ஆகஸ்ட் 15, 2011

ஈழமக்களை நம்பவைத்து புலித்தலைவர் ஏமாற்றினாரா!! நிரூபன் பதிவுக்கு பதில்ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து சுதந்திரத்தை இந்த விடயத்தில் கடைப்பிடிக்கவும் தவறுவதில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிராக எழுதும் எழுத்தாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் முதல் கே.பி. என்கிற குமரன் பத்மநாதன் சொல்பவைகளை படித்தாலும் அவைகளை நான் கடந்து வந்துவிடுவதுண்டு. மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லாத இடத்தில் நான் நேரம் கடத்துவதில்லை. ஆனால், நிரூபனின் கருத்துக்கு என் மாற்றுக்கருத்தை பதியலாம் என்று நினைக்கிறேன். பதிவுலகில் மாற்றுக்கருத்தை மறுக்கும் குணம் உண்டு என்றாலும் அதை மதிக்கும் பண்பும் உண்டு. 

அந்தக் கட்டுரையின் முக்கியமாக முன்வைக்கப்பட்ட ஓர் கருத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மக்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு விட்டார் என்பது. இதைப் படித்ததும் என் அறிவுக்கு எட்டியது என்னவென்றால் ஈழப்போராட்டம் என்பது தனிச்சையான ஜனநாயக மக்கள் எழுச்சியாய் உருவானதல்ல. மக்களோடு மக்களாய் நின்று பிரபாகரன் என்பவர் போராடியிருக்க. அதன் அடிப்படை ஆரம்பம் வேறு என்பது என் சிற்றறிவுக்கு கூட எட்டுகிறது.


சிங்கள இனவாதக் கொள்கைகளும், துப்பாக்கிகளும் எங்களை பதம்பார்த்தபோது தலை தெறிக்க ஓடியே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் நாம். எங்களை விரட்டியவர்களுக்கும், கொன்றுகுவித்தவர்களுக்கும் உறுதியாய் நின்று பதில் சொன்னவர் தான் இன்று தமிழினத்துரோகியாய் சிலரால் முத்திரை குத்தப்படும் பிரபாகரன் என்பவர்.

கட்டுரையின் ஆரம்பத்தில் மக்களிடம் இருந்து தன்னை தனிமைப் படுத்திக்கொண்டவர் ஆதலால் மக்களுக்கு அவரிடம் நெருக்கம் குறைந்தது என்கிறது கட்டுரை. பிறகு, புலிகள் தலைவர் நம்பவைத்து ஏமாற்றினார் என்பது கொஞ்சம் முன்னுக்குப் பின் முரண் என தோன்றுகிறது.

ஒரு வார இறுதிக் களியாட்டத்திற்கே நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வாறன் என்று சொல்லுபவர்கள் எம்மில் ஏராளம். ஈழவிடுதலை என்று ஆரம்பித்துவிட்டு இந்தியாவின், சிங்கள ஆட்சியாளர்களின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த பிறழ்ந்து போன மனப்போக்கில் இருந்து கொஞ்சம் விலகி உலகமே ஒன்றாய் நின்றால் தான் அழிக்க முடியும் என்கிற நிலையில் உள்ள ஓர் உன்னதமான விடுதலை அமைப்பை கட்டியெழுப்பி இன்று உலகம் முழுக்க ஈழமக்களின் உரிமைகள் குறித்து பேசவைத்தவரை விமர்சிக்கலாம். தப்பில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து, அனுபவம், புரிதல் சார்ந்தது.

ஆனால், மனதில் தோன்றியதெல்லாம் மாற்றுரைக்க முடியாத மகத்தான தத்துவங்கள் என்கிற ரீதியில் புலிகளின் தலைமையை விமர்சிக்கிறேன் என்பது அமெரிக்க-இந்திய-இலங்கை தமிழர் விடுதலை எதிர்ப்பு கொள்கைகளுக்கே வழி அமைத்துக் கொடுப்பதாய் அமையும். பிரபாகரன் என்பவர் ஈழப்போராட்டத்தை முன் நின்று நடத்த முதல் 1956 ம்ஆண்டுமுதல் அரசியல் யாப்பிலிருந்து, உங்கள் வாழ்விடத்திலேயே உங்கள் உரிமைகள், உறவுகளின் உயிர்கள், உடைமைகள் பறிக்கப் படவில்லையா? அல்லது,எங்கள் தமிழ்ப் பெண்கள் சிங்களப் படைகள், கூலிகளால் சிதைக்கப்பட்டதில்லையா?

மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் என்பது வேகமாகப் பரவத்தொடங்கிய 1970, 1980 களின் ஆரம்பத்திலேயே எங்களுக்குரிய புதைகுழிகள் இலங்கை ஜனநாயக அரசியல் யாப்பில் தோண்டப் பட்டுவிட்டன. திருத்தி எழுதப்பட்ட இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசு யாப்பில் கூட எப்போதாவது ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கியதுண்டா! இல்லை என்கிற பதில் எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கு கிடைத்தது அவசர காலச்சட்டமும், பயங்கரவாதத்துக்கு எதிரான தடைச்சட்டம் என்கிற தமிழர்களுக்கு எதிரான சிங்கள போக்கை நியாயப்படுத்தும் அரசியல் சட்டங்கள் தான்.

அவ்வாறு இலங்கையின் ஜனநாயக அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்தவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனே. அவர் பற்றி த. வி. பு. தலைவர் சொன்னது, ஜெயவர்த்தனே ஓர் உண்மையான பெளத்தர் ஆக இருந்திருந்தால் நான் துப்பாக்கி தூக்கியிருக்க மாட்டேன் என்பது தான். யாருடைய விடுதலைக்காக ஆயுதம் என்தினாரோஅவர்களையே ஏமாற்றினார் என்று சொல்கிற தேவை எங்கள் விடுதலையை விரும்பாத அமெரிக்க-இந்திய-இலங்கை கூட்டணிக்கு வேண்டுமானால் இருக்கலாம். அது குறித்து தமிழர்கள் கொஞ்சம் மேம்போக்காக இல்லாமல் காரண காரியத்தொடர்போடு யோசித்தால் நல்லது. அப்போதும் சரி, இன்று ஈழப்போராட்டம் ஈழத்தில் முடக்கப்பட்ட போதும் சரி போராடியவர்களை விமர்சிப்பதோடு எங்கள் கடமைகளை முடித்துகொள்ளப் போகிறோமா, அதன் எதிர்விளைவுகளை யோசிக்காமலே.

பிரபாகரன் என்கிற ஓர் தனிமனிதன் ஈழவிடுதலைக்காய் போராடத் தொடங்கிய பின்னர் தான் தமிழினம் இன்னல்பட்டது என்றால், எதற்காக பிரபாகரனை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை? 

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற போர்வையில் ஈழவிடுதலைக்கான அரசியல் கதவுகள் புலிகளின் பெயரால் அடைக்கப்பட்டுவிட்டதாகத் தான் 'மாமனிதர்' தராக்கி சிவராம் நிறையவே எழுதிவைத்தார். அது தானே மறுக்கமுடியாத உண்மையும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற சதியை புலிகள் எப்படி நீண்டநாட்கள் தாக்குபிடித்தார்கள் என்பது அவரது தீர்க்கதரிசனமான எழுத்தை படித்தால் தான் புரியும். புலிகள் குற்றம் இழைத்தார்கள், அதை செய்தார்கள், இதை நோன்டினார்கள் என்று அவர்களின் பெயரால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தந்திரமாக மறுக்கப்படுகிறது என்பது என் வரையில் தமிழர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.


அங்கே பதிவில் சொல்லப்பட்ட இன்னோர் கருத்து 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரபாகரன் சுதுமலை கூட்டத்தில் தோன்றியதன் பின்னர் மக்கள் பார்வையில் படவில்லை அல்லது தோன்றவில்லை. இந்த இந்திய-இலங்கைஒப்பந்தத்தின் பின்னர் தான் மாத்தையா என்பவர் இந்திய உளவுத்துறையான ரா என்கிற அமைப்பால் பிரபாகரனை இல்லாதொழிக்க ஓர் கருவியாக்கப்பட்டவர் என்பது எல்லோரும் அறிந்த பரகசியம். இந்த உயிர் ஆபத்துக்களை எல்லாம் மீறி ஒரு விடுதலை அமைப்பை நடத்துபவர் பொதுசனத்தின் மத்தியில் தோற்றமளித்து எதை சாதித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஊடகங்களை சந்திப்பதில்லை என்கிற ஓர் கருத்தும் முன்வைக்கப்பட்டது. ஒரு விடுதலை அமைப்பின் தலைமை ஊடகங்களை சந்திக்காமல் இருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதற்கு அவர் இந்திய ஊடகவியலாளரான அனிதா பிரதாப்புக்கு சொன்ன காரணம், தன்னுடைய கூற்றுக்களை யாரும் திரிவுபடுத்தி கூறக்கூடாது என்பதும் தான். அவர் அதிகம் நம்பிக்கை வைத்து சந்தித்த ஒரே ஊடகவியலாளரும் அந்த இந்திய ஊடகவியலாளர் தான். நான் அறிந்தவரை புலிகளின் போராட்ட நியாயங்களை உலகிற்கு சரியான முறையில் அறியத்தந்ததும் அவரே. உலகில் எத்தனையோ விடுதலை அமைப்புகள் அதன் தலைவர்கள் என்று எல்லோரும் நேரடியாக ஊடகங்களுக்கு பேட்டியா கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 
 
புலிகளும் அதன் தலைமையும் ஈழவிடுதலைக்காய் போராடினார்கள். அவர்களின் பின்னால் போன ஈழத்தமிழர்கள் ஏராளம் தான். அதை அந்தக் கட்டுரையே சொல்கிறது. மக்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டவரின் அல்லது விலகி இருந்தவரின் பின்னால் எதுக்காக, எந்த நம்பிக்கையில் மக்கள் போனார்கள். ஆனால், புலிகளின் நோக்கம் அவர்களை நம்பவைத்து ஏமாற்றுவதில்லை. மக்களை நம்பவைத்து ஏமாற்றும் ஓர் தலைவன் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே ராணுவ சித்திரவைக்குள் சிக்கிக்கொள்ளும் அளவிற்கு காத்திருக்காமலே தப்பிக்கவைத்திருக்கலாமே!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து தன் குடும்பத்தை அவர் ஒருபோதும் விதிவிலக்காய் ஆக்கொண்டதில்லையே! பிரபாகரன் என்பவரின் இரண்டாவது மகன் இறுதிப்போரில் சரணடைந்து எப்படி கொல்லப்பட்டார் என்பதை சனல் நான்கின் சிங்களராணுவ வீரனின் சாட்சியமே சொல்லுதே! பிரபாகரனை பெற்றெடுத்தது தான் குற்றம் என்று அவர் தாயாரை இந்தியா அலைக்கழித்ததே! இதெல்லாம் யாரும் அறியாதது அல்லவே.

வன்னிப்போரின் துயரம் என்பது எல்லோருக்கும் வாழ்நாளில் ஆறவோ, ஆற்றவோ,  முடியாத ரணம் தான். இதில் புலிகளும் அதன் தலைமையும் தங்களை மட்டும் தற்காத்துக் கொண்டது போலவும், மக்களை ஏமாற்றினார்கள் என்று சொல்வதும் எப்படி நியாயமாகிறது!

ஈழ விடுதலையில் புலிகளும் பிரபாகரனும் விட்டுச்சென்றது ஓர் வெற்றிடம் மட்டுமல்ல! அது அடுத்து எங்கள் விடுதலை நோக்கிய அடுத்த கட்டத்தை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் கூட. இறுதிப்போரில் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள், மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்கிற கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்கள் அதே உறுதியுடன், வேகத்துடன் சிங்கள பேரினவாதத்தின், சிங்கள ராணுவத்தின் கொடூரக் குற்றங்களையும் சர்வதேசத்தில் விசாரிக்க வழிவகை செய்யவேண்டியது தானே முறை. ஆனால், அவர்கள் செய்யமாட்டார்கள். இழுத்தடிப்பார்கள். அலையவிடுவார்கள். அவர்களுக்கு எங்களை அடிக்கச் சொல்லி பொல்லு குடுக்கிற மாதிரி நாங்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுக்கருத்துகள் நிறையவே வைத்திருக்கிறோம்.

புலிகள் குற்றம் இழைத்திருந்தால் அவர்களையும் சேர்த்தே நியாயமான முறையில் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம்.

ஈழத்தின் இறுதிப்போரின் உண்மைகள் என்ன என்பதற்கும் இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரங்களுக்கும் இடையே உள்ள இடைவெளிகளை யார் என்ன இட்டுக்கட்டிசொன்னாலும் நம்பும் ஓர் நிலைக்கு எங்கள் மக்களை நாங்களே தள்ளிவிடலாமா!

இதெல்லாம் எங்கே போய் முடியுமென்று மனதில் கேள்விய எழுந்தால், "தமிழ் சமூகம் இரண்டாய் பிளவுபட்டுபோகும் இழிநிலையில்" என்று பதில் வருகிறது. பிரபாகரனையும், புலிகளையும் திட்டித்தான் பிழைப்பு நடத்தவேண்டும் என்கிற மோசமான கூட்டுமனோநிலை எம் ஈழத்தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

பிரபாகரன் வெள்ளைக்கொடியுடன் சமாதானம் பேச வரும்போது சுட்டுவிடு என்று தனது ராணுவத் தளபதிக்கு முன்னாள் இந்திய பிரதமர் உத்தரவு பிறப்பித்த போதும், மறுத்துரைத்த போர் தர்மம் மீறாத அந்த இந்திய இராணுவத்தளபதிக்கு இருக்கும் கடுகளவு நேர்மையேனும் எம்மிடம் இல்லாது போனது தான் எங்கள் பெருமையோ?? 


Image: Google

107 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் கருத்து

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>கட்டுரையின் ஆரம்பத்தில் மக்களிடம் இருந்து தன்னை தனிமைப் படுத்திக்கொண்டவர் ஆதலால் மக்களுக்கு அவரிடம் நெருக்கம் குறைந்தது என்கிறது கட்டுரை. பிறகு, புலிகள் தலைவர் நம்பவைத்து ஏமாற்றினார் என்பது கொஞ்சம் முன்னுக்குப் பின் முரண் என தோன்றுகிறது.

ஒரு போராளி மக்களோடு மக்களாக கலந்திருக்க முடியாது..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்ல சரியான அலசல் .
இன்னும் நன்றாக சொல்லியிருக்கலாம் .

Robin சொன்னது…

//பதிவுலகில் மாற்றுக்கருத்தை மறுக்கும் குணம் உண்டு என்றாலும் அதை மதிக்கும் பண்பும் உண்டு. // பிரபாகரனுக்கு இந்த பண்பு உண்டா?
இது ஒரு பக்க சார்பான கட்டுரை. ஆனால் இந்த பதிவில் இருப்பது போன்ற கருத்துகள்தான் பதிவுலகில் வரவேற்கப்படும். மாற்று கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாருக்கும் துரோகிப் பட்டம் கொடுக்கப்படும்.

Yoga.s.FR சொன்னது…

பந்து நிரூபன் பக்கம் வீசப்பட்டிருக்கிறது.இது,விவாதத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விடயம் தான்!கடைசி வரை களத்தில் இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஆனதாக இருக்கலாம்,அவரின் சீற்றம்!

