மார்ச் 26, 2012

ஈழத்துக்கலைஞர்... காந்தளும் காதலும்!

ஈழத்துக்கலைஞர் ஜெயந்தன் கந்தப்பு என்பவரின் இசையில் உருவான பாடல்கள்!

காந்தள் பூக்கும் தீவிலே...... பலரின் அபிமானத்தைப் பெற்ற பாடல்.... ஈழத்துக்கவிஞர் அஸ்மின் கவித்துவமான பாடல்வரிகளுக்காகவும்!

Proud of you, guys!ஜெயந்தன் இசையில், அவரோடு ப்ரதாவின் குரலிலும் இன்னொரு இனிமையான பாடல்...
மார்ச் 22, 2012

Paul Newman- இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம்!

மிக அண்மைய காலங்களில் ஈழம் குறித்த செய்திகள் என்றால் திடீரென இந்திய தேசிய ஊடகங்களும் மற்றும் சர்வதேச ஊடகங்கள் முதல் தமிழ்மணம் வரை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வந்தது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முடிவுக்குப்பின் 3 ஆண்டுகள் கடந்த பின்பும் மாண்டு போன ஈழத்தமிழர்களுக்கும், பாதிக்கப்பட்டு இன்னும் நடைப்பிணங்களாய் வாழும் தமிழர்களுக்கும் எந்தவொரு நீதியும் அல்லது அதற்குரிய வழிமுறைகள் கூட கிடைக்கவில்லை என்பது தான் பேசப்பட்டு வந்தது.

தற்போது ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான ஓர் தீர்மானத்தை கொண்டுவந்திருக்கிறது. அதன் வழி அவர்கள் அடைய நினைப்பது இலங்கை அரச தலைவர் அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தான்.

இவ் ஆணைக்குழு அறிக்கை சொல்லி நிற்பது சில தனிநபர்களுக்கான இழப்புகள், பாதிப்புகள் என்பதும் அங்கே போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் தான். அதாவது, ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு தேசிய இனம் என்பதால் இனவழிப்புக்கு உட்படவில்லை என்பது தான் அந்த பக்கச்சார்பான அறிக்கை சொல்வது. இரு இனங்களுக்கிடையேயான அரசியல் யாப்பியல் சார்பான உரிமைப்பிரச்சனையின் விளிம்பையேனும் தொடாமல் எந்த தேசிய இனங்களுக்குள் நல்லிணக்கம்! இது என் பொதுப்புத்தி கேள்வி மட்டுமே.

தனிநபர் இழப்புகள் என்றால் எப்படி நல்லிணக்கம் இனங்களுக்கிடையே வலியுறுத்தப்படும். அப்படி என்றால் எதை கற்றுக்கொண்டார்கள், என்ன நல்லிணக்கம் என்று பொதுக்கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது, போகட்டும். அந்த கட்டத்தை தாண்டியாகிவிட்டது.

இந்த தீர்மானம் தொடர்பாக ஆங்காங்கே காணும் இடங்களிலெல்லாம் செய்திகளை மேய்வதே பொழுதன்றும் வேலையாய் இருக்க நேரிட்டது. அதில் சற்று முன் தமிழ் தொலைக்காட்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த பங்களூர் பலகலைக்கழக விரிவுரையாளர் பால் நியுமன் என்கிற ஒரு அரசியல் செயற்பாட்டாளரின் பேட்டி காண நேர்ந்தது. பால் நியுமன் ஈழத்தமிழர்களால் பரவலாக அறியப்பட்டவர். ஈழம் குறித்த சர்வதேச செயற்பாடுகள் மற்றும் இலங்கை போர்க்குற்றங்கள் புரிந்திருக்கிறது, இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதற்கான விசாரணைக்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற டப்ளின் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக முன்னின்று உழைத்த ஒருவர்.

இன்று, ஐ. நா. வின் 19வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டவர் என்கிற காரணத்தால் தொலைக்காட்சியில் பேட்டி காணப்பாட்டார். அவர் கூறிய சில விடயங்கள் என் அறிவுக்கு எட்டியவரை.

