அக்டோபர் 22, 2012

புலிகள் ஏன் சரணடையவில்லை!


 
ஈழத்தில் இனப்படுகொலை உச்சமடைந்த காலத்தில் அதாவது முள்ளிவாய்க்கால் 2009 இன் முடிவிலிருந்து பெரும்பாலும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களால் கேட்கப்படும் கேள்வி; மற்றும் நோர்வேயின் தோல்வியடந்தவர் என விமர்சிக்கப்பட்ட சமாதானத்தூதுவர் எரிக் சொல்கெய்ம் போன்றோர் முதல் பிரபல ஊடகவியலாளரான Frances Harrison வரை பெரும்பாலும் சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்து ஊதுபவர்களின் வாய்ப்பாட்டு புலிகள் சரணடைந்திருந்தால் இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பது தான். ஆனால், தமிழக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் முதல் அரசியல் படிப்பில் ஆராய்ச்சி செய்யும் கார்த்திக் ஆர். எம் போன்றோரது தெளிவுபடுத்தல் என்பது, புலிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு சரணடைந்திருந்தால், சாட்சி இல்லாத இனவொழிப்பு என்றாலும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை உலகத்தின் கண்களுக்கு தெரியாமலேயே நிகழ்த்தப்பட்டிருக்கும். இன்னும் மோசமான இனப்படுகொலைக்குரிய ஏதுக்கள் தோன்றியிருக்கும் என்பது தான். ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கூட கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம். ஆனால், கடைசி வரை கொண்ட கொள்கைக்கு மாறில்லாமல் போராடியவர்கள் நியாயத்தை விலைபேசத்தான் எத்தனை பேர்!

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சீனிவாச ராவ் அவர்கள் நோர்வேயின் சமாதான தூதுவரிடம் கேட்ட கேள்வியில் தொக்கி நிற்கும் உண்மைகள் யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்துமுடிக்க தவறியதையே ராஜபக்‌ஷேவை கொண்டு இந்தியா முதல் சர்வதேசம் 2009 இல் நிகழ்த்தி முடித்திருக்கிறது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு State Acotors எனப்படும், ஈழத்தமிழர்கள் விடயத்தில், இலங்கை அரசை, அவர்களின் குற்றங்களை மூடிமறைத்து, Non-State Actors அதாவது ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை மட்டும் விமர்சிக்கும் வேலையையே எரிக் சொல்கெய்ம் முதல் சர்வதேச அறிவுசீவிகள் வரை செய்து கொண்டிருப்பது கூழ்முட்டை நியாயம் என்பதை விளக்குகிறார் சீனிவாச ராவ். புலிகள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு பூர்வீக மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அமையவே ஆயுதம் ஏந்திப்போராடினார்கள் என்பதை நாங்கள் எத்தனை முறை உரக்கச் சொன்னாலும், அதையே அமெரிக்காவின் தற்போதைய ராஜாங்க திணைக்களச் செயலர் கிலாரி கிளிண்டன் வரை முன்னாளில் சொல்லியிருந்தாலும் அதை எல்லாம் தமிழர்கள் மறந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இவர்கள் அடிக்கும் சாயத்தையே நாங்களும் பூசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போல. இதையே சர்வதேசத்துக்கு வசதியாக ஒத்து ஊதும் தமிழின இணையப்போராளிகளை ஏன் சீனிவாச ராவ் சுட்டவில்லை என்பதும் வருத்தத்திற்குரியது.
 
 

தமிழக அரசியல் சூழலில் தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ப.சிதம்பரம், தமிழ் உணர்வாளர் பழ. நெடுமாறன் வரை நிகழ்த்தி முடித்த, நிகழ்த்துகிற அரசியல் கூத்துகள் இந்திய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உடந்தையாவதை விளக்குகிறார். மனித உரிமைகள் காப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற சர்வதேச அமைப்புகளாலேயே கூட்டாக குறைபாடுகள் உடைய கட்டமைப்பு, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அமைக்கப்படவில்லை என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அதன் அறிக்கையை அறிக்கையை ஏற்க மறுத்தன. அந்த அறிக்கை மூலம் ஈழத்தமிழர்களின் உரிமைகள் கிடைக்கும் எனவும், அதன் மூலம் எங்களின் இன்னல்கள் தீரும் என்று அமெரிக்கா சொல்வதற்கு தலையாட்டும் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் செய்யவேண்டியதையும், புலம்பெயர் குடியுரிமை சமூகம் செய்யவேண்டிய கடமைகளையும் விளக்குகிறார். மிகுதி காணொளியில்.

