ஜூலை 18, 2012

நானும் கடிதம் எழுதுவேன்......
மாண்புமிகு முன்னாள் மற்றும் இன்னாள் தமிழக முதல்வர்களுக்கு,


நீங்கள் இருவரும் கடிதப்போராளிகள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம். உதாரணங்கள் காட்டி உங்களையே உங்களுக்கே நிரூபிக்க வேண்டியதில்லையே! நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதும் வல்லமை படைத்தவர்கள் என்பதும் இந்த நான் அறிந்தது தான். அப்பெருமைக்குரிய உங்கள் இருவருக்கும் ஒரு மடல் வரைந்தே ஆகவேண்டிய சூழ்நிலை எனக்கு.

இப்போது நான் உங்கள் இருவருக்கும் இந்தக் கடிதம் எழுதக் காரணம், உங்கள் பரிவாரங்களும், தொண்டர்களும், உங்கள் பாசக்காரப் பசங்களும் சமூகவலைத்தளங்களில் நிறையவே முட்டிமோதிக் கொண்டு பதட்ட நிலையை தோற்றுவிக்கிறார்கள். சில வேளைகளில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தாலே சொல்லடிபடுமோ என்கிற அளவு பதட்டநிலை.

யாராவது துணிச்சல் உள்ளவர்கள், உங்கள் அரசியல் அத்துப்படிகள் தெரிந்தவர்கள் பதில் தாக்குதல் தொடுத்தால் என்னைப்போன்றவர்கள் விசில் அடிக்கும் வசதி சமூகவலைத்தளங்களில் இல்லாததால் எங்கள் ஆதரவை, ஆதங்கத்தை எல்லாம் +1, Like இப்படி ஊமைப்பாசையில் கொட்டிவிட்டு நகர்ந்துவிட நேரிடுகிறது. இருந்தாலும் முடியவில்லை, you know.

நீங்கள் இருவரும் ஏன் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இவர்களுக்கு ஒரு கடிதம் எழுதக்கூடாது. எல்லோருக்கும் தனித்தனியே எழுதவேண்டும் என்கிற காலம் தான் மாறிவிட்டது என்பது அறிவுடமைப் பெருந்தகையீர் நீங்கள் அறியாததா! ஒரு கடிதம் எழுதி அதை நிறைய பிரதி எடுத்தும் அனுப்பலாமே. மனதில் பட்டதைச் சொன்னேன்.

தயை கூர்ந்து என் வேண்டுகோளை ஏற்று ஒரு கடிதம் எழுதுவீர்கள் என்று நம்பிக்கையுடன் இந்த கடித்தத்தை நீட்டாமல், முழக்காமல் முடிக்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

உண்மையுள்ள,

சமூகவலைத்தளத்தில் வேடிக்கை பார்த்தே பாதிக்கப்பட்ட தமிழர் சங்கம்.

12 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

வேடிக்கை பார்த்தே ரொம்ப பாதிக்கப் பட்டுட்டீங்க போலருக்கு... என்னைப் பொறுத்தவரைக்கும்... ஸேம் பிளட்! கடிதம் எழுதுவதில் வரலாறு படைத்த தமிழக முதல்வர்கள் உங்க விருப்பப்படி கடிதம் எழுதாமயா போய்டப் போறாங்க...?

Rathi சொன்னது…

பால கணேஷ், உங்கள் முதல்வருகைக்கு நன்றி.

இதுக்கும் கடிதம் எழுதுவாங்கன்னு நம்புவோம் :)

அகநாழிகை சொன்னது…

இயலாமையும், குற்றவுணர்ச்சியும் அற்ற வாழ்க்கையை சமகாலத்தில் வாழ்வது கடினம். அதன்பொருட்டுதான், வேடிக்கை பார்ப்பதும், விருப்பக்குறியிடுவதும், பகிர்வதும் செய்து கொண்டிருக்கிறோம்.. நல்ல பகிர்வு./அற்ப பதர் / இந்த பதப் பிரயோகத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

Rathi சொன்னது…

அகநாழிகை, நன்றி.

அற்ப பதர் என்கிற வார்த்தையை நீக்கியாயிற்று.

நன்றி வாசு சார்.

ரெவெரி சொன்னது…

+1 ned & Liked it...-:)

Rathi சொன்னது…

ரெவரி, :))

Ramani சொன்னது…

யாராவது துணிச்சல் உள்ளவர்கள், உங்கள் அரசியல் அத்துப்படிகள் தெரிந்தவர்கள் பதில் தாக்குதல் தொடுத்தால் என்னைப்போன்றவர்கள் விசில் அடிக்கும் வசதி சமூகவலைத்தளங்களில் இல்லாததால் எங்கள் ஆதரவை, ஆதங்கத்தை எல்லாம் +1, Like இப்படி ஊமைப்பாசையில் கொட்டிவிட்டு நகர்ந்துவிட நேரிடுகிறது. இருந்தாலும் முடியவில்லை, you know.//


பெரும்பாலான பதிவர்களின்
மன நிலையை மிக மிக அருமையாக
பதிவாக்கித் தந்தமைக்குமனமார்ந்த நன்றி

Rathi சொன்னது…

நன்றி ரமணி, வருகைக்கும், கருத்துக்கும்.

Siva sankar சொன்னது…

இப்படிக்கு,

உண்மையுள்ள,

சமூகவலைத்தளத்தில் வேடிக்கை பார்த்தே பாதிக்கப்பட்டோர் சங்கம்.//


தைரியமாய் எழுதும்
உங்களை வாழ்த்துகிறோம் ....

இப்படிக்கு வருத்த படாத வாலிபர் சங்கம்

Rathi சொன்னது…

சிவா, தைரியம் இல்லை அது. ICCPR - Article 19 பிரகாரம் எனது உரிமை, Freedom of Expression.


அப்புறம், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் உங்க பொழைப்பு எப்படி போகுது!

Avargal Unmaigal சொன்னது…

//சமூகவலைத்தளத்தில் வேடிக்கை பார்த்தே பாதிக்கப்பட்டோர் சங்கம். //

சமூகவலைத்தளத்தில் வேடிக்கை பார்த்தே பாதிக்கப்பட்ட தமிழர்கள் என்று வந்து இருக்க வேண்டுமோ???

Rathi சொன்னது…

Avargal Unmaigal, change is done. Thanks.