செப்டம்பர் 02, 2011

ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும்


இருபத்தோராம் நூற்றாண்டில் உரிமைகள், உரிமைகள் என்று நிறையவே கேட்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம். இதுக்கு முதல் யாருமே இதுபற்றி பேசியதே இல்லையா என்று என்னை அறியாமலே ஓர் கேள்வி மனதில் ஓடுகிறது. எதுக்காக இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் அது குறித்து இவ்வளவு ஆர்ப்பாட்டம்? மனித நாகரிகம் வளர்ச்சியடைந்த நாள் தொட்டு சித்தாந்தங்கள், கொள்கைகள், ஜனநாயகம் என்பவற்றின் அறிமுகமும் உபயோகமும் தொடங்கிவிட்டன. அன்றுமுதல் மனிதன் பற்றியும் அவனது உரிமைகள் குறித்த சர்ச்சைகளும், கேள்விகளும், போராட்டாங்களும் வாழ்வியல் போராட்டங்களுடன் கூடவே ஒட்டிக்கொண்டு தான் வருகின்றன. அன்றாடப் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கே ஓடாய் தேய்வதில் அடிப்படை உரிமை பிரச்சனைகளை கோட்டை விடுகிறோமா?  அல்லது தகவல் தொழில்நுட்பம் விண்ணைத் தாண்டிய பின்பும் மனித உரிமைகள் மண்ணுக்குள் புதைக்கப்படுவதால் அது குறித்து பேசிக்கொண்டு...பேசிக்கொண்டே,  மட்டும் இருக்கிறோமா!

உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமைகள், அரசியல் உரிமைகள் என்று எல்லாமே அரசியல் யாப்பில், சர்வதேச உடன்படிக்கைகள், ஒப்பந்தங்களில் வகுக்கப்பட்டவை தான். இதைப் பற்றியெல்லாம் பள்ளிக்கூடத்தில் படித்திருப்போம். பிறகு, எல்லாமே கால ஓட்டத்தில் மறந்துபோயிருக்கும். மறந்தாலும் அதுகுறித்து வருந்தாத காரணம் நாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதித்துவ  ஜனநாயகவாதிகள் எங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படவென்றே அரசு, சட்ட ஒழுங்கு, அரச நிர்வாகத்தின் நிர்வாக அலகுகள் என்கிற அம்சங்களை கட்டிக்காப்பார்கள் என்கிற நம்பிக்கை. இருந்தாலும் நாங்கள் தேர்ந்தெடுத்த ஜனநாயகத்தின் பிரதிநிதிகளை கட்டிமேய்க்கவே நான்கு அல்லது ஐந்து வருடங்கள் வீணாகிப் போகிறது. இந்த அக்கப்போரில் அரசு என்கிற அலகின் அத்தனையும் நிலைகுலைந்து போகிறது. இதையெல்லாம் நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாளில் சரி செய்வேன் என்று இன்னோர் தேர்தல் அரசியல் ஆடுகளம் தயாராய்.....! மறுபடியும் அதே சுழற்சி முறை!

ஓர் ஜனநாயக அரசின் மேற்சொன்ன மூன்று அம்சங்களும் ஏதோவொரு இடத்தில் பொய்த்துப் போனால் அல்லது தடுமாறினால் யார் இவர்களை தட்டிக்கேட்பார்கள்? வாக்களித்து ஆட்சியில் வைத்த நாங்கள் தானே! இது கேட்க, படிக்க நல்லாத்தான் இருக்கும். ஆனாலும், சமூகம், அரசியல், பொருளாதாரம், பொழுதுபோக்கு என்று எதுவானாலும் அது உள்ளூர், உலக செய்திகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதல் வானொலி வரை யாரோ சேகரித்துக் கொடுப்பதினால் தானே அது குறித்து நாங்களும் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையை தக்கவைத்துக்கொள்கிறோம். ஆக, ஊடக சுதந்திரமும், ஊடகவியலாளர்களும் பாதுகாக்கப்பட்டாலே மற்றவை எல்லாம் சாத்தியம்.