முதலில் எல்லோரும் பெரும்பாலும் புரிந்துகொண்ட மனித உரிமைகள் சபையின் நேற்றைய தீர்மானம் தமிழர்கள் நலன் சார்ந்து அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டதல்ல. அதை தீர்மானம் குறித்த அமெரிக்க பிரதிநிதியின் வார்த்தைகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம். எல்லாமே ஒரு பொதுவான விடயமாகவே பேசப்பட்டது. தமிழர்கள் என்கிற வார்த்தை அங்கே எங்குமே வந்து விழுந்ததில்லை. அதையே தான் பால் நியுமனும் சுட்டிக்காட்டினார். இது அமெரிக்காவின் நலன்சார்ந்து நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் என்றார். அமெரிக்காவின் புவியியல், பொருளாதார நலன் சார்ந்து சீனாவை இலங்கையில் இருந்து முடிந்தவரை ஓரங்கட்டுவது.

தமிழர்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டவர்கள் என்றால் 2009 ஆம் ஆண்டிலேயே தலையிட்டு அழிவை தவிர்த்திருக்கலாம். தவிர, ஐ. நா. வின் செயலர் பான்கி மூன் நியமித்த மூன்று பேர் கொண்ட குழு தயாரித்த தருஸ்மன் அறிக்கையை விட இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை ஒன்றும் வலுவானதோ அல்லது நிறைவானதோ, நேர்மையானதோ அல்ல.

இருந்தும் இந்தியா வாக்களிக்குமா வாக்களிக்காதா என்கிற வித்தைகள், சித்துவிளையாட்டுகள் எல்லாம் காட்டி ஒரு வழியாய் தீர்மானம் நிறைவேறியாகிவிட்டது. இந்தியா இங்கே வாக்களித்ததிற்கு இன்னோர் காரணம் தமிழ் நாட்டில் இன்னொரு முறை தேர்தலில் தோற்க கூடாது என்கிற காங்கிரஸ் கட்சியின் நோக்கமும் கூட என்றார், திரு. நியுமன்.  காங்கிரஸ் மறுபடியும் தமிழ்நாட்டில் உயிர்த்தெழுமா என்ன!!!!

இதற்கிடையே இந்தியா அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக, இலங்கைக்கு எதிராக வாக்களித்தாலும் அமெரிக்கா மீதோ அல்லது இந்தியா மீதோ எங்களுக்கு காண்டு இல்லவே இல்லை என்று சீன செய்தி நிறுவனத்துக்கு இலங்கை அமைச்சர்களில் ஒருவரான லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனே கூறியதாக செய்திகள் சொல்கிறது. எப்படியோ இலங்கை, இந்திய இல்லாத இறையாணமைகள் காப்பாற்றப்பட்டால் சரி என்று நினைக்கிறார்கள் போலும்.

இதெல்லாவற்றையும் விட, அமெரிக்க தீர்மானத்தில் கூறப்பட்ட ஒரு விடயம்,

“...அரசாங்கங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகையில, சர்வதேச சட்டத்திற்கு இணங்க, குறிப்பாகச் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கும், அகதிகள் மற்றும் மனித நேயச் சட்டங்களுக்கும், உடன்பாடாகவும், கட்டுப்பாடுடனும், நடந்துகொள்ளவேண்டும் என்று மீளுறுதிப்படுத்துகிறது....”  (நன்றி: தமிழ்நெட், Watered-down resolution passes in UNHRC, stops short of international investigations)

அப்படி என்றால் பயங்கரவாதத்திற்கு எதிராக 1987 இல் ஐ. நா. வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஏன் அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிராக வாக்களித்தார்கள். எதிராக வாக்களித்தவர்கள் இந்த இரு நாடுகள் மட்டுமே. ஆதரவாக வாக்களித்தால் அரச பயங்கரவாதத்தை பிறகு எப்படி நியாயப்படுத்துவது. அமெரிக்காவும் அமெரிக்க படைகளும் கண்டுபிடித்த பயங்கரவாதத்தை ஒழித்தாலே பயங்கரவாதம் ஒழிந்துவிடும். இதில அமெரிக்கா மனித நேயம், அகதிகள் சட்டங்கள் என்று பேசுவது ஈயம் காய்ச்சி காதில் ஊற்றுவது போல் உள்ளது.

