ஆகஸ்ட் 04, 2012

தமிழக அரசியல் முதல் ஒலிபிக்ஸ் வரை

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அது அரசியல் முதல் கலை, விளையாட்டுப்போட்டிகள் வரை எங்கேயும் எப்போதும் பொருந்திவரும் போல. ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டிகளில் பதக்க வரிசையில் அமெரிக்கா, சீனாவின் முன்னணி களேபரங்கள். முன்னர் விவரம் புரியும் வரை விளையாட்டுப் போட்டிகளை, கலைகளை பொழுதுபோக்காகவும், அரசியலை கவன சிரத்தையுடனும் கவனித்ததுண்டு. காலமாற்றம், அரசியல் பொருளாதார சின்னாபின்னங்கள், காற்றுப்புகா இடங்களிலும் அரசியலின் ஊடுருவல், பொருளியல்வாழ்வின் தன்னிலை வளர்ச்சிக்காய் தத்தெடுத்துக் கொண்ட மேற்கத்தைய கலாச்சாரப் பண்புகளும் பண்பாடுகளும் என்று எல்லாமே இப்போது அரசியலையும் கேலிக்கூத்தாய் பொழுதுபோக்க மட்டுமே கவனிக்க வைக்கிறது.

பொழுது போக்க மட்டும் கவனித்து ஒன்றுமே ஆகப்போவதுமில்லை என்று சும்மா இருக்கவும் முடியாது. சும்மா இருத்தல் சுகம் என்று நினைக்க அரசியல் உரிமைகள் மறுக்கப்படாத நாட்டில் பிறந்திருக்க வேண்டும். அல்லது அடுத்தவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தன்னைத்தானே சமூகத்திலிருந்து பிரித்துப் பார்த்து திருப்தியடைந்து கொள்ளும் சுயநலமான சுயமுக விருத்தியடைந்திருக்க வேண்டும். அதுவும் இல்லையா சோற்றால் அடித்த பிண்டங்களாய் இதெல்லாம் புரிவதில்லை என்று விலகிப்போய்விட வேண்டும். இதில் ஒவ்வொருவரும் எங்கே இருக்கிறோம் என்பது அவரவர் மனட்சாட்சிக்குத் தெரியும்.

வெள்ளித்திரையில் தோன்றுபவர்கள் தேர்தல்  அரசியல் விஞ்ஞாபனத்திலும், விளையாட்டுகளில் வெற்றியீட்டியவர்கள் பல்தேசிய நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றுவதும் காலத்தின் வழுவன்று. இவர்களைப் போற்றும் பொருட்டு நானும் கூட்டத்தோடு ஐக்கியமாக வேண்டுமா! தமிழனை பொருளாதார அடிமையாய் இருப்பதானால் இரு இல்லையென்றால் புலம்பாதே என்கிற சர்வதேச அரசியல் எங்கேயோ போய்க்கொண்டிருக்க, தமிழர்களின் அரசியல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறதா! இந்தக் குண்டுச்சட்டி அரசியல் நடத்தும் தேர்தல் பிழைப்புவாத அரசியல்வாதிகளை நம்பி ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமையை காவுகொடுக்க முடியாது. கொள்கைகளின் குன்றுகளில் ஏறி நின்று கொடிபிடிக்கும் ஆர்வமும், ஆரவாரமும் இல்லாமல் ஏன் அரசியல் அபிலாசைகளை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போகிறது ஒரு சராசரி குடிமகனால். தத்துவ சித்தாங்களின் துணையின்றி அரசியலை சுத்தம் செய்யவே முடியாதா! இது போல் ஆயிரம் கேள்விகள். பதில் தெரியும், ஆனா தெரியாது!