இந்த விஞ்ஞான தொழில்நுட்ப யுகத்தில் அரசு நிர்வாக செய்திகள், அறிவிப்புகள் அரசின் இணையத்தளத்தில், அரச வர்த்தமானியில் காணக்கிடைக்கிறது. ஆனாலும் இணையத்தள தகவல் உரிமை இன்னும் உலகமயமாகவில்லை என்பதும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. கணணி என்றால் என்னவென்றே தெரியாத கோடான கோடிப்பேரை நினைத்துக்கொண்டேன்.

இப்பிடி நூல்பிடித்து யோசிக்கும் போது தான் ஊடக சுதந்திரம் குறித்து ஓர் ஞானதிருஷ்டி!! ஊடகங்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் தனியார் உடமை ஆகிவிட்டது. அரச செய்தி ஊடகங்கள் இன்னும் எத்தனை நாடுகளில் உள்ளது என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. அண்மையில் நியுசிலாந்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது 'அரச தொலைக்காட்சி' செய்திகள் என்று மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவந்தபோது என்னிடம் உருவான ஆச்சர்யம் கொஞ்சம் மிச்சமிருந்தது. தனியார் ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாட்களிலும் அரச செய்தி ஊடகம், அதுவும் வளர்ச்சியடைந்த ஓர் நாட்டில்! அரச ஊடகம் என்றாலும் ஆழும் கட்சிக்கோ, அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்களுக்குகான செய்திகளை மட்டும் கணக்கில் எடுத்தால் அதன் நம்பிக்கைத் தன்மையும் அடிப்பட்டும் போகும்.

ஓர் நாட்டின் அரசை, ஊடகங்கள் விமர்சிப்பது, தவறுகளை சுட்டிக்காட்டுவது; அல்லது இரு சாராருமே பாரபட்சமின்றி நாட்டின், மக்களின் நலன் குறித்து ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக்கொள்வது (utopian dream, haah!); இவை இரண்டும் இல்லையா, ஓர் அரசே ஊடகங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது. இப்படி வகைப்படுத்தலாம். முதல் இரண்டுவகையிலுமே ஜனநாயகம், நீதி என்று எதுவோ மிச்சமிருக்கும். ஆனால், எதேச்சாதிகார அரசின் ஆட்சியில் ஊடக சுதந்திரம் தான் எப்போதும் சர்ச்சைக்கும், பரிதாபத்துக்கும் உரியது. ஊடக சுதந்திரம் பறிபோக மக்கள் வாழ்வும், உரிமைகளும் கூட பரிதாபமாய்! அரசாட்சியின் குழறுபடிகளை இடுத்துரைத்து, மக்களிடம் உண்மையை எடுத்துச் செல்ல ஊடகசுதந்திரம் அவசியம். அதுவும் பறிக்கப்பட்டால் விளைவு அராஜக அரசாட்சி.

எனக்குத் தெரிந்த பத்திரிகை சுதந்திர வரலாற்றில் அமெரிக்க ஊடகங்கள் எப்படி வியட்னாம் போர் தொடங்கி மூன்றாம் உலக நாடுகளின் (உ-ம: குவாட்டமாலா, எல் சல்வடோர், நிகரகுவா) ஜனநாயக தேர்தல்கள் வரை தங்கள் கொள்கைகளுக்கு சாதகமாக ஓர் கருத்துருவாக்கத்தை அமெரிக்கர்களிடமும் உலகத்திடமும் உருவாக்கினார்கள் என்பது ஆச்சர்யப்படவும், அதிர்ச்சியடையவும் வைத்தது. வியட்னாம் கமியுநிசத்திடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்று அவர்களை கொன்றழித்ததையும், லத்தீன் அமெரிக்காவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறோம் என்று தங்கள் கொள்கைகளுக்கு சார்பான எதேச்சாதிகார ஆட்சியாளர்களை ஜனநாயகவாதிகள் என்று முகமூடி போட்டு அமெரிக்க ஊடகங்கள் உலகத்திற்கு காட்டியதையும் நோம் சாம்ஸ்கி அழகாய் படம் பிடித்து காட்டுகிறார்.

இது அமேரிக்கா போன்ற நாடுகளின் அரசியல், பொருளாதார நலன்கள் சார்ந்த கருத்துருவாக்கங்கள். அதுக்கு நடைபெறும் நாட்களில் எகிப்து ஓர் சிறந்த உதாரணம். அமெரிக்காவின் உளவுத்துறைக்கு தோள்கொடுத்து, சித்திரவதை கூடங்களுக்கு தனது மண்ணில் வழியமைத்துக்கொடுத்தவர் இன்று ஜனநாயகவாதி. அதை அமெரிக்க ஊடகங்கள் எகிப்தில் ஜனநாயகம் என்று கதை சொல்லி கருத்துருவாக்கம் செய்து காசும் பார்க்கின்றன.