இதையெல்லாம் கடந்து இலங்கைக்கு எதிரான இந்த அமெரிக்க தீர்மானத்தை ஒரு ஆரம்பப்புள்ளியாக வைத்து நம்பிக்கையுடன் எமது விடுதலைப்பயணத்தை தொடரவேண்டும் என்று தமிழர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள், ஆய்வாளர்கள். இலங்கை அரசு எப்படியும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றப்போவதில்லை. அதன் அடுத்த படி தொடர்முயற்சிகளில் மேற்கொண்டு போர்க்குற்ற விசாரணை சுயாதீன சர்வதேச குழுவொன்றினால் நடத்தப்பட வேண்டும் என்று இறுதிவரை உறுதியாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.

தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் இந்த விடயத்தில் ஓரளவிற்கு இலங்கை அரசின் பாரிய பொய்ப்பிரச்சாரங்களையும் மீறி நல்லவிதமாக செயற்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய திரு. நியுமன், இன்னும் சிறப்பாக ஒற்றுமையாக தமிழர்கள் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோளோடு முடித்துக்கொண்டார்.


மார்ச் 19, 2012

மே 17 - திருமுருகன் உரை

மே 17 இயக்கத்தின் திருமுருகன் உரை. முழுவதையும் கேட்டு, பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிக்குகளும் டாக்டரேட்.... பட்டமும்!இலங்கையில் கலாநிதி பட்டம் வாங்கித்தருவதாக Buddhist Monks, புத்தபிக்குகள் சிலரிடம் பணம் வாங்கி ஏமாற்றுவதை Sunday Times ஒரு நிருபர் மூலம் நிரூபித்துள்ளதாம். காஞ்சன குமார அரியதாசா என்கிற நிருபர் பத்திரிகை துறையில் பல சேவைகள் செய்ததால் கலாநிதி பட்டத்திற்கு தகுதியானவர் என்று பிக்குகள் ஏதேதோ சொல்லி இலங்கை ரூபாவில் 200, 000 பணத்தை ஒரு தபாற்கவரில் வைத்துக் கொடுக்கச்சொல்லி மாட்டிக்கொண்டார்களாம்.

அந்த நிருபர் பணம் குடுத்திருப்பாரா என்றால், நல்ல மென்மையான Jak (!) இலைகளை பணம் போல் அடுக்கி கவரில் போட்டு குடுத்திருக்கிறார் கலாநிதி பட்டம் கொடுக்கிறோம் என்பவர்களிடம். பணம் கொடுத்துவிட்டு போலியான கலாநிதிப்பட்டத்துடன் திரும்பி பார்க்காமல் மோட்டார் வண்டியில் ஓடிவிட்டாராம் நிருபர்.

பணம் வாங்கியவர் நிருபர் போனபின் கவரை பிரித்துப் பார்த்து இலைச்சருகுகளை கண்டு கைத்தொலைபேசியில் கூப்பிட்டு.......க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

இதெல்லாம் ஒரு பிழைப்பு.

http://www.sundaytimes.lk/120318/News/nws_12.html

மார்ச் 16, 2012

என்னை கண்டெடுத்தேன்!

தற்காலிகமாய் தேடிப்போன பொருளையும், மனிதர்களையும் காணும் போது உண்டாகும் சந்தோசத்தை விட அலாதியானது நாம் நீண்ட நாட்களாய் தேடியலைந்து மறந்து போன ஒரு பொருளும், நபரும் கண்ணில் காணக்கிடைக்கும் அந்த கணங்கள். நினைவுகளில் புதைந்து போன பொக்கிஷ ஞாபகங்கள் என்றாவது ஒரு நாள் காட்சி உருக்கொண்டு பார்வையில் சிக்கியது போன்ற உணர்வு இது.

