செப்டம்பர் 20, 2012

கருத்துகளால் வனையப்பட....!

விடுதலை ஒரு அழகான உணர்வு. பற்றுகளால் கட்டுகளால் பிணைக்கப்பட்ட மானுடவாழ்வில் விடுதலை பகுத்தறிவால் பிரித்துணரப்படுவது. வாழ்வின் பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது விடுதலை ஆகுமா! பதில் நான் சொல்லத்தேவையில்லை. பிரியமுமில்லை. அது அவரவர் அனுபவம். அரவங்களற்ற காற்றுவெளியில் கைகளிரண்டும் அகலப்பரப்பி உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும், திசுக்களிலும் பிராணவாயுவை நிரப்பிக்கொள்ளும் தருணங்கள் அலாதியானது. என்னை என்னுள் உணரும் தருணங்கள் அவை. வாழும்போதே விடுதலை என்பது இதுதானோ என்னும் உள்ளுணர்வு அது.
 
எப்போதும் பரபரப்பாய் ஓடும்வாழ்வில் விடுதலை  என்பது உணர்வுக்குப் புறம்பாக செயல் குறித்த நோக்காய் அமைந்துவிடும் தருணங்களும் உண்டு. மாறாக, விடுதலையானது உணர்வாகவும், புறவாழ்வின் சிக்கல்களிலிருந்து விடுபடும் நோக்காகவும் ஆகிப்போகிற இரட்டைநிலையான சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. விடுதலை அறிவால் உணரப்பட்டு, புறநிலைகளை எப்போது அலுப்புகளின்றி ஒதுக்கித் தள்ளமுடிகிறது என்று யோசிக்கிறேன்.

அன்றாடவாழ்வில் கட்டுகள் என்பது அரசியல், பொருளாதார, சமூக காரணிகளோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன. மனிதவிடுதலை என்பது தத்துவசித்தாங்களால் கட்டியமைக்கப்படுவதாகவும், அதே சித்தாங்களுக்கு கொடுக்கப்படும் வடிவங்களே அதை (மனிதவிடுதலையை) புறக்கணிக்கும் துர்ப்பாகிய நிலைக்கு தள்ளப்பட்டு தன்னைமட்டுமே நிருவ முற்படும்போது குழப்பங்கள், இழப்புகள் நிறைந்ததாகவும் ஆகிப்போகிறது. அதற்கு வரலாற்று நிகழ்வுகள் நிறைய உண்டு. இதுபற்றி அவ்வப்போது சிந்தனைகள் எனக்குள் ஓடினாலும் இப்போதெல்லாம் ஆங்காங்கே சமூகதொடர்பாடல் வலைகளில் இதுகுறித்து நிறைய கருத்துகள், எதிர்ப்புகள், சமநிலைக்கோட்பாடுகள் என்று பேசவும், கேட்கவும் நேரிடுகிறது.

அரசு, அரசின் கொள்கைகள், அரசின் நிறுவனங்கள் அவற்றின் நிர்வாக செயற்திறன் இவை பற்றியெல்லாம் அறிவூட்டல்களாய் பாடசாலையில் படிப்பது வேறு. அது ஏட்டுச்சுரக்காய். அதையே படித்து முடித்து வேலைச்சந்தையில் வேலை தேடி நிஜத்தில் பொருத்திப் பார்க்கும் போது தான் அதன் இடைவெளிகள், குறைபாடுகள் புரியத்தொடங்கும். யதார்த்தம் முகத்தில் அறையும். அது ஒருவகை. இன்னோர் வகை என்வரையில் எழுத்து, இலக்கியம் எனப்படும் கருவி மூலம் கடத்தப்படும் கொள்கைகள். சில நேரங்களில் வாசிப்பவனும், அரசியல் அறிவற்றவனும் கருத்துகளால் வனையப்படவே இலக்கியம் புனையப்படுகிறதென்பது வருந்தத்தக்கது. எழுத்தை படைப்பவர்களும், பெரும்பாலும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் யாருடைய அங்கீகாரம் வேண்டி எழுதுகிறார்கள், யாருக்காக எழுதுகிறார்கள் என்றும் யோசிக்கவைப்பார்கள்.