கலைஞர் கருணாநிதி கையில் கிலுகிலுப்பை தான் டெசோ! அதை சோனியா காங்கிரஸ் புடுங்கிக்கொள்ளும் போது கலைஞர் வீல் என்று வீரிடுவார், ஐயகோ! நான் என்செய்வேன் என்று புலம்புவது போல் நாடகமாடுவார். தி.மு.க அமைச்சர் கனிமொழி குறீப்பிடுவது ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை மாநாட்டை எதிரிகளால் தடுத்து நிறுத்த முடியாதாம். தமிழீழ ஆதரவு காற்றோடு போய் இப்போது அது ‘வாழ்வுரிமை’ மாநாடு ஆகிவிட்டது. அது, இது, எது என்று தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி போல் தேர்தலில் வெற்றி பெற்றால் ஈழம் அமைப்பேன் என்றும், தி.மு.க. வா அல்லது அ.இ.அ.தி.மு.க.வா என்றும் முடிவெடு தமிழா என்று ஆட்சியில் அமர்ந்த தற்போதைய தமிழக முதல்வருக்கு தெரியும் தனக்கு வாக்களித்தவர்களை எப்படி ஞாபகமறதிக்காரர்கள் ஆக்குவதென்று. முன்னவர் மானாட மயிலாட மற்றும் இலவசங்களை கொடுத்தே அதை சாதித்தவர். பின்னவர், விலைவாசி ஏற்றத்தால், மின்தடையால் மூச்சுத்திணற வைப்பவர். இது போன்ற அரசியல் பொறியில் சிக்கிக்கொண்ட தமிழகத்தமிழர்களிடம்  ஈழத்தமிழனின் சுயநிர்ணய உரிமைக்காய் குரல்கொடுங்கள் என்று கேட்கவும், நினைக்கவும் கூட குற்ற உணர்வாய் தோன்றுகிறது. ஆனால், எப்படி எந்தவித குற்ற உணர்வுமின்றி அழிந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தை பகடைக்காயாக்கி அரசியல் நடத்தமுடிகிறது அரசியல் பிழைப்பு நடத்துபவர்களால். குற்ற உணர்வில் குன்றிப்போகாமல் ஈழத்தமிழர்கள் இன்னும் சர்வதேச அரசியல் முயற்சிகளில் முன்னேறிக்கொண்டிருப்பதும் ஒரு ஆறுதலே. விடுதலை வேண்டுவது என்ன கொலைக்குற்றமா!

எங்கள் சொந்த அரசியல் பிரச்சனைகள் இவ்வாறு இருக்க, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுபோட்டி நிகழ்வுகளும் அவை அரசியலாக்கப்படுவதும் நிறையவே பொழுதுபோக்காக, சுவாரஸ்யமாக இருக்கிறது. 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் இல் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் பதக்கம் வாங்குவதில் போட்டி சூடுபிடிப்பதற்குரிய ஆரவாரங்கள் நன்றாகவே தெரிகிறது. Ye Shiwen 16 வயதேயான சீனதேசத்து நீச்சல் வீராங்கனை 400m (400 metre Individual Medley, butterfly, breast stroke, & freestyle - ) நீச்சல் போட்டியில் சில கணப்பொழுதுகள் வித்தியாசத்தில் உலகசாதனையை முறியடித்து புதியசாதனை படைத்து தங்கப்பதக்கம் வாங்க அமெரிக்கா கொந்தளித்துப் போனது அமெரிக்க நீச்சல் குழுவின் தலைவர் வடிவத்தில். Ryan Lochte என்கிற அமெரிக்க வீரரின் சாதனையை கூட அது முறியடித்துவிட்டது தான் அதிர்ச்சிக்கு காரணமோ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் சிலர். நிலைமையை ஊதிப்பெருக்கவைத்த பெருமை அமெரிக்க ஊடகங்களையே சாரும்.

கொஞ்சக்காலமாகவே ஒருவர் விளையாட்டுப் போட்டிகளில் உலகசாதனை நிகழ்த்திவிட்டால் ஊக்கமருந்து பாவித்துவிட்டார், உடனே பரிசோதி என்கிற கூக்குரல்கள் கிளம்பிவிடும். அது தான் Ye விடயத்திலும் நடந்தது. இரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட Ye இன் இரத்தத்தில் ஊக்கமருந்தின் தாக்கத்திற்குரிய கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை என்பது தீர்ப்பாகிப்போனது. அமெரிக்காவின் Michael Phelps இப்போது 18 தங்கப்பதக்கங்களை வாங்கி குவித்திருக்கிறார். Ye ஐயை குற்றம் சொன்னவுடன், சீனதேசத்தவர்கள் நாங்கள் Being போட்டிகளில் Michael Phelps ஐ சந்தேகப்பட்டோமா என்று கேட்டார்கள். நியாயமான கேள்வியாய்ப் பட்டது எனக்கு.

உண்மையை சொன்னால் எனக்கு Ye Shiwen, Michael Phleps இருவர் பற்றியோ அல்லது அவர்கள் வெற்றி குறித்தோ அதிகம் அக்கறையோ, ஆர்வமோ ஏறபடவில்லை. இது போன்ற விளையாட்டுக்களில் ஏன் காலந்தொட்டு தகிடுதத்தங்கள் நடந்தேறுகின்றன என்பதே மனதில் ஓடியது. ஒலிம்பிக்ஸ் கூட வியாபாரம் தான் என்பது அதை நடத்த நாடுகளுக்கிடையேயான போட்டியும் அதுகுறித்த சர்ச்சைகளும் மறுபடியும் ஒருமுறை சமீபத்தில் நிரூபித்திருக்கின்றன.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க கண்ணில் பட்டது சீனதேசத்தில் எப்படி குழந்தைகள் ஒலிம்பிக்ஸ் பதக்கங்களுக்கு தயார்ப்படுத்தப்படுகிறார்கள் என்கிற படங்கள். திடீரென்று எங்கிருந்துதான் அதையெல்லாம் கண்டுபிடித்தார்களோ! யார் கண்டெடுத்தார்களோ! வழக்கமாக சீனா மேல் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நிறையவே உண்டு. இது போன்ற பதக்க கனவுகளுக்காக, சர்வதேசத்தில் சீனாவின் பெருமையை உயர்த்த குழந்தைகளை சீன அரசு தனியே பெற்றோரிடமிருந்து கூட்டிச்சென்று பயிற்சி கொடுத்து தயார்ப்படுத்துகிறார்கள் என்பதை பீயிங் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டிகளின் போது கேட்டும் பார்த்தும் இருக்கிறேன். சரியென்று, என் பங்கிற்கு என் சீனதேசத்து தோழியை கேட்டேன் இதுபற்றி. அவர் சொன்னார் பெற்றோர்கள் பணத்துக்காக அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு குழந்தைகளை பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். இவர்கள் வென்றுவிட்டால் பின்னர் விளம்பரங்களில் நடித்தும் மற்றும் புகழ் மூலம் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என்றார். சரி அதுதான் எழுதப்படாத விதியாயிற்றே!

ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், ஈழத்தில் என்று குழந்தைகள் உரிமைகள் பற்றி அக்கறைப்படாத அமெரிக்கா திடீரென்று சீனக்குழந்தைகள் மேல் கரிசனை கொள்ளும். ஈராக்கின் மீதான பொருளாதாரத்தடையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் அரை மில்லியன் (5 லட்சம்) என்கிறார்கள். உலகத்தின் தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகளை எம் ஈழத்துக்குழந்தைகளின் தலை மேல் ராஜபக்‌ஷேக்கள் கொட்டியபோதும் அமெரிக்கா துடிக்காமல் சீனத்தேசத்து குழந்தைகளுக்காக, அங்கே மீறப்படும் மனித உரிமைகளுக்காக துடிக்கிறது.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. சீனா உலகை ஆளும் காலம் வந்தால் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் என்ன நடக்கும் என்பதை காண நான் ஆவலாய் உள்ளேன். நான் மட்டுமல்ல என்போன்ற ஈழத்தமிழர்கள் அனேகரும்!

சரி, விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி மாட்டிக்கொள்ளும் ஊக்கமருந்து குறித்து பார்க்கலாம்.  Reuters செய்தித்தளத்தில் ஆரம்பகாலங்களில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெல்ல என்னவெல்லாம் சாப்பிட்டார்கள் என்று படித்த போது லேசா வயிற்றைப் பிரட்டுது. பழைய காலங்களில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரர்கள் தங்கள் ஹார்மோன்களை ஊக்கப்படுத்த மிருகங்களின் Raw Testicles ஐ சாப்பிட்டார்கள் என்கிறது Reuters செய்தி. Reuters, Ye இன் பெயரை தவிர்த்திருக்கிறதா அல்லது அவரது ஊக்கமருந்து குறித்த சர்ச்சைக்கு மறைமுகமாக பதில் சொல்கிறதா! எல்லாம் அரசியல் மயம்.

”As soon as the fight against stimulants and steroids began to produce results, potential cheats rapidly shifted towards blood doping in the 1970s and 1980s.”

”The IOC banned blood doping as a method in 1986, but was not able to put in place a reliable test for the blood drug erythropoietin (EPO) until the Sydney Olympic Games in 2000.”

இதெல்லாம் புதிதுமில்லை. இனிமேல் நடக்காது என்று யாரும் உத்தரவாதம் தரப்போவதுமில்லை. 1896 இல் ஒலிம்பிக்ஸ் தொடங்கிய நாள் முதல் அதன் வீரர்கள் ஊக்கமருந்தின் வடிவங்களாக எதையெதையோ பாவித்திருக்கிறார்களாம்.

”Now the World Anti-Doping Agency's "prohibited" list runs to hundreds of substances. And the liquid chromatography and mass spectrometry testing equipment at the London 2012 anti-doping lab can screen up to 400 samples a day for more than 240 banned substances in less than 24 hours.
Yet Olympic historians are sure dopers will always be ahead.”

ஒரு ஆத்மதிருப்திக்காய் திறமையுடன் விளையாடும் ஒரு விளையாட்டு வீராங்கனை, வீரரின் வெற்றியை கூட சந்தேக கண்கொண்டு பார்ப்பது மட்டுமல்ல, தகிடுதத்தம் செய்து வெல்லுபவர்களால் மற்றவர்களின் நிஜத்திறமையும் அடிபட்டுப்போகிறது.

ஒலிம்பிக்ஸ் முதல் கிரிக்கெட் வரை தகிடுதத்தங்கள் நடந்த வரலாறுகள் அந்த விளையாட்டுகள் குறித்த கசப்பையே உண்டாக்குகிறது. விளையாட்டுக்களில் வன்முறையும் பங்குவகிக்கிறது உதாரணம் Ice Hockey. விளையாட்டுகளில்  அரசியலும் தன் பங்கிற்கு ஆட்சி செலுத்துகிறது. அரசியல் தனியாய் கேலிக்கூத்து நடத்துவது வேறு. அது தனிப்பொழுதுபோக்கு. அரசியல், விளையாட்டு என்று எங்குமே எதிலுமே வெற்றி, புகழ் என்னும் போதை, பணம் என்னும் சன்மானம் தான் குறியாகிப்போகிறது.