பழைய பதிவுகளை நோட்டம் விட்டுக்கொண்டிருக்க கண்ணில் பட்டது இந்த பதிவு. நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. என் வாசிப்பு அனுபவம் பற்றியது. நினைவுச்சுழலில் எங்கெங்கோ இழுத்துச்செல்லப்பட்டு நினைவிழந்து மறுபடி நினைவு திரும்பும்போது வாழ்க்கையின் மறுகரை தட்டிவிட்டது என்று விழித்துப்பார்த்தால் இன்னும் நின்ற கரையோரமே நின்றுகொண்டிருக்கிறேன் எதிர்நீச்சல் மறந்துபோனது போல :) வாசிப்பின் துணைகொண்டு வாழ்வின் மறுகரை அடைய மறுபடியும் எதிர்நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது.
அன்றாட வாழ்வில் சுவையிழந்த நாட்களில் சிலவற்றை ஆக்கபூர்வமற்ற செயல்களில் கழித்ததும், கழிப்பதும் உண்டு, பொழுது போக்காக! திரும்பிப்பார்த்தால் இதையா செய்தேன் என்று சிரித்தும் கொள்வேன். அது அப்போதும், இப்போதும் என் தேவையாய் இருந்தது. இன்னும் இருக்கிறது! எல்லா நேரங்களிலும் சீரியஸாகவே இருக்கமுடியாது இல்லையா! விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் இயந்திரங்களாய் உருவாக்கப்பட்டு அயற்சி மிஞ்சுகையில் இவையெல்லாம் தவிர்க்க முடியாததாயும் போய்விடுகிறது.

ஆனாலும், எல்லை மீறுகிறேனா என்று அறிவை கேட்டுக்கொள்ளாமல்
முன்னேற இஸ்டமுமில்லை. சமூகவலைத்தள ஊடகங்கள் என்னும் ராட்சத நேரவிழுங்கிகளில் என் நேரம் தொலைக்கவும் மனம் ஒப்புவதுமில்லை. என் எல்லைக்கோடுகளை கடந்து என் சொல் பேச்சை நானே கேட்காமல் போகவும் பிரியப்படவில்லை. யாராவது கோடு கிழித்து நில் என்று சொன்னால் நிற்கும் ஜாதியில்லை நான். எனக்கு நானே எல்லைக்கோடு கிழித்துக்கொண்டால் தான் உண்டு. அது பொறுப்புணர்வோடு கூடிய தனிமனித சுதந்திரமும் கூட. சுதந்திரம் என்பதை மட்டும் ஒரு சலுகையாய் எடுத்துக்கொண்டு அதன் விளைவுகள் குறித்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்கழிக்க முடியாது. பலபேருக்கு இயல்பாய், போராட்டங்களின்றி கிடைக்கும் வெற்றிகள் நான் யாரையும் சாராமல் போராடிப்பெற்றதால் எனக்குள் உண்டாக்கிய அதீத தன்னம்பிக்கை அது என்பது என் வரைவிலக்கணம்.

ஆக்கபூர்வமற்றதாய் நான் நினைத்து பொழுது போக்கிய தருணங்களில் கிறுக்கிய கவிதைகள் இரண்டு.

எப்போதும் இப்படியல்ல!
அறிவுப்பசி
தீராத்தேடல்
மனதை சீர்ப்படுத்த
அனைத்துக்கும் சிறந்த வழி
நல்ல வாசிப்பு
செழுமையான செறிவான
இரண்டு பக்க வாசிப்பில்
முழுமையாய் உணர்வதுமுண்டு
உருண்டு புரண்டு
எத்தனை பக்கங்கள்
படித்தாலும்
புரிதல்
கிரகித்தலின்றி
பக்கங்கள்
நகர்வதுமுண்டு
வாசிப்பை போலவே
வாழ்க்கையும்
அனுபவங்களும்

ஞாபகமறதி....!