Yoga.s.FR சொன்னது…

Robin கூறியது...

//பதிவுலகில் மாற்றுக்கருத்தை மறுக்கும் குணம் உண்டு என்றாலும் அதை மதிக்கும் பண்பும் உண்டு. // பிரபாகரனுக்கு இந்த பண்பு உண்டா?
இது ஒரு பக்க சார்பான கட்டுரை. ஆனால் இந்த பதிவில் இருப்பது போன்ற கருத்துகள்தான் பதிவுலகில் வரவேற்கப்படும். மாற்று கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாருக்கும் துரோகிப் பட்டம் கொடுக்கப்படும்./////உங்களுக்குப் பட்டதை நீங்களும் எழுதுங்கள் ரொபின்/ராபின்.தணிக்கையற்ற ஒரே ஊடகம் இணைய ஊடகம் தானே?கெட்ட வார்த்தையில் கூட எழுதலாம்,திட்டலாம்.நிரூபன் பதிவுக்குக் கூட ஒருவர் அவ்வாறு "பாராட்டி"யிருந்தார்!நிரூபனிடம் நீக்கி விடுமாறு கோரிய போதும் மறுத்து விட்டார்!இப்போதும் இருக்கிறது:நிரூபன் பதிவில் பார்க்கலாம்!

Sathiyanarayanan சொன்னது…

//பதிவுலகில் மாற்றுக்கருத்தை மறுக்கும் குணம் உண்டு என்றாலும் அதை மதிக்கும் பண்பும் உண்டு. //
/* பிரபாகரனுக்கு இந்த பண்பு உண்டா?
இது ஒரு பக்க சார்பான கட்டுரை. ஆனால் இந்த பதிவில் இருப்பது போன்ற கருத்துகள்தான் பதிவுலகில் வரவேற்கப்படும். மாற்று கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாருக்கும் துரோகிப் பட்டம் கொடுக்கப்படும். */

ராபின் உங்களோட பண்பு என்ன?
உங்களோட கருத்துரைகள் பக்க சார்பானது தானே?

தமிழ் உதயம் சொன்னது…

யுத்தக்களத்தில் கிடைக்கிற தோல்வி - எல்லோராலும் எள்ளி நகையாடப்படும். அது தான் பிரபாகரன் அவர்களுக்கும் நேர்ந்துள்ளது. எள்ளி நகையாடுதல் - மரணத்திற்கு பின்னும் தொடர்வது தான் வேதனை.

பொ.முருகன் சொன்னது…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மக்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு விட்டார் என்ன்பது சரியல்ல,பிற நாடுகள் தலையிடமுடியாதவாறு[நார்வே தவிர] விடுதலைப் போராட்டத்தையே,தனிமைபடுத்திக்கொண்டார் என்பதுதான் சரியாகஇருக்கும் என நினைக்கிறேன்.இது என் அறிவுக்கு எட்டிய சிந்தனை,இது தவறாகக்கூட இருக்கலாம்.

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது…

உங்கள் கருத்து மிக மிக சரியே..
பிரபாகரன் மக்கள் முன் தோன்றவில்லை
என்பதை என்னாலும் பிழையாகா ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி தோன்றியிருப்பின் அவர் உயிருக்கு யார் உத்தரவாதம்.

ஆனாலும் நிரூபன் அண்ணாவின் பதிவிலும்
சில நிஜங்கள் இருந்தது, கடசிவரை அங்கே இருந்து வந்து அவர் அனுபவித்த
வேதனை கூட அவரை இப்படி பேச வைத்துவிட்டதோ... அனுபபித்தவனுக்குத்தானே அதன் வலி தெரியும்.

மற்றும் படி
பிரபாகரனை விமர்சிப்பது என்பது 
மல்லாக்க படுத்துகொண்டு எச்சில்
துப்புவது போன்றது.....

Rathi சொன்னது…

சி.பி. செந்தில்குமார் முதல் கருத்தா :)) ம்ம்ம்... இரண்டாவது கருத்து சரியாய் இருக்கு.

Rathi சொன்னது…

நண்டு @ நொரண்டு - ஈரோடு, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இன்னும் சிறப்பாய் சொல்லியிருக்கலாம் என்பது தான் என் எண்ணமும். சில சமயங்களில் இப்படி சொல்வதே நல்லது என்று நினைத்துவிட்டேன் :)

Rathi சொன்னது…

Robin, பதிவுலகம் பற்றிய உங்கள் மாற்றுக்கருத்துக்கு நன்றி. ஈழம் குறித்த என் பதிவுகள் பதிவுலக வரவேற்பிற்காக எழுதப்படுபவை அல்ல.

Rathi சொன்னது…

Yoga.s.FR., நிரூபன் என்றாலும், வேறு யாராகிலும் அவர்களின் அனுபவ உண்மைகளை மறுக்கமுடியாது.

Rathi சொன்னது…

சத்தியநாராயணன், உங்கள் வருகைக்கும், திருக்குறள் மாதிரி நச்சென்ற பதிலுக்கும் நன்றி.

Rathi சொன்னது…

தமிழ் உதயம், வாங்க! நீங்க சொல்றது சரிதான். பிரபாகரனை அவரின் இலட்சியத்தை எள்ளி நகையாடவே அமெரிக்க-இந்திய-இலங்கை கொள்கைகளுக்கு துணை போகிறவர்களுக்குப் பிடிக்கிறது போலும்.

Rathi சொன்னது…

பொ.முருகன், உங்கள் வருகைக்கு நன்றி. த.வி.பு. தலைவர் ஈழப்பிரச்சனையில் வேறு நாடுகள் தலையிடாதவாறு போராட்டத்தையே தனிமைப்படுத்திக்கொண்டார் என்பது எவ்வளவு தூரம் சரியென்று தெரியவில்லை. என் அறிவுக்கு எட்டிய வரையில் புலிகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டுமென்பதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதன் ஓர் அம்சம் தான். ஆனால் புலிகள் விழித்துக்கொண்டு இத்தனை வருடங்கள் தாக்குப்பிடித்துவிட்டார்கள்.

நோர்வேயைத்தவிர வேறெந்த நாட்டையும் அனுமதிக்கவில்லை என்பதும் சரியா தெரியவில்லை. ஜப்பான் கூட ஈழப்பிரச்சனையில் உதவியதாய் காட்டிக்கொண்டது. காரணம் சர்வதேச அரங்கில் தங்களை Peace Brokers ஆக காட்டிக்கொள்வது. அதன் மூலம் தங்கள் நாட்டின் Profile ஐ உயர்த்திக்கொள்வது. இது போன்ற காரணங்களுக்காக. ஆனால், இறுதிப்போரின் போதும், அதன் அழிவுகள் குறித்தும் வாயே திறக்காமல் இருந்தார்கள்.

நோர்வேக்கு வருவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு புலிகளின் அணுகுமுறைகளும், தந்திரோபாயங்களும் தான் நோர்வேயை உள்நுழைய வைத்திருக்கலாம் என்பது என் புரிதல். புலிகளின் ராணுவ போராட்ட வழிமுறைகள் என்பது அரசியல் களத்திற்கான ஓர் அணுகுமுறையே என்று "தராக்கி" சிவராம் குறிப்பிடுகிறார். அந்த அரசியல் என்கிற இடத்தை (Political Space) தக்கவைத்துக்கொள்வதே புலிகளின் போராட்டமுறையின் இலக்கு. இலங்கையின் பொருளாதார மூலங்களில் அடிவிழும்போது தான் சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்தார்கள் ஒருகாலத்தில். இந்தசந்தர்ப்பத்தில் தான் காத்திருந்து அமெரிக்காவின் ஆசியுடன் நோர்வே உள்ளே நுழைந்தது. புலிகளுடன் பேசி ஏதாவது ஓர் அரைகுறை தீர்வை திணிப்பது கூட அவர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனாலும், முடிவில் புலிகளின் அழிவுக்கு வழி ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமும். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே புலிகளை ஏன் தடை செய்தார்கள் என்கிற கேள்வியை நாங்களும் கேட்டு, கேட்டு களைத்து விட்டோம். எரிக் சொல்கெய்ம் என்பவர் எப்போதுமே ஈழத்தமிழர்கள் இரத்தகறை படிந்த வரலாற்றில் மறக்கமுடியாதவர்.

யப்பான், நோர்வே போன்ற நாடுகளைத்தான் ஈழப்பிரச்சனையில் தலையிட புலிகள் விரும்பவில்லை என்று சொல்லவருகிறீர்களா????

நோர்வே, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் யாசீர் அரபாத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நாட்டாமை செய்த லட்சணம் தான் உலகறிந்ததே.

Rathi சொன்னது…

துஷ்யந்தன், நான் யாருடைய அனுபவங்களையும் மறுப்பது கிடையாது. சில கருத்துகளுக்கு என் கருத்துகளை முன்வைக்கிறேன்.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

இரண்டு விசயங்களை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

நிரூபன் தளத்தில் பதில் அளிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அங்குள்ள கூட்டத்தில் மற்றும் விழுந்த ஓட்டுக்களை யும் பார்த்த போது நிரூபன் வேண்டுமானால் மனதிற்குள் ஒரு கிளர்ச்சி உருவாகியிருக்கக்கூடும். ஆனால் அவர் செய்து கொண்டிருக்கும் வேலை சரிதானா? என்று என்றாவது ஒரு அவர் மனசாட்சி கேட்கக்கூடும்

JOTHIG ஜோதிஜி சொன்னது…

1. பிரபாகரன் புனிதர் அல்ல. ஆண்டு கொண்டிருந்த ஆண்டு கொண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளர்களும் புத்தர் வழியை பின்பற்றுகின்றோம் என்றொரு நிலையிலும் இல்லை.

நிரூபன் மாற்றுக்கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்று சொல்லியிருந்தார். உண்மைதான் பிரபாகரன் குறித்து மாற்றுக் கருத்து அவஸ்யம் தான். ஆனால் அதை ராஜபக்ஷே மற்றும் கோத்தபய ராஜபக்ஷே உடன் ஒப்பீட்டு எழுதி இருந்தால் மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். ஆனால் பிரபாகரன் குறித்து மட்டும் எழுதும் போது அவர் சந்தித்த சவால்கள், எந்த சூழ்நிலையில் எந்தமாதிரியான முடிவுகள் எடுத்தார்கள் என்பதையும் சேர்த்து எழுதியிருந்தால் நிரூபன் வைத்திருக்கும் வாதம் முழுமையாக இருந்து இருக்கும். ஒரு வேளை சிங்கள உளவுத்துறையினரால் நிரூபனுக்கு பயம் இருந்து இருக்க வேண்டும். மாத்தியோசி என்பவரும் மாற்றுக் கருத்தை எழுதி உள்ளார். அவரும் முகாமில் இருந்து புலம் பெயர்ந்தவர். அவர் கருத்தை பல இடங்களில் படித்து இருக்கின்றேன். தெளிவாக ஆணித்தரமாக அற்புதமாக எடுத்து வைப்பார். அது போன்று நிரூபன் ஏன் செய்வதில்லை. குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஏன் பிரபாகரனை இந்த அளவுக்கு வெறுக்கிறார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் வெறுக்கும் அளவிற்கு அவர் சரியான நபராக இல்லை என்பதாக எடுத்துக் கொண்டாலும் ஆனால் ஒருவர் கூட சிங்கள அரசாங்கத்தை அவர்களின் இனவாதத்தைப் பற்றி எழுதுவதே இல்லை என்பதையும் கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

நிரூபாமா ராவ் சமீபத்தில் கொழும்பு சென்றிந்த போது தன்னை சந்திக்க வந்த தமிழ் தலைவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்ததாக ஒரு செய்தியைப் படித்தேன்.

அணைவரும் ஒரே கருத்துடன் வாருங்கள் என்றாராம். ஒருவரும் வரவில்லை என்பது அடுத்த ஆச்சரியம்.
ஈழத்தமிழர்களுக்கு காப்பாளர்களே இந்த லட்சணத்தில் இருந்தால் மக்கள் எப்படி இருப்பார்கள்.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

முடிவாக இந்த இடத்தில் மீண்டும் ஒரு முறை ரதி உங்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான். ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்கள் எதிரிகள் அல்ல. வேறு யார் என்று கேட்க மாட்டேன் என்று நம்புகின்றேன்.

வரலாற்று பிழையாக பதிவுலகில் எழுதிக் கொண்டு இருப்பவர்களின் மனசாட்சியே அவர்களுக்கு ஒரு காலத்தில் உணர்த்தும்.

Yoga.s.FR சொன்னது…

நோர்வே, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் யாசீர் அரபாத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நாட்டாமை செய்த லட்சணம் தான் உலகறிந்ததே.////அது மட்டுமல்ல,ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைத்து,ஏதோ ஒரு வழியில் சிறுக,சிறுக கொன்று மருத்துவம் செய்வதற்கு மேலை நாடுகளைக் கூட அனுமதிக்காது,இனிமேல் வைத்தியம் செய்தும் பயனில்லை என்ற நிலை ஏற்பட்டதன் பின்னரே வெளியேற அனுமதித்தது,இசுரேல்!"மனிதாபிமானி"பிரான்ஸ் அரசு,பொறுப்பேற்று வைத்தியம் செய்து என்ன நோயென்றே தெரிவிக்காது,இறந்த பின்னரும் கூட மெளனம் சாதித்தது வரலாறு!அதேபோல் தலைவருக்கும் "ஏதாவது" செய்ய மேலிடத்து உத்தரவில் தான் நோர்வே உள் நுழைந்ததா என்று கூட நான் எண்ணுவதுண்டு!இது எனது ஊகம் மட்டுமே!

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு...ரதி...தனி மனித சாடலாய் இல்லாமல் ...நிரூபனை மேற்கோள் காட்டாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...வயது..அனுபவம்...சூழ்நிலை..மற்றும் பல காரணிகள் நம் எண்ணத்தை நிர்ணயிக்கின்றன...அது அவருடைய கருத்து...இது உங்களுடையது...அப்படியே இருந்தால் நல்லது...

Yoga.s.FR சொன்னது…

JOTHIG ஜோதிஜி கூறியது...

நிரூபாமா ராவ் சமீபத்தில் கொழும்பு சென்றிந்த போது தன்னை சந்திக்க வந்த தமிழ் தலைவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்ததாக ஒரு செய்தியைப் படித்தேன்.

அணைவரும் ஒரே கருத்துடன் வாருங்கள் என்றாராம். ஒருவரும் வரவில்லை என்பது அடுத்த ஆச்சரியம்.
ஈழத்தமிழர்களுக்கு காப்பாளர்களே இந்த லட்சணத்தில் இருந்தால் மக்கள் எப்படி இருப்பார்கள்.////பிரபாகரன் பற்றிய உங்கள் கண்ணோட்டம் சரியாக இருக்கும் பட்சத்தில்,இன்னொரு உண்மையையும் நீங்கள் ஏற்றே ஆக வேண்டும்!இப்போது சமீபத்தில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில்,தமிழ் மக்கள் பிராந்திய வேறுபாடின்றி வி.புலிகளால் உருவாக்கப்பட்ட த.தே.கூ.வை பெரும்பான்மையாக வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.இந்த இடத்தில் உங்கள் புரிதல் வர வேண்டும்!இந்தியா ஒரு போதும் ஈழமக்கள் நலனில் அக்கறையானதல்ல,அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் இருக்கையில்,சிங்கள அரசுடன் ஒட்டி உறவாடும் நபர்களையும்,கட்சிகளையும்?!சேர்த்து ஒரே கருத்துடன் வாருங்கள் என்று நிரூபமா அழைக்கிறார் என்றால்,அவரின் "உயர்ந்த மனம்"அல்லது இந்திய அரசின் "உயர்ந்த உள்ளத்தை" எப்படிச் சொல்வது?உண்மையில் அமெரிக்காவோ,வேறும் மேற்குலக நாடுகளோ மூக்கை இலங்கையில் நுழைத்து விடக் கூடாது என்பதில் "இந்தியா"கவனமாக இருக்கிறதே தவிர,ஈழப் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் என்ற"நல்ல" எண்ணத்தில் அல்ல!மனிதனை விடவும் உயர்ந்த ஒரு "சக்தி"உலகில் இருக்குமாக இருந்தால்,இருந்தாலென்ன,இருந்தால்?இருக்கிறது!அது ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு விடியலைத் தரும்!