நேரம் கிடைக்கும் போது மட்டுமே வாசிக்கும் பழக்கம் என்னுடையது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எனக்குள் இந்தப் பதிவு குறித்த சிந்தனையை விட்டுச்சென்றவர்கள் எய்ன் ராண்ட் (Ayn Rand). இவரின் எழுத்தையும் அதிகம் படித்ததுமில்லை. அதேபோல், அதை விமர்சிக்கும் அளவுக்கு என்னிடம் இலக்கிய போதமையின் போதாமை! இருந்தும் அரசியல் நோக்கில் இவரது எழுத்தில் தூக்கி நிறுத்தப்படுவது Ethical Egoism என்கிற எண்ணம் தவிர்க்கமுடியாதது மட்டுமல்ல, அதுவே இவர் எழுத்து  பற்றிய உண்மையும் என்கிறார்கள் விமர்சகர்கள். எந்த எழுத்தாக இருந்தாலும் அந்த எழுத்தையும் மீறி எதுவோ ஒன்று அறிவை துருத்தினால் அதை கடந்து செல்லமுடிவதில்லை.

எய்ன் ராண்டின் எழுத்தில் என்னை உறுத்தியது அவரது கட்டுப்பாடுகளற்ற பொருளாதார செயற்பாடுகள் குறித்த கதாபாத்திரங்களின் உருவாக்கம். இதுவே இவர் முதலாளித்துவத்தின் கலப்படமற்ற வடிவமான Laissez Faire (தலையிடாமைக் கொள்கை) குறித்த வலியுறுத்தல்களே. எனக்குப் புரிந்தவரையில் அரசானது பொருளாதார கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தாமல் தனியாரை சுதந்திரமாக செயற்பட விடவேண்டும் என்பதே அது. அதாவது தொழில் நிறுவனங்களுக்கிடையேனா இயல்பான போட்டிகளே அவர்களை அரசகட்டுப்பாடுகளை விட கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என்பதே.

20ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியை ஒட்டி அமைந்த கூட்டு முயற்சிகள், கூட்டு அமைப்புகள், கொள்கைகள், விதிகளால் அது தன் வலுவை இழந்தது. மெய்யியல் அல்லது தனிமனிதத்துவம் என்று நோக்கினால் Ethical Egoism (அறவழி தன்முனைப்பாக்கம்) என்பதை எய்ன் ராண்ட் வலியுறுத்துகிறார். ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறமாகும் என்னும் ஒரு மெய்யியல் நிலைப்பாடு (விக்கிபீடியா). மனிதர்களை அவர்கள் இஷ்டப்படி செயற்படவிட்டால் தன்னலம் சார்ந்து அறவழியில் செயற்படுவார்கள் என்பதுதான் அது. எய்ன் ராண்ட் தனிமனித உரிமைகளை காத்திரமாக வலியுறுத்தினாலும், பலாத்தாகரம் மூலம் எதையும் திணிப்பதை எதிர்த்தாலும் அவரது Laissez Faire, தலையிடாமை கொள்கை என்பது சரியான ஒன்றல்ல என்பது பலரது கருத்து. Laissez-Faire, 18ம் நூற்றாண்டு சொற்பதத்தின் இன்றைய மறுவடிவம் திறந்த சந்தைபொருளாதாரம்.  முதலாளித்துவத்தில் முதலாளிகள் அரசின் கட்டுப்பாடுகள் இருந்தோ, இல்லாமலோ சுதந்திரமாய் செயற்பட்டு இன்று உலகமே பொருளாதார வங்குரோத்து நிலையில் உள்ளது.