நன்றி: படங்கள் Google, Google +

12 கருத்துகள்:

இக்பால் செல்வன் சொன்னது…

ஈழத் தமிழர்கள் பிரச்சனையை ஈழத் தமிழர்கள் அடுத்தவன் கைகளில் எடுத்துக் கொள்ள விட்டது தான் அவர்களின் மிகப் பெரியத் தவறாகும் ... !!!

ஈழத் தமிழர்கள் - ஈழ சிங்களவர்கள் என்னும் இரண்டு இனங்களுக்குள்ளான பிரச்சனை இது என்பதாக இல்லாமல் தமிழர் பிரச்சனை என காட்டமுயன்றது பல இடர்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது. இது இந்தியாவில் மற்றும் தென் ன் ஆதரவுகளை பெறுவதில் இருந்து ஈழத் தமிழர்களை அந்நியப்படுத்தி விட்டது.

ஈழப் போராளிகள் தமிழ்நாட்டின் கைகளை எதிர்ப்பார்தது மகா முட்டாள் தனம் .. தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் தவிர்த்து ஏனையோர் அனைவரும் சுயநலத்துக்காக மட்டுமே ஈழத் தமிழ் கண்ணீர் விட்டார்கள். இன்றைய சீமான் வரை தமது ஆதாயங்களுக்கே இவர்கள் கத்துவதும், கதறுவதும் ... !!!

ஈழத் தமிழர்கள் தம் அடை மொழியில் தமிழர்கள் என்பதை விடுத்து வேறு பொதுப் பெயருக்கு மாறி இருக்க வேண்டும் .. பாலஸ்தீன அரபுக்கள் .. பாலஸ்தீனியர் என்றே அறியப்படுவது போல.. இந்த தமிழ் அடைமொழி பல்வேறு குழப்பங்களை தமிழரல்லாதவரிடையே கொண்டுவந்துவிட்டது ... !!! இதனாலயே இந்தியாவின் பிற சமூகங்களில் ஈழப்போராட்டம் பதிவு செய்யப்படவே இல்லை.

இன்னொரு முக்கியமான விடயம் ஈழத் தமிழர்கள் ஈழ முஸ்லிம்கள் இருவரும் ஒரேத் தாயக்கதை, கலாச்சாரத்தை மொழியை பகிர்ந்துள்ள நிலையில் அவர்களுக்குள் ஏற்படாத ஒற்றுமையும் அவர்களின் பின்னடைவுக்கு காரணமாகும். தேங்க்ஸ் டு தமிழ் புலிகள் ~ தங்கள் பங்குக்கு மேலும் உடைத்துவிட்டார்கள் ... !!!

இரண்டு ஈழத் தமிழர்களின் பிரதேசவாதங்கள் .. யாழ்ப்பாணத் தமிழர்கள் தாம் மட்டுமே தலைவர்களாக வேண்டும் என்ற நப்பாசையில் பிரிவினைகளை வளர்த்துக் கொண்டார்கள்...

மூன்று தமிழ் புலிகளின் வறட்டுப் பிடிவாதங்களும், சித்தாந்தங்களும் பழமையானவை நிகழ் உலகின் நாடியை பிடித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள் ... !!! தமிழ் புலிகள் விடுதலைக் கோருபவர்கள் என்ற அடையாளத்தை தாமே இழந்து தீவிரவாதிகள் என்ற நிலைக்கு சென்றமை ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை பின்னடைய செய்தது ..

ராஜிவ் கொலை எல்லாம் தேவையான ஒன்றா ( உயிரோடு விட்டிருந்தால் அவனே ஊழல் கேசில் சிக்கி கோட்டுக்கும் வீட்டும் அலைந்திருப்பான் ) ! குழந்தைப் போராளிகளை அப்பட்டமாக படைகளில் இணைத்தது ! பத்திரிக்கையாளர்களை பகைத்துக் கொண்டது ! தலதா மாளிகை தான் கிடைத்ததா குண்டு வைக்க .. !! இப்படி பல தவறுகளை தம் பக்கம் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

கேபி என்னும் கள்ளக் கடத்தல் காரனை இயக்கத்தின் அங்கமாக்கி கடைசியில் அவனே காலை வாறிவிட்டது தான் மிச்சம். தமிழ் புலிகள் போதை மருந்து கடத்துவதாக சொன்னதுக்கு காரணமே கேபி தான்.. ஆனால் அவன் இன்ரு ஜாலியாக வாழ்கின்றார்..