Thekkikattan|தெகா சொன்னது…

ரதி, நானும் நிரூபனுடைய பதிவினை அவருடைய தளத்தில் படித்தேன். எப்படி ஒரு போராளியை உலக சபையே ஏத்துக்கொள்ளாத, மறுக்கிற அமைப்பை சேர்ந்த ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனை எம்.ஜீ.ஆர் தனமாக வீதிகளில் நடந்து பாட்டிகளை கட்டிக்கொண்டு ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கவில்லை என்று கள நிலவரம் புரிந்த ஒருவரால் அதனை தவறாக வாதத்திர்க்கும் எடுத்து முன் வைக்க முடியும்? புரியவில்லை!

தொடர்ந்தாப்பில் ஒரு 30 நிமிடங்கள் எங்காவது தேவைப்படும் நபர் இருக்கிறார் என்று சந்தேகத்தின் பெயரில் செய்தி போயிச் சேர்ந்தாலே செஞ்சோலை பள்ளி பாமிங் போல் நிகழ வாய்ப்பிருக்கும் பொழுது பொதுக் கூட்டங்களில் கலந்து கொள் என்றால் எப்பிடி?

Thekkikattan|தெகா சொன்னது…

இரண்டாவது, தன் உயிரையும் தனது குடும்பத்தின் உயிரையுமே பொருட்படுத்தாது களத்தின் முன் நிறுத்தி மானத்துடன் மரணிப்பதை கெளரவமாக கொள்பவன் தனது மக்களிடம் எதனை எதிர்பார்ப்பான்? நம்ப வைத்து கழுத்தறுத்தவர்களை பற்றியும் பெரிய படத்தில் எதுவும் சொல்லப்படவில்லை...

சூழல் அப்படி இருக்கும் பொழுது, ஆளின் உருவம் மறைந்த பின்னார் ஜோதிஜி குறிப்பிட்ட படி எந்த நிர்பந்தமோ உண்மையை உண்மையாக பார்க்கமுடியாத வாக்கில் அந்த பதிவில் விமர்சனம் முன் வைக்கப்பட்டிருக்கிறதோ என்று அஞ்சச் செய்கிறது.

நேர்மையான மதிப்பீடுகள் - இன்றைய சிலோன் அரசாளும் ராஜாக்களுக்கும், இயக்கத் தலைவனுக்குமான ஒப்பீடுகளை தமிழக தமிழர்கள் அறிந்து கொள்ள எப்பொழுதுமே ஆவலாகவே உள்ளோம்.

விடயங்கள் பல வண்ணங்களில் பல சோட புட்டிகளில் அடைத்து விற்கப்படுகிறது (ஆனால் உண்மை ஒன்றுதான்). யார் கண்ணில் எது படுகிறதோ... பார்த்து செரித்து கொள்வது அவர்வர்களின் உள்ளொளியை பொருத்தது என்றாகிவிட்டது. :(

Rathi சொன்னது…

ஜோதிஜி, ஈழம் குறித்த பதிவுலக மற்றும் செய்திகளின் கவனிப்பு, கருத்து, ஆதங்கம் மூன்றும் உங்கள் பதிலில் தெரிகிறது.

அப்புறமா, நிருபமா ராவ்'வின் கூற்றுக்கு Yoga.s.FR அடித்து ஆடியிருக்கிறார். என் வேலையை குறைத்துவிட்டார்

Rathi சொன்னது…

Reverie, நன்றி. ஒரு பொதுப்பிரச்சனைக்கு ஒருவரின் கருத்துக்கு என் கருத்தை பதிந்தேன்.

என் பதிவில் எங்காவது தனிமனித தாக்குதல் இருந்தால் தெரியப்படுத்தும் பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறேன் :)

அப்படி இருந்தால்... நிச்சயம் அதை நான் திருத்திக்கொள்வேன்.

Rathi சொன்னது…

Yoga.s.FR, நோர்வேயின் பாலஸ்தீன நாட்டாமை மற்றும் நிருபமா ராவ் கூற்றுப் பற்றிய உங்கள் கருத்துகளில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

Rathi சொன்னது…

தெகா, நீங்க சொல்வது போல் நேர்மையான மதிப்பீடுகள், ஒப்பீடுகள் சூழ்நிலை நிர்ப்பந்தம் காரணமாக வைக்கமுடியாவிட்டாலும், சில வரலாற்றுப்பிழைகளான எழுத்துகள் தவிர்க்கப்படவேண்டியவை என்பதே என் கருத்து, ஆதங்கம் இரண்டுமே.

தமிழ்நாட்டுத்தமிழர்களின் உள்ளக்கிடக்கையை அழகாய் படம் பிடித்து காட்டியதுக்கு நன்றி.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பிரபாகரனை குறை சொல்பவர்கள் ராஜபக்சேவை தாக்கி எழுதுவதே இல்லை...காரணம் இலங்கையில் அவர்கள் இருப்பதால்.அதே சமயம் தமிழக தலைவர்களை கண்டபடி ஏசுவார்கள்.பிரபாகரன் ஏமாற்றினார் என்ற அந்த கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்தேன்.ஒரு வீரனை சில ஹிட்ஸ்க்காக அவமரியாதை செய்வது கொடும்செயல்

பெயரில்லா சொன்னது…

நிரூபனின் பதிவுகளில் இருந்து அவர் வன்னியில் கன காலம் இருந்தவரில்லை என்பது புரிந்தது. இயக்கத்திற்கு எதிராக எழுதுவதே அவரது தொழில். தலைப்புகளில் வக்கிரம், எழுத்தில் வக்கிரம் என்று நிறைய வக்கிரம் இருக்கிறது.

தனியாளாக எதிர்த்து நிற்கமுடியாமல் விட்டுவிட்டேன். தலைவரை போட்டுத் தள்ள இந்தியாவும் இலங்கையும் கை கோர்த்து நிற்கும் போது பொது சனம் மாதிரி கையை வீசிக்கொண்டு ரோட்டில நடக்க வேணும் என்று இவர்கள் எதிர்பாக்கிறார்கள் போல.

இயக்கம் கட்டாயமாக ஆள் சேர்த்த போது இவர்கள் எப்படி விடுபட்டார்களாம் என்று ஒருமுறை இவர்கள் விளக்கினார்களானால் நல்லது.

ஹிட்டுக்காக பொய்யையும் புரட்டையும் இவர்கள் எழுதி தங்கள் மன வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

சண்டையை எப்படி நடத்துவது என்று சிந்திப்பாரா, ஆனதரவான குழந்தைகள், முதியோர்களை எப்படி பார்ப்பது என்று சிந்திப்பாரா ? க‌ருணாநிதி மாதிரி நடக்கிற கூட்டத்துக்கெல்லாம் வந்து படம் காட்டவில்லை என்பது தான் தலைவர் விட்ட பிழை போல.

ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. வாய் கூசாமல் ஹிட்டுக்காகப் பொய் சொல்லிவிட்டு எப்படி இவர்களால் இரவு தூங்க முடிகிறது. குற்ற உணர்வே இல்லையா? சை.

போராட்டம் பற்றி எழுத நிறையவே என்னிடம் இருக்கிறது. எழுதும் போதே பாதி உடைந்துவிடுகிறேன். அதனால் எழுதி முடித்ததில்லை. இரண்டு சகோதர்களை விதையாகிப் போனவர்கள். எங்கள் நண்பர்களில் குடும்பத்திலும் பலர் விதையாகிப் போனவர்கள். அவர்கள் மூலம் நான் கேள்விப்பட்ட தலைவர், கடவுள் என்று ஒருத்தன் இருந்தால் அவருக்கு ஒரு படி அல்ல பல படி மேலானவர்.

பெயரில்லா சொன்னது…

@ யோகா,
//கடைசி வரை களத்தில் இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஆனதாக இருக்கலாம்,அவரின் சீற்றம்!//
என்ன புது கதை இது. நிரூபன் வன்னியில் வாழந்ததே கொஞ்சக்காலம் தான் என்று அவரது ஒரு பதிவு/பின்னூட்டம் மூலமே அறிந்து கொள்ள முடியும். கடைசி வரை களத்தில் நின்றவர்கள் எங்கே என்று இன்னுமே தெரியாமல் இருக்கிறது. இவர் கண்டிப்பாக கடைசி வரை நிற்கவில்லை. ஏன் வன்னியிலும் நிற்கவில்லை. அது தான் உண்மை.

தமிழன் தாயகத்திலிருந்து சொன்னது…

போராட்டம் என்று வந்துவிட்டால் இழப்புக்களை பற்றி கவலைப்படக்கூடாது என்பதில் நமது தேசியத்தலைவர் இறுதிவரை உறுதியாய் இருந்தார்..இறுதிக்கட்டம் வரை உள்ளேயே இருந்தவன் என்ற அடிப்படியில் ஒன்று சொல்கிறேன்.ஈழப்போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் மண் உணர்வு தோன்றி சுகந்திரம் தமிழ் மக்களுக்கு பெற்று கொடுக்கவேண்டும் என்று இணைந்தவர்கள் தாண்டி இறுதி காலத்தில் வீட்டுக்கொருவர் என்ற காலகட்டாயத்தில் வேண்டா வெறுப்பாக அனைவரும் இணைந்துகொண்டபோதே போராட்டத்தின் திசை மாறியது.இறுதிக்காலங்களில் இராணுவத்தின் அதிகளவான நவீன போர்க்கருவிகளின் உச்ச பட்ச பாவனையை எமது போராளிகளால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.ஆனாலும் சளைக்காமல் போராடவைத்தது தலைவரின் போர் அனுபவம்தான் ,இறுதிக்கட்டத்தில் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டபோது தலைவர் அவர்கள் தளபதிகளின் கூட்டத்தில் சொன்னது இதுதான்" இறுதிவரை களமாடி எமது மண்ணிலேயே வீரமரணம் அடைய விரும்புகிறேன் இதுவே எமது அமைப்பின் கொள்கையும் கூட, எனது மரணம் உலகுக்கு தெரிய வேண்டும்.ஏனெனில் அனைத்து தமிழர்களும் இன்றுவரை,பிரபாகரன் இருக்கிறார் அவர் சுகந்திரம் பெற்றுகொடுப்பார் என்றே இருந்துவிட்டனர்.எமது போராட்டத்துக்கு நிதியை விட போராளிகள் விடயத்தில் நாம் தோல்வியை சந்தித்துவிட்டோம்.எனவே எனது மரணத்தின் பின்னாவது அனைத்து மக்களும் இணைந்து உலகளவில் எமது சுகந்திரத்திற்காக போராடவேண்டும் இதுதான் எனது இறுதி விருப்பம்.இதை அனைத்து தமிழர்களிடமும் நீங்கள் தெரிவிக்கவேண்டும் என்றே கூறி அன்றைய இறுதியான தளபதிகளுக்கான கூட்டத்தை முடித்திருந்தார். இதனை காணொளியாக பதிவு செய்து அவரின் வீரமரணத்தின் பின்பு வெளியிட வன்னியிலிருந்து வெளிநாடுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.ஆனால் அது அப்படியே புதைக்கப்பட்டுள்ளது.அந்த மாவீரரை பற்றி விமர்சனம் செய்ய எமக்கு ஒருவருக்கும் அருகதை இல்லை, எத்தனையோ வசதிகள் இருந்தும்கூட தனது குடும்பத்தினர் அனைவரும் இறுதிவரை வன்னியிலேயே போராட்டத்தில் கலந்திருக்கவேண்டும் என்ற இறுக்கமான கொள்கையுடனிருந்தவரைப்பற்றி தப்பியோடி வாழ்ந்துவருபவர்கள் விமர்சனம் செய்வது .. சீ தூ....

பெயரில்லா சொன்னது…

அங்கேயும் போய் கொஞ்சம் துப்பிவிட்டு வாருங்கள் தமிழன். எனக்கு அதை வாசிக்கும் தெம்பு கூட இல்லை. =((

Yoga.s.FR சொன்னது…

அனாமிகா துவாரகன்,பதிவுலகம் எனக்குப் புதியது என்பது உண்மை!பதிவுலகில் இருப்போர் அனைவருமே புதியவர்கள் தான்.யார் களத்தில் நின்றார்கள்,தப்பி வந்தார்கள் என்றெல்லாம் தெரியாது!போர் ஆரம்பித்த காலத்தின் பின்(2006--டிசம்பர்) ஒரு தடவை வன்னி சென்று வந்திருக்கிறேன்!

ஈழபாரதி சொன்னது…

நிரூபன் கொடுக்கபடும் சம்பளத்துக்காக விசுவாசமாக எழுதுகிறார், தலைவரை விமர்சிக்காதவர்கள் எலோரையும் சிங்களம் கொன்று விடுவதில்லை, எஜமான விசுவாசத்தின் காரணமாகவே அவர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு வழிற்று பிழைப்பு, எங்களுக்கோ உரிமை பிரச்சினை, எல்லோருக்கும் எல்லாம் தேள்வை என்று இல்லை.

தவறு சொன்னது…

பிரபாகரன் போராட்டதலைவர் அரசியல்வாதியா அவர்...என்னமோ போங்க யார் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். எல்லாம் கருத்து சுதந்திரமாக்கும்...

thequickfox சொன்னது…

அனாமிகா துவாரகன்,
எதோ எல்லாம் Goodbye சொன்னீர்கள்! ஒரு பயங்கரவாதிக்கு ஆதரவாக கதைப்பதிற்காகவா திரும்பி வந்தீர்கள்? வாழ்க நலமுடன்.
பயங்கரவாதியால் பாதிக்கபட்ட மக்களுக்காக பதிவு எழுதும் நிருபன் நீடுடிவாழ்க! ஓங்கிவளரட்டும் மனிதநேயம்!கருத்து சுதந்திரம்!

Rathi சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார், எப்போதும் போல் ஈழவிடயத்தில் உங்கள் புரிதலுடன் கூடிய கருத்துக்கு நன்றிகள்.

Rathi சொன்னது…

அனாமிகா, மாற்றுக்கருத்து என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இருகூர் மருங்குடைய வாள் போல் எங்களையே பதம்பார்க்கிறது. தெகா சொன்னது போல் அவரவர் உள்ளொளியைப் பொறுத்து நல்லவிதமே புரிந்துகொண்டால் நல்லது.

