செப்டம்பர் 12, 2012

கோத்தபாயவுக்கு மனநோயா!!

 

கோத்தபாயவும் Royal Puppy யும்!

 
நேற்று ஒரு செய்தி கண்ணில் பட்டது இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷேவுக்கு மனநோயா என்று. சரி, என்னதான் பார்க்கலாம் என்று நூல்பிடித்துப்போனால் சில அதிர்ச்சி தரும் உண்மைகள்.
 
இலங்கையில் ராஜபக்‌ஷேக்களை அரசியல், ராணுவ ரீதியாக ஓரளவுக்கு துணிச்சலுடன் விமர்சிப்பது சண்டே லீடர் என்கிற ஆங்கிலப்பத்திரிகை. இப்பத்திரிகையின் ஃபவுண்டரும் எடிட்டருமான லசந்தா விக்ரமதுங்கே வின் அகால மரணம் இன்றும் கூட சர்வதேச அளவில் பேசப்படும் ஓர் அதிர்ச்சி கலந்த மரணம். அவர் வழியில் அவரது மரணத்திற்குப் பிறகு அவரது பதவியை அப்பத்திரிகைக்காக செய்து வருபவர் Frederica Jansz என்கிற பெண் பத்திரிக்கையாளர். ஃப்ரிடெரிகா பெற்ற ஊடகவியலாளர் விருதுகள் இவை. Zonta Woman of the Year in Media and Mass Communication” in 2002, and “Journalist of the Year and English Journalist of the Year” in 2004.
 
சரி, கதைச்சுருக்கம் இதுதான். ராஜபக்‌ஷேவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலருமான கோத்தபாய ராஜபக்‌ஷேவின் மனைவிக்கு சூரிச்லிருந்து ஒரு நாய்க்குட்டியை இறக்குமதி செய்ய முடிவெடுத்து அதை இலங்கைக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ராஜபக்‌ஷேக்களின் விமான அதிகாரியாகப் பணிபுரியும் Niece, மதினி சந்திரதாச (பெறாமகள்) மற்றும் அவரது காதலன், ப்ரவீன் விஜயசிங்கே இருவரது சொந்தப்பொறுப்பில் விடப்பட முடிவெடுக்கப்பட்டது. பிரச்சனை என்னவென்றால் ப்ரவீன் விஜயசிங்கே A340 விமானத்தை ஓட்ட பயிற்சிபெற்றவர் அல்லவாம். அதனால், A330 ஐ தேர்ந்தெடுத்து விமானத்தை அதன் அளவை குறைத்திருக்கிறார்கள். அப்படிக்குறைத்தால் ப்ரவீன் விஜயசிங்கே கோத்தபாய ராஜபக்‌ஷேவுக்கு நாய்க்குட்டியை மதினி பத்திரமாக கொண்டுவந்து சேர்க்க ஏதுவாயிருக்கும் என்பது தான் காரணம்.நாட்டின் போருக்குப் பின்னான பொருளாதார சூழ்நிலை காரணமாக இது குறித்து செய்தி வெளியிட முன்னர் ராஜபக்‌ஷேக்களிடம் அது குறித்து உறுதிப்படுத்த சண்டேலீடர் பத்திரிகையின் எடிட்டர் ஃப்ரிடெரிகா ராஜபக்‌ஷேக்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் ராஜபக்‌ஷேக்களிடம் நாய்க்குட்டி கொண்டுவருவது தொடர்பாக நடந்த விடயங்களை தெளிவுபடுத்தி செய்தி வெளியிடுவது தொடர்பாக ஏதோ கேட்கப்போக அவர்கள் இருவரும் சகட்டுமேனிக்கு பத்திரிகையாளரை வசைபாடியிருக்கிறார்கள். ஒரு அரசை கட்டியாளும் இருவரது பேச்சும் ப்ரயன் செனிவிரட்னே அவர்களின் பார்வையில் விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
 
இதையெல்லாம் ஓரளவிற்கு சண்டே லீடர் பத்திர்கையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் அது குறித்து அவுஸ்திரேலியாவில் வாழும் மருத்துவர் ப்ரையன் செனிவிரட்னே அவர்கள் கோத்தபாயவுக்கு மனநோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாக தன் தளத்தில் எழுதியது கண்ணில் பட்டது.
 