இக்பால் செல்வன் சொன்னது…

யாழ்ப்பாணத் தமிழர்களின் இன்னொரு குணம் பிற சமூகங்களை துரோகி என சொல்லி பிரித்துவைப்பார்கள். ஆனால் அதே துரோகங்களை யாழ்ப்பாணத்தவர் செய்த போது கமுக்கமாகிவிடுவார்கள் .. !!!

முடிந்தது முடிந்துவிட்டது இனி பேசி பிரயோசனம் இல்லை என்னைப் பொறுத்தவரை இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பொருளாதாரத்தில் கல்வியில் முன்னேற வேண்டும் !!! இலங்கையின் மூலை முடுக்கு உட்பட உலகின் மூலை முடுக்கில் எல்லாம் உயர்பதவிகளில் நுழைய வேண்டும் .. அதே சமயம் தமது அடிப்படை குறிக்கோளில் இருந்து விலகாமல் தொலைதூர திட்டங்களை தீட்ட வேண்டும் ...

தயவு செய்து தமிழ்நாட்டில் ( மக்களிடம் இருந்து அல்ல ) இருந்து விலகிக் கொள்ளுங்கள் ... தமிழ்நாட்டின் சீமான் முதல்வர் ஆவார், வைக்கோ, திருமா பேசுவார் என்றெல்லாம் கனவு காண்பதை நிறுத்துங்கள் .. மொழியால் தமிழர்களானாலும் .. தேசியத்தால் தமிழ்நாட்டு தமிழர்களால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு ம... பிடுங்கித் தர முடியாது .. !!!

இந்தியா மற்றும் தென் கிழக்காசியாவின் பிற சமூங்களோடு உறவுகளைப் பேணுங்கள் .. !!! உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் உங்களால் எவ்வளவு அதிகமாக இலங்கைத் தீவில் இருப்போரின் பொருளாதாரங்களை மாற்ற முடியுமோ அதற்கு உதவுங்கள் .. உள்ளூரில் சக்தி இல்லாமல் வெளிநாட்டில் இருந்து விடுதலைக் காண முடியாது !!!

குறிப்பாக 1948 தொடங்கி இலங்கையின் தமிழர்கள் மக்கள் தொகை குறைந்துவிட்டது.. தயவு செய்து இலங்கையில் தமிழர்கள் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் ..அப்போது தான் இழந்த / புலர்ந்த மக்கள் தொகையை ஈடு செய்ய முடியும் ... !!!

இவை எல்லாம் எனது தனிப்பட்ட கருத்துக்களே ! நியாயம் எனப் பட்டால் அவற்றை உங்களுக்குத் தெரிந்தவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் .. உங்களுக்கான பசியை நீங்கள் தான் ஆற்றிக் கொள்ள முடியுமே ஒழிய !! அடுத்தவன் சாப்பாடு நமக்கு பசி நீக்காது .. தமிழ்நாடு என்னும் குட்டையை தாண்டி உலகம் என்ற கடலுக்குள் வாருங்கள் .. !!!ஈழத் தமிழர்கள் பிரச்சனையை ஈழத் தமிழர்கள் அடுத்தவன் கைகளில் எடுத்துக் கொள்ள விட்டது தான் அவர்களின் மிகப் பெரியத் தவறாகும் ... !!!

ஈழத் தமிழர்கள் - ஈழ சிங்களவர்கள் என்னும் இரண்டு இனங்களுக்குள்ளான பிரச்சனை இது என்பதாக இல்லாமல் தமிழர் பிரச்சனை என காட்டமுயன்றது பல இடர்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது. இது இந்தியாவில் மற்றும் தென் ன் ஆதரவுகளை பெறுவதில் இருந்து ஈழத் தமிழர்களை அந்நியப்படுத்தி விட்டது.

ஈழப் போராளிகள் தமிழ்நாட்டின் கைகளை எதிர்ப்பார்தது மகா முட்டாள் தனம் .. தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் தவிர்த்து ஏனையோர் அனைவரும் சுயநலத்துக்காக மட்டுமே ஈழத் தமிழ் கண்ணீர் விட்டார்கள். இன்றைய சீமான் வரை தமது ஆதாயங்களுக்கே இவர்கள் கத்துவதும், கதறுவதும் ... !!!

ஈழத் தமிழர்கள் தம் அடை மொழியில் தமிழர்கள் என்பதை விடுத்து வேறு பொதுப் பெயருக்கு மாறி இருக்க வேண்டும் .. பாலஸ்தீன அரபுக்கள் .. பாலஸ்தீனியர் என்றே அறியப்படுவது போல.. இந்த தமிழ் அடைமொழி பல்வேறு குழப்பங்களை தமிழரல்லாதவரிடையே கொண்டுவந்துவிட்டது ... !!! இதனாலயே இந்தியாவின் பிற சமூகங்களில் ஈழப்போராட்டம் பதிவு செய்யப்படவே இல்லை.

