டிசம்பர் 02, 2011

நெற்றிக்கண் நடுநிலைவியாதிகள்!!எங்கள் ஈழத்து கவிஞர் ஒருவர் சொன்னது, உண்மைக்கும் பொய்க்கும் இடையே நடு நிலைமை என்பது கிடையாது என்று. சமகாலத்தில் அரசியல், சமூக, பொருளாதார, இன, மத, கலாச்சார முரண்பாடுகள் குறித்த விவாதங்கள், சர்ச்சைகள் என்றவுடன் எப்போதும் அரசுக்கு ஆதரவான, எதிரான, அல்லது நடு நிலைமை பேணுகிறோம் என்கிற ரீதியிலான கருத்துகள் உருவாக்கம் பெறுகின்றன. அல்லது உருவாக்கப்படுகின்றன.  அவ்வாறான கருத்துருவாக்கங்கள் சாதாரணமாக உருவாக்கப்படுவதில்லை. திட்டமிடப்பட்டு குயுக்தியான முறையில் பரவலாக உருவாக்கப்பட்டு பரப்படுகின்றன என்பது ஈழவிடயத்தில் ஏற்கனவே தெளிவாய் தெரிந்து போனது.

உணர்ச்சி வசப்படாத, நடு நிலையான பகுப்பாய்வு செய்பவர்களுக்கு தான் ஈழம் பற்றி தெளிவாய் எல்லாம் புரியும் என்பது போன்ற அற்ப அபத்தங்களும் இல்லாமலில்லை. பாதிக்கப்பட்டவனுக்கு நடு நிலைமை குறித்தா கவலை கவரும். அதெல்லாம் நெற்றிக்கண்ணை திறக்கும் பார்வையாளர்களின் பகுப்பாய்வுக்கு தான் லாயக்கு. இந்த நடு நிலையாளர்களின் முகமூடியை கிழித்துப்போடும் ஒர் பகுப்பாய்வு தத்துவம் அண்மையில் கண்ணில் பட்டது.

நடு நிலைமை சரியா, தவறா என்பதல்ல என் வாதம். அது எப்படி அரச இயந்திரத்தால், அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களால் (NGOs), சர்வதேச அமைப்புகளால் புதிய தாராள ஜனநாயகம், உலகமயமாக்கல் என்கிற மேற்கத்திய அரசியல், பொருளாதார தேவைகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது என்பதே என் வாதமும், தேடலும்!

அந்த தேடலில் கண்ணில் பட்டது கலாநிதி ராதா டி‘ஸோஸா அவர்களின் Sandwich Theory. இவரது இந்த பகுப்பாய்வு தத்துவமானது இந்திய சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரபல்யம் என்று சொல்லப்படுகிறது. படித்த போது மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஒரு அரசுக்கும், ஏதோவொரு பொதுப்பிரச்சனை, உரிமை பிரச்சனை குறித்து போராடுபவர்களுக்கும் இடையே பொதுசனம் எப்படி நடு நிலையாளர்களாக தந்திரமாக அரசால் வனையப்படுகிறார்கள் என்பதே இவர் கூறுவதிலிருந்து நான் புரிந்து கொண்டது.

பிரச்சனையின் உண்மை நிலைகளிலிருந்து உருவான இடப்பெயர்ச்சி, சுரண்டல், சமூக, பொருளாதார, அரசியல் கையறு நிலையில் இருந்து திசை திருப்பும் வகையில் வன்முறை, வன்முறையற்ற என்கிற மாதிரியான இரண்டாந்தர விடயங்களில் மக்களின் கவனம் அரசுக்கும்/அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்படுபவர்களுக்கும்/போராடுபவர்களுக்குமிடையே சமதூரத்தில் வைத்து பார்க்கும் தன்மை உருவாக்கப்படுகிறது என்கிறார் என்பதே என் புரிதல். அதற்கு எடுத்துக்காட்டாக இந்திய அரசு-மாவோயிஸ்ட்,  இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சனைகளை குறிப்பிடுகிறார்.