இலக்கியம் என்பது எப்போதும் சமூகம் சார்ந்து, மக்கள் நலன்சார்ந்து மட்டுமே பேசும், எழுதும் என்று எல்லா நேரமும் நம்பிக்கையோடு படிக்க முடிவதில்லை. கதாபாத்திரங்களின் இயல்புகளோடும், கதையோட்டத்தோடு மெய்மறந்து ஒன்றிப்போனால் அதில்  புதைக்கப்பட்ட அரசியல் தெரியாமலே மாற்றுக்கருத்துகள் உருவாக்கப்படும். கருத்துகளால் வனையப்பட்ட சமூகம் உருவாக இலக்கியம் ஓர் கருவி என்றால் அதை தொடவும் ஒருவிதமான பயம் மட்டுமே மிஞ்சுகிறது. அரசியல் கலப்படம் இல்லாத இலக்கியம் தேர்ந்தெடுத்துப் படிக்க ஆசைப்பட மட்டுமே முடிகிறது அது எய்ன் ராண்ட் முதல் ஜெயமோகன் வரை.
 
Images: Google
 
 

10 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…


//விடுதலை ஒரு அழகான உணர்வு. பற்றுகளால் கட்டுகளால் பிணைக்கப்பட்ட மானுடவாழ்வில் விடுதலை பகுத்தறிவால் பிரித்துணரப்படுவது. வாழ்வின் பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது விடுதலை ஆகுமா! பதில் நான் சொல்லத்தேவையில்லை. பிரியமுமில்லை. அது அவரவர் அனுபவம். அரவங்களற்ற காற்றுவெளியில் கைகளிரண்டும் அகலப்பரப்பி உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும், திசுக்களிலும் பிராணவாயுவை நிரப்பிக்கொள்ளும் தருணங்கள் அலாதியானது. என்னை என்னுள் உணரும் தருணங்கள் அவை. வாழும்போதே விடுதலை என்பது இதுதானோ என்னும் உள்ளுணர்வு அது. //
வாவ்...
very good starting
நான் இந்த முதல் பத்தியை மட்டும்தான் படித்தேன் அடுத்த பத்தியை படித்து சிந்தனை கலைவதற்குள் ஒரு பாராட்டு,நன்றி :)
அந்த படத்தில் இருக்கும் சிறுமி ரதிதானே(குறியீடு ),,,:)

Rathi சொன்னது…

வேர்கள், நன்றி. :))

துஷ்யந்தன் சொன்னது…

என்னமோ போங்க ரதியக்கா நமக்கு இந்த இலக்கியம் எல்லாம் தெரியாது :( படிச்சதும் இல்ல... நாம படிப்பது எல்லாம் சாண்டிலன் புத்தகமும் விகடன் வார இதழும்தான் இவ்ளோ தான் நம்மளோட தமிழ் அறிவு :((

இலக்கியம் எல்லாம் படிக்க ஆசைதான் புரிந்தால்தானே :(((((

இவ்ளோ நாளா எங்கே போயிருந்தீங்க என்று கேட்டு இருந்தீங்க அக்கா :)))

இலங்கை போயிருந்தேன்.... சின்ன வயசில் பிரான்ஸ் வந்ததுக்கு இதான் முதல் இலங்கை பயணம் :(((

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா அக்கா :(((

Rathi சொன்னது…

துஷி, இலக்கியம் என்று தனியா படிக்க ஏதுமில்லை. சில அம்சங்கள், நியமங்களை எழுத்து கொண்டிருந்தால் அது இலக்கியம் அப்பிடி நினையுங்கோ :)) வேறஒண்டுமில்லை.