உங்கள் இழப்புக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

Rathi சொன்னது…

தமிழன் தாயகத்திலிருந்து, என் தளத்துக்கு வந்து இன்னும் உயிருக்கு உத்தரவாதமற்ற ஈழத்தில் வாழ்ந்துகொண்டே ஓர் வரலாற்று சாட்சியத்தை பதிந்து சென்றதுக்கு நன்றி. கிளிநொச்சி என்பது தற்சமயம் யாழ்ப்பாணத்தை விட ராணுவ அடக்குமறை அளவுக்கு அதிகம். அங்கிருந்து இவ்வளவு நெஞ்சுரத்துடன் தந்த உங்கள் பதிலுக்கு என் வணக்கங்கள்.

Rathi சொன்னது…

ஈழபாரதி, சரிதான், எல்லாருக்கும் எல்லாம் தேவையில்லை. ஈழத்தமிழனுக்கு உரிமை வேண்டுமென்று நாங்கள் சொன்னாலே கேலிப்பொருளாய் பார்க்கப்படுகிறோம். காலம் மாறும்!! நீங்களும் ஈழத்தில் இருந்து இதை எழுதியதுக்கு என் வந்தனங்கள்.

Rathi சொன்னது…

தவறு, வாங்க. என்ன இவ்வளவு சலிப்போடு..... நட்பின் உரிமையில் சொல்கிறேன். மறுபடியும் ஒருமுறை நீங்க குற்றாலம் போகவேணும் போல் இருக்கு :)

பெயரில்லா சொன்னது…

@thequickfox,

FUCK OFF.

தமிழன் தாயகத்திலிருந்து சொன்னது…

தலைவர் அவர்கள் மக்களை சந்திக்கவில்லை என்ற கருத்து பிழையானது என்பதற்கு முன்பு நான் பதிவிட்ட இந்த ஒரு பதிவே http://tamilkili.blogspot.com/2010/05/1.html சாட்சியாகும். இதன்பின்பும் தலைவர் அவர்கள் மக்களை பலதடவை சந்தித்திருக்கிறார்.சிலவிடயங்களை எனது சொந்த பாதுகாப்பு கருதி இங்கே சொல்லமுடியவில்லை.நிரூபன் போன்றவர்கள் தங்களை போராட்டத்துடன் நெருக்கமானவர்களாக காட்டிக்கொள்வதற்க்காக வேறுவிடயங்களை எழுதிவிட்டு இப்படியும் எழுதுகிறார்கள்.

Rathi சொன்னது…

தமிழன், உங்கள் பகிர்வுக்கு நன்றி. உங்கள் பதிவைப் படித்தேன். பத்திரமாக இருங்கள்.

vidivelli சொன்னது…

அன்பு நட்பே! உங்கள் பதிவை நான் முழுமனதாக வரவேற்கின்றேன்,,
நிரூபனின் பதிவைப்பார்த்ததிலிருந்து எங்கள் தமிழனே இப்படி பதிவை வெளியிட்டு ஏற்கனவே தமிழர்போராட்டம்பற்றிய மாற்று கருத்துடையவர்க்கு அவல்கொடுத்தமாதிரி சந்தர்பத்தைக்கொடுத்து எல்லோரும் விரும்பியபடி அந்த மகத்தான மனிதனை தூற்றிவிட்டுச்செல்ல வலைத்தளத்தில் ஓர் வாய்ப்பைக்கொடுத்திருக்கிற்றார்..அது வேதனயாக இருந்தது.உங்கள் பதிவினூடாக ஓர் மன ஆறுதல் கிடைத்திருக்கிறது.இன்னும் கருத்துக்களை முன்வைத்திருக்கலாமே !இதுதான் தமிழன்..தமிழனால்த்தான் தமிழருக்கென்று ஒரு நாடு கிடைக்கவில்லை.உங்கள் பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்....

vidivelli சொன்னது…

அதைவிட நிரூபன் மட்டும்தான் களத்தில் நின்று வந்து மன ஆதங்கத்தில் எழுதினாரா?
நாங்களும் என்ன லண்டனிலையா இருந்தோம்..நாங்களும் உறவுகளின் இழப்புக்கள் ,போரால் ஏற்பட்ட வடுக்களை சுமக்கவில்லையா?
அந்த வடுக்களால் சிங்கள ஆட்சியிலேயும்,மறைமுகமாய் உதவிய நாடுகளிலேயும்தான் மனக்கொதிப்பு இருக்கிறது தவிர தமிழர் உரிமைக்காய் 36 வருடங்களிற்கு மேலாக போராடிய மகத்தான மனிதனில் கோபங்கள் ஏதும் இதுவரைக்கும் வந்ததில்லை..இனி சிறீலங்காவில் தமிழர்களுக்கு என்ன கெடுபிடி வந்தாலும் யார் தட்டிக்கேட்பார் என்ற தைரியம் இருக்கிறது.தமிழர்களுடைய உயிருக்கு என்ன உத்தரவாதம்.முன்பு என்றால் இராணுவக்கட்டுப்பாடிற்குள் ஒருதமிழன் உயிர் போனால் அதற்கு எங்கோ ஒருபக்கம் பதிலடி கொடுக்கப்படும் .அந்தப்பயம் சிங்களத்திற்கு இருந்தது..ஏன் இப்போ கிறீஸ் மனிதர் பீதியால் மக்கள் நாளும் பொழுதும் பீதியுடன் வாழ்கின்றார்கள் ..யாரிடம் முறையிட..விரும்பியபடி எந்த தமிழனிலும் கைவைத்துவிட்டு போகலாம்..இதுதானே இப்போ நடப்பதும், இனி நடக்கப்போவதும்...
என்ன செய்ய ...

வேறு யாரும் எமக்கெதிரான மனிதர்கள் தூற்றலாம் அதைக்கணக்கில் எடுக்காமல் போகலாம்,ஆனால் நிருபனின் இந்த பதிவை ஏற்க முடியவில்லை..
மீண்டும் சகோ நன்றி பதிவிற்கு..

vidivelli சொன்னது…

இந்தப்பதிவு எல்லோரிடமும் சேர வேண்டும்...
பதிவை படித்தவர்கள் குறைவாக இருக்கின்றது.முயற்சிக்கவும் சகோ..

vidivelli சொன்னது…

நிருபனின் பதிவுகளில் படித்தபோது அவர் சின்ன வயதிலே வன்னியைவிட்டு [ மல்லாவியிலிருந்து] வெளியேறியதாக படித்தேன்.
அப்போ என்ன இப்போ புதுக்கதை சொல்கிறார்.யாரும் சொன்னதை வைத்துத்தான் பல தகவல்களை பதிவிட்டிருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது..எனக்கு தெரிந்ததில் ஒரு பின்னூட்டத்திற்கு கொடுத்த பதிலில் பிழை இருந்தது.சாள்ஸ் அன்ரனி சிறப்புத்தளபதி நகுலன் மட்டக்களப்பிற்கு சென்றபோது அவருக்குப்பதிலாக கோபித் அவர்கள் தான் நியமிக்கப்பட்டிருந்தார்.இது தான் உண்மைத்தகவல்.அதற்கு பாவலன் என்று இவர் எழுதியிருந்தார். அதைவிட களத்தைப்பற்றியதான நடவடிக்கைகள் அதிகம் அறியாதவராகவும் இருக்கிறார்.
ஏன் இதைச்சொல்கிறேன் என்றால் இதில் பின்னூட்டமிட்டவர்கள் சகோதரன் நிருபன் கடைசிவரையும் களத்தில் நின்று வந்ததால் மன ஆதங்கத்தில் எழுதியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது..அதற்காக இதை சொல்லுகின்றேன்.

vidivelli சொன்னது…

தமிழன் தாயகத்திலிருந்து கூறியது...

/ஈழப்போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் மண் உணர்வு தோன்றி சுகந்திரம் தமிழ் மக்களுக்கு பெற்று கொடுக்கவேண்டும் என்று இணைந்தவர்கள் தாண்டி இறுதி காலத்தில் வீட்டுக்கொருவர் என்ற காலகட்டாயத்தில் வேண்டா வெறுப்பாக அனைவரும் இணைந்துகொண்டபோதே போராட்டத்தின் திசை மாறியது.இறுதிக்காலங்களில் இராணுவத்தின் அதிகளவான நவீன போர்க்கருவிகளின் உச்ச பட்ச பாவனையை எமது போராளிகளால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.ஆனாலும் சளைக்காமல் போராடவைத்தது தலைவரின் போர் அனுபவம்தான் /

இது உண்மை...உண்மை...புதிய போராளிகளால் தாக்குப்பிடிக்கமுடியாத சூழல் ஏராளமாக இருந்தது..முதல் காரணம் அவர்களிற்கு மனதளவுரீதியாக களத்தில்நிற்க விருப்பின்றி
இருந்தார்கள்...
தமிழன் கூறிய கருத்துக்கள் தான் காரணம்...
எமது இடங்கள் எதிரியின் கையில் விடுபட முக்கிய காரணங்கள் இதுவாகத்தான் இருந்தது..

Rathi சொன்னது…

விடிவெள்ளி, என்ன கன காலமா ஆளைக் காணவில்லை என்று யோசித்தேன். இந்தப் பதிவுக்கெல்லாம் எனக்கு நீங்க நன்றி சொல்ல வேண்டியதில்லை :)
என் கருத்துகளை இயன்றவரை நடந்த உண்மைகளை கொண்டு எடுத்து வைத்தேன்.
முக்கியமா, எனக்கு புலிகளின் ராணுவ கட்டமைப்பு பற்றியோ அல்லது படையணி பற்றியோ விவரங்கள் தெரியாது. தராக்கி சிவராம் எழுத்துகள் படித்தாலும், என் கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டது அன்ரன் பாலசிங்கம் அவர்களிடத்தில் தான்.

உங்கள் ஆதங்கமும், கோபமும் புரிகிறது. காலம் மாறும் என்று நம்புவோம்.

நிரூபன் சொன்னது…

vidivelli கூறியது...
நிருபனின் பதிவுகளில் படித்தபோது அவர் சின்ன வயதிலே வன்னியைவிட்டு [ மல்லாவியிலிருந்து] வெளியேறியதாக படித்தேன்.
அப்போ என்ன இப்போ புதுக்கதை சொல்கிறார்.யாரும் சொன்னதை வைத்துத்தான் பல தகவல்களை பதிவிட்டிருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.//

மாற்றுக்கருத்துக்களும், வாதங்களும் வரவேற்கப்படவேண்டியது, இங்கே என்னைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாது, என் கருத்துக்களைப் பொய்ப்பிப்பதற்காக மல்லாவியிலிருந்து வெளியேறியதாக நீங்களே உங்கள் ஊகங்களின் அடிப்படையில் எழுதுவது எப்படி நியாயமாகும்?

நிரூபன் சொன்னது…

கஸ்ட், 2011 12:59 am
அனாமிகா துவாரகன் சொன்னது…
@ யோகா,
//கடைசி வரை களத்தில் இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஆனதாக இருக்கலாம்,அவரின் சீற்றம்!//
என்ன புது கதை இது. நிரூபன் வன்னியில் வாழந்ததே கொஞ்சக்காலம் தான் என்று அவரது ஒரு பதிவு/பின்னூட்டம் மூலமே அறிந்து கொள்ள முடியும். கடைசி வரை களத்தில் நின்றவர்கள் எங்கே என்று இன்னுமே தெரியாமல் இருக்கிறது. இவர் கண்டிப்பாக கடைசி வரை நிற்கவில்லை. ஏன் வன்னியிலும் நிற்கவில்லை. அது தான் உண்மை.//

ஆகா..ஓகோ....நன்றாகத் தான் காமெடி பண்றீங்களே..நான் கடைசிவரை களத்தில் நின்றாதாகச் சொல்லவில்லை, கடைசிவரை வன்னியில் வாழ்ந்ததாகத் தான் சொல்லியிருக்கிறேன்.

நிரூபன் சொன்னது…

Rathi சொன்னது…
Reverie, நன்றி. ஒரு பொதுப்பிரச்சனைக்கு ஒருவரின் கருத்துக்கு என் கருத்தை பதிந்தேன்.

என் பதிவில் எங்காவது தனிமனித தாக்குதல் இருந்தால் தெரியப்படுத்தும் பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறேன் :)

அப்படி இருந்தால்... நிச்சயம் அதை நான் திருத்திக்கொள்வேன்.//

இதற்கு மேலே அனாமிகாவும், விடிவெள்ளியும் வைத்திருக்கும் கருத்துக்கள் என்ன?
தனிமனிதத் தாக்குதல் இல்லையா?
இவற்றினை அனுமதிப்பது எவ்வகையில் நியாயம்?

நிரூபன் சொன்னது…

அனாமிகா துவாரகன் சொன்னது…
@ யோகா,
//கடைசி வரை களத்தில் இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஆனதாக இருக்கலாம்,அவரின் சீற்றம்!//
என்ன புது கதை இது. நிரூபன் வன்னியில் வாழந்ததே கொஞ்சக்காலம் தான் என்று அவரது ஒரு பதிவு/பின்னூட்டம் மூலமே அறிந்து கொள்ள முடியும். கடைசி வரை களத்தில் நின்றவர்கள் எங்கே என்று இன்னுமே தெரியாமல் இருக்கிறது. இவர் கண்டிப்பாக கடைசி வரை நிற்கவில்லை. ஏன் வன்னியிலும் நிற்கவில்லை. அது தான் உண்மை.//

ஆகா...இது கூட நல்லாயிருக்கே.
ஒரு கட்டுரையாளனின் கருத்துக்களை, மாற்றுக் கருத்துக்களைப் பொய்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்படும் போது இப்படியும் கதை சொல்லலாமே.
நான் பிறந்தது, வாழ்ந்தது எல்லாமே வன்னி, உயர்கல்வியும், பல்கலைக் கழகமும் முடித்தது மாத்திரம் வெளி மாவட்டம், பிற்காலத்தில் புலிகளின் வானொலியில் அறிவிப்பாளராக கடமையாற்றினேன். இவ்ளோ விபரங்களும் போதுமா?

கட்டுரையாளனை ஆராய்கிறீங்கள? அல்லது இங்கே கட்டுரையாளனின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கின்றீர்களா?

நிரூபன் சொன்னது…

JOTHIG ஜோதிஜி சொன்னது…
1. பிரபாகரன் புனிதர் அல்ல. ஆண்டு கொண்டிருந்த ஆண்டு கொண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளர்களும் புத்தர் வழியை பின்பற்றுகின்றோம் என்றொரு நிலையிலும் இல்லை.

நிரூபன் மாற்றுக்கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்று சொல்லியிருந்தார். உண்மைதான் பிரபாகரன் குறித்து மாற்றுக் கருத்து அவஸ்யம் தான். ஆனால் அதை ராஜபக்ஷே மற்றும் கோத்தபய ராஜபக்ஷே உடன் ஒப்பீட்டு எழுதி இருந்தால் மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். ஆனால் பிரபாகரன் குறித்து மட்டும் எழுதும் போது அவர் சந்தித்த சவால்கள், எந்த சூழ்நிலையில் எந்தமாதிரியான முடிவுகள் எடுத்தார்கள் என்பதையும் சேர்த்து எழுதியிருந்தால் நிரூபன் வைத்திருக்கும் வாதம் முழுமையாக இருந்து இருக்கும். //

என் கட்டுரையின் முதற் பந்தியிலேயே பிரபாகரனின் உயிர் பற்றிய மதிப்பினைப் பதிவிட்டிருந்தேனே.
அவை உங்கள் கண்களுக்குத் தென்படவில்லையா.
வாழ்க பதிவுலகம்!