இப்படி அமேரிக்கா என்கிற நாடும், அதனோடு சேர்ந்த நாடுகளின் ஊடகங்களும்  ஜனநாயகம், தேர்தல், பஞ்சாயத்து என்று தமக்கு சாதகமான கருத்துகளை உருவாக்குகிறார்கள். மற்றைய நாடுகளில் தங்களது தலையீடுகளை நியாயப் படுத்தவோ அல்லது அரசியல் களநிலவரங்களை கவனமாற்றம் செய்யவோ நிறையவே கருத்துருவாக்கங்கள் இடம்பெறுகின்றன. பத்திரிக்கை தர்மம் கூட செத்துப்போகிறது.

 அமேரிக்கா எப்போதுமே தனது பொருளாதார நலன்களை முன்னிறுத்தி ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கிறேன் பேர்வழியாய் எத்தனையோ நாடுகளை சிதைத்தது தான் வரலாறு. முன்னாள் அதிபர் கிளிண்டன் காலத்தில் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க வெளிநாட்டுக்கொள்கை, அதற்குரிய நிதி என்று நிறையவே முயற்சிகள் செய்யப்பட்டன. இருந்தும் என்ன! லத்தீன் அமேரிக்கா முதல் இஸ்லாமிய நாடுகளில் அமேரிக்கா வளர்த்துவிட்ட ஜனநாயகம் கொள்ளையடிக்கும் அரசுகளாலும், அமெரிக்காவின் கைப்பொம்மை ஆட்சியாளர்களாலும் சீரழிந்துகொண்டிருப்ப்பதே  தற்கால வரலாற்றிலும் தொடர்கிறது. இந்த உண்மைகளை எவ்வளவு தூரம் அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்கர்களிடம் சொல்கிறது என்பதும் கவலைக்குரியது. இதே நிலையைத் தான் இலங்கை விடயத்திலும் கையாள்கிறது.
 
இன்றைய காலகட்டத்தில் இலங்கை என்கிற நாட்டின் ஊடக சுதந்திரம் குறித்து நிறையவே யோசிக்க வைக்கிறது. மனித உரிமைகளே மதிக்கப்படாத ஓர் நாட்டின் ஊடக சுதந்திரம் குறித்து நம்பத்தகுந்த தன்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் அதன் தாக்கங்கள் என்பது பத்திரிகையாளர்களின் உயிர்கள் கூட பறிக்கப்படும் அளவிற்கு மிகவும் சீர்கெட்டுப் போய் கிடக்கிறது. எத்தனையோ தமிழ் ஊடகவியலாளர்கள் முதல் ஆங்கிலப் பத்திரிக்கை சண்டே லீடர் எட்டிடர் லசந்த விக்ரமதுங்கே வரை படுகொலை செய்யப்பட்டவர்கள்; உதயன் தமிழ்பத்திரிகை வித்தியாதரன் முதல் ஆங்கில ஊடகவியலாளர் திசாநாயக்க வரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டார்கள். தமிழர் பகுதியில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையாளர்கள் இலங்கை அரசால் அதிகம் பாதிக்கபடுபவர்கள். அண்மைய தாக்குதலுக்கு இலக்கான  உதயன்பத்திரிகையாளர் திரு. ஞா. குகநாதன்.

இதில் என்ன ஒற்றுமை என்றால் இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் முதல் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தான் அடிக்கடி பத்திரிகையாளர்கள் கைது, கொலை என்று நிகழ்ந்தேறும். ஆட்சியாளர்கள் விரும்பாத எதையோ ஒரு பத்திரிகையாளர் எழுதினால் அவர்கள் இது போன்று தண்டிக்கப்படுவார்கள். இதில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டவர்கள் 'தராக்கி' சிவராம் மற்றும் லசந்தா விக்ரமதுங்கே.