எப்போதும் புறவுலகில்
சொற்களால் கூராக்கப்படும்
எதிரியின் ஆயுதம்
என் மனவுறுதியை
பதம் பார்க்க
அது குறித்து
பிரக்ஞை உண்டு
தற்காத்துக்கொள்ள,
எனக்குள்ளிருந்து
என் வாழ்நாட்களை
சிறுகச், சிறுக
நோய் விழுங்குவது
மரணம் பற்றி
நினைவூட்ட ஏனோ
மறந்து போகிறது மனம்.

எனக்கு பிடிச்ச ஒரு quote.....

For self-definition and motivation we need enemies.
-Samuel Huntington-

கூகுள் தன் Privacy Policy குறித்த கொள்கைகளை மார்ச் மாதத்தில் மாற்றிக்கொண்டது. அது குறித்து ஏன் ஊடகவியலாளர்கள் அதிகம் கண்டுகொள்ளவில்லை என்றும் என்னுள்ளும் கேள்விகள் எழுந்ததுண்டு. குறிப்பாக அமெரிக்கா இணையத்தள செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை கொண்டுவர உரிமைக்காப்பக ஊறுவிளைவிக்கும் செயல்கள் குறித்து அக்கறை கொள்வதாய் சாக்கு போக்கி சொல்லி இதெல்லாம் நடக்கிறதா என்றும் யோசிப்பதுண்டு. இந்தப்படம் ஏதோவொரு செய்தி சொன்னதாய் தோன்றியது. பகிர்கிறேன்.
 
Image Courtesy: Google

மார்ச் 15, 2012

சிதைந்த வரை......தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று மகாகவி பாரதியார் பாடிவைத்தார். அதையே நாட்டில் அரிசி, பருப்பு, எரிபொருள், செல்பேசி என விலைவாசி பிரச்சனை வரும்போதெல்லாம் முழங்கிவிட்டு ஏதாவது ரியாலிட்டி தொலைக்காட்சி தொடர் பார்க்க  நொறுக்கு தீனியோடு உட்கார்ந்தால் எல்லா சமூகப்பிரச்சனையும் மறந்துவிடும். நாங்களாகவே அதையெல்லாம் மறந்துவிட வேண்டும், இல்லையா, அதை மறக்கடிக்க எங்களுக்கென்றே இன்னோர் பிரச்சனைக்கு கதை, வசனம் எழுதி தயாரிப்பார்கள் அரசியல்வாதிகள், மற்றும் கொள்கைவகுப்பாளர்கள்.

எங்கேயாவது மலையூர் மம்பட்டியான் ரேஞ்சுக்கு யாராவது மக்களுக்காய் போராடுபவர்களில் நாலு பேர் தீவிரவாதிகளாய் புதிதாய் உருவாக்கப்பட்டு நாட்டின் தேசியநலனுக்கு கேடுவிளைப்பதாய் சுட்டுக்கொல்லப்படுவார்கள். பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலில் மக்களின் பிரதிநிதிகள் வரிப்பணத்தை பகல் கொள்ளையடிப்பவர் அல்லது ஒரு அரசியல் கோமாளி ஒருவரின் ஏதாவது ஒர் ஊழல் வழக்கு புதிதாய் தூசு தட்டப்படும் எங்களை எண்டர்டெய்ன் செய்ய! அதுவும் இல்லையா, யாராவது ஒரு சினிமா பிரபலம் இருப்பார் மிச்சம் மீதியை கவனிக்க.

மகாகவி கூட ஒரு வேளை சோற்றுப்பிரச்சனையோடு சுளுவாய் முடித்துக்கொண்டாரோ! ஏன் தனியொருவனுக்கு உரிமை மறுக்கப்பட்டால் என்று பாடாமல் போனாரோ தெரியவில்லை! பாரதியார் படத்தில் பாரதியார் பாத்திரம் ஒரு இடத்தில் பேசுவது, தேசபக்தி என்பது என்ன கள்ளக்காதலா ஓய்! அதை பற்றி ஏன் இரகசியமாய் பேசவேண்டும் என்கிற மாதிரியாய் வசன அமைப்பு. அதன் அர்த்தம் இப்படித்தான் அமைந்திருந்தது.