நிரூபன் சொன்னது…

@JOTHIG ஜோதிஜி சொன்னது…
அது போன்று நிரூபன் ஏன் செய்வதில்லை. குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஏன் பிரபாகரனை இந்த அளவுக்கு வெறுக்கிறார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் வெறுக்கும் அளவிற்கு அவர் சரியான நபராக இல்லை என்பதாக எடுத்துக் கொண்டாலும் ஆனால் ஒருவர் கூட சிங்கள அரசாங்கத்தை அவர்களின் இனவாதத்தைப் பற்றி எழுதுவதே இல்லை என்பதையும் கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.//

என் பதிவுகளை நீங்கள் சரிவரப் படிக்கவில்லை என்பது மாத்திரம் தெரிகிறது,.

என் பதிவில் அதிகளவான பதிவுகள் சிங்களவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி இருக்கின்றன.

ஐங்கரனின் தங்கை ஐந்துகளால் புணரப்பட்ட பதிவு.,
பிணங்களைப் புணர்ந்த புத்தன்,
நிர்வாண மேடையில்...
இன்னும் பல பதிவுகளில் எத்தனையோ உண்மைகளை, இனவாதம் பற்றிய கருத்துக்களை கூறியிருக்கிறேன்.

இங்கே எனக்கெதிராக என் பதிவினை விமர்சிக்காது, என் கருத்துக்கள் கட்டுரைகளைப் பொய்யாக வேண்டும் என, நான் வன்னியில் இருக்கவில்லை எனக் கூறும் அனாமிகா கூட தனிப்பட்ட முறையில் என் இனவாதத்திற்கு எதிரான பதிவுகளுக்கு பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பியிருந்தா.

நிரூபன் சொன்னது…

JOTHIG ஜோதிஜி கூறியது...

நிரூபாமா ராவ் சமீபத்தில் கொழும்பு சென்றிந்த போது தன்னை சந்திக்க வந்த தமிழ் தலைவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்ததாக ஒரு செய்தியைப் படித்தேன்.

அணைவரும் ஒரே கருத்துடன் வாருங்கள் என்றாராம். ஒருவரும் வரவில்லை என்பது அடுத்த ஆச்சரியம்.
ஈழத்தமிழர்களுக்கு காப்பாளர்களே இந்த லட்சணத்தில் இருந்தால் மக்கள் எப்படி இருப்பார்கள்.////பிரபாகரன் பற்றிய உங்கள் கண்ணோட்டம் சரியாக இருக்கும் பட்சத்தில்,இன்னொரு உண்மையையும் நீங்கள் ஏற்றே ஆக வேண்டும்!இப்போது சமீபத்தில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில்,தமிழ் மக்கள் பிராந்திய வேறுபாடின்றி வி.புலிகளால் உருவாக்கப்பட்ட த.தே.கூ.வை பெரும்பான்மையாக வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.//

புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணி இரண்டாகப் பிளவடைந்து ஒன்றரை வருடங்களாகப் போகின்றது.
இன்னமும் அதே பழைய அரசியலை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருங்கள்.

நிரூபன் சொன்னது…

Thekkikattan|தெகா சொன்னது…
ரதி, நானும் நிரூபனுடைய பதிவினை அவருடைய தளத்தில் படித்தேன். எப்படி ஒரு போராளியை உலக சபையே ஏத்துக்கொள்ளாத, மறுக்கிற அமைப்பை சேர்ந்த ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனை எம்.ஜீ.ஆர் தனமாக வீதிகளில் நடந்து பாட்டிகளை கட்டிக்கொண்டு ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கவில்லை என்று கள நிலவரம் புரிந்த ஒருவரால் அதனை தவறாக வாதத்திர்க்கும் எடுத்து முன் வைக்க முடியும்? புரியவில்லை!//

மீண்டும் ஒரு தடவை என் பதிவினைப் படியுங்கள். நான் வீதிகளில் தோன்றுங்கள், மக்களோடு இருங்கள் என்று கூறவில்லை.
மக்களுக்கு தான் உங்களைச் சந்திக்க வரப் போகின்றேன் என்று அறிவிக்காது திடீரென மக்கள் முன் தோன்றலாமே எனும் கருத்தினைத் தான் முன் வைத்துள்ளேன்,

நிரூபன் சொன்னது…

நிரூபனுக்கு ஈழம் போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது,
அவர் இறுதி வரை வன்னியில் நிற்கவில்லை, அவர் இனவாதிகளுக்கு கூலிக்காக எழுதும் ஒருவர் என்று எழுதியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.
காரணம் மாற்றுக் கருத்துக்களைப் பொய்ப்பிக்க இதனை விட ஓர் தனிமனிதத் தாக்குதல் தேவையா’?

நிரூபன் சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
பிரபாகரனை குறை சொல்பவர்கள் ராஜபக்சேவை தாக்கி எழுதுவதே இல்லை...காரணம் இலங்கையில் அவர்கள் இருப்பதால்.அதே சமயம் தமிழக தலைவர்களை கண்டபடி ஏசுவார்கள்.பிரபாகரன் ஏமாற்றினார் என்ற அந்த கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்தேன்.ஒரு வீரனை சில ஹிட்ஸ்க்காக அவமரியாதை செய்வது கொடும்செயல்//

என் பதிவுகளைத் தொடர்ச்சியாக நீங்கள் படித்து வந்தால் புரியுமே. நான் எங்கே. எப்போது ராஜபக்ஸேவினை தாக்கி எழுதியிருக்கிறேன் என்பது.

நிரூபன் சொன்னது…

ஈழபாரதி சொன்னது…
நிரூபன் கொடுக்கபடும் சம்பளத்துக்காக விசுவாசமாக எழுதுகிறார், தலைவரை விமர்சிக்காதவர்கள் எலோரையும் சிங்களம் கொன்று விடுவதில்லை, எஜமான விசுவாசத்தின் காரணமாகவே அவர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு வழிற்று பிழைப்பு, எங்களுக்கோ உரிமை பிரச்சினை, எல்லோருக்கும் எல்லாம் தேள்வை என்று இல்லை.//

அடடா...இது கூட நல்லாத் தானே இருக்கு.
ராஜ்பக்சேவிடம் காசு வாங்கி எழுதுவது போன்று சொல்லுகிறீர்களே.
இதெல்லாம் தனி மனிதத் தாக்குதல் இல்லையா?

நிரூபன் சொன்னது…

ஸ்ட், 2011 8:20 pm
தமிழன் தாயகத்திலிருந்து சொன்னது…
தலைவர் அவர்கள் மக்களை சந்திக்கவில்லை என்ற கருத்து பிழையானது என்பதற்கு முன்பு நான் பதிவிட்ட இந்த ஒரு பதிவே http://tamilkili.blogspot.com/2010/05/1.html சாட்சியாகும். இதன்பின்பும் தலைவர் அவர்கள் மக்களை பலதடவை சந்தித்திருக்கிறார்.சிலவிடயங்களை எனது சொந்த பாதுகாப்பு கருதி இங்கே சொல்லமுடியவில்லை.நிரூபன் போன்றவர்கள் தங்களை போராட்டத்துடன் நெருக்கமானவர்களாக காட்டிக்கொள்வதற்க்காக வேறுவிடயங்களை எழுதிவிட்டு இப்படியும் எழுதுகிறார்கள்.//

அடடா..தலைவர் தளபதிகளின் வீரச்சாவு நிகழ்விற்கு வந்து சென்றதை எப்படி மக்களோடு தொடர்பு கொண்டிருந்ததாக எடுத்துக் கொள்ள முடியும்”?

நிரூபன் சொன்னது…

vidivelli சொன்னது…
நிருபனின் பதிவுகளில் படித்தபோது அவர் சின்ன வயதிலே வன்னியைவிட்டு [ மல்லாவியிலிருந்து] வெளியேறியதாக படித்தேன்.
அப்போ என்ன இப்போ புதுக்கதை சொல்கிறார்.யாரும் சொன்னதை வைத்துத்தான் பல தகவல்களை பதிவிட்டிருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது..எனக்கு தெரிந்ததில் ஒரு பின்னூட்டத்திற்கு கொடுத்த பதிலில் பிழை இருந்தது.சாள்ஸ் அன்ரனி சிறப்புத்தளபதி நகுலன் மட்டக்களப்பிற்கு சென்றபோது அவருக்குப்பதிலாக கோபித் அவர்கள் தான் நியமிக்கப்பட்டிருந்தார்.//

என் பதிவுகளை முழுமையாகப் படித்து, என்னைப் பற்றி எடை போட்டிருந்தால் இன்னும் மகிழ்வடைந்திருப்பேன்.
நான் சிறுவயதில் வன்னியை விட்டு வெளியேறவில்லை,
ஆறு வயதில் வெளியேறினேன்,
உயர்கல்வி, முடித்த பின்னர், பல்கலைக் கழகம் முடித்த பின்னர் வன்னியில் தான் வாழ்ந்தேன்.

சாள்ஸ் அன்ரனிச் சிறப்புத் தளபதியாக பாவலன் எப்போது பதவி உயர்த்தப்பட்டார் என்பதே இன்று வரை அறிந்து கொள்ளாத நீங்கள் கள முனை பற்றியும், போராட்டம் பற்றியும் நான் அறியவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

இங்கே இந்த இணைப்பில் உங்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இணையத்தில் தேடினேன்,
சாள்ஸ் அன்ரனி படையணித் தளபதி பற்றிய லிங்.
http://www.tamilwin.com/view.php?22MpJcc3vW24dI2f402FQ04d2YjX0aB9C2e2QLR3b35Gge

நிரூபன் சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
பிரபாகரனை குறை சொல்பவர்கள் ராஜபக்சேவை தாக்கி எழுதுவதே இல்லை...காரணம் இலங்கையில் அவர்கள் இருப்பதால்.அதே சமயம் தமிழக தலைவர்களை கண்டபடி ஏசுவார்கள்.பிரபாகரன் ஏமாற்றினார் என்ற அந்த கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்தேன்.ஒரு வீரனை சில ஹிட்ஸ்க்காக அவமரியாதை செய்வது கொடும்செயல்//

ஏன் என் பதிவில் என்ன மவுஸ் கிளிக் மூலம் வருமானம் ஈட்டும் விளம்பரங்களா நான் வைத்திருக்கிறேன்?
ஹிட்ஸிற்காக பதிவெழுதுவதாகச் சொல்லுகிறீர்களே?

நிரூபன் சொன்னது…

http://www.thamilnattu.com/2011/01/blog-post.html
இருள் கவிழும் நேரம்.....!


உலகின் அதிசய நாடுகளின் வரிசையில் இலங்கை!
http://www.thamilnattu.com/2011/02/blog-post.html

http://www.thamilnattu.com/2011/03/blog-post_30.html

தேர்தல் மேடையில் எறியப்படும் எச்சில் பருக்கைகள்!


இம் முறைத் தேர்தலில் எல்லாமே இலவசம்!
http://www.thamilnattu.com/2011/03/blog-post_24.html


இனியும் ஒரு போர் வேண்டாம்!
http://www.thamilnattu.com/2011/03/blog-post_173.html

மீண்டும் ஓர் ஈழ யுத்தம்! உலகத் திரையரங்குகளில் முதன் முறையாக..
http://www.thamilnattu.com/2011/03/blog-post_20.html

http://www.thamilnattu.com/2011/03/blog-post_16.html

நறுக்கென நாலு வார்த்தைகள்!பெண் உறுப்பினுள் மிளகாய்த் தூள் தூவுதல்!
http://www.thamilnattu.com/2011/03/blog-post_13.html


சிதைவுகளின் எச்சங்கள்!
http://www.thamilnattu.com/2011/03/blog-post_02.html


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
http://www.thamilnattu.com/2011/03/blog-post.html


ஈழத்திற்காய் தீக்குளிக்கப் போகும் புதுமைப் பெண்!
http://www.thamilnattu.com/2011/04/blog-post_30.html

ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்
http://www.thamilnattu.com/2011/04/2.html

நிர்வாணத் தியேட்டரில் ஓடி முடிந்த நீலப் படங்கள்!
http://www.thamilnattu.com/2011/04/blog-post_17.html

தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி!
http://www.thamilnattu.com/2011/04/blog-post_12.html

நாங்கள் நாதியற்றவர்கள்!
http://www.thamilnattu.com/2011/04/blog-post_05.html

பிணங்களைப் புணர்ந்த புத்தன்!
http://www.thamilnattu.com/2011/05/blog-post_19.html

ஈழச் சிசுவைக் கொன்றொழித்த பிரதேசவாதம்- பாகம் 1
http://www.thamilnattu.com/2011/05/1.html

தாங்குவோர் இன்றி(த்) தத்தளிக்கும் ஈழம்!
http://www.thamilnattu.com/2011/05/blog-post_03.html

காமம் எனும் கண் கொண்டு கற்பழித்தல்!
http://www.thamilnattu.com/2011/05/blog-post.html

முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை!
http://www.thamilnattu.com/2011/06/blog-post_21.html

ஈழம் என்ன தொட்டு நக்கும் ஊறுகாயா?
http://www.thamilnattu.com/2011/06/blog-post_19.html

எரியூட்டப்பட்ட ஏகாந்த நேர நினைவலைகள்!
http://www.thamilnattu.com/2011/06/blog-post_15.html

பிள்ளை பிடிகாரங்க பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
http://www.thamilnattu.com/2011/06/blog-post_13.html

தமிழகச் சந்தைகளில் இலவசப் பொருளாக ஈழம்!
http://www.thamilnattu.com/2011/06/blog-post_15.html

வால் பிடிப் புலிகளால் அழிந்த ஈழ விடுதலைப் புலிகள்!
http://www.thamilnattu.com/2011/07/blog-post_30.html

எழுத்துலக விபச்சாரர்களால் மானபங்கப்படுத்தப்படும் தமிழர்கள்!
http://www.thamilnattu.com/2011/07/blog-post_24.html

அவர்கள் உன்னைக் கற்பழித்தார்களா- ஈழப் போரின் மறு வடிவம்!
http://www.thamilnattu.com/2011/07/blog-post_17.html

ஐங்கரனின் தங்கை ஈழத்தில் ஜந்துகளால் சிதைக்கப்பட்டாள்!
http://www.thamilnattu.com/2011/07/blog-post_8106.html

ஈழம் சாவிற்கு சவால் விட்ட சரித்திர பூமி!
http://www.thamilnattu.com/2011/07/blog-post_12.html

ஈழப் போர் தந்த சாபங்கள்- உண்மைச் சம்பவம்!
http://www.thamilnattu.com/2011/07/blog-post_10.html

ஈழப் போர் விட்டுச் சென்ற தடயங்கள்!
http://www.thamilnattu.com/2011/07/blog-post_02.html

மகிந்தவுக்கு செய்வினை வைக்க முடியுமா- ஒரு சவால்!
http://www.thamilnattu.com/2011/07/blog-post.html

ஈழத்தை முதலாக்கி விபச்சாரம் செய்யும் ஈனப் பிறவிகள்!
http://www.thamilnattu.com/2011/08/blog-post_13.html

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதல் தோல்வியில் முடிந்தது எப்படி- இது வரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
http://www.thamilnattu.com/2011/08/blog-post_11.html

நிரூபன் சொன்னது…

அன்பிற்குரியவர்களே,
இதுவரை பதிவுலகில் நான் எழுதிய மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை 134, அவற்றில் மேலே தரப்பட்ட சுட்டிகளுடன் தொடர்புடைய பதிவுகள் யாருக்காக? யாருக்கு எதிராக எழுதப்பட்டுள்ளன என்பதனைப் படித்துப் பாருங்கள்.
ஒரு கட்டுரையாளனை ஆராய்வதில் முனைப்புக் காட்டும் நீங்கள் அனைவரும் நான் கட்டுரையில் முன் வைத்த விடயங்களை விட, என்னைப் பற்றித் தனி விமர்சனம் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள்.