இவ்வாறாக பத்திரிகையாளர்களையும், பத்திரிக்கை தர்மத்தையும் கொலை செய்தும், கொலை மிரட்டல் விட்டும் அவர்களை சுயதணிக்கை செய்ய வைப்பது இலங்கையில், குறிப்பாக ராஜபக்க்ஷே அரசில் ஜரூராக நடந்து வருகிறது. உதயன் பத்திரகையின் ஞா. குகநாதன் விடயத்தில் இலங்கையில் உள்ள எல்லாப் பத்திரிகையாளர்களும் வடக்கில் யாழ்ப்பாணத்தில் கூடி தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்ட ஏறக்குறைய பதினேழு பத்திரிகையாளர்களின் வழக்குகளில் யாருமே இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கே இந்த நிலை என்றால் பொதுசனத்தின் வழக்குகளுக்கு என்ன நீதியை வழங்குவார்கள்!!

இது தவிர, இலங்கை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலில் உயிரை தக்கவைக்க வேறுநாடுகளில் தஞ்சமடைந்து வாழ்பவர்களும் உண்டு. அவ்வாறானவர்கள் உருவாக்கிய எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்களின் அமைப்புத் தான் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குறித்த சனல் நான்கின் முயற்சிகள் சிலவற்றிகும் உதவியவர்கள். தங்களுக்கு இலங்கையில் இருக்கும் உயிராபத்து தவிர்க்கப்பட்டால் மீண்டும் தமது குடும்பங்களோடு இலங்கையில் சேர்ந்துவாழ விரும்புவர்கள். இவர்கள் குடும்பங்களை தாங்கள் வாழும் நாட்டிற்கு அழைக்கும் முயற்சி எடுத்தால் தாங்கள் எங்கே வாழ்கிறோம் என்பது தெரிந்து தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்கிறார் சுனந்தா தேஷப்ரியா என்கிற பத்திரிகையாளர். இவரது தளத்தைப் படித்தால் தான் தெரிகிறது இலங்கை அரசுக்கும், பத்திரிகைத்துறைக்கும் இடையே நடக்கும் யுத்தமும், வெளிவராத உண்மைகளும்.

மனித உரிமைகள் பிரகடனம், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தத்தின் (Iinternational Covenant on Civil and Politkal Rights- ICCPR)அடிப்படையில் தனிமனித அடிப்படை உரிமைகளும், பத்திரிக்கை சுதந்திரமும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது நியதி. இருந்தாலும், மனித உரிமைகள் பிரகடனம், சர்வதேச ஒப்பந்தம் என்பன போர்ப்பூமியில் வாழ்பவர்களால் மட்டுமே பேசப்படுபவை. அதிலேயும், இலங்கையைப் பொறுத்தவரை குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பதந்ததுக்கு இலங்கையில் உள்நாட்டு சட்டத்தின் கீழ் கட்டுப்பட வேண்டியதில்லை என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றமே தீர்ப்பு எழுதியிருக்கிறது. அதாவது அந்த பன்னாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் யாரும் மனித உரிமைகள் சபையிடத்தில் தங்கள் மனித உரிமைகள் மீறப்படுவதாக முறைப்பாடு செய்யமுடியாது.

இலங்கை அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டு, பன்னாட்டு உடன்படிக்கைகளுக்கு அமைவாக பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், தகவல்களை தெரிந்து கொள்ளும் உரிமை, பத்திரிக்கை சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்யப்படுகிறது. பரிந்துரைகள்  தானே.....! இலங்கையைப் பொறுத்தவரை அது விழலுக்கு இறைக்கப்படும் நீர்.

Image Courtesy: Google

21 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பரிந்துரைகள் எப்போதுமே காகிதத்தில் தான்... கிடப்பில்...நல்லா எழுதியிருக்கீங்க...

Thekkikattan|தெகா சொன்னது…

உலக சரக்கு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு... ம்ம்ம்

பத்திரிக்கை தர்மம், நீதி, சமநிலை இதெல்லாம் எந்த கால கட்டத்தில் இருந்து பேசிட்டு இருக்கோம். இன்றை நிலையில் 10,000 பேர் இருக்கிற ஒரு ஜாதிக்கு ஒன்றாக ஊடகங்கள் வந்திட்டு இருக்கு. இதனையே அப்படியே நாடு, பிராந்திய ரீதியாக பிரிச்சிக்கோங்க. வலியவன் வகுப்பதை எடுத்துக் கூறவே இந்த ஊதுகுழல்கள்... கசப்பான உண்மை.

