மார்ச் 19, 2012

பிக்குகளும் டாக்டரேட்.... பட்டமும்!இலங்கையில் கலாநிதி பட்டம் வாங்கித்தருவதாக Buddhist Monks, புத்தபிக்குகள் சிலரிடம் பணம் வாங்கி ஏமாற்றுவதை Sunday Times ஒரு நிருபர் மூலம் நிரூபித்துள்ளதாம். காஞ்சன குமார அரியதாசா என்கிற நிருபர் பத்திரிகை துறையில் பல சேவைகள் செய்ததால் கலாநிதி பட்டத்திற்கு தகுதியானவர் என்று பிக்குகள் ஏதேதோ சொல்லி இலங்கை ரூபாவில் 200, 000 பணத்தை ஒரு தபாற்கவரில் வைத்துக் கொடுக்கச்சொல்லி மாட்டிக்கொண்டார்களாம்.

அந்த நிருபர் பணம் குடுத்திருப்பாரா என்றால், நல்ல மென்மையான Jak (!) இலைகளை பணம் போல் அடுக்கி கவரில் போட்டு குடுத்திருக்கிறார் கலாநிதி பட்டம் கொடுக்கிறோம் என்பவர்களிடம். பணம் கொடுத்துவிட்டு போலியான கலாநிதிப்பட்டத்துடன் திரும்பி பார்க்காமல் மோட்டார் வண்டியில் ஓடிவிட்டாராம் நிருபர்.

பணம் வாங்கியவர் நிருபர் போனபின் கவரை பிரித்துப் பார்த்து இலைச்சருகுகளை கண்டு கைத்தொலைபேசியில் கூப்பிட்டு.......க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

இதெல்லாம் ஒரு பிழைப்பு.

http://www.sundaytimes.lk/120318/News/nws_12.html

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

நிறையத் திட்ட வருது...வேண்டாம் !

Rathi சொன்னது…

ஹேமா, என்னை திட்டுறதுக்கு உங்களுக்கு இல்லாத உரிமையோ. திட்டிட்டே போயிருக்கலாம் நீங்க :)

இதை எழுதினதுக்கு காரணம் பிக்குகள் எப்பிடி எங்களின் துன்பத்துக்கு காரணம் என்று நாங்கள் சொன்னால் யாருக்கும் புரியுமோ தெரியாது. பிக்குகளின் வண்டவாளம் இந்த சின்ன உதாரணம் மூலம் என்றாலும் உலகத்துக்கும் தெரியட்டுமே.

வியபதி சொன்னது…

எத்தனுக்கு எத்தன் என்பது இதுதானோ! ''சின்ன உதாரணம் மூலம் உலகத்துக்கும் தெரியட்டுமே'. --உண்மைதானே

ஹேமா சொன்னது…

ரதி...பாத்தீங்களே தெரிஞ்சுகொண்டே இப்பிடிச் சொல்லியிருக்கிறீங்கள்.ஒரு ஆசையாக்கும் என்னைக் கிள்ள.உங்களையே திட்டவெண்டு சொன்னனான்.புத்தம் சரணம் கச்சாமி சொல்லி உடம்பைப் போத்திக்கொண்டு உள்ளுக்குள்ள நாறிக்கொண்டு திரியும் நரிகளையெல்லோ....திட்டவச்சிட்டீங்கள்.இன்னும் திட்டக் கிடக்கப்பா !

Rathi சொன்னது…

வியபதி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Rathi சொன்னது…

ஹேமா, அது விளங்கின மாதிரியும் இருந்திச்சு, விளங்காதமாதிரியும் இருந்துச்சு. ஆனா, இவையளிண்ட புத்தம், சரணம், கச்சாமி வண்டவாளம் தான் இப்போ கொழும்பில எங்களுக்கு எதிரா ஊர்வலம், ஐ. நா. வுக்கு எதிரா ஊர்வலம் எண்டு போகவைக்குது.

In the Name of Buddha, படம் பாத்தீங்களெண்டால் இவையளின் இன்னொரு முகம் தெரியும்.