இன்னொரு முக்கியமான விடயம் ஈழத் தமிழர்கள் ஈழ முஸ்லிம்கள் இருவரும் ஒரேத் தாயக்கதை, கலாச்சாரத்தை மொழியை பகிர்ந்துள்ள நிலையில் அவர்களுக்குள் ஏற்படாத ஒற்றுமையும் அவர்களின் பின்னடைவுக்கு காரணமாகும். தேங்க்ஸ் டு தமிழ் புலிகள் ~ தங்கள் பங்குக்கு மேலும் உடைத்துவிட்டார்கள் ... !!!

இரண்டு ஈழத் தமிழர்களின் பிரதேசவாதங்கள் .. யாழ்ப்பாணத் தமிழர்கள் தாம் மட்டுமே தலைவர்களாக வேண்டும் என்ற நப்பாசையில் பிரிவினைகளை வளர்த்துக் கொண்டார்கள்...

மூன்று தமிழ் புலிகளின் வறட்டுப் பிடிவாதங்களும், சித்தாந்தங்களும் பழமையானவை நிகழ் உலகின் நாடியை பிடித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள் ... !!! தமிழ் புலிகள் விடுதலைக் கோருபவர்கள் என்ற அடையாளத்தை தாமே இழந்து தீவிரவாதிகள் என்ற நிலைக்கு சென்றமை ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை பின்னடைய செய்தது ..

ராஜிவ் கொலை எல்லாம் தேவையான ஒன்றா ( உயிரோடு விட்டிருந்தால் அவனே ஊழல் கேசில் சிக்கி கோட்டுக்கும் வீட்டும் அலைந்திருப்பான் ) ! குழந்தைப் போராளிகளை அப்பட்டமாக படைகளில் இணைத்தது ! பத்திரிக்கையாளர்களை பகைத்துக் கொண்டது ! தலதா மாளிகை தான் கிடைத்ததா குண்டு வைக்க .. !! இப்படி பல தவறுகளை தம் பக்கம் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

கேபி என்னும் கள்ளக் கடத்தல் காரனை இயக்கத்தின் அங்கமாக்கி கடைசியில் அவனே காலை வாறிவிட்டது தான் மிச்சம். தமிழ் புலிகள் போதை மருந்து கடத்துவதாக சொன்னதுக்கு காரணமே கேபி தான்.. ஆனால் அவன் இன்ரு ஜாலியாக வாழ்கின்றார்..

யாழ்ப்பாணத் தமிழர்களின் இன்னொரு குணம் பிற சமூகங்களை துரோகி என சொல்லி பிரித்துவைப்பார்கள். ஆனால் அதே துரோகங்களை யாழ்ப்பாணத்தவர் செய்த போது கமுக்கமாகிவிடுவார்கள் .. !!!

இக்பால் செல்வன் சொன்னது…

முடிந்தது முடிந்துவிட்டது இனி பேசி பிரயோசனம் இல்லை என்னைப் பொறுத்தவரை இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பொருளாதாரத்தில் கல்வியில் முன்னேற வேண்டும் !!! இலங்கையின் மூலை முடுக்கு உட்பட உலகின் மூலை முடுக்கில் எல்லாம் உயர்பதவிகளில் நுழைய வேண்டும் .. அதே சமயம் தமது அடிப்படை குறிக்கோளில் இருந்து விலகாமல் தொலைதூர திட்டங்களை தீட்ட வேண்டும் ...

தயவு செய்து தமிழ்நாட்டில் ( மக்களிடம் இருந்து அல்ல ) இருந்து விலகிக் கொள்ளுங்கள் ... தமிழ்நாட்டின் சீமான் முதல்வர் ஆவார், வைக்கோ, திருமா பேசுவார் என்றெல்லாம் கனவு காண்பதை நிறுத்துங்கள் .. மொழியால் தமிழர்களானாலும் .. தேசியத்தால் தமிழ்நாட்டு தமிழர்களால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு ம... பிடுங்கித் தர முடியாது .. !!!

இந்தியா மற்றும் தென் கிழக்காசியாவின் பிற சமூங்களோடு உறவுகளைப் பேணுங்கள் .. !!! உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் உங்களால் எவ்வளவு அதிகமாக இலங்கைத் தீவில் இருப்போரின் பொருளாதாரங்களை மாற்ற முடியுமோ அதற்கு உதவுங்கள் .. உள்ளூரில் சக்தி இல்லாமல் வெளிநாட்டில் இருந்து விடுதலைக் காண முடியாது !!!

குறிப்பாக 1948 தொடங்கி இலங்கையின் தமிழர்கள் மக்கள் தொகை குறைந்துவிட்டது.. தயவு செய்து இலங்கையில் தமிழர்கள் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் ..அப்போது தான் இழந்த / புலர்ந்த மக்கள் தொகையை ஈடு செய்ய முடியும் ... !!!