Rathi சொன்னது…

நன்றி ரெவரி.

Rathi சொன்னது…

தெக்கி, ம்ம்ம்...உண்மை கசப்பாக இருக்கிறதால தான் இன்னும் அது பற்றி அதிகம் பேசவேண்டியிருக்கிறது.

துஷ்யந்தன் சொன்னது…

நல்ல பதிவு அக்கா. ஊடக சுதந்திரம் என்பது அதுவும் இலங்கையில் பூத கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும்.

அவர்கள் ஆட்சியில் இது எல்லாம் இருந்தாதானே ஆச்சரியம்.

துஷ்யந்தன் சொன்னது…

//இவ்வாறாக பத்திரிகையாளர்களையும், பத்திரிக்கை தர்மத்தையும் கொலை செய்தும், கொலை மிரட்டல் விட்டும் அவர்களை சுயதணிக்கை செய்ய வைப்பது இலங்கையில், குறிப்பாக ராஜபக்க்ஷே அரசில் ஜரூராக நடந்து வருகிறது//


இவர்கள் ஆட்சியில் இது மட்டுமா நடக்குது...

எந்த ஒரு நாட்டில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுதோ அந்த நாடு எவ்வழியிலும் முனேற முடியாது, அந்த நாடு பேய் ஆட்சிக்கு ஈடாகத்தான் அந் நாட்டு ஆட்சி இருக்க முடியும்.

துஷ்யந்தன் சொன்னது…

//இலங்கையைப் பொறுத்தவரை அது விழலுக்கு இறைக்கப்படும் நீர்.//


கடைசி வரியை ஆணித்தரமாக நெத்தியில் அடித்தால் போல் சொன்னீர்கள்.

இதுதான் உண்மை.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

இன்னும் எளிமைபடுத்தியிருக்கலாம்.

siva சொன்னது…

present teacher.

Rathi சொன்னது…

ஜோதிஜி, ம்ம்ம்ம்...

Rathi சொன்னது…

சிவா.......பாருங்கப்பா கைப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு பேசுற பேச்சை :)

siva சொன்னது…

சிவா.......பாருங்கப்பா கைப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு பேசுற பேச்சை :)

na kaippula ellai kaippulla ellai..kuttipayan..

Nesan சொன்னது…

சுனந்த தேசப்பிரியவின் கூற்று 100% உண்மை நீண்ட தேடல் கொண்ட பதிவு உங்களுடையது வாழ்த்துக்கள் தோழி!

தவறு சொன்னது…

ரதி உங்களுக்கே உரித்தானஎழுத்துநடையில்...ம்ம்ம்...

பத்திரிக்கை தர்மமா...அதெல்லாம் எப்பவுமே அதிகாரவர்க்க பக்கம் தான்.

Rathi சொன்னது…

சிவா, இத்தோட எத்தனாவது வருஷம், நீங்க குட்டிப்பையனா இருக்கிறது:)

Rathi சொன்னது…

நேசன், நன்றிகள்.

ஊர்ப்பக்கம் போனீங்க போல கிடக்கு. எப்பிடியிருக்கு ஊர்?

Rathi சொன்னது…

தவறு, ம்ம்ம்ம்...

அதுசரி, இப்போவெல்லாம் "அறியது" தளத்தில எதுவும் போஸ்ட் போடுறதில்லப் போல.

தவறு சொன்னது…

ரதி வீட்டைசார்ந்த வெளிவேலைகளினால் இணையபக்கம் கொஞ்சம் சுணக்கம்..

ஆமா...ஹேமா...எப்படி இருகாங்கோ ரதி..ஏதும் தெரியுமா..

Rathi சொன்னது…

தவறு,I think she, Hema is on vacation.

siva சொன்னது…

நான் மறுபடியும் உங்கட பள்ளியிலே போய் தமிழ் படம் கற்றுக்கொண்டு வர வேண்டும், சில இடங்கள்
எப்படி இருக்கும் இப்படி இருக்குமோ என்று எண்ணுகிறேன்.

siva சொன்னது…

சிவா, இத்தோட எத்தனாவது வருஷம், நீங்க குட்டிப்பையனா இருக்கிறது:)//

just i was born today..:)