ஈழதேசத்தின் விடுதலையும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் அமெரிக்காவால் பாரதியார் வார்த்தைகளில் கள்ளக்காதல் ஆக்கப்படுகிறது அமெரிக்க, இந்திய, நோர்வே கூட்டுக்கதையமைப்பில். அவர்கள் தயாரித்த கதையின் பெயர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை. அதற்கு கதை, வசனம், இயக்கம் மற்றும் கிரியேட்டிவ் ஹெட் இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் எஸ்.ஆர். டி.சில்வா. அதை வெற்றிகரமாக விமர்சிப்பது செயற்திறனற்ற, சுயாதீனமாய் செயற்படமுடியாத நிலையிலுள்ள ஐ. நா. வின் மனித உரிமைகள் மன்றம்.

சர்வதேச அமைப்புகளால் பாரியளவில் குற்றஞ்சாட்டப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் தலைவர் தான் முன்னாள் தலைமை வழக்கறிஞர் S.R.D.சில்வா. இவர் தான் ஐ. நா. வின் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம் (International Covenant on Civil and Political Rights- ICCPR-1976) வழி இலங்கையர்கள் மனித உரிமைகள் சபையிடம் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து முறையிட முடியாது என்று உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பளித்தவர்.  இவர் என்ன தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தரப்போகிறார்.

இது போன்றவர்களை உள்ளடக்கும் உச்சபட்ச அபத்தங்களின் உச்சக்காட்சி தான் மனித உரிமைகள் மன்றத்தில் 19வது கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறதுதான் அமெரிக்கா இலங்கை மீது கொண்டுவரும் தீர்மானமாம்? இதற்கு இலங்கைக்கு ஒரு வருடம் காலக்கெடுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சரிதான், 66 வருடங்களாய் திருந்தாத திருடன் ஒரு வருடத்தில் திருந்துவானாம்.....! ஈழத்தமிழர்கள் கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்று நம்புவர்கள் என்று நினைத்துவிட்டார்கள். சில தமிழ் அமைப்புகள் அமெரிக்க தீர்மானம் குறித்தும் அப்படித்தான் நடந்து கொள்கின்றன என்பதும் வருத்தத்திற்குரியதும் கூட.

இலங்கையும் ஓர் மூன்றாம் உலக நாடு என்பதால் நாடு, சட்ட ஒழுங்கு, பொறுப்பு கூறும் அரசமைப்பு என்கிற அடிப்படை அம்சங்கள் ஏகப்பட்ட குறைபாடுகளுடனேயே இருக்கிறது. சட்ட ஒழுங்கை பேணும் காவற்துறை முதல் உச்சநீதிமன்றம் வரை தமிழன் என்பவன் இழிபிறப்பாய் இம்சிக்கப்படுகிறான். மனச்சிதைவுக்கும், மனிதசிதைவுக்கும் ஆளாகி நிற்கும் அவலம் தொடர்கிறது. அது தான் தமிழர்கள் குறித்த சிங்கள பெளத்த அரசியல் சட்டத்தின் வரையறை நிர்ணயமும் கூட.

2009 ம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு மனித உரிமைகள் மன்றம் கூடும் போதெல்லாம் இலங்கை பிரச்சனை ஏனோதானோவென்று பேசப்படுவதும், அப்போதெல்லாம் பிரித்தானிய காட்சி ஊடகமான சனல் 4 ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டுமென்கிற ரீதியில் ஒரு ஆவணக்காட்சி தொகுப்பை வெளியிடுவதும் நடந்து வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் சனல் 4 இற்கு எங்கள் நன்றிகள். இப்போதும் ஒரு ஆவணக்காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது சனல் 4 இனால், Srilanka's Killing Fields 2 - Unpunished War Crimes. சனல் நான்கின் ஈழம் குறித்த காணொளியில் வாய்மொழியாய் சொல்லப்பட்ட செய்திகளை விட, குறிப்பாய் உணர்த்தப்பட்ட சில விடயங்கள் கவனிக்கத்தக்கது. குறிப்பாக, இந்தியாவின் பங்களிப்பு சிவ்சங்கர் மேனன், நாராயணன் வகையறாக்களை ராஜபக்‌ஷேவுடன் காண்பித்தது.
ஈழத்தமிழர்கள் வேண்டுவது சுயநிர்ணய உரிமை. அது குறித்து சர்வதேசம் செய்யவேண்டியது ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்கிற பட்டவர்த்தனமான உண்மையை ஒத்துக்கொள்வது. அது சர்வதேச அரசியலில் நீர்த்துப்போகவே செய்யப்பட்டுக்கொண்டிருக்கப்படுகிறது.`


