பிப்ரவரி 22, 2012

மனசுக்குள் கிறுக்கியவை!


திருந்தாத நான்

நம்பிக்கையானது
வார்த்தைகளில்
உருவாகி
வாக்குறுதிகளில்
கெட்டிப்பட்டு
அவரவர் தேவைக்காய்
உடைக்கப்பட
சிதறிப்போகும் மனம்
மீண்டும் அதை
ஒட்டவைக்க
எனது தேவை
இன்னோர்
போலி உத்தரவதாம்

என் மனம்!
அழகானது
சுவாரஸ்யமானது
சுகமானது
சுமையானது
தன்னைத்தானே
சீண்டிப்பார்க்கும் தருணங்கள்
எரிச்சலானது
இருந்தும் நேசிக்கிறேன்
என்னை நான்!
காதல்!
வெற்றி
தோல்வி
கொண்டாடத்தெரியாத
அழகான உணர்வு
உணார்வுகளுக்கேது
வளர்சிதை மாற்றம்.19 கருத்துகள்:

siva sankar சொன்னது…

பேராசிரியை பெருந்தகையே
அட அட கவிதை
கலக்கல்


எப்போ இருந்து நடக்கட்டும் நடக்கட்டும்
இருக்கிற கவிகர்கள்
இம்சை போதும்
ஒரு பாடல் நியாபகம் வருகிறது :)

siva sankar சொன்னது…

சீண்டிப்பார்க்கும் தருணங்கள்
எரிச்சலானது
இருந்தும் நேசிக்கிறேன்
என்னை நான்!// so good

siva sankar சொன்னது…

நான் ப்ளாக் மாறி வந்துட்டேனோ
கவிதை எல்லாம் சூப்பர்
ஒரு தாமரைக்கு போட்டியாக ஒரு லில்லி ரெடி :)
வாழ்த்த வயதில்லை
வணக்கங்கள்

Rathi சொன்னது…

சிவா, வாழ்த்த வயதில்லாதவரே :)
ம்ம்... இருக்கிற கவிஞர்களின் வரிசையில் சேர்ந்து இம்சைப்பண்ண அல்ல இந்த கவிதைகள்.

இது சும்மா :)))

நன்றி சிவா.

ஹேமா சொன்னது…

அட....இங்க பாருங்கோவன்.கவிதை தெரியாது தெரியாதெண்டு அப்பிடியே உள்ளதை உள்ளமாதிரி கொட்டி எழுதிக்கிடக்கு.ரகசியமானது காதல்..எனக்கும் பிடிச்ச பாட்டு ரதி !

தனிமரம் சொன்னது…

கவிதை எல்லாம் அசத்துறீங்க ரதி அக்காள்.நல்ல பாடல் கோடம்பக்கம் படத்தில் வரும் ரகசியமானது காதல் !ம்ம் /சீண்டிப்பார்க்கும் நேரம் எரிச்சலானது / நல்லாத்தான் வரிகள் கோர்க்கின்றீர்கள்.

தனிமரம் சொன்னது…

தனிமரம் உங்களுக்கு ஒரு விருதினைக் கொடுத்திருக்கு முடிந்தால் அதையும் வலையில் அலங்கரியுங்கள் அக்காள் தாழ்மையான வேண்டுகோள்!

Rathi சொன்னது…

ஹேமா, ஏதோ ஒரு சின்ன முயற்சி. உங்களோட எல்லாம் போட்டி போட முடியுமோ சொல்லுங்கோ :) நன்றி ஹேமா!

Rathi சொன்னது…

தனிமரம்-நேசன், நன்றி. கோடம்பாக்கம் படத்தில வர்ற இந்தப்பாட்டு நல்லா எடுத்திருக்கினமும் கூட.

ஒரு ஈழத்து உறவு தரும் விருதை மறுப்பேனா, கெதியா தாங்கோ :)

Rathi சொன்னது…

நேசன், தாழ்மையான வேண்டுகோள் எண்டுறதெல்லாம் ரொம்ப ஓவர் :)

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ஹேமா அழகா சொல்லிட்டாங்க..உள்ளதை உள்ளமாதிரி கொட்டி எழுதிக்கிடக்கு ..:)

தனிமரம் சொன்னது…

வணக்கம் ரதி அக்காள்!
நேரம் கிடைக்கும் போது இந்த பதிவைப் படியுங்கள் .சின்ன சந்தோஸம் கிடைக்கும்http://www.thanimaram.org/2012/02/blog-post_6016.html

Rathi சொன்னது…

கயல், ஹேமா, என்கிற இரண்டு கவிதாயினிகளும் என்னை கலாய்க்கிறீங்கன்னு புரியுது :)))

Rathi சொன்னது…

தனிமரம்-நேசன், விருது பற்றிய பதிவை நான் எப்பிடியோ தவற விட்டுவிட்டென்.

விருதுக்கு நன்றி. தளத்தில் பதித்தாயிற்று. இது பற்றி ஒரு பதிவு போட்டு நான் 5 பேர்களுக்கு கொடுக்கிறேன் அந்த விருதை.

நன்றி நேசன்!

வேர்கள் சொன்னது…

// திருந்தாத நான் //
திருந்தாது நீங்கள் மட்டும் இல்லை நாங்களும்தான்

ராஜ நடராஜன் சொன்னது…

இதுக்குத்தான் ஹேமா கூடயெல்லாம் கூட்டு சேரக்கூடாதுங்கிறது:)

என்னதான் மாங்கு மாங்குன்னு எழுதினாலும் உரைநடையின் மொத்த சாரம்சத்தையும் கவிதை சில வரிகளில் அழகாக சொல்லி விடுகிறது.

ஆனாலும் எனது தேர்வு உரைநடையே.

Rathi சொன்னது…

வேர்கள், ம்ம்ம்... திருந்த மாட்டோம்னு நினைக்கிறதே திருந்துவதற்கான முதற்படி தான் :)

Rathi சொன்னது…

ராஜ நட, ஹேமா கவிதையை புரிஞ்சு கொள்ளவே ஒரு பத்து தரம் படிப்பேன் :)

ம்ம்... என்னுடைய தேர்வும் உரை நடை தான். இது சும்மா :)

அப்புறம், உலகத்தில தற்சமயம் ஏகப்பட்ட அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுது. ஒரு பதிவு போடுங்க, படிக்கலாம்.

ஹேமா சொன்னது…

முத்தக்காவும் நானும் கலாய்க்கிறமோ உங்களை.அட போங்கோ ரதி.உண்மை சொனாலும் நம்பமாட்டீங்கள் !

நடா...எனக்கிருக்கிறதே உங்களை மாதிரி ரெண்டொரு சிநேகிதம்.அதில ரதியும் ஒண்டு.சும்மா சொல்லாதேங்கோ ரதி.எல்லாக் கவிதையும் விளங்காமலில்ல.உங்களுக்கு நடாவுக்கும் நான் கை வலிக்க நிறைய எழுதவேணுமெண்ட வேண்டுதல் !