என்னுடைய பிரபாரனியம் எனும் பதிவிற்கு எதிராக எதிர்ப் பதிவு அல்லது கருத்துக்களை மறுத்துரைக்கு உங்கள் தரப்பு கருத்துக்களை நியாயப்படுத்தும் நியாயப்பதிவு போட்ட அனைவரும் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்!!
இங்கே நான் பகிர்ந்த சுட்டிகளில் பெரும்பாலானவை என்னோடு கூட இருந்தவர்கள், என் கூடவே தடுப்பில் இருந்தவர்களின் மன நிலைகளைப் பிரபலிப்பவையே ஆகும்.

இந்தப் பதிவுகளில் ஒன்றுக்காகாவாது உங்களால் இன்று வரை ஆதரவுப் பதிவு போட முடிந்ததா? இல்லை இந்தப் பதிவுகளில் போடப்பட்ட கருத்துக்கள் பலரைச் சென்று சேர வேண்டும் எனும் ஆதங்கம் உங்களில் யாருக்காகவது இருந்ததா?

பிரபாகரனியம் பற்றிப் பேச்செடுத்ததும் பஞ்சாயத்துக் கூட்டி ஆராய்ச்சி செய்யும் நீங்கள், இங்கே பின்னூட்டமிட்ட உறவுகள் அனைவரும் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்!
பிரபாகரனால் வளர்க்கப்பட்ட போராளிகள் நடுத் தெரிவில் நிற்பது பற்றி பதிவுலகில் முதன் முதற் பதிவாக நான் பதிவெழுதிய போது உங்களின் உணர்வுகள் எங்கே போச்சு?

உங்களுக்கு தலைவர் மீது உண்மையில் மதிப்பிருந்தால், புலிகள் அமைப்பின் மீது மதிப்பிருந்தால் பிரபாகரனால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம் சிதைவடைந்த பின்னர், கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் போராளிகள் பற்றிய என் பதிவுகளுக்கு உங்களது ஆதரவினைக் காட்டியிருக்கலாமே?

ஈழத்தை வைத்து, உங்கள் பிழைப்பை நடைத்தும் ஈனச் செயல்களை இன்றோடு விடுங்கள்!
உங்களுக்கு மனச்சாட்சியும், மனிதாபிமானமும் இருந்தால் மேலே நான் தந்த சுட்டிகளில் வெளியான பதிவுகளில் ஏதாவது ஒன்றுக்கு,
போரால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் கூட இறுதி வரை இருந்த ஈழ மக்களின் இன்றைய நிலை பற்றி நான் எழுதிய பல பதிவுகளுக்கு உங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்திருக்கலாம் தானே?
அப்போது எங்கே போச்சு உங்களின் ஈழ ஆதரவு?

இனவாதத்திற்கெதிராக நான் பதிவெழுதவில்லை என்று கூறும் நீங்கள் மேலே தரப்பட்ட பதிவுகளைக் கொஞ்சம் படித்துப் பார்க்கலாம் தானே?
அவற்றிற்கும் உங்கள் கருத்துக்களை முன் வைத்திருக்கலாம் தானெ?

நிகழ்வுகள் சொன்னது…

///ஈழபாரதி சொன்னது…

நிரூபன் கொடுக்கபடும் சம்பளத்துக்காக விசுவாசமாக எழுதுகிறார், தலைவரை விமர்சிக்காதவர்கள் எலோரையும் சிங்களம் கொன்று விடுவதில்லை, எஜமான விசுவாசத்தின் காரணமாகவே அவர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு வழிற்று பிழைப்பு, எங்களுக்கோ உரிமை பிரச்சினை, எல்லோருக்கும் எல்லாம் தேள்வை என்று இல்லை.////
நண்பரே நிரூபன் எழுதிய இந்த பதிவையும் படியுங்கள் http://www.thamilnattu.com/2011/05/blog-post_19.html

சிங்களத்தின் சம்பளத்துக்காக எழுதுபவனால் இப்படி ஒரு பதிவு எழுத முடியுமா?? அரச மரத்தை வெட்டினாலே தண்டனை வழங்கும் நாடு எமது...!

ஆ , இந்த பதிவுக்கு ஓட்டு போட்டவர்களில் அனாமிகா துவாரகனும் அடக்கம், ஆனால் மாற்றுகருத்து என்று வந்துவிட்டால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

பிரபாகரனியம் பற்றிப் பேச்செடுத்ததும் பஞ்சாயத்துக் கூட்டி ஆராய்ச்சி செய்யும் நீங்கள், இங்கே பின்னூட்டமிட்ட உறவுகள் அனைவரும் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்!
பிரபாகரனால் வளர்க்கப்பட்ட போராளிகள் நடுத் தெரிவில் நிற்பது பற்றி பதிவுலகில் முதன் முதற் பதிவாக நான் பதிவெழுதிய போது உங்களின் உணர்வுகள் எங்கே போச்சு?

முதலில் உங்களுக்கு நன்றி நிரூபன். பொதுவா இது போன்று குத்திக் கௌங்கெடுக்கும் போது பலரும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவாங்க? ஆனால் மொத்தமாகவே நிதானமாகவே பதில் உள்ளீர்கள். வாழ்த்துகள்.

சில கேள்விகள். முடிந்தால் பதில் அளிக்க முடியுமா?

1. விடுதலைப்புலிகள் இயக்க உள் அரசியலை விட்டு விடுங்க. அதைப்பற்றியே மறுபடியும் பேசிக் கொண்டு இருந்தால் நீங்களும் கலைஞர் போலவே திசை திருப்பி கும்மியடிக்கத்தான் லாயக்கு என்று மற்றவர்கள் உங்களைப் பற்றி சொல்லிடுவாங்க. உடனே மாற்றுக்கருத்து வெங்காயம் தெருப்புழுது, கருவேப்பில்லை என்று சொல்லாதீங்க. முதலில் நீங்க ஒரு தமிழன் என்பதை உணர்ந்து கொள்ளவும். அதற்குப் பிறகு தான் மற்றவை எல்லாம். இந்தியாவில் சிங் தான் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்னாங்க. அவன் சிங் இனத்தில் பொறந்த காரணத்தினால் பெரிய பாதிப்பு இல்லை. இதே விடுதலைப்புலிகள் என்றதும் அவர்கள் செய்த ஒவ்வொன்றும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பேசக்காரணம் மத்திய அரசாங்கத்தில் இருக்கும் மற்ற இன மக்கள் செய்து கொண்டிருக்கும் லாபி அரசியல். இதெல்லாம் உங்களுக்கு புரியுதா?

2. உங்கள் ஒவ்வொரு கட்டுரையையம் படித்துள்ளேன். முக்கிய விசயங்கள் 30 சதவிகிதம் மற்றவை உங்கள் கருத்து என்கிற ரீதியில் வலுவில்லாத விசயங்கள் என்று கோர்த்து நானும் எழுதுகின்றேன் என்கிற ரீதியில் எழுதி தள்ளி விட்டுக் கொண்டு இருக்கீங்க.

3. தனி மனித தாக்குதல் என்று இப்போது பேசுறீங்க? நீங்க தானே தலைப்பு பார்த்து ஆட்களை உள்ளே வரவழைக்க வேண்டும் என்று பிரபாரகன் பெயரை சேர்த்து வைத்து எழுதிறீங்க. தலைப்பு வேறு விதமாக எழுதி உள்ளே உள்ள தர்க்க நியாயங்களை புரிய வைக்க முயற்சிக்க வேண்டியது தானே? சதீஷ் சொன்னது போல ஹிட்ஸ் என்ற சமாச்சாரம் தான் இங்கே முக்கியம் கருதுகீறீர்களோ?

JOTHIG ஜோதிஜி சொன்னது…

பிரபாகரன் களத்தில் வருவதற்கு முன் 1970 முதல் 1977வரை அவர் கடந்து வந்த பாதை, அவர் பட்ட அவமானங்கள், தமிழர்களின் கைக்கூலியாக இருந்தவர்கள், தமிழர்களாக இருந்தாலும் காவல் துறையில் இருந்து கொண்டு இந்த இயக்க செயல்பாடுகளை முறியடிக்க நினைத்தவர்கள், சிங்கள அரசாங்கத்திற்கு சாதகமாக செயல்பட்டவர்கள், பதவிக்கு ஆசைப்பட்டு சோரம் போனவர்கள் போன்ற நிகழ்வுகளை படித்துப் பார்த்து இருந்தால் ஏன் பிரபாகரன் இத்தனை இறுக்கமாக தன்னை வடிவமைத்துக் கொண்டார் என்பது உங்களுக்கு புரியக்கூடும். ரணில் விக்ரமசிங்கே காலத்தில் உருவான அமைதி காலத்தில் எத்தனை அந்நிய சக்திகள் தமிழீழத்தில் ஊடுருவினார்கள். என்ன என்ன செய்தார்கள்? அவர்கள் யாருக்கு தொடர்ச்சியாக அறிக்கை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்ஈ? அதனால் என்ன பாதிப்புகள் உருவானது? அது பின்னால் நடந்த போருக்கு ராஜபக்ஷேவுக்கு உதவியது போன்றவை உங்களுக்கு தெரியுமா?

JOTHIG ஜோதிஜி சொன்னது…

சிங்கள அரசாங்கத்தினால் பதவி பெற்றவர்கள் உண்மையான தகுதியான நபர்களா? அவர்கள் தமிழ் மக்களுக்குத்தான் உதவி செய்து கொண்டு இருக்கிறார்களா? இவர்கள் மக்களுடன் மக்களாக பழகியவர்கள் தானே? மொத்த ஈழத் தமிழ மக்களிடம் இவர்களை குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் இவர்கள் உருவம் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது போன்றவை உங்களுக்கு புரியக்கூடும். இரண்டு கூறாக தமிழ் கட்சிகள் பிரிந்து இருக்க காரணமே அவர்களுக்கு மக்கள் குறித்து அக்கறை இல்லை. ஆரம்பம் முதலே பிரபாகரனுக்கு தமிழர்கள் குறித்து அவர்கள் எண்ண செயல்பாடுகள் குறித்து நல்ல புரிந்துணர்வு இருந்த காரணத்தால் தான் இந்த கேடு கெட்ட அரசியலை விரும்பவில்லை. பதவியை விரும்புவார்கள். மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்து விடுவார்கள் என்பதை உணர்ந்து தான் தனது இயக்கத்தை ஒரு இறுக்கமான வடிவமைப்பில் வைத்திருந்தார். மற்ற மாவட்ட மக்களைத்தான் இனம் மொழி ஜாதி சிங்கள சார்பு போன்றவை பிரித்து வைத்து இருந்ததே? எப்படி ஆதரவு நீட்டுவார்கள். இப்போது நீங்கள் அணைவரும் பேராளிகளுக்கு கண்ணீர் சிந்துவது அவர்கள் தெருவுக்கு வந்து இருப்பதை பற்றி பதிவு எழுதுக்கிட்டு இருக்கீங்க, பிரபாகரன் இருக்கும் போது நீங்க எழுதிய கட்டுரைகள் இருந்தால் சுட்டி கொடுத்து உதவுங்க.

நிரூபன் சொன்னது…

@
JOTHIG ஜோதிஜி கூறியது...


2. உங்கள் ஒவ்வொரு கட்டுரையையம் படித்துள்ளேன். முக்கிய விசயங்கள் 30 சதவிகிதம் மற்றவை உங்கள் கருத்து என்கிற ரீதியில் வலுவில்லாத விசயங்கள் என்று கோர்த்து நானும் எழுதுகின்றேன் என்கிற ரீதியில் எழுதி தள்ளி விட்டுக் கொண்டு இருக்கீங்க.//


அன்பிற்குரிய உறவுகளே,
என் இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தான் திங்கள் முதல் வியாழன் வரை பதிவுலகப் பக்கம் வரமுடியவில்லை,
இல்லையேல் திங்களன்றே உங்களின் இப் பதிவிற்குப் பதில் தந்திருப்பேன்.
சகோதரர் ஜோதியி முதலில் கூறிய பின்னூட்டத்திற்கும், தற்போது கூறூம் பின்னூட்டத்திற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்று பார்த்தீர்களா?

என் பதிவுகளில் இனவாதத்திற்கெதிரான கருத்துக்களே இல்லை என்று ஒரு கருத்தினை முன்வைத்து விட்டு, தற்போது என் பதிவுகளில் முப்பது சதவீதம் தான் முக்கிய விசயம் உள்ளதாக கூறுகின்றீர்களே,
முப்பது சதவீதம் முக்கிய உள்ள பதிவிற்கு ஏன் இங்கே எதிர்ப் பதிவு போட வேண்டும்?
முப்பது சதவீதம் உள்ள எழுத்துக்களுக்கு ஏன் நீங்கள் அனைவரும் தர்க்க வாதம் புரிய வேண்டும்?

நானும் கோர்த்து எழுதுகின்றேன் என்றால்,’
இதுவரை பல பெண்களைக் கொன்ற பின் புணர்ந்த இலங்கை இராணுவத்தினரைப் பற்றி எழுதிய கருத்துக்கள் பொய்யா?
ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், ஈழப் போரில் பதியப்படாத சம்பவங்கள் என எழுதியவை அனைத்தும் கோர்த்து எழுதப்பட்டவையா?

என் பதிவுகள் பற்றிய சரியான புரிதலற்ற உங்களோடு நான் எப்படி என் பதில்க் கருத்துக்களை முன் வைக்க முடியும்?
அவையும் புரிதலற்றனவாகத் தானே தோன்றும்?

உங்களின் வினாக்களுக்கு பதில் சொல்வதற்கு முன்பதாக நான் இங்கே வைத்திருக்கும் கருத்துக்களுக்கு உங்களின் காத்திரமான பதில்க் கருத்துக்களை முன் வையுங்கள் பார்க்கலாம்.

அதன் பிறகு என்னுடைய கருத்துக்களை நான் இங்கே எழுதுகின்றேன்.

கோர்த்து நானும் எழுதுகின்றேன் எழுதினால்.
பதிவுலகில் என்றோ நான் காணமாற் போயிருப்பேன்.
ஆகவே ஈழம் பற்றிய புரிதலற்றவர்கள்,
வெறுமனே ஈழம் பற்றி அரைத்த மாவினை அரைத்தவர்களோடு நான் இங்கே பேசுவதற்கு முன்பதாக உங்களால் முடிந்தால் நான் இங்கே விட்டுச் சென்ற கருத்துக்களுக்கு முதலில் பதில் கருத்துகளை வையுங்கள்.

Rathi சொன்னது…

அஹோரி, உங்கள் கருத்துரையை நீக்கவேண்டியாகிவிட்டது. உங்கள் கோபம் புரிந்துகொள்ளக்கூடியது தான். எதுவாகிலும் வாதங்களால் எதிர்கொள்வோம், நண்பரே. வாதங்களை தொடருங்கள். நன்றி.