 
 
Images: Google
 

4 கருத்துகள்:

துஷ்யந்தன் சொன்னது…

ரதியக்கா இப்பொழுது எல்லாம் உங்கள் பதிவுக்கு கருத்துடவே எனக்கு கொஞ்சமும் இஸ்டம் இல்லை :((

பின்னே என்ன எத்தன வாட்டிதான் சூப்பர், கலக்கல், நன்று என்று சொல்லீட்டே போவது.... இதை தாண்டி உங்கள் பதிவுகளை விமர்சிக்க எனக்கு அறிவு காணாதே.....

உங்கள் ஒவ்வொரு பதிவும் விலை மதிப்பற்ற ஒவ்வொரு பொக்கிஷங்கள்... என்னமா எழுதுறீங்க... பொறாமையா இருக்கு......

புலிகள் பற்றி சில அறிவு ஜீவிகள் இந்த காரணம் சொல்லி விமர்சிக்கும் போது முடிந்தளவு வாதாடி பல இடங்களில் தோற்று உள்ளுக்குள் வெம்பி உள்ளேன் ... :((

ஆனால் இனி எனக்கு சந்தோசம் திருப்தி ... இனி அந்த உத்தமர்களை விமர்சிப்பவர்களுக்கு பதிலை உங்கள் இந்த பதிவின் லிங்கை கொடுத்து முடித்துகொள்வேன்... தேங்க்ஸ் அக்கா

Rathi சொன்னது…

துஷி, நான் காணொளியில் உள்ளதை, உண்மையை சொன்னேன். புலிகள் சிலர் பா. நடேசன், புலித்தேவன் போன்றோர் சரணடைந்ததன் பலன் தான் தெரியுமே. ஆனால், புலிகள் தொடர்ந்து போராடாமல் சரணடைந்திருந்தால் எல்லாமே ரகசியாமாய் போயிருக்கும். இழப்பும் வெளியில் தெரிய நேர்ந்திருக்காது. இதே போன்ற கருத்தை தான் அரசியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

நைஜீரியாவில் ஒரு மக்களுக்காகப் போராடிய ஆயுதக்குழுவுக்குப் பின் பிரச்சனைகள் இன்னும் மோசமடைந்திருப்பதாக முன்னர் இணைத்த காணொளியில் கார்த்திக் ஆர். எம். முதல் கலாநிதி ஆன்டி வரை சொல்கிறார்கள். ராஜபக்‌ஷேக்களும் அதை பின்பற்றலாம் என்று நினைத்திருப்பார்கள். இதற்கு முந்திய பதிவில் உள்ள காணொளியையும் பாருங்கள். புரியும்.

Kaliya Raj சொன்னது…

ரதி தங்களின் நலமறிய ஆவல்...

விடுதலைபுலிகள் பிரச்சனை தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழகதலைவர்கள் பேசினால் ஒழிய வெளிவராத ஒன்று. தமிழக அரசியலில் பேச ஒன்றும் இல்லை என்றால் இதை முன்னெடுப்பார்கள்.

ஈழத்தமிழர்கள் பற்றி உண்மை யில் அக்கறைப்படுபவர் மனதில் உறுத்தல் தொடர்கிறது.

கருணாநிதி அவ்வப்போது ஈழத்தை கையிலெடுத்து தன்னுடைய இருப்பை தக்கவைக்க முயல்கிறார்.Rathi சொன்னது…

தவறு, வாங்க, வாங்க :) எங்கே தலைமறைவாயிட்டீங்க ரொம்ப நாட்களாக. நலமா !

ம்ம்... அரசியல்வாதிகள் ஈழப்பிரச்சனையை தேவைப்படும்போது மட்டும் கையிலெடுப்பார்கள். அதான் பிரச்சனையே.