இவை எல்லாம் எனது தனிப்பட்ட கருத்துக்களே ! நியாயம் எனப் பட்டால் அவற்றை உங்களுக்குத் தெரிந்தவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் .. உங்களுக்கான பசியை நீங்கள் தான் ஆற்றிக் கொள்ள முடியுமே ஒழிய !! அடுத்தவன் சாப்பாடு நமக்கு பசி நீக்காது .. தமிழ்நாடு என்னும் குட்டையை தாண்டி உலகம் என்ற கடலுக்குள் வாருங்கள் .. !!!

வேர்கள் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வேர்கள் சொன்னது…

இக்பால் செல்வன்
// தமிழ் புலிகளின் வறட்டுப் பிடிவாதங்களும், சித்தாந்தங்களும் பழமையானவை நிகழ் உலகின் நாடியை பிடித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள் ... !!! தமிழ் புலிகள் விடுதலைக் கோருபவர்கள் என்ற அடையாளத்தை தாமே இழந்து தீவிரவாதிகள் என்ற நிலைக்கு சென்றமை ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை பின்னடைய செய்தது .. //
போரின் முடிவில் புரிந்துகொண்ட விடயங்கள் என்பது
வெற்றி என்பது எதிரியை வீழ்த்துவதில் அடங்கியில்லை மாறாக துரோகிகளை எப்படி கையாள்வது என்பதில்தான் அடங்கிருக்கிறது
நரிகள் ஆட்சி செய்யும் உலகில் புலிகளுக்கு அந்த கலை கைவராமல் போனதில் ஒன்றும் ஆச்சிரியம் இல்லை.....

வேர்கள் சொன்னது…

கருணாநிதி ஈழ பிரச்சனையை கையில் எடுப்பதென்பது ஒரு சுயநல அரசியல் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்
ஆனால் கருணாநிதியோ,ஜெயலலிதாவோ இது குறித்து எதுசொன்னாலும் தமிழ்நாட்டின் அனைத்து செய்தி ஊடகங்களும் அதற்க்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடுகின்றன, இதில் உள்ள அரசியலை புரிந்துகொள்ளமுடியாத பெரும்பாலான வெகு மக்களை சென்றடைகிறது....,பேச வைக்கிறது.....
பெ தி கா வின் தலைவர் கொளத்தூர் மணிக்கு கருணாநிதின் ஒவ்வொரு அங்க அசைவுக்கான அரசியல் காரணம் புரியாதவர் இல்லை ஆனால் டெசோ மாநாடு குறித்து அவர் அறிக்கை வெளியிட்டு இருப்பதின் நோக்கம் இந்த common people reach தான் காரணம் என்று நினைக்கிறேன் (அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்குத்து இருக்கிறது அது கருனநிதிக்குதான் தெரியும் ஏனென்றால் அவர் கோரும் தீர்மானகளைகூட கருணாநிதியால் நிறைவேற்ற முடியாது )

பெ தி கா வின் அறிக்கை
டெசோ நடத்தும் மாநாடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மத்தியில் ஆளும்கட்சியின் ஒரு அங்கமாக உள்ள தி.மு.க முன் முயற்சி எடுத்தும் இந்த மாநாடு குறித்து-ஈழத்தில் வாழும் தமிழர்களும் – புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் கவலையுடனும்,எதிர்பார்ப்புடனும் இந்த மாநாட்டு முடிவுகளுக்குக் காத்திருக்கிறார்கள்.தமிழ் ஈழ ஆதரவுஅமைப்பு நடத்தும் மாநாட்டில் தமிழ் ஈழம் குறித்து தீர்மானங்கள் எதுவும் வராது என்றுதி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட கருத்து – தமிழர்களுக்கு முதல்அதிர்ச்சியாகி விட்டது. தமிழ் ஈழம் குறித்த தீர்மானம் வரவில்லை என்றாலும் – குறைந்ததுகீழ்க்கண்ட முடிவுகளையாவது வலியுறுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

1. ஈழத்தமிழர்கள் – ஒரு தனித் தேசிய இனம்

2. அவர்களுக்குத் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளும் சுயநிர்ணயஉரிமை கோர உரிமை உண்டு.

3.2009 இறுதிப் போரில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே.

4. எனவே இனப்படுகொலைகள் நடந்த நாட்டில் அய்.நா வே முன்முயற்சி எடுத்துவாக்கெடுப்பு

நடத்தியதைப் போல் ஈழத்தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு நடத்தும் மாநாட்டில் தமிழீழம் பற்றிய தீர்மானம் இல்லைஎன்றாலும், வெறுமனே ஒரு பெரிய மாநாடு கூடிக்கலைவதாக அமைந்து விடாமல்ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் பயன்சேர்க்க வேண்டுமானால் இந்தக் கோரிக்கைகளையாவது தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கொளத்தூர் மணி

நாள்: 03.08.2012

Rathi சொன்னது…

வேர்கள், வழக்கம்போல் தெளிவான பார்வையும், வார்தைகளும், கருத்தும். நன்றி.

