நவம்பர் 24, 2011

மாவீரர் யாரோ என்றால்....!!!சாவுக்கே சவால் விடும் தைரியமும், கொண்ட கொள்கையில் கட்டுக்குலையாத உறுதியும் தான் இவர்களின் அடையாளம். அற்ப வாழ்வுக்கும், புகழுக்கும் அலையும் உலகில் தற்கொடையும்; போலி மனிதாபிமானம், உதட்டளவில் சமாதானம் பேசுபவர்கள் சூட்டிக்கொடுத்த அவப்பெயரும் தான் இவர்கள் பெயரின் பின்னால் எஞ்சியிருப்பவை. இருந்தும் நிலைத்திருக்கிறார்கள், என்றென்றும்  நிலைத்திருப்பார்கள் இவர்களின் உன்னத இலட்சியத்தையும், ஈழத்தின் உண்மை நிலையையும் அறிந்த நல்லவர்களின் மனச்சாட்சிகளில்.

பரந்து விரிந்த உலக வரை படத்தில் எங்களுக்குரிய மண்ணையும், எங்களின் மாண்புகளையும், மறுக்கப்படும் உரிமைகளையும் அறியத்தந்தவர்கள். இவர்கள் எப்படி உருவானார்கள்! அல்லது யாரால் உருவாக்கப்பட்டார்கள்! இலங்கை என்கிற நாடு ஆங்கிலேய ஆட்சியிலிருந்து ஆட்சி கைமாறி சிங்கள பெரும்பான்மையினரிடம் சிக்கிக்கொண்டதிலிருந்து ஈழத்தமிழர் பூமியின் தலைவிதியும் புரட்டிப்போடப்பட்டது. அரசியல் பேசி, ரகசியமாய் செல்லுபடியாகாத ஒப்பந்தங்கள் போட்டு களைத்துப்போனார்கள் சாத்வீக வழியில் போராடியவர்கள்.

1960 களில் சீனாவில் கூட கமியுனிச இயக்கத்தை ஆட்டங்காண வைத்தபின்,  1970 களில் மார்க்சியம் என்கிற சித்தாந்த அடிப்படையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையில்லா திண்ட்டாட்டத்திற்கும் தீர்வு காண முற்பட்டது ஜே.வி.பி. என்கிற ஒரு சிங்கள அமைப்பு. தெற்கில் பல வன்முறைகளை தூண்டிவிட்டு அரசு நிர்வாகத்தை சீர்குலைக்க முயன்றது. இவர்களுக்கு சூட்டிய பெயரையே சிறுபான்மையினத் தமிழர்களின் இலங்கை அரசியல் யாப்பில் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் போராடிய போராளிகளுக்கும் சூட்டி விடுதலைக்கான முயற்சிகளையும் அழிக்க திட்டமிட்டது இலங்கை சிங்கள பெளத்த ஆட்சியாளர்களின் நரிப்புத்தி!

இலங்கை சோஷலிச குடியரசு யாப்பில் தமிழுக்கு மறுக்கப்பட்ட மொழி உரிமையும், கல்விக்கு தரப்படுதலும், பொருளாதார வளர்ச்சி திட்டங்களில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்பட்டதும் அதிபர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் தான் உச்ச பட்சமாய் அன்று இடம்பெற்றது. சோஷலிச குடியரசு யாப்பிலும் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக கேள்வியெழுப்பாமல், நாற்கலியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வழக்கமான வயசான தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சில் இனி எதுவும் நடக்கப்போவதில்லை என்பதை பட்டவர்த்தனமாய் தெரிந்து கொண்ட தமிழ் இளைஞர்களுக்கு இறுதியாய் இருந்த ஒரே வழி ஆயுதப்போராட்டம்! அரசியல் வன்முறை!

