அக்டோபர் 23, 2011

ஈழத்துப்பெண்ணின் ஒற்றைசொல்லும் ஓரு கவிதையும்!!!!



துன்பத்தில் துவளும் வேளையில் இடம், பொருள், ஏவல் பார்த்து உதவி கேடபதில்லை உள்ளமும் உதடுகளும். அப்படி ஒரு நிலைதான் ஈழத்தமிழர்களுக்கு 2009 ஆம் ஆண்டு  உருவாக்காப்பட்டது. சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி, வீதி வீதியாய் வீழ்ந்துகிடந்து ஈழத்தமிழனுக்காய் உயிர்ப்பிச்சை கேட்கவேண்டிய காலக்கட்டாயம்.

முள்ளிவாய்க்கால் முடிவின் வழி ஈழத்தின் தலைவிதியும், ஈழத்தமிழனின் அரசியல் அபிலாஷைகளும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடுமென்ற  எத்தனையோபேரின் அற்ப ஆசைகளுக்கு அப்பப்போ யாராவது எட்டப்பன்கள் தீனி போடுகிறார்கள். இருந்தும், பெரும்பான்மை தமிழர்களின் மனங்களில் ஈழம் என்கிற நெருப்பு இன்னும் கனன்றுகொண்டே தான் இருக்கிறது. ஈழம் அழிக்கப்பட்டு, ஈழத்தமிழனினம் இனப்படுகொலை செய்யப்பட்ட போது ஈழத்தமிழர்கள் இந்தியர்களிடம் காலில் விழுந்து செத்துகொண்டிருந்த உறவுகளுக்காய ஊயிர்ப்பிச்சை கேட்டிருக்க வேண்டுமா என்று இந்த காணொளியை காணும் ஒவ்வொரு தடவையும் யோசிப்பதும் உண்டு.





அந்தக் கேள்விக்கு என் தன்மானம் இல்லை என்றே எப்போதும் இறுமாப்பாய் பதில் சொல்லியதுண்டு. இருந்தும் அது அந்த நேரத்தில் சரியா, தவறா என்கிற அறிவுக்கு அப்பாற்பட்ட கேள்விகளுக்கு புறம்பாய்  இருந்தது நாங்கள் வைத்த மனிதாபிமான கோரிக்கைகள்.  இன்று தெக்கிகாட்டான் பகிர்ந்துகொண்ட இக்கவிதை என் கேள்விக்கு பதில் சொன்னது போல் தோன்றியது. பதிவர் தெக்கிகாட்டான் வார்த்தைகள்.....

”இந்த காணொளி பார்த்த பாதிப்பில் ஏதோ சொல்ல வேண்டுமென தோன்றியதை இங்கு இறக்கினேன். அந்த பெண்ணின் ஒற்றைச் சொல், ”உங்கள் கால்களை பிடித்து கெஞ்சிக் கேக்கிறேன்” - தேவையற்ற ஒரு கெஞ்சலாக பட்டது. ஏன் தேவையற்றது? இந்த கவிதை அதற்கான காரணத்தை ஓரளவிற்குச் சொல்லும் .”

தெக்கிகாட்டான் கவிதை....!!!



அது அப்பொழுதே
விசில் எழுப்பத் தொடங்கியிருந்தது
இருந்த பருக்கைகளை
வழித்து ஊட்டத் தொடங்கியிருந்தேன்
கேட்ட நொடி கை உதறி
அள்ளி அணைத்து
ஏற்கெனவே வெட்டிவைத்த
மரணக் குழியில் புதையுண்டோம்...

கரையின் இந்தப் புறமாக
தெரு ஓரம் ஓடிய நாயின்
கோர முகம் தகிக்காமல்
வீறிட்டாள் எனது மகள்
தூர விரட்டி
வாஞ்சையுடன் உணவூட்டி
அழகூட்டி பேருந்தில் ஏற்றிவிட்டு
சீரியலுக்கென குமிழ் திருப்பி அமர்ந்தேன்...

புதையுண்ட குழிக்கருகாமையில்
அது வந்து இறங்கியது
காது பிளந்து உலகமிருட்டி
பிசுபிசுக்கும் குருதி வழித்து
மீண்டும்
கண் திறக்கையில்
அருமை மகனின்
உருவம் சிதைந்திருப்பு
மூர்ச்சையாக்கியது...

அவள் எவனோடு தொடர்பு
என்றபடி மீண்டும்
செல்லரித்த ஒரு நாள் பொழுதை
மூக்கை சிந்தியபடி மெத்தென்று
சமைந்திருந்த அடுத்த நொடியில்
ஏதேச்சையாக
சானல் அழுந்தி மாற
அங்கே அன்னியக் கரைக்கார
சகோதரி ஒருத்தி
எங்களுக்காக கண்ணீர் வடியுங்கள்
குடிக்க தண்ணீர் இல்லை
என் இரண்டு வயது மகனின்
கால் இருந்த இடத்தில்
கை கிடக்கிறது...

அரற்றிய அவள் ஓலம்
சலித்துக் கொண்டே
ஐஸ் க்ரீம் எடுக்க
முனகிக் கொண்டிருக்கிறேன்.

இக்கவிதை குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் என்னை கொஞ்சம் ஆச்சரியப்படவும், அட எங்கள் சகோதரி ஒருத்தி ஏன் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டும் என்கிற அக்கறையும் அங்கே தெரிந்ததா!!! இல்லை நான் அப்படி கற்பனை செய்துகொண்டேனா! பதில் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால், புரிந்தால் நீங்களும் உணருவீர்கள்.

கவிதை குறித்த கருத்துகளும், ஆதங்கமும் இங்கே

மிகுதி உங்கள் முடிவுக்கு.... !!!!

Image: Google

3 கருத்துகள்:

siva சொன்னது…

என் தேடலுக்கும் அப்பால் உள்ளது உங்கள் கவிதை எல்லாம் ......
வாசித்து விட்டு அமைதியாய் செல்கிறேன்
விமர்சிக்க எனக்கு தெரியவில்லை

ஆகவே இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ரெவெரி சொன்னது…

போரின் இறுதியில் இந்தியாவும் ஒவ்வொரு இந்தியனும் காத்த மௌனம் மன்னிக்க முடியாத குற்றம்...வெட்கக்கேடும் கூட...

PUTHIYATHENRAL சொன்னது…

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.