர்வு ஒன்றை போலியாக உருவாக்கி தமிழர்களை மேலும் உலக அங்கீகாரத்துடன் அழித்தொழிக்க மனித உரிமை அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தது. Human Rights Watch, Amnesty International, & International Crisis Group மூன்றுமே கூட்டாக இலங்கையின் அழைப்பை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் அங்கம் வகிக்க மறுத்தார்கள். கூடவே அதன் அமைப்பு சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இல்லை என்றும் அதில் அங்கம் வகித்தவர்கள் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கிடமானது என்றும் உலகிற்கு அறியத்தந்தார்கள்.

இதுபோன்ற குறைபாடுகளைக் கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் தான் அமெரிக்கா இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது போலி நாடகம் அன்று வேறென்ன! இதைத்தான் ஈழத்தமிழர்கள் ஆதரித்து, அமெரிக்கா கொஞ்சம், கொஞ்சமா தமிழீழம் என்கிற தீர்வை நோக்கி நகர வழிசமைக்கும் என்கிறார்கள். இதுபோன்ற நாடகங்களை நம்பாமல் அமெரிக்காவையோ அல்லது இந்தியாவையோ ஈழத்தமிழர்கள் விடயத்தில் விமர்சித்தால் எங்களுக்கு குற்றம் கண்டுபிடிப்பதே பிழைப்பு, உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்கிறது ஒரு தரப்பு. எதற்கெல்லாம் இந்நாட்களில் உணர்ச்சிவசப்படவேண்டும், உணர்ச்சிவசப்படக்கூடாது என்று யாராவது ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஒரு பட்டியல் கொடுத்தால் அதன்படி செய்யலாம். அல்லது அமெரிக்கா, இந்தியாவின் சதிகளை ஈழத்தமிழர்கள் விடயத்தில் பேசாதீர்கள்; அதைப் பேசிப்பேசி எங்கள் மனட்சாட்சிகளை உலுக்காதீர்கள் என்பதைத் தான் இப்படி எல்லாம் சொல்கிறார்களோ! இது அவர்களுக்கே வெளிச்சம்.
 
இந்த தீர்மானம் குறித்து பலராலும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்க தீர்மானம் குறித்த ஒரு ஏற்க்கக்கூடிய விளக்கத்தை இந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் ஆழி என்கிற ஒரு ஊடகத்தின் வழி சொல்லியிருந்தார் என்கிறது குளோபல் தமிழ் செய்திகள் தளம். அவர் கூறியதாவது இந்த தீர்மானம் 13 வது திருத்தச்சட்டத்தின் மாகாணசபை போன்ற ஒரு தீர்வையே முன்வைக்க முயல்வதாக சொல்கிறார். இதை ராஜபக்‌ஷேக்களுடன் சிங்கள பெளத்த பேரினவாதிகளே ஒத்துக்கொள்ள மாட்டார்களே! அது தானே வரலாறும். தவிர, இது ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதும் ஆகும் என்கிறார்.

மேலும், “இலங்கையில் சீனா நுழைந்ததால், இன்று தமிழ் மக்களின் புவிசார் அரசியல் மதிப்பு வலுவடைந்திருக் கிறது. இலங்கை விவகாரத்தில், அமெரிக்காவும் இந்தியாவும் சிங்கள அரசுக்கு எதிராகக் காய் நகர்த்த வேண்டும் என்றால் அவை தமிழர்களின் அரசியலைத்தான் கையிலெடுக்க வேண்டிவரும். இதனால்தான் தமிழர்களின் துய ரத்தை இன்று அவை ஜெனீவாவில் இலங்கையின் மீது நிர்பந்தம் தரப் பயன்படுத்திக் கொண்டுள்ளன.” இவ்வாறு கூறுகிறார் கஜேந்திரன் பொன்னம்பலம்.
 
இதைத் தொடர்ந்து, ஈழம், தமிழினப்படுகொலை என்றால் இப்போது தமிழகத்தின் மாணவர் எழுச்சியும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. தமிழனுகென்று ஒரு சர்வதேச மட்டத்திலான ஒரு ஊடகம் இல்லாத நிலையில் சமூகவலைத்தளங்கள் மட்டுமே தமிழக மாணவர் போராட்டம் பற்றி அறியமுடிகிறது. தமிழக மாணவர்கள் அவர்களின் கல்வி கற்றல், பரீட்சை எழுதுதல் போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்களை இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த மாணவர் போராட்டம் நடந்த ஆரம்ப காலங்களிலிருந்தே கவனித்துக்கொண்டிருந்த போது Wall Street Journal இணையத்தளத்தில் இது குறித்து இரண்டும் கெட்டானாக ஒன்றிரண்டு செய்திக் கட்டுரை எழுதியிருந்தார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்களை பேசாமல் வேறு ஏதேதோ பேசியிருந்தார்கள் சுரக்காய்க்கு உப்பில்லை என்கிற ரீதியில். இவர்கள் இவ்வாறு எழுதக்காரணம் தமிழகத்திலும் உள்ள IIT மாணவர்கள் மற்றும் சில ஊழியர்கள் தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு தெரிவித்த அடையாள உண்ணாவிரத, மனிதச்சங்கிலி ஆதரவே என்பது புரிந்தது.