தமிழர்களின் உரிமைப்போர் இலங்கையை விட்டு வெளியே தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று பலவிதமான வழிகளில் முயன்றார்கள். இதன் ஓர் முன்னோடியாக 1983 இல் புதுடெல்லியில் அணிசேரா நாடுகளின் ஏழாவது உச்சிமாநாட்டில் தேசிய விடுதலைக்கான தமிழரின் போராட்டம் என்கிற அறிக்கை வரையப்பட்டு மகஜராக சமர்ப்பிக்கப்பட்டது. அணிசேரா நாடுகள் அன்று முதல் இன்று வரை இலங்கையின் போர்க்குற்றங்கள் என்கிற வரையிலும் தமிழர்களுக்காக எதையாவது செய்ததா என்பது கேள்விக்குறியே!! அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பை காட்ட ஈழத்தமிழன் இனப்படுகொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை அணிசேரா நாடுகளின் நிலைப்பாடு!

ஈழப்போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வேண்டியோ, வேண்டாமலோ இந்தியா தலையிடும் ஒரு நிர்ப்பந்தமும் உருவானது. அது இந்திரா காந்தியின் காலத்தில் தான் முக்கியமாய் ஆயுதப்போராட்டத்திற்கு உதவி என்கிற பேரில் ஈழப்போராளிகளை ஒரு பிராந்திய ரவுடிகளாய் உருவாக்குவதையே நோக்கமாய் கொண்டு செயற்பட்டது. இந்திரா காந்திக்கும் கூட ஈழத்தமிழர்களுக்கு ஒரு தனியரசை உருவாக்கி கொடுக்கும் நோக்கம் இல்லையென்பதை தெளிவாக புரிந்து கொண்டே ஈழவிடுதலையை முன்னெடுத்தவர்கள் விடுதலைப்புலிகள். இந்த காரணத்துக்காகவே இந்தியாவால் ஆரம்பத்திலிருந்தே ஓரங்கட்டப்பட்டவர்கள்.

இவ்வாறாக ஈழத்தமிழர்களின் உரிமைகள் குறித்த போராட்ட வரலாற்றில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களை நினைவு கூறும் நாள் தான் மாவீரர் நாள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுதலைக்காய் ஆயுமேந்திய போரில் களப்பலியானவர்கள். இன்றும், இலங்கை அரசின் வதை முகாமில் முகவரி இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்.

தமிழீழவிடுதலைப்புலிகளின் அமைப்பில் சங்கர் என்கிற சத்தியநாதன் வீரமரணமடைந்த நாளே மாவீரர் நாளாய், தமிழீழ தேசிய எழுச்சி நாளாய் கொண்டாடப்படுகிறது. 1982, நவம்பர் 20 ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஓர் ராணுவச்சுற்றிவளைப்பில் சுடப்பட்டு நவம்பர் 27 ம் திகதி வீரமரணமடைந்தவர்.

இவ்வாறு ஈழவிடுதலைக்காய் போராடியவர்களில் மிக முன்னோடியாக கணிக்கப்படுபவர்களில் ஒருவர் சாள்ஸ் அன்ரனி என்கிற சீலன். இவர்களின் போராட்ட குணம் என்பது எங்கிருந்து வேர்விட்டது என்கிற கேள்விக்கு பதில் அதிகம் தேடவேண்டியதில்லை. இலங்கை அரசின் இனப்பாகுபாட்டு கொள்கைகளே வித்திட்டது என்றால் அது மிகையில்லை. அதற்கு உதாரணமாக சீலனையே சொல்லலாம்.

1979 ம் ஆண்டு சிறிலங்கா அரசின் சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின்படி பதவியேற்கவிருந்த இலங்கை முன்னாள் அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவிற்கும், அரசியல் யாப்பிற்குமான தனது தனிப்பட்ட எதிர்ப்பை காட்ட திருகோணமலை இந்துக்கல்லூரியில் பாஸ்பரஸ் கொண்டு சிங்கள தேசிய கொடியை ஏற்றும் போது எரித்ததற்காக கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானவர். தன்னால் தனியே சிங்கள இனவெறிக்கு எதிராக போராட முடியாது என்பதை உணர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டவர்.

இவ்வாறு தங்கள் தனிப்பட்ட செயற்பாடுகளால் இலங்கை அரசின் இனப்பாகுப்பாட்டு, இனவழிப்புக்கு எதிராக செயற்பட முடியாதென நினைத்து தங்களை அமைப்புகளோடு இணைத்து கொண்டார்கள் போராளிகள். இன்று அவர்களை நினைவு கூறவே எங்களுக்கிடையே அடித்துகொண்டு நாங்கள் குழுவாய் பிரிந்து நிற்க வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலையும் இல்லாமல் இல்லை!