நிரூபன் சொன்னது…

@
JOTHIG ஜோதிஜி சொன்னது…
மற்ற மாவட்ட மக்களைத்தான் இனம் மொழி ஜாதி சிங்கள சார்பு போன்றவை பிரித்து வைத்து இருந்ததே? எப்படி ஆதரவு நீட்டுவார்கள். இப்போது நீங்கள் அணைவரும் பேராளிகளுக்கு கண்ணீர் சிந்துவது அவர்கள் தெருவுக்கு வந்து இருப்பதை பற்றி பதிவு எழுதுக்கிட்டு இருக்கீங்க, பிரபாகரன் இருக்கும் போது நீங்க எழுதிய கட்டுரைகள் இருந்தால் சுட்டி கொடுத்து உதவுங்க//

பிரபாகரன் இருக்கும் போதும் முழுமையான வடகிழக்குப் பகுதியும் இணைக்கப்பட்டு, புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருக்கவில்லை நண்பரே,
இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் எப் பாகத்திற்கும் சென்று வரலாம். எவர் விரும்பினும் உதவலாம். ஆனால் வன்னி மக்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட தோல்வியடைந்த மக்களுக்கு உதவ வேண்டும் எனும் பக்குவம் இலங்கையின் ஏனைய மாவட்ட மக்களுக்கு இல்லை. இதனால் தான் உள்ளூரில் இருந்து உதவிகள் கிடைக்கவில்லை எனும் காரணத்தினால் தான் வெளியூரில் இருக்கும் ஈழ ஆதரவாளர்கள், ஈழம் பற்றி கருத்துக் கூறும் உங்களிடம் உதவி செய்ய முடியுமா என்று விண்ணப்பம் வைத்தேன்.

அடுத்தது,
ஈழம் பற்றிய உங்களின் புரிதலுக்கு இதுவும் ஓர் சிறந்த உதாரணம்,
பிரபாகரனின் காலத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்தோருக்கு இணையத்தில் எழுதும் வசதிகளோ, மின்சார வசதிகளோ இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?

போர் நடக்கும் பகுதிகளில் மின்சார வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதென்பது அனைவருக்கும் தெரியும்.
அப்படி இருக்கையில் பிரபாகரன் இருக்கும் போது எழுதிய கட்டுரைகள் என்று சுட்டி கேட்பது ஈழம் பற்றிய உங்களின் புரிதலற்ற தன்மையினைத் தானே காட்டுகின்றது?

இந்த வருட ஆரம்பத்தில் தான் நான் ப்ளாக்கிற்கு வந்தேன்.
பிரபாகரன் காலத்தில் ப்ளாக் எழுதும் அளவிற்கு எங்கள் ஊர்களில் மின்சாரவசதி இல்லை. அப்படி இருக்கையில் சுட்டி கேட்பதென்பது,
உங்கள் பார்வையில் ஈழம் என்னவோ மின்சார வசதிகளோடும்,
ஈழத்தில் வன்னியில் வாழ்ந்த மக்கள் சொகுசாக வாழ்ந்தவர்கள் போன்ற உங்களின் கற்பனைப் பாணியிலான பார்வையினைத் தான் புலப்படுத்தி நிற்கிறது.

என்னை,
நான் யார் என்று அடையாளப்படுத்தி என் கருத்துக்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
வன்னியில் 2002ம் ஆண்டின் பிற்பகுதிகளிலிருந்து வானொலி கேட்டவர்களுக்கு நான் யாரென்று தெரியும்,
ஏன் என் குரல் பதிவுகள் இன்று கூடப் புலிகளின் இணைய வானொலியில் இருக்கிறது.
வலை உலகிலும் என்னுடைய வானொலி வாழ்வு பற்றிப் பலருக்குத் தெரியும்,
புனை பெயரில் அங்கே பணி புரிந்த காரணத்தினால் தான் நான் இன்று வரை வலையில் ஒரு வொய்ஸ் பதிவினைக் கூடப் இணைக்க முடியாத காரணத்தில் இருக்கிறேன்.
பலரால் நான் அடையாளங்காணப்பட்டு,
சிரமங்களை எதிர் கொள்ள நேரிடலாம் எனும் காரணத்தினால் தான்.

இவை எல்லாவற்றையும் சொல்லித் தான் என் கருத்துக்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

என் பதிவுகள் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கும் உங்களோடு தான் என் கருத்துக்களை முன் வைத்து, என் வாதங்களை வலுப்படுத்த முடியும்.

ஆகவே என் கருத்துக்களுக்கான பதில்களை முதலில் முன் வையுங்கள். அதன் பின்னர் உங்கள் கருத்துக்களுக்கு நான் பதில்களைத் தருகிறேன்.

நிரூபன் சொன்னது…

சகோதரி ரதி,
அஹோரியின் கருத்துக்களை பதிவிடுங்கள். திட்டி எழுதும் கருத்துக்கள் கொஞ்சம் கிளு கிளுப்பை ஏற்படுத்துகின்றன.
காரணம் இங்கே கருத்துக்களை முன் வைக்கும் பலர் என்னைப் பற்றித் தானே தனித்துவமாக ஆராய்கிறார்கள். கட்டுரையினை ஆராய்வதை தவிர்த்து..

ஆகவே எவ்வளவு அடிச்சாலும் தாங்குவமில்லே!!

நிரூபன் சொன்னது…

@
JOTHIG ஜோதிஜி சொன்னது…
3. தனி மனித தாக்குதல் என்று இப்போது பேசுறீங்க? நீங்க தானே தலைப்பு பார்த்து ஆட்களை உள்ளே வரவழைக்க வேண்டும் என்று பிரபாரகன் பெயரை சேர்த்து வைத்து எழுதிறீங்க. தலைப்பு வேறு விதமாக எழுதி உள்ளே உள்ள தர்க்க நியாயங்களை புரிய வைக்க முயற்சிக்க வேண்டியது தானே? சதீஷ் சொன்னது போல ஹிட்ஸ் என்ற சமாச்சாரம் தான் இங்கே முக்கியம் கருதுகீறீர்களோ?//

நான் ஹிட்ஸிற்காகப் பதிவெழுத வேண்டும் என்றால்,
நிச்சயாமாகப் பிரபாகரன் என்ற ஒரு பெயரினை யூஸ் பண்ணியிருக்க மாட்டேன்,
என் வலையினைப் பாருங்கள். அதிகம் பேரால் படிக்கப்பட்ட பதிவுகளில் (POPULAR POST) வரிசையில் கூட ஈழம் பற்றிய பதிவுகளை விட,
கவர்ச்சியான, கிளு கிளுப்பான தலைப்புள்ள பதிவுகள் தான் வந்திருக்கின்றன.

ஹிட்ஸிற்காக எழுதும் போது பிரபாகரனைப் பாவிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்காது. காரணம் ஹிட்ஸிற்காக எழுதுவதற்கு கிளு கிளு தலைப்புக்கள் பல இருக்கின்றனவே.
பிரபாகரன் பெயரைப் பாவித்தது ஒரு குற்றமா...
அப்படியானால் ஈழத்தில் வாழும் ஒருவருக்கும் பிரபாகரன் பெயர் சொல்ல உரிமையில்லையா. இது நன்றாக இருக்கிறதே!

Rathi சொன்னது…

நிரூபன், Welcome to my blog. I am really happy to see you here, brother :)

அஹோரியின் கருத்தை தாங்கும் வல்லமை உங்களுக்கு இருக்கலாம் நிரூபன். நான் நியாத்துக்கும், நீதிக்கும் உடன்பாடில்லாதவைகளை என் தளத்தில் அனுமதிக்க முடியாது. தொடருங்கள், விரைவில் கருத்தக்களத்தில் நானும் கலந்துகொள்கிறேன். எந்த தயக்கமும் வேண்டாம் நிரூபன். எனக்கு நிரூபன் என்கிற தனிமனிதன் மேல் எந்த கோபமும் கிடையாது, சரியா :)

பெயரில்லா சொன்னது…

நிரூபன், நான் எந்தப் பதிவர்களுடனும் பேஸ்புக்கில் தொடர்பு வைத்ததில்லை. வைக்கப் போவதும் இல்லை. பேஸ்புக் என்னுடைய தனிப்பட்ட இடம். அங்கே வலை உலகத்தவர்களுக்கு என்றுமே அனுமதி இல்லை. அவர்கள் எவ்வளவு நல்லவர்கள் நான் நேசிப்பவர்கள் என்றாலும் பேஸ்புக்கிற்குள் அவர்களுக்கு என்றுமே இடமில்லை.

உங்களுக்கு இன்ட்லியில் பதில் கொடுத்திருக்கிறேனே தவிர வேறு விதத்தில் பதில் தந்ததில்லை. அதுவும் மதிசுதாவின் பிரச்சினைக்குப் பிறகு.

மற்றது ஆறுவயதில் வன்னியை விட்டுப்போனது என்பது சின்ன வயதில் போவது தான். 2002ம் ஆண்டு வானொலியில் இணைந்திருந்தீர்களானால் என்ன பெயரில் நிகழ்ச்சி நடத்தினீர்கள் என்று சொல்லுங்களேஎ. ஏன் என்றால் 2006 தை வரை வன்னியில் இருந்தவள் தானே நானும். எந்த எந்த நிகழ்ச்சிகள் செய்தீர்கள் என்று சொல்லுங்கோ. மட்டது வானொலி நிகழ்ச்சி செய்த சிலரை எனக்குத் தெரியும். அவர்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்.

வானொலி ஆக்களை தலைவர் சந்திச்சிருக்கிறார். பாராட்டி இருக்கிறார். வானொலிக்குள் இருந்த ஆட்கள் என்றுமே தலைவரை குறை சொல்ல மாட்டார்கள்.

உங்கள் தலைப்பில் பலவும் கவருவதற்காக வைக்கப்பட்டவை என்பதை நீங்களே ஒத்துக்கொண்டு இனி அப்படி தலைப்பு வைக்க மாட்டேன் என்டு சொல்லி இருந்தியள். பிறகு அப்படி இல்லை என்று சொல்லுவது எப்படி என்று தெரியவில்லை.

பல படைப்புகளுக்கும் தலைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லாதவையே. வெளி நாட்டு ஆட்களை குறி வைத்து பொய்யையும் புரட்டையும் எழுதுவது, அல்லது கோடியில் ஒன்றாக நடந்த நிகழ்ச்சியை, அதுவே 100% நடக்கிறது போல எழுதுவதும் உங்கள் கலை.

ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று புரியவில்லை. பொய்யை எழுதிவிட்டு எப்படி உங்களால் நிம்மதியாக படுக்க முடிகிறது. என்ன செய்வது ஆனானப்பட்ட கருணாவே மாறிய போது நிரூபன்கள் மாறுவதில் ஆச்சரியமில்லை.

கலி காலம். வேறு சொல்வதற்கில்லை.

எல்லாளன் சொன்னது…

நன்றிகள்
நிரூபன் போன்றவர்கள் தமிழருக்கு ஒரு சாபக்கேடுகள்

புலிகளையோ பிரபாகரனையோ திட்டிப் பிழைப்பு நடத்தும் கூட்டங்கள் இப்போது பெருகிப் போய் விட்டது

ஆனால் அப்படியான பதிவுகளுக்கு மசுவும் அதிகம் தான்

அதனால் தான் இப்படிப் பட்டதுகளுக்கு பதில் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை

உங்களுடைய பதிலுரைக்கு நன்றிகள்

எல்லாளன் சொன்னது…

வன்னிப் போருக்கு பின்னர் தப்பிப் பிழைத்தவர்களில் 99 வீதமானோர் புலிகளுக்கு ஆதரவாக எந்த பரப்புரைகளிலும் தனித்து ஈடுபடவில்லை.

சில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தாலும் அவர்கள் சுயத்தை மறுத்தே கொடுத்திருக்கின்றார்கள்

ஆனால் புலிகளுக்கு எதிராக எழுதுபவர்கள் மட்டும் தம்மை யார் என்று மார்தட்டிக் கொண்டு பகிரங்கமாக எழுதுவது சொல்லாமே தெரிகின்றது யாரின் பின் புலத்தில் இயங்குகின்றார்கள் என்று

அதிலும் சிலர் தாம் முகாமிலிருந்து தப்பி வந்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு இராணுவத்தின் அனுசரனையோடு சுயமாகவோ, கட்டாயத்தின் பெயரிலோ இயங்கிவருவது தற்போது அம்பலமாகி விட்டது

இதில் நிருபன் எந்த வர்க்கம் என்று நீங்களே முடிவெடுங்கள்

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

http://reap-and-quip.blogspot.com/2011/08/blog-post.html

Rathi சொன்னது…

நிரூபன், முதலில் அஹோரியின் பின்னூட்டத்தை நீக்கிய காரணத்தை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இருந்தாலும் அஹோரியின் கோபம் நியாயமானது. அவர் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தான் கொஞ்சம் தடம்மாறிவிட்டது.

ஏற்கனவே எல்லோரும் உங்கள் வாதங்களுக்கான தங்கள் கருத்துகளையும், ஆதாரங்களையும் முன்வைத்தாயிற்று. அதனால் மற்றவர்களின் வாதத்திற்கு நான் கருத்து சொல்லவேண்டிய தேவையோ, அவசியமோ இல்லை.

ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன் நிரூபன். இங்கே "என்னைப் புரிந்து கொள்ளாது" என்று சொல்லியிருந்தீர்கள். அதை இப்படி யோசித்துப்பாருங்கள் (நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை). இங்கே எல்லோரும் சொல்லவிளைவது உங்கள் பதிவானது ஈழவிடுதலை குறித்த, அதற்காய் போராடியவர்கள் குறித்த ஓர் வரலாற்றுப் பிழையான தாக்கத்தை இனிமேல் வரும் காலங்களில் உருவாக்கி விடக்கூடாது என்பது தான். அந்தப் புள்ளியில் தான் உங்கள் முந்தைய பதிவுகளில் நீங்க சொன்னவைகளை எடுத்தாள்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.

நான் உங்கள் பதிவுகளின் தலைப்புகளைப் பார்த்து விட்டே விலகிப்போய் பழகிவிட்டேன். உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். பெண் உறுப்பினுள் மிளகாய்த்தூள் தூவுதல். இது என்ன விதமான தலைப்பு என்று எனக்குப் புரிபடுவதில்லை. கிழக்கில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரை சிங்களப் படைகள் உலகிலுள்ள எல்லா சித்திரவதையும் செய்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர் பெண்ணுருப்பினுள் வெடிகுண்டை பொருத்தி வெடிக்கவைத்த கொடுமையும் உண்டு. அதை குமார் பொன்னம்பலம் வழக்காடியதும் உண்டு. இப்படியெல்லாம் இருக்கும் போது.... என்ன தலைப்பு உங்களது. எனக்குப் புரிவதில்லை.

will continue....

Rathi சொன்னது…

நிரூபன், முதலில் அஹோரியின் பின்னூட்டத்தை நீக்கிய காரணத்தை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இருந்தாலும் அஹோரியின் கோபம் நியாயமானது. அவர் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தான் கொஞ்சம் தடம்மாறிவிட்டது.

ஏற்கனவே எல்லோரும் உங்கள் வாதங்களுக்கான தங்கள் கருத்துகளையும், ஆதாரங்களையும் முன்வைத்தாயிற்று. அதனால் மற்றவர்களின் வாதத்திற்கு நான் கருத்து சொல்லவேண்டிய தேவையோ, அவசியமோ இல்லை.

ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன் நிரூபன். இங்கே "என்னைப் புரிந்து கொள்ளாது" என்று சொல்லியிருந்தீர்கள். அதை இப்படி யோசித்துப்பாருங்கள் (நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை). இங்கே எல்லோரும் சொல்லவிளைவது உங்கள் பதிவானது ஈழவிடுதலை குறித்த, அதற்காய் போராடியவர்கள் குறித்த ஓர் வரலாற்றுப் பிழையான தாக்கத்தை இனிமேல் வரும் காலங்களில் உருவாக்கி விடக்கூடாது என்பது தான். அந்தப் புள்ளியில் தான் உங்கள் முந்தைய பதிவுகளில் நீங்க சொன்னவைகளை எடுத்தாள்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.

நான் உங்கள் பதிவுகளின் தலைப்புகளைப் பார்த்து விட்டே விலகிப்போய் பழகிவிட்டேன். உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். பெண் உறுப்பினுள் மிளகாய்த்தூள் தூவுதல். இது என்ன விதமான தலைப்பு என்று எனக்குப் புரிபடுவதில்லை. கிழக்கில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரை சிங்களப் படைகள் உலகிலுள்ள எல்லா சித்திரவதையும் செய்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர் பெண்ணுருப்பினுள் வெடிகுண்டை பொருத்தி வெடிக்கவைத்த கொடுமையும் உண்டு. அதை குமார் பொன்னம்பலம் வழக்காடியதும் உண்டு. இப்படியெல்லாம் இருக்கும் போது.... என்ன தலைப்பு உங்களது. எனக்குப் புரிவதில்லை.

will continue....

Rathi சொன்னது…

நிரூபன், ஜோதிஜி சொன்னதையும், உங்கள் பதிலையும் கொஞ்சம் யோசித்துப்பார்த்தேன். ஜோதிஜி சொன்னது பிரபாகரன் பற்றிய நியாயமான ஒப்பீடுகள். நீங்கள் சொன்னது, என் கட்டுரையின் முதற் பந்தியிலேயே பிரபாகரன் உயிர் பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஒரு இனவிடுதலைப் போராட்டத்தின் சவால்களை எப்படி ஒரு தலைவர் எதிர்நோக்கினார் என்பதற்கும், அவரின் உயிருக்கு விலைகுறித்ததுக்கும் இடையே நிறைய விடயங்கள் விடுபட்டுப்போகின்றனவே. அதைத்தானே ஜோதிஜி சுட்டிக்காட்டியது. உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

I can not spoon feed u Roopan.

Rathi சொன்னது…

நிரூபன், பிரபாகரன் பற்றி பேச்சு எடுத்ததும் யாரும் பஞ்சாயத்து கூட்டவில்லை.

பிரபாகரன் என்கிற ஒரு தனிமனிதன் தனக்காக மட்டும் போராடவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

பிரபாகரன் என்கிற ஒரு தனிமனிதன் இல்லையென்றால் இன்று நீங்களோ, நானோ கூட இன்று இப்படி வாதாடிக்கொண்டு இருக்கமாட்டோம் என்பது என் ஆணித்தரமான கருத்து.

ஆனால், பிரபாகரன் என்கிற ஓர் தனிமனிதனைப் பயங்கரவாதியாக்கி எங்கள் போராட்ட நியாயங்கள், எங்கள் நியாயமான விடுதலை மறுக்கப்படுகிறதே. அது உங்களுக்குப் புரியவில்லையா, நிரூபன். வெறும்வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுக்காமல் விடமாட்டேன் என்று நீங்கள் சொன்னால், உங்களிடம் வாதத்தால் வெல்லும் திறமை என்னிடம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

Rathi சொன்னது…

நிகழ்வுகள், உங்கள் வருகைக்கு நன்றி.

Rathi சொன்னது…

எல்லாளன், உங்கள் வருகைக்கும், கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

நிரூபன் சொன்னது…

@
Rathi....
நான் உங்கள் பதிவுகளின் தலைப்புகளைப் பார்த்து விட்டே விலகிப்போய் பழகிவிட்டேன். உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். பெண் உறுப்பினுள் மிளகாய்த்தூள் தூவுதல். இது என்ன விதமான தலைப்பு என்று எனக்குப் புரிபடுவதில்லை. கிழக்கில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரை சிங்களப் படைகள் உலகிலுள்ள எல்லா சித்திரவதையும் செய்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர் பெண்ணுருப்பினுள் வெடிகுண்டை பொருத்தி வெடிக்கவைத்த கொடுமையும் உண்டு. அதை குமார் பொன்னம்பலம் வழக்காடியதும் உண்டு. இப்படியெல்லாம் இருக்கும் போது.... என்ன தலைப்பு உங்களது. எனக்குப் புரிவதில்லை//

மேற்படி பதிவில் என்ன விடயம் உள்ளது என்பதனைப் படித்துப் பார்த்தால், நீங்கள் இப்படிக் கருத்துக் கூற மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.

ஈழத்தில் இடம்பெற்ற சித்திரவதைகளை விளக்கிக் கூறத் தான் மேற்படி தலைப்பினைக் கையாண்டேன், இதுவே ஈழம் என்ற தலைப்பின் கீழ் எழுதுகின்ற போது, வருகின்ற வாசகர்களின் எண்ணிக்கையினை விட, இப்படியானதோர் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையினைப் படிக்க வருகின்ற வாசகர்கள் பலருக்கு ஈழம் பற்றிய கொடூரமான இன்னோர் பக்கம் தெளிவாக புலப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் மேற்படி தலைப்பினைக் கையாண்டேன்.

நல்ல வேளை, ஈழம் எனும் தலைப்பில் வைத்திருந்தால் அதற்கும் ஓர் புது விளக்கம் கேட்டிருப்பீர்கள்.

என் கட்டுரையில் நான் மையக் கருத்தாக வைத்த ஓர் விடயத்தினை மாத்திரம் முன் வைத்து, எதிர்வாதங்களைச் செய்கின்றீர்கள். இறுதி வரை பிரபாகரனோடு பின் தொடர்ந்திருந்த/ வாழ்ந்த வன்னி மக்களுக்கு வெளிப்படையாக ஏதும் அறிவிக்காது,
மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியினை நோக்கிச் செல்லும் போது, தடுத்து நிறுத்திய புலிகள்,
மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்காது சரணடைந்தமை தவறு என்பதையும் என் கட்டுரையில் சுட்டியிருக்கிறேன்.
இவற்றுக்கெல்லாம் பதில் எதிர்க் கருத்துக்களை முன் வைப்பதை விடுத்து, என் கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஓர் விடயத்தினை அடிப்படையாக வைத்துத் தலைப்பினை வைத்து என் பெயரினைப் பாவித்து ஓர் பதிவினை எழுதுகின்றீர்கள்.

நிரூபன் சொன்னது…

இக் கட்டுரையில் ஒரு நீங்கள் பிரபாகரனைப் பற்றிய கருத்துக்களை முன் வைத்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன், ஆனால் நீங்கள் அனைவரும் என்னைப் பற்றி இங்கே ஆராய்ந்திருக்கிறீர்களே,

ஈழம் பற்றி இவ்வளவு சிரத்தையோடு பேசும் உங்களுக்குத் தெரியாதா?
ஒரு ஈழத்தில் உள்ளவனைப் பற்றி வெளிப்படையாக அவனது வாழ்க்கையினைப் பற்றியும், அவன் கடந்த காலத்தில் என்ன செய்தான் என்பதையும் பொது இடத்தில் வைத்து அலசும் போது,
அவன் உயிருக்கு சில வேளை அச்சமேற்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

எல்லாளன் போன்றோரின் கருத்துக்கள் தனி மனிதத் தாக்குதல் அல்லாது வேறு எந்த வகையான தாக்குதல்கள்?

இவற்றினை நீங்கள் அனுமதிப்பதா உங்கள் கட்டுரையின் நோக்கம்?
ஆக பொது இடத்தில் பிரபாகரன் பற்றிய கட்டுரையினை எழுதிய நிரூபனைத் துரோகியாக்கினால் உங்கள் அனைவருக்கும் சந்தோசம், அப்படித் தானே.

இல்லையெனில் ஈழத்திற்காக இவ்வாறு கருத்துக்களை முன் வைக்கும் நீங்கள்,
ஈழத்தின் அரசியல் நிலமைகளைச் சரியாகப் புரிந்திருப்பின் இப்படி ஓர் கருத்தினை, நிரூபன் பற்றி பலர் கூறும் கருத்துக்களை அனுமதித்து இருக்க மாட்டீர்கள்.

என் வலைப் பதிவில் கூட பலரைத் திட்டி வரும் கருத்துக்களை நான் ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

அதனால் தான் சொன்னேன், நீங்கள் அகோரின் கருத்துக்களை நீக்கும் போது,..
தனி மனிதனை...என் கருத்துக்களை மழுங்கடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் நீங்கள் அகோரியின் கருத்துக்களையும் நீக்காது விட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்று.

நிரூபன் சொன்னது…

இன்னொரு விடயம், வலியினை அனுபவித்தவனுக்குத் தான் அதன் வேதனை தெரியும், இறுதி வரை பிரபாகரன் பின்னே சென்று. அவரை நம்பி வாழ்ந்த மக்களுக்குத் தான் அவர் பற்றிய தாக்கங்கள் இருக்கும்.
உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், ஒரு தடவை இலங்கைக்கு வந்து அங்கே வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிப் பாருங்கள். கருத்துக்களை நியாயப்படுதுதுவதில் குறியாக இருக்கும் நீங்கள்,

இங்கே ஆங்கிலத்தில் பக் ஓப் எனும் வார்த்தையினை நாகரிகமான சொல் என்று நீக்காதிருக்கிறீர்கள். இது எவ்வகையில் நியாயமாகும்?

நிரூபன் சொன்னது…

@
Rathi....
நீங்கள் அனைவரும் இங்கே பதிவிட்டது பிரபாகரன் பற்றிய வாதத்திற்கு எதிர்க் கருத்துக்களை முன் வைக்கவா? இல்லை மீண்டும் மீண்டும் என் கருத்துக்களை, கட்டுரையினை ஆராயவா?

நீங்கள் கேட்ட

//

நான் உங்கள் பதிவுகளின் தலைப்புகளைப் பார்த்து விட்டே விலகிப்போய் பழகிவிட்டேன். உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். பெண் உறுப்பினுள் மிளகாய்த்தூள் தூவுதல். இது என்ன விதமான தலைப்பு என்று எனக்குப் புரிபடுவதில்லை. கிழக்கில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரை சிங்களப் படைகள் உலகிலுள்ள எல்லா சித்திரவதையும் செய்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர் பெண்ணுருப்பினுள் வெடிகுண்டை பொருத்தி வெடிக்கவைத்த கொடுமையும் உண்டு. அதை குமார் பொன்னம்பலம் வழக்காடியதும் உண்டு. இப்படியெல்லாம் இருக்கும் போது.... என்ன தலைப்பு உங்களது. எனக்குப் புரிவதில்லை.//

இந்தப் பதிவில் என்ன எழுதியிருக்கிறேன் என்று என்னால் இங்கே அப் பதிவில் உள்ள விபரங்களைப் பகிர முடியும். அதிலிருந்தும் ஒரு சில கருத்துக்கள் தவறு என்று வாதம் செய்ய முன் வருவீர்கள்.

என் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதை விடுத்துக் குற்றங் கண்டு பிடிப்பதில் குறியாக இருக்கிறீர்கள்.
இதற்குப் பிறகும் உங்களிற்குப் பதில் எழுதிக் கொண்டிருந்தால் என் நேரம் தான் விரயமாகும்.

வாழ்க வளமுடன்!

♔ம.தி.சுதா♔ சொன்னது…

இங்கு என்ன நடக்கிறத என்று என்னால விளங்கிக் கொள்ள முடியல... ஆனால் இன்னும் நிருபனுக்கு ஒரு உண்மை புரியாமல் இருப்பது கவலைக்குரிய விடயமே..

தமிழ்வாசியின் பேட்டியில் நிருபன் கேட்ட கேள்விக்கு அப்போதே நான் பதில் சொல்லியிருந்தேன்...

நிருபன் உங்கள் கணக்கையும் இழக்க விருப்பமோ...

இந்தப் பதிவுலகம் நிழலில் ஒரு கருத்துப் போரிட முடியாத கோழைகளின் உலகம்..

JOTHIG ஜோதிஜி சொன்னது…

இந்தப் பதிவுலகம் நிழலில் ஒரு கருத்துப் போரிட முடியாத கோழைகளின் உலகம்..

அற்புதம்

thequickfox சொன்னது…

@ம.தி.சுதா, நீங்கள் சரியாகவே கூறியுள்ளீர்கள். யுத்தத்தால் பாதிக்கபட்ட இலங்கை மக்களின் அவலம் பற்றி சொன்னால் அவன் தமிழ் துரோகி. மக்களுக்கான பணத்தை வறுகி ஏப்பம் விட்டால் தமிழீழபற்றாளன்.
மற்றவர்கள் எப்படி வேறு கருத்து சுதந்திரமாக கூறமுடியும்? இது இவர்களின் மிக பெரிய பிரச்சனை.
அனாமிகா துவாரகனுக்கு பிரபாகரன் இறந்து விட்டார் என்று செல்லும் நேர்மையாவது இருக்கிறதா? இருக்கலாம்.. வருவார்.. வரலாம்..!

பலே பிரபு சொன்னது…

நிரூபனின் நிறைய கட்டுரைகளை நான் படித்து உள்ளேன், தலைப்பு கொஞ்சம் யோசிக்க வைப்பதாக இருந்தாலும் அவரின் நிறைய பதிவுகள் ஈழ மக்களின் துயர் குறித்து இருக்கும்.

ஒரு பதிவுக்கு மறு பதிவு இடுவது புதிதல்ல. ஆனால் பதிவை விமர்சிக்காமல் பதிவரை மட்டும் சிலர் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்.?

பெயரில்லா சொன்னது…

பலே பிரபு, நாங்கள் அவரின் படைப்புகளைப் படிக்கவில்லை என்று சொல்லுகிறீர்களா? படிச்சிருக்கிறோம். தலைப்புக்கும் கருவுக்கும் தொடர்பில்லாமல் அவரே போட்டிருக்கேன் இனி அப்படி நடக்காது என்று ஒரு பதிவு போட்டிருந்தார். வன்னியில் நடந்ததைச் சொல்லுறேன் என்று அவர் எழுதுவது எல்லாம் பலருக்கும் தெரிஞ்சவையே. விகாரமாக எழுதியிருக்கிறார். நிறைய பொய்களை (புலிகள்) பற்றி எழுதி இருக்கிறார். அங்கு அவர் வாழ்ந்ததாகச் சொல்வது நம்ப முடியவில்லை. ஏன் என்றால் அங்கே கட்டாய ஆட்கள் சேர்க்கப்படும் போது அவர் அங்கிருந்திருந்தால் சேர்க்கப் பட்டிருப்பார். அப்படி சேர்ந்திருந்தால் சண்டை முடிந்த பின்னர் புணர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டிருப்பார். இரண்டுமே இல்லாமல் வன்னியில் இருந்துவிட்டு இப்ப நல்ல வேலையில் இருக்கிறார் (நாள் முழுதும் வலைத்தளத்திலேயே இருக்கு சாதாரண வேலையில் இருக்க முடியாது.) வானொலியில் வேலை செய்தவர் என்றால் எந்த நிகழ