Samuel Huntington, The Clash of Civilization and the Remaking of World Order என்னும் புத்தகத்தில் 'Fault Line War' என்கிற கருத்தியல் தலைப்பில் ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்து எழுதியிருக்கிறார். அதில் அவர் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக Genocide என்கிற வார்த்தையோடு எழுதிவைத்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், அரசியல் ஆதாயம் தேடும் சர்வதேசமும் இந்தியாவும் தான் அதற்கு பதில் சொல்லத்தேவையில்லாமல் கள்ளமெளனத்தோடு கேடுகெட்ட அரசியல் சூழ்ச்சிகளிலும் இறங்குகிறது.

Samuel Huntington, " In 1987when Sri Lankan government forces were on the verge of defeating the Tamil Tigers, Indian public opinion was aroused against this "genocide" and the Indian government airlifted food to the Tamils "in effect signaling [President] Jayewardene that India intended to prevent him from crushing the Tigers by force"".

சாமுவேல் ஹன்ரிங்ரன் உலகறிந்த ஒரு அரசியல் ஞானம் நிறைந்தவர். அவருக்கு அப்போதே தெரிந்த உண்மை இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் உலகத்துக்கு தெரியவில்லையாம். அதை ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையில் விவாதித்து அவலச்சுவை கூட்டுகிறார்கள். இவ்வளவு உயிர்ப்பலி கொள்ளப்பட்ட பிறகும் எப்படி இவர்களால் ஜனநாயகம், யாப்பியல், மனித உரிமைகள் அதற்கோர் சபை என்று வெட்கம் கெட்ட தனமாய் பேசமுடிகிறது, செயற்திறனற்று ஓர் அமைப்பை உருவாக்கி அங்கெ இருக்கமுடிகிறது என்று மான ரோஷம் உள்ள யாரும் கேள்வி கேட்ககூடாது. சனல் 4 இன் காணொளி குறித்த கவனமும் இன்னும் ஏதாவதொரு கதையமைப்பில் அரசியல் வாதிகள், கொள்கைவகுப்பாளர்களால் மக்களின் கவனம் திருப்பப்படும். குறிப்பாக தமிழ் நாட்டில் கூட தமிழன் பொங்க கூடாதல்லவா.

சிதைவுகளும் தேய்வுகளும், வெற்றியும் தோல்வியும் கொண்டது தான் போராட்டக்களங்களும் விடுதலையும் என மனம் தனக்குத்தானே சமாதானம் சொல்லமுற்பட்டாலும், காவுகொள்ளப்பட்ட உயிர்கள் இறுதிக்கணத்தில் மரணத்தின் வாசலில் நின்று அனாதரவாய் அரற்றுவது காணொளியில் காணும் போது உயிர் பதறுகிறதே. மீண்டும், மீண்டும் முள்ளிவாய்க்கால் மனக்கண் முன் விரிகிறதே.

மார்ச் 02, 2012

M.I.A வும் அரபுநாட்டு பெண்களும்!M.I.A., விளிம்பு நிலை மனிதர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் பாடல்கள் வழி ஒலிப்பவர் என்று பிரபலமானவர். அவரது பாடல்கள் அவை குறித்த விமர்சனங்களுக்குள்ளும் சிக்காமல் இல்லை. அவரது பாடல்களில் கடத்தப்படும் செய்திகள் குறித்த சர்ச்சைகளுக்கு உலகளாவிய ரீதியில் பெயர் போனவர்.