மருத்துவர் ப்ரையன் செனிவிரட்னேவின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட மிகச்சில பகுதிகள் இவை. முழுவிவரத்துக்கு இணைப்பை படிக்கவும்.
 
A Medical assessment
The possibilities are that the Defence Secretary has:
  1. A Medical problem
  2. A Psychiatric disorder
  3. A Personality problem
A Medical problem.
To write him off as ‘nuts’ or ‘crazy’ is unacceptable, nor is it wise to refer him to a psychiatrist (as a first step). In a dvd I am just recording of a talk I gave in New York, Sydney and several other places in Australia, “Mental Disorders as seen by a Physician in Internal (General) Medicine”, I have set out the dangers and the traps. I have stressed that patients who seem, at first blush, to have a mental illness, must first be checked by a Physician, if serious problems are to be avoided.
Psychiatric conditions
One thing is certain: the Defence Secretary has delusions of grandeur. This “I am not afraid of bloody Courts, I can bring an elephant if I so choose, I will put you in jail” etc are not ‘normal’.
So also is his decision to bomb hospitals in the Tamil North and East, with patients in them (as documented in the dvds I have recorded which have visual clips of his interview inLondon). This “I-can-do- what-the-hell-want attitude”, “the Geneva Convention can go to hell” – are delusions of grandeur.
There is also not the slightest doubt that he is prone to outbursts of rage that are not appropriate, to the ‘provocation’ and entirely inappropriate to the position he holds.
Let me walk you through some of the medical terms in language you can understand.
 
The ‘Bible’ of Psychiatry, the DSM (Diagnosis and Statistical Manuel of Mental Disorders) now in its 4th Edition, which is about to be updated to the 5th Edition, defines 6 subtypes of delusions. The most important one here is the Grandiose subtype.
 
Grandiose delusions (GD)
Grandiose delusions are states where the person believes that he/she is the greatest, richest (it might actually be true here), and/or the most intelligent person ever. There is an inflated opinion of power, knowledge, and identity. They are characterised by fantastical beliefs that one is famous, omnipotent, and very powerful (which might not be a delusion in this case). They often have a supernatural or science-fiction theme.
GDs occur in a wide range of mental disorders including manic states, schizophrenia, substance abuse and some medical conditions.
 
மருத்துவர் செனிவிரட்னே அவர்கள் கோத்தபாயவின் பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு அதன் தாக்கத்தை, கோத்தபாயவுக்கு இருக்கக்கூடிய, மருத்துவ உதவியுடன் அணுகவேண்டிய பிரச்சனைகள் என்று அவரது துறைசார் அறிவின் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். இந்தச் செய்தி நிச்சயம் அரசியல் ரீதியாக எந்த மாற்றத்தையும் கொண்டுவருமா தெரியவில்லை. ஆனால், தமிழர்களின் மனோநிலை இச்செய்தி குறித்து யாவரும் அறிந்ததே.
 
 

16 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

//தமிழர்களின் மனோநிலை இச்செய்தி குறித்து யாவரும் அறிந்ததே//
:))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

இவர், தொலைக்காட்சி நிருபர்களைப் பார்த்து பயங்கரமாக டென்சனானதை ஒருமுறை செய்தியில் பார்த்திருக்கிறேன்.

--

இக்பால் செல்வன் கருத்துக்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

Rathi சொன்னது…

வேர்கள், அதானே Highlight :))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

இவருக்கே இப்படி என்றால், நேரடியாகப் போரில் ஈடுபட்டு கொடுஞ்செயல்கள் புரிந்த ராணுவத்தினரின் மனநிலை என்னவாக இருக்கும்?

Rathi சொன்னது…

ஷங்கர், அவர் BBC தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி என்று நினைக்கிறேன். பின்ன, அவர் எவ்வளவு உண்மைகளை மறைக்கவேண்டும் பேசும் போது. அதான் அப்படி ஒரு பதட்டம்.

இவருக்கு அதெல்லாம் மனநோய்க்குரிய அறிகுறிகள் என்று மருத்துவர் ப்ரையன் சொல்கிறார் :)

Rathi சொன்னது…

ஷங்கர், சிங்களராணுவம் என்றாலே அதானே முத்திரை, கொடூரம்.

ராஜ நடராஜன் சொன்னது…

பிரடெரிக்கா,கோத்தபய நாய் சண்டை ரொம்ப பழைய ஊசிப்போய் நூலும் கோர்த்துக்கொண்ட பழைய வடை.