தமிழக மாணவர்கள் போராட்டம் குறித்த இந்தியாவின் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் Economic & Political Weekly யில் எழுதிய கட்டுரை இது, A Tamil Spring? தமிழக மாணவர்களின் போராட்டத்தை தமிழக தி.மு.க. அ.இ.அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எப்படி கையாண்டது, கையாள்கிறது இப்போதைக்கு என்பது குறித்த வரலாற்று சிறுகுறிப்பு மற்றும் விளக்கங்களோடு தமிழர்களின் உரிமைகளைப் பற்றி மாணவர்களின் தெளிவான நிலைப்பாடு குறித்து யதார்த்த உண்மைகளைப் பேசுகிறார்கள்.
 
இது பிற்சேர்க்கை. பதிவு எழுதி 2 நாட்கள் கழித்து என் கண்ணில் பட்டது. இப்போது இங்கே சேர்த்திருக்கிறேன்.
 
இது Economic & Political Weekly, A Tamil Spring? பற்றி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேஸ் புக்கில் பகிர்ந்ததாக என் கண்ணில் பட்டது.

Thirumurugan Gandhi @ FB
Ugly and unethical editorial in EPW on eelam and student struggle. Cunningly portrays the struggle as fringe act. What do they mean by fringe?.. how can they ignore a honest demand for political settlement ?.. on the go EPW spill the venom, as it did in 2011 feb editorial abt fishermen killing and justifies it , by portraying the poaching as sole reason. They compare the demand for justice for a genocide equal to the poaching and spoiling of fishermen in eelam... or, do they ask justice for the killing of fish by fishermen as against killing of tamils? The entire north indian civil society or the so called progressive thinkers and activists of socalled india keeping an ugliest silence till date for eelam genocide. The corporate media and alternate media including epw, tehelka crying the brahminical india's voice and support the sinhala racism . Even u can find a dissent or alternate voice in US against its foreign policy, but in india almost all, from leftists to arundathi roy to nationalists to trade unionists, feminists, dalit thinkers, backward class champions , gandhians , revolutionaries and etc hesitate to question or to reject indian foreign policy and its complicity in genocide?... EPW, TEHELKA and others ignore the petrie report on UN and UN EXPERT COMMITEE report including norway findings. There was not even one honest debate happened in alternate media in north . I wonder where are those tamil intellectuals who contribute to indian media? starting from SVR, V.GEETHA, RAVIKUMAR. .... A dishonest editorial at its best from ex_ 'the hindu' employee and now editor of EPW.

இலங்கையில் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளுக்காக யார் யாரோவெல்லாம் போராடினார்கள். இருந்தும், ஒன்று இலங்கையின் பிடியில் அல்லது இந்தியாவின் செளகர்யங்களில் தஞ்சமடைந்ந்தார்கள். ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக இறுதிவ்ரை தாம் கொண்ட கொள்கையிலிருந்து விலகாமல் போராடியவர்கள் இன்று புவியியல், சுயநல மைய அரசியலில் அவரவர் அரசியல் நிலைப்பாடுகளுக்கேற்றவாறு முத்திரை குத்தப்பட்டு அவர்களின் நியாயமான போராட்டக் காரணங்களும் மழுங்கடிக்கப்படும் சதி தொடர்கிறது. எப்பொருள் யார் வாய் கேட்பினும் என்பது போல் ஈழத்தமிழர்கள் அமெரிக்கா-இந்தியாவின் போலி நாடகங்களை, போலித் தீர்மானங்களை ஆராய்ந்து உய்த்தறிவதே எதிர்கால நன்மைக்கு வழியமைக்கும். உலகின் எத்தனையோ இனங்களுக்கு, மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழி சுதந்திரம் பெறமுடியும் போது ஏன் ஈழத்தமிழர்கள் மட்டும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவுசீவிகள் பரிந்துரைக்கிறார்கள்!! அமெரிக்காவின் தீர்மானம் இலங்கையில் தொடர்ந்தபடி இருக்கும் தமிழின இனப்படுகொலையை தடுத்து நிறுத்தப்போவதில்லை. பிறகு, அதனால் தமிழருக்கு என்ன லாபம்!!
 
Image: Google.
 
1 கருத்து:

Rathi சொன்னது…