அந்தப் பட்டியலில் இடம்பிடித்தவை Born free, Paper Planes.... (மூன்றாம் உலக ஜனநாயகம் பற்றியது) அதன் பிறகு இப்பாடல், Live fast, die young. இப்பாடலில் மாயா அரபு நாட்டுப் பெண்கள் குறித்து பழமைவாதத்தை தான் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்கிற  சர்ச்சை தான் பேசப்படுகிறது. இப்பாடல் அரபு பெண்களை நையாண்டி வருணனை செய்வதாகவும், இன்னும் சிலரோ பெண்களின் உரிமைகள் குறித்த ஆளுமையை மையப்படுத்தி இருப்பதாயும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். குறிப்பாக சவுதி அரேபியாவில் வாகனம் ஓட்டும் உரிமை மறுக்கப்பட்டதையும் கேலி செய்வதாக சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் இது போன்ற அரபு நாடுகள் பற்றிய தவறான சித்தரிப்புகளாக இவை அமைந்துவிட்டால், அது சில வெளிநாட்டு கொள்கைகள் குறித்தும் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதும் குற்றச்சாட்டு.

இதில் என்னுடைய கருத்து யாருடைய வெளிநாட்டு கொள்கை என்பதை அவர்கள் தெளிவாய் குறிப்பிடாவிட்டாலும், அது யாரென்று உலகே அறியும். கூடவே, அரபு நாடுகள் பற்றிய வெளிநாட்டு கொள்கைகள் இன்று, நேற்றா வகுக்கப்பட்டன. அவை வகுப்பட்டு ஏறக்குறைய 30-40 வருடங்களுக்கு மேலாகிவிட்டனவே!! இதையெல்லாம் விட சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்துவிட்டதா!

எப்படியோ, இப்பாடலின் காட்சியமைப்புகள், குறிப்பாக அந்த காரின் two-wheel driving அசத்தல்!
Live fast, die young
Bad girls do it well
Live fast, die young
Bad girls do it well (x2)

My chain hits my chest
When I'm banging on the dashboard
My chain hits my chest
When I'm banging on the radio

Get back, get down
Pull me closer if you think you can hang ..
.. hands up, hands tied
Don't go screaming if I blow you with a bang

Suki Zuki
I'm coming in the Cherokee..
..gasoline
There's steam on the window screen

Take it, take it
Wheels bouncing like a trampoline
When I get to where I'm going, gonna have you trembling

Live fast, die young
Bad girls do it well
Live fast, die young
Bad girls do it well (x2)

My chain hits my chest
When I'm banging on the dashboard
My chain hits my chest
When I'm banging on the radio

Yeah back it, back it
Yeah pull up to the bumper game
With a signal
Cover me, cause I'm changing lanes

Had a handle on it
My life, but I broke it
When I get to where I'm going, gonna have you saying it

Live fast, die young
Bad girls do it well
Live fast, die young
Bad girls do it well (x2)

My chain hits my chest
When I'm banging on the dashboard
My chain hits my chest
When I'm banging on the radio (x2)

Get back, get down
Pull me closer if you think you can hang..
..hands up, hands tied
Don't go screaming if I blow you with a bang

Going up to bitch
I'll see it for a million
Accelerating fast
I could do this in a second
Lookin' in the rear view
Swagger going swell
Leavin' boys behind
'Cause it's illegal just to kill

Shift gear
Automatic
Damned if I do
Who is gonna stop me?
When I'm comming through
What we got left is just me and you
But if I go to bed, baby, can I take you?

Get back, get down
Pull me closer if you think you can hang..
..hands up, hands tied
Don't go screaming if I blow you with a bang

Live fast, die young
Bad girls do it well
Live fast, die young
Bad girls do it well (x4)

My chain hits my chest
When I'm banging on the dashboard
My chain hits my chest
When I'm banging on the radio (x2)