செப்டம்பர் 21, 2011

ஏன் இப்படியென்று கேட்கமாட்டேன்!!!

அந்த படத்தில் நான் காண்பது ஒரு இந்திய அமைதிப்படை ராணுவச் சிப்பாய் சீருடை இன்றி இருப்பதாய் நினைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரம் பார்த்து, அந்த காட்சி சொல்லும் உண்மைகள் அத்தனையையும் மெளனமாய் மனதுக்குள்ளே படித்துவிட்டு விலகிவிட்டேன். இரண்டு நாட்களுக்கப் பிறகு அது மனதில் காட்சியாய் நிழலாட அது குறித்து எதையாவது கிறுக்கி வைக்க தோன்றுகிறது. பொறுக்கவில்லை மனம் :(

ஆளவந்தான் படத்தில கமல் ஒரு பாட்டுப் பாடுவார். மிருகம் கொன்று, மிருகம் கொன்று  கடவுள் வளர்க்கப் பார்க்கிறேன். கடவுள் கொன்று, கடவுள் கொன்று மிருகம் மட்டும் வளர்கிறதே என்று. அந்த கதாபாத்திரத்துக்கு Schizophrenia என்கிற ஓர் நிலை அவரை எதையும் காட்சிப்பிழையாய் பார்ப்பதாய் தோன்றியது. ஆனால், கொஞ்சம் ஆழமாய் கவனித்தால் அது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் மனிதன், மனிதம் பற்றிய ஆழ்மனக் குழப்பம் என்பது புரிகிறது.

"It is proved again and again that, what B. R. Ambedkar said about Indians are true: “Indians today are governed by two different ideologies. Their political ideal set in the preamble of the Constitution affirms a life of liberty, equality and fraternity. Their social ideal embodied in their religion denies them.”

கேரளாவைச் சேர்ந்த ஓர் பெண் விரிவுரையாளரின் தளத்தில் இந்தப் படம் கிடைத்தது. தளத்தில் அம்பேத்காரின் இந்த வார்த்தைகளும் சிக்கியது. அதை கொஞ்சம் எனக்கு தெரிந்த தமிழில், என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

இன்றைய இந்தியர்கள் இரண்டு விதமான கருத்தியல்/சித்தாந்தங்களால் ஆளப்படுகிறார்கள். இந்திய அரசியல் யாப்பின் முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. மதத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் அவர்களது சமூக குறிக்கோள் அரசியல் யாப்பில் சொல்லப்பட்டவைகளை மறுக்கிறது. இது தான் அம்பேத்கார் சொன்னதின் உள்ளடக்கம்.

இது அவரது காலத்தில் சொல்லப்பட்டது என்றாலும், இன்று காலம் கடந்து இதப் படித்த போதும் நிறையவே யோசிக்க வைக்கிறது.


14 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

உதைப்பவன்... கடவுள் கொன்று கடவுள் கொன்று மிருகம் வளர்த்தவனே சந்தேகமே இல்லை.

இந்த படத்தை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. மனிதன் மிருகமாகும் பொழுது எத்தனை வக்கிரம் அவன் மனதில் கொப்பளிக்கிறது என்பதற்கு சாட்சியாக இருக்க, உலக அளவில் இந்த படத்தை சிபாரிசு செய்யலாம்.

மண்டைக்குள்ளர ஆணி அடிச்சு மாட்டின மாதிரி இருக்கும் இந்த ஒரு படத்தை பார்த்துவிட்டால். அந்த விரிவுரையாளரை பாராட்டியே ஆகணும்... இதனை கண்டுபிடித்து பகிர்ந்து கொண்டதற்கு.

அப்படியே உங்களுக்கும். அம்பேத்கர் சொனது இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் செல்லுபடியாகுமோ?

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஈழத்தில் மட்டுமா இந்தியாவில் அசாமில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்துக்கொன்ற காணொளிகள் கூட இருக்கு.. மிருகங்கள் இப்போது காட்டில் இல்லை.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

உண்மைதான் சகோ.. மிருகங்கள் இப்போய்ஹு காட்டில் இல்லை..