ஈழத்தின் விடிவிற்காய், விடுதலைக்காய் ஊன் இன்றி, உறக்கமின்றி, தாங்கொணா சித்திரவதை அனுபவித்தும், அனுபவித்துக்கொண்டும் இருக்கும் மாவீரர்கள்.ஒரு நாள், ஒருபொழுது எங்கள் செளகர்யங்களுக்கு பங்கம் வந்தால், ஒரு நாள் இயல்புவாழ்க்கை தடம்மாறினால் கூட எப்படியெல்லாம் புலம்பித்தீர்க்கிறோம். வாரங்களாய், மாதங்களாய், வருடங்களாய் எப்படியெல்லாம் சிங்கள ராணுவமுகாமின் முன்னே செவிப்பறையை அதிரவைக்கும் குண்டுச்சத்தங்களின் நடுவே எமக்காய் காவல் இருந்தவர்கள். எங்கள் விடுதலைக்காய் தங்கள் இளமையை, சந்தோசங்களை மறந்து, துறந்து விடுதலைக்கனவை மட்டுமெ நெஞ்சில் சுமந்தவர்கள். மரணத்தையே வென்றவர்கள் இவர்கள்.

இந்த நாலு வரிக்களுக்குள் அடங்கவோ, அடக்கப்படவோ முடியாதது இவர்களின் உயர்ந்த லட்சியமும், தியாகங்களும்.

எனக்கு தெரிந்தது அவர்களின் இலட்சிய வேட்கைக்கும், தியாகத்திற்கும் அதற்குரிய மரியாதையை கொடுப்பதுதான்!Image: Google

10 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

இந்த மாவீர தினத்திற்கு பின்னான மனிதர்களின் வலி, தியாகத்தை முன் வைத்த வாரே, அரசியல் எப்படியெல்லாம் இந்த போராட்டத்தை வடிவமைத்திருக்கிறது என்பதனையும் புரிந்து கொள்ள முடிந்தது.

அவர்களுக்கு வணக்கங்களும், கட்டுரைக்கு நன்றியும்!

வினோத் சொன்னது…

நன்றி..
அப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க
http://mydreamonhome.blogspot.com

ஹேமா சொன்னது…

வீரமறவர்களை மறவோம்.வணங்கித் தொடர்வோம் !

தவறு சொன்னது…

ரதி வீரமறவர்களை வணங்குவோம்...

துஷ்யந்தன் சொன்னது…

ரதி அக்கா எப்படி இருக்கீங்க??
ரெம்ப பிஸி அதான் அதிகம் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை...
நீங்கள் எப்படி நல்லா இருக்கின்றீர்கள் தானே????

துஷ்யந்தன் சொன்னது…

வழமை போல் கட்டுரை அருமை
கட்டுரையில் உங்கள் தேடலும் படிப்போருக்குமான ஈர்ப்பும் கொட்டி இருக்கிறது...
படிக்கும் போதே ஏதேதோ நினைவுகள் வந்து மனசு கனக்கிறது.........

அவர்கள் தியாகம் போற்றத்தக்கது
அவர்களுக்கு உங்கள் பதிவின் மூலம் இன்னொரு முறை என் அஞ்சலிகள்...

ரெவெரி சொன்னது…

விடுதலைக்கு உயிர் தந்த அனைத்து மாவீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வீர வணக்கம்...

உங்கள் எழுத்து...கட்டுரை...நிறைய ஆதங்கத்துடன்...கூடவே நன்றியுடன்...


வாழ்த்துக்கள் சகோதரி...

Rathi சொன்னது…

மாவீரர் வாரத்தில் உணர்வுகளால் எம்மோடு இணைந்திருந்த எல்லாருக்கும் நன்றிகள்!

Rathi சொன்னது…

துஷி, நான் நலம் :)

PUTHIYATHENRAL சொன்னது…

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.