சண்டே லீடர்,கொலம்போ டெலகிராஃப் போன்றவை தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.

Rathi சொன்னது…

ராஜநட, வாங்க :) அது ஊசிப்போனாலும் ஏனோ ருசியா இருக்கிறமாதிரி இருக்கு.

ராஜ நடராஜன் சொன்னது…

சிலரின் பேட்டிகளைக் காணும் போது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட அவர்களின் உடல் மொழி என்ன சொல்கிறது என்பதை கவனிப்பது மிகவும் முக்கியம்.உதாரணமாக முஷ்ரஃப்,கோத்தபய போன்றவர்கள்.

கோத்தபயவின் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியின் தடுமாற்றம் சும்மா இருந்த விரல்கள் மேசையிலிருந்த பென்சிலை உருட்டுவதில் தெரிந்தது:)

Rathi சொன்னது…

ராஜ நட, Yes, Non-verbal communication and cues அது கோத்தபாய ஒரு பொய்யர் என்பதை அப்பட்டமாகவே காண்பிக்குது.

நாம சொல்றதை விட Brian Senewiratne போன்றோர் சொன்னா எடுபடுது.

ஹேமா சொன்னது…

என்ன ரதி...எனக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வருது.அவர் சொல்லித்தான் அந்தாளுக்கு விசரெண்டு தெரிய வந்ததோ....ஹிஹிஹி.அந்தக் கூட்டத்துக்கே எப்பவோ விசர் பிடிச்சுத்தானே தமிழன்ர இரத்தத்தைக் குடிச்சுக்கொண்டு திரியுதுகள்.போனகிழமை அந்தக் கார்ட்டூன் கீறி தாங்கள் அப்படித்தான் விசர்பிடிச்சகூடமெண்டு நிரூபிச்சும் வச்சிருக்கினம் பிறகென்ன !

Rathi சொன்னது…

ஹேமா, நாங்க சொன்னா எதை நம்பினம் சொல்லுங்கோ :) பிரையன் சொன்னா எல்லாரும் ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளுவினம்.

நாங்களும் எத்தனை வருஷமா சொல்றம் இலங்கையில் நாங்க இனப்படுகொலை செய்யப்படுறம் என்று. யார் நம்பினம் சொல்லுங்கோ :) சொல்ல வேண்டிய ஆட்கள் சொன்னா அது நல்லது தானே.

துஷ்யந்தன் சொன்னது…

ஹாய் ரதியக்கா நலமா ??
ஜ ஆம் துஷி வந்திருக்கேன் :)) ஹீ ஹீ

எண்ட ஹேமா அக்காச்சி சொன்னது போல் அந்தாளுக்கு இப்போ புதுஷாவா விசர் பிடிச்சு இருக்கு...

எப்போ ஆட்சியில் அமர்ந்தானோ அப்பவே அந்தாள் முழு விசர் ..... :))

ரெம்ப ரசனையா சிரிச்சு சிரிச்சு படிச்சேன்... அந்தாளை நீங்கள் விசர் என்று சொன்னதில் அவ்ளோ சந்தோசம் எனக்கு :)))

Rathi சொன்னது…

துஷி, எங்கையப்பா ஆளையே காணேலை :))

நேற்றுத்தான் உங்க தளப்பக்கம் வந்து பார்த்தேன். மூணு தளம் வைத்திருக்கிறீர்கள். ஒரு தளத்தில் முல்லைத்தீவு கடலில் சூரியக்குளியல் போல, பக்கத்தில் யாரோ :)

ம்..... கோத்தபாயவுக்கு என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியும். எங்களுக்கு மட்டும் தெரிந்தது ஊருக்கும் தெரியத்தானே வேணும். தமிழர்களின் இரத்தத்தால் இந்துசமுத்திரம் சிவப்பாகட்டும் என்று சொன்னவருக்கு மூளை குழ்ம்பிவிட்டது என்றால் சந்தோசம் தானே!

துஷ்யந்தன் சொன்னது…

ஆஹா ... நம்ம பக்கமும் வந்திருக்கீங்க போல :)))

"துஷ்யந்தன்" மட்டுமே நான் அடிக்கடி எழுதும் தளம் மற்றது எல்லாம் ச்சும்மா ஹீ ஹீ

Rathi சொன்னது…

ம்ம்ம்.... உங்கட தளத்துக்கும் வந்தேன். வந்து சில படங்கள் பார்த்தேன் :)