அதே போல் அரசிடமிருந்தும், மக்கள் போராட்டங்களிலிருந்தும் தங்களை விலக்கிவைத்திருப்பவர்கள், ஈற்றில் அரசின் மக்கள் மீது தொடுக்கப்படும் போருக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பது போலாகும் என்கிறார்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் குறித்த கேளிவிகளுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது; நடு நிலை வகிப்பவர்கள் என்கிற பெயரில் சில சர்வதேச அமைப்புகள், எடுத்துக்காட்டாக Observer Research Foundation, தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக ஆக்கினார்கள் என்பது, பாலஸ்தீனம், சூடான் விடயத்தில் கூட பாவிக்கப்பட்டது என்கிறார். மறுபிரதி எடுத்து சொலவது போல் இவர்கள் இதையே தான் பெரும்பாலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நடு நிலை வகிக்கும் அமைப்புகள், Think-tanks/Experts எனப்படுபவர்கள் கருத்துகளே அடக்குமுறை அரசின் சார்பாக முன்வைக்கப்படுகிறது என்பதும்; இவர்கள் அடிப்படையில் ஜனநாயக பண்புகளை கொண்டிராத சர்வதேச அமைப்புகளின் அங்கமென்று சொல்கிறார் என்பது புரிகிறது.

நடு நிலை நியாயம் பேசும் உள்ளூர், சர்வதேச வேடதாரிகளின் (NGOs) வார்த்தை ஜாலங்கள், Good Governance (சிறந்த ஆட்சி முறை) Civil Society (குடியியல் சமூகம்) எல்லாம் உலகவங்கி திட்டங்கள், சர்வதேச அமைப்புகள் போன்ற நாணய நிதியோடு சம்பந்தப்படுத்துவது என்கிறார். புதிய தாராள மயக்கொள்கை, உலகமயமாக்கல் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்டவர்களிடம் அதிகாரத்தை வழங்குதல் என்றும் விளக்குகிறார்.

இவர்களுக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். நோர்வே முதல் International Crisis Group வரை என்னென்னவோ அறிக்கை விட்டும், ஆராய்ச்சி செய்தும் இறுதியில் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் பிடித்ததையே ஈழத்தமிழன் ஏற்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வார்கள். அதாவது ஈழத்தமிழன் சுய நிர்ணய உரிமையை கைவிட வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள். அதற்கு எங்கள் எட்டப்பன்களே உதவியும் செய்து கொடுப்பார்கள் இவர்களுக்கு என்பது கள யதார்த்தம். ஏதோவொரு விதத்தில் போரும் அமைதியும் மாறி, மாறி வந்தால் தான் அவர்களின் அரசியல், பொருளாதார இலக்குகள் அடையப்படும் என்றும் விளக்குகிறார்.


இவையெல்லாம் என் புரிதல்கள் மட்டுமே. ஆர்வமும், தேவையும் இருப்பவர்கள் இதன் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்.


கீழே இருப்பது இந்தியாவின் ஆதிவாசிகளின் போராட்டத்திற்கு எதிரான க்ரீன் ஹண்ட் - மாவோயிஸ்ட் போராட்டம் பற்றிய கட்டுரை.


சமூக தொடர்பாடல் தளங்களில் சில நடு நிலைவாதிகளின் ஈழம் குறித்த அரைகுறை மேதாவித்தனங்களின் விளைவே இதை எழுத தூண்டியது. ஈழத்தின் களயதார்த்தம் தெரியாமல், அதன் போக்கும் புரியாமல், ஈழத்தமிழனுக்கு இலங்கை சோசலிச குடியரசு யாப்பில் மறுக்கப்படும் உரிமைகள் பற்றியும் தெரியாமல் அபத்தமாய் பேசுவதை என்ன சொல்ல!