பெ. தி. க. அறிக்கையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

இக்பால் செல்வன் சொன்னது…

தமிழகத்தின் எந்தவொரு அமைப்புகளாலோ, கட்சிகளாலோ இலங்கைத் தமிழரின் பிரச்சனையை தீர்க்க முடியாது .... !!! சீமானாக இருந்தாலு சரி கொளத்தூர் மணியாக இருந்தாலும் சரி .. முடியாது என்பது தான் யதார்த்தம் .. ஈழத்தமிழர்கள் வேறு வழிகளைத் தான் தேட வேண்டும் ..

இக்பால் செல்வன் சொன்னது…

கனடா ஐயப்பன் கோவிலில் இந்திய பாடகர்களைக் காணக் கூடிய கூட்டத்தைப் பார்த்தால் ஈழத்தமிழர்கள் இலங்கை போர்களையும், அங்குள்ள பிரச்சனைகளையும் மறந்துவருவது போல தெரிகின்றது.

இக்பால் செல்வன் சொன்னது…

@ வேர்கள் - //போரின் முடிவில் புரிந்துகொண்ட விடயங்கள் என்பது
வெற்றி என்பது எதிரியை வீழ்த்துவதில் அடங்கியில்லை மாறாக துரோகிகளை எப்படி கையாள்வது என்பதில்தான் அடங்கிருக்கிறது
நரிகள் ஆட்சி செய்யும் உலகில் புலிகளுக்கு அந்த கலை கைவராமல் போனதில் ஒன்றும் ஆச்சிரியம் இல்லை //

துரோகிகளை உள்ளுக்குள் வைத்திருந்த பிரபா - பொட்டு அம்மானின் ராஜதந்திர தோல்வியே இந்த தோல்வியாகும் ... விடுதலைப் புலிகளில் பலரே குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்கள், மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இயக்கத்தில் இருந்தவர்களின் செயல்களை பிரபா சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. வெளிநாடுகளில் யுத்தக் காலங்களில் ஆயிரம் ஆயிரம் டாலர்களை திரட்டினார்கள். ஆனால் அவற்றில் பாதிக் கூட யுத்தக் களத்துக்கு செல்லவில்லை. கேபி என்பவர் மூலமாக ஆயுதங்களை அனுப்பும் படி கோரிய போதும் பல கப்பல்கள் வரவே இல்லை. அந்த கேபி போன்றோர் ஏற்கனவே சிங்கள அரசுக்கு விலை போய்விட்டதைக் கூட பிரபா உணரவில்லை ... !!!

வெளிநாட்டில் திரட்டப்பட்ட கோடிக் கணக்கான டாலர்கள் இங்கேயே தங்கிவிட்டது. அது இன்று கோயில்களாகவும், மால்களாகவும், வீடுகளாகவும் மாறிவிட்டன.. அதே போல விடுதலைப் புலிகளின் பல தலைவர்கள் சந்தித்து பேசிய போது மிகச்சரியா அந்த இடத்தினை தாக்கி அனைவரையும் கொன்றது சிங்கள ராணுவம். அது புலிகளுக்கு பெரும் பின்னடைவாகப் போனது. எப்படி கசிந்தது. உள்ளுக்குள் இருந்த துரோகிகளே.

கிளிநொச்சி வீழ்ந்ததுமே தோல்வியை உணர்ந்த பிரபா மக்களையும் புதுமாத்தளன் வரை கேடயமாக்கிக் கொண்டு போனது அவர் செய்த மகா தவறாகும் .. ஏனெனில் புதுமாத்தளனில் தான் சுமார் 80,000 தமிழர்கள் கடைசியில் செத்து மடிந்தார்கள்.

கிளிநொச்சி வீழ்ந்தவுடனே பிரபாகரன் மக்களை விட்டுவிட்டு தப்பி தலைமறைவாகி இருந்து இருப்பாயின் இன்று நம்பிக்கை என்ற அச்சாணியிலாவது ஈழத்தமிழர்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் கடைசியில் ஒன்றும் வக்கில்லாமல் ஒரு மாபெரும் தலைவன் இறந்துவிட்டது, தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை இன்மை ஏற்படுத்திவிட்டார்..

பேசினால் நிறைய பேசலாம் சகோ.

ஈழத்தமிழர்கள் தமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்யாத வரை .. ஒன்றும் நடக்கப்போவதில்லை .. அது அவர்களுக்கே நன்றாகத் தெரியும்

ஹேமா சொன்னது…

ரதியின் பதிவின் தெளிவைவிட...பின்னூட்ட அலசல் கண்கலங்க வைத்துவிட்டது !

Rathi சொன்னது…

//ரதியின் பதிவின் தெளிவைவிட...பின்னூட்ட அலசல் கண்கலங்க வைத்துவிட்டது //

ஹேமா, :))))