ம்ம்ம்..... பார்த்தேன் உங்க படங்களை. ஊர் எப்பிடி இருக்கு! அப்புறம் கல்யாணம் ஆச்சா :))

துஷ்யந்தன் சொன்னது…

நீங்க சொன்னால்தான் சரிதான் அக்காச்சி :))))

ஊர் நல்லா இருக்குன்னு சொல்ல முடியாது அக்காச்சி, வெளி நாட்டவர் அதிகம் போகும் இடங்களை தெரிந்து குள்ள நரித்தனத்துடன் அவற்றை மட்டுமே திருத்தி இருக்கிறார்கள் அக்கா, மற்ற உள்ளூர் இடங்கள் இன்னும் யுத்த வடுக்கலோடேயே :(((

எப்படி இருந்த இடம்.... ஹும் என்று பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழி இல்லை :(((

எனக்கு கல்யாணம் இன்னும் ஆகல்ல ரதியக்கா ஆனால் பேசியாச்சு... பொண்ணு மச்சாள்தான் :)))

முடிந்தால் உங்கள் மெயில் அட்ரஸ் அனுப்பி விடுங்கோ எங்கள் இருவர் போட்டோ அனுப்பிவிடுகிறேன்... (ரதியக்காவுக்கு காட்டோணும் என்றொரு ஆசைதான்)

ஏனோ தெரியாது எனக்கு உங்களையும் ஹேமா அக்காச்சியும் ரெம்ப ரெம்ப பிடிக்கும்... முன் ஜென்ம தோற்பாய் இருக்குமோ ரதியக்கா .... :)))

Rathi சொன்னது…

துஷி, ம்ம்ம்..... அப்பிடித்தான் சொல்லினம் பொதுவா. வெளிநாட்டில இருந்து போற ஆட்களோட ஆமியும் அதிகம் பிரச்சனைப்படுறதில்லையாம். ஊரில் இருப்பவர்களுக்கு பிரச்சனைதான் என்று.

ஹேமா சொன்னது…

ரதி...வாசிச்சேன்.என்னிடம் இப்போதெல்லாம் வாசிப்புக் குறைந்தேவிட்டது.வாசிப்பு மேய்ச்சல் மட்டுமே.உங்கள் பதிவு வாசித்தால் அதில் உங்களைக் கண்டுகொள்வேன் !

என்னவாம் துஷிக்குட்டி.....உவர் ஊரையாமோ பார்க்கப் போனவர்.சும்மா ரதி.புழுகிறார் கள்ளர் !

Rathi சொன்னது…

ஹேமா, உங்கள் இந்தப் பதிலை இப்பத்தான் கவனித்தேன் :)

//உவர் ஊரையாமோ பார்க்கப் போனவர்.சும்மா ரதி.புழுகிறார் கள்ளர் ! //

ஓம், ஹேமா :) மின்னஞ்சல் தாங்கோ என்றார். இங்கே போட்டிருந்தேன். ஆனால் பதில் இல்லை. அதான் எடுத்திட்டன் :)

அது சரி இவர் எதுக்காம் ஊருக்கு போனவர் ஹேமா :))

துஷி, உண்மையைச் சொல்லோணும் :)

துஷ்யந்தன் சொன்னது…

ஆஹா......
ஹேமா அக்காச்சி மாட்டியா விடுறீங்க இருங்கோ இருங்கோ அப்புறம் உங்கள வைச்சுக்கிறேன் :(((

ரதியக்காச்சி நான் ஜெஸிய பார்க்க போனேனாம் அத்தான் சொல்லுறாங்க... ஆவ்வ்.... இதில் 20 வீதம் தான் உண்மை.... மறுபடியும் ஆவ்வ்.....

துஷ்யந்தன் சொன்னது…

அப்புறம் உங்க மெயில் ஜடி போட்டதை நான் கவனிக்கல்ல அதற்குள் நீங்க எடுத்துட்டீங்களா ??? ஆவ்வ்.......
சரி சரி
என்னோட இந்த மெயில் ஜடிக்கு ( thusyanthan01 @gmail .com ) ஒரு ஹாய் போடுங்க நான் போட்டோ சென்ட் பண்ணி விடுறேன் .. ப்ளீஸ்