மார்ச் 19, 2012

மே 17 - திருமுருகன் உரை

மே 17 இயக்கத்தின் திருமுருகன் உரை. முழுவதையும் கேட்டு, பகிர்ந்து கொள்ளுங்கள்.

7 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ரதி....உங்கட பக்கத்திலதான் கநேரமாய் இருக்கிறன்.இப்போதான் காணொளி கேக்கிறன்.

ம்ம்ம்ம்...எல்லாம் தெரிஞ்ச விஷயம்தான்.தெரியாதவர்களுக்கு நல்லதுதான்.இன்னும் 2 நாள் பொறுத்திருப்போம்.அதுவும் கடந்து போகுமோ.....!

Rathi சொன்னது…

ஹேமா, ம்ம்ம்... நாங்கள் விடிஞ்சு எழும்பினா வந்து ரிவி, ரேடியோ, இணையம் எண்டு குந்திக்கிடந்து எல்லாப் புழுகு மூட்டைகளையும் ஈழம் பத்தி கேக்கிறது, பாக்கிறது தானே. அதான் பெரும்பாலும் கேட்டதை, பாத்ததை திரும்ப, திரும்ப கேட்க, பார்க்க நேருது.

ஆனா, எல்லாருக்கும் இதெல்லாம் தெரியுமோ எண்டிட்டு தான் போட்டுவிட்டன். ம்ம்ம்ம்......

தவிர, ஈழத்தமிழர்களுக்காக யார் ஒரு துரும்பை தூக்கி போட்டாலும் நன்றி சொல்லவேண்டிய கடப்பாடும் எங்களுக்கு இருக்கு, ஹேமா.

ஹேமா சொன்னது…

ரதி...2 தரம் கேட்டேன்.எமக்காக குழந்தைக்குப் புத்தி சொல்வதுபோல் ஆழமாக அதே நேரம் ஆத்திரமான காத்திரமான அலசல்.இணைந்த ஒற்றுமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.சிங்களவனின் நரிப்புத்திக்குக்கூட ஒற்றுமை பலம் அதிகமாகவே இருக்கிறது.இந்திய அரசியலை ஒரு பக்கம் வைத்தால் எம்மின உணர்வாளர்களின் ஆதங்கம் எம்மைவிட அதிகமாகவே இருக்கிறது.நன்றி சொல்வோம்.எமது முயற்சிகள்தான் இப்போ நிறையத் தேவை !

வேர்கள் சொன்னது…

அம்பந்தோட்டம் சீனாவுக்கும் ,திரிகோணமலை அமெரிக்காவுக்கும் கரணம் இவை இரண்டும் சேர்ந்து இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்று கருதின என்பது புரியவில்லை...

போர்க்குற்றம் தூக்கிபிடிக்கும் அதே வேளையில் தமிழ் ஈழ கோரிக்கை மறக்க அடிக்கும் வாய்ப்பை நாம் வழங்க கூடாது என்று தியாகு பலமுறை சொல்லிவருகிறார்.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!நேற்று தொலைக்காட்சியில் திருமுருகன் உரை காண நேர்ந்தது.தொழில் நுட்ப கோளாறு என இடைவெளி விட்டு விட்டு மட்டுமே ஜிடிவி காண நேர்ந்தது.

திருமுருகன் அவரது பாணியான பல உலக நிகழ்வுகளை உள்ளடக்கியே உரை நிகழ்த்தினாலும் இப்பொழுது மெதுவாக துவங்கும் இலங்கை சாசனம் குறித்த கருத்து இந்த நேரத்தில் சரியானதுதானா என்ற கேள்வி எழுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் இலங்கை மீதான தீர்மானம்,LLRC செயல்படுத்தப் படுகிறதா என்ற கால அவகாசம் என்ற கோட்டுக்குள் மட்டுமே அமெரிக்காவும்,ஏனைய நாடுகளும் செயல்படத் துவங்கும்.

திருமுருகன் வைத்த இரண்டு கோரிக்கைகளில் மக்கள் பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கை சாசனம் குறித்த கருத்தை பின் தள்ளுவதே இப்போதைய கால கட்டத்துக்கு உகந்ததாக இருக்கும்.

Rathi சொன்னது…

வேர்கள், இந்தியாவின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்று கருதியதின் காரணம் என்பது என் புரிதலில்..... இலங்கை தொடர்பான பூகோள அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளில் இந்தியாவின் பக்கம் இலங்கை சாய்ந்து இந்தியாவின் கை மட்டும் ஓங்க கூடாது என்பது என்று நினைக்கிறேன்.

Rathi சொன்னது…

ராஜ நட, மே 17 இன் பூகோள அரசியல் பார்வை விரிவானதாக இருக்கிறது என்பதில் இருவருக்கும் கருத்து மாறுபாடில்லை.

நீங்க சொல்வது போலவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) பரிந்துரைகள் செயற்படுத்தப்படுகிறதா அதற்குண்டான பொறிமுறை அதுக்கு வழங்கப்படும் கால அவகாசம் இந்த அடிப்படையில் தான் காய் நகர்த்துவார்கள். இதுவே ஏதோ அரையும் குறையுமாய் செயற்படுத்தப்பட்டால் இலங்கையில் அரசு, பொறுப்பு கூறல், சட்ட ஒழுங்கு, நீதித்துறை என்கிற அமைப்புகள் (Institution) ஜனநாயக பண்புகள் முழுமை பெற்ற ஓர் ஜனநாயக நாடாகவும் அதன் அரசியல் யாப்பு மூலம் பாரபட்சமற்றது என்றும் மாற்றப்பட்டுவிடும். அமெரிக்காவின் போலி ஜனநாயக பாடங்கள் மூலம்.

அடுத்து, மக்கள் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்துவதானால் அதன் அடிப்படை என்னவென்று கொள்வது! இனப்படுகொலையா அல்லது அரசியல் யாப்பில் மறுக்கப்பட்ட உரிமைகளா!

இனப்படுகொலை என்பதன் வழி அது நடக்குமென்றால் அது எவ்வளவு காலம் எடுக்கும்?

இலங்கை அரசியல் யாப்பு குறித்ததென்றால், அது ஒரு ஜனநாயக வழி என்றுதானே குறிப்பிடுகிறார்! அதில் என்ன தவறு?

உள்ளக சுயநிர்ணய உரிமைக்குக்கூட வழியின்றி இலங்கையின் ஜனநாயக சோஷலிச குடியியல் யாப்பில் இடமில்லாதவாறு ஏதேதோ திருத்தச்சட்டங்கள். இந்த லட்சணத்தில் ஒருமைப்பாடு, (ஒற்றை அரசியல்) இறையாண்மை என்று இலங்கை பெரும்பான்மை அரசியலை நிலைநாட்டும் குடியியல் சாசனம் குறித்த கருத்து அல்லது அதனை எரிப்பது என்பது எமக்குரிய வெளியக சுயநிர்ணய உரிமையை வெளிப்படுத்துவதும், கேட்பதும் என்று நான் புரிந்து கொள்கிறேன்.

ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் இலங்கை சாசனம் குறித்த கருத்தை தவிர்க்க வேண்டுமானால் அதன் காரணம் என்னவாய் இருக்கும்?