Rathi சொன்னது…

செந்தில், இந்த காட்சி அஸ்ஸாமில் நடந்த கொடூரம் தான்.

siva சொன்னது…

கடவுளே என்றும் திருந்தும்
இந்த மனித மிருகங்கள்
கனக்கிறது மனது

siva சொன்னது…

நீங்க என்ன சொல்ல வாறீங்க என்று புரிய வில்லை
இந்தியாவில மட்டும்தான் எப்படி நடக்கின்றது என்று சொல்ல வாரீங்களா?
வேற எங்கும் இதுபோல கொடுமைகள் நடக்க வில்லை சொல்லுறீங்களா
மொத்த மனிதமும் செத்துபோய்விட்டது என்று சொல்றீங்களா
ஏன் இந்த பதிவு ?

ILA(@)இளா சொன்னது…

//மிருகங்கள் இப்போது காட்டில் இல்லை//
உண்மை KRP Senthil

Rathi சொன்னது…

தெகா.... ம்ம்ம்ம்.. அம்பேத்கார் சொன்னது பொய்யில்லன்னு இன்னும் எவ்வளவு காலம் நிரூபிக்கிறாங்க பார்க்கலாம்.

Rathi சொன்னது…

வேடந்தாங்கல் கருன், இளா, செந்தில் சொன்னதை ஆமோதிச்சு இருக்கீங்க.

Rathi சொன்னது…

சிவா.... You are getting there. ஏன் என்று கேள்வி கேட்கத்தொடங்கி இருக்கிறீங்க. நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை இன்னும் கொஞ்சம் ஆழமாப் படிச்சா புரியலாம் என்று நினைக்கிறேன். ஏன் இந்தப் பதிவு என்று என்னை கேள்வி கேட்காமல் என்னுடைய பதிவை challenge செய்யுங்க சிவா. அது எந்தப் பதிவா இருந்தாலும். அப்போ நீங்களும் வளருவீங்க. உங்களோட சேர்ந்து நானும் வளருவன்... புரியுதா நான் சொல்றது :)

சமூக ஏற்பாடுகளும், அரசியல் பொருளாதார கொள்கைகளும் எங்கிருந்து வேர்விடுகின்றன; அவை எப்படி மனித குலத்தை ஆட்கொள்கின்றன; மனிதன் என்னவாய் மாறிக்கொண்டிருக்கிறான் என்பதை அம்பேத்கார் அவர்களின் வார்த்தைகளில் கொஞ்சம் யோசிச்சு பாருங்கன்னு சொல்றேன்.

siva சொன்னது…

என்னுடைய வருத்தம் இதுபோல புகைப்படங்கள்
மட்டுமே...
ஒரு வேளை சம்பந்த பட்டவர் பாதிக்க பட்டவர் பார்க்கும் போது அவரது மனம் இன்னும் வருத்தப்படும் என்பதே...உங்களின் தொலை நோக்கு பார்வையும் உலகமும் மனிதமும் நன்கு புரிகிறது .

உலகத்தில் இன்னும் எவ்ளோவோ விசியங்கள் மனிதத்தை மாற்றிக்கொண்டுதான் இருக்கின்றன...

இதில் அம்பேத்கர் சொன்னதலோ பிறகு யாரு சொன்னதலோ மாறிவிட போவது இல்லை..அவர் அவர் மனது சுத்தம் ஆவது அவர்கள் கையில்தான்.

தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Rathi சொன்னது…

சிவா, பாருங்கப்பா கைப்புள்ளைய..... :) எதுக்கு மன்னிப்பு :)

ம்ம்ம்... உங்களையும் அரசியல் பதிவு எழுதவைக்கலாமேன்னு நினைச்சேன். இப்புடி கவிழ்த்துப்புட்டீக......

துஷ்யந்தன் சொன்னது…

வணக்கம் அக்கா.. எப்படி இருக்கீங்க... விடுமுறையில் போய் இன்றுதான் திரும்பி இருக்கோம்... படம் ரெம்ப கொடூரமா இருக்கு... என்னத்தை சொல்ல.... மனசுக்குள் ஆயிரம் கேள்விகள் வருது... அப்படம் இன்னொரு சம்பவத்தையும் நினைவு படுத்துது......... :)

உங்கள் ஆதங்கம் மிக எதார்த்தமானது..

Rathi சொன்னது…

வணக்கம் துஷ்யந்தன்... ம்ம்ம்... welcome back... இந்தப் படம் சொல்வதை விடவும் நிறையவே கொடுமைகள் எங்கட மண்ணில இந்திய அமைதிப்படடையாலும், சிங்கள ராணுவத்தாலும் நடத்தப்படிருக்கிறது.