Image Courtesy: Google

13 கருத்துகள்:

துஷ்யந்தன் சொன்னது…

பிரமாதம்.... என்ன ஒரு அசத்தலான கட்டுரை.... தேடல்கள் நிறைய இருக்கும் போல...... ரியலி குட்.
ரெம்ப மினக்கெட்டு எழுதியது தெரிகிறது..... வாழ்த்துக்கள்...

துஷ்யந்தன் சொன்னது…

நடுநிலைமை!!!!!!!!!!!! அப்படி ஒன்று இருக்கா??? நடுநிலைமை என்று சொல்லி எழுதுபவர்கள் எல்லாம் தங்கள் கருத்தையே அடுத்தவன் மேல் திணிக்கிறார்கள். மற்றும்படி நடுநிலைமை என்பது இப்போது இல்லாத ஒன்று.... என்னை பொறுத்தவரை அது தேவையும் இல்லை.... நேர்மை மட்டும் இருந்தால் போதுமே....

Rathi சொன்னது…

துஷ்யந்தன், சரியா சொன்னீங்க. இந்த போலி நடு நிலைமயை விட நேர்மை இருந்தாலே போதும்.

ஆனா, அது தான் இப்ப எல்லாரிட்டயும் மிஸ்ஸிங் :)

//நடுநிலைமை என்று சொல்லி எழுதுபவர்கள் எல்லாம் தங்கள் கருத்தையே அடுத்தவன் மேல் திணிக்கிறார்கள்.//

இதை விட சிறப்பா நான் எதுவும் சொல்லியிருக்க முடியாது.

தவறு சொன்னது…

ரதி நடுநிலைமையெல்லாம் சுயம் சார்ந்தே ...

அதிகாரம் அரியணை ஏற லட்சம் உயிர்களும் துச்சம். இதில் நேர்மையா...உரிமையா...!!!

ஹேமா சொன்னது…

ரதி...நடுநிலைமையா உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும்சரி எம் பிரச்சனையை யாரோ ஒருவர் கையிலெடுத்துப் பார்த்திருந்தால் இந்த அகதிவாழ்க்கை எப்போதோ தொலைந்திருக்கும்.அல்லது அகதிக்காலத்துக்கு முந்தியே இல்லாமல் போயிருக்கும் !

Rishvan சொன்னது…

naduvu nilai... indru thedinaalum kidaikkaathu... www.rishvan.com

Rathi சொன்னது…

தவறு, நடுநிலை குறித்த அரசியலை கொஞ்சம் தத்துவம் கலந்து விளக்கியதை, எனக்கு புரிந்ததை பகிர்ந்தேன் :)

Rathi சொன்னது…

ஹேமா, ம்ம்ம்... புரியுது. இது சர்வதேச போலி அரசியல் நடுநிலையும் புரியாமல், ஈழப் பிரச்சனையின் அடிப்படையும் புரியாதவர்களுக்கு. நாங்கள் ஈழப் பிரச்னையை உணர்ச்சிவசப்படாமல், நடுநிலையாய் அணுகவேண்டும் எண்டு எங்களுக்கு பாடம் எடுக்கிற மெத்தப் படிச்ச மேதாவிகளுக்கும் புரியவேணும் இல்லையோ.

எங்களின் காலம் வரும்போது நடுநிலை என்னவெண்டு நாங்களும் புரியவைப்போம் :) அதுவரை பொறுமை காப்போம், ஹேமா :)

Rathi சொன்னது…

ரிஷ்வன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Selvam Muniyandi சொன்னது…

you lines are simply super. i written some tamil kavithai in my blog.

please check and give ur comments

http://alanselvam.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

Wonderful article.....

Rathi சொன்னது…

செல்வம் முனியாண்டி, நன்றி.

நேரம் கிடைக்கும் போது வருகிறேன் உங்கள் கவிதையை படிக்க :)

Rathi சொன்னது…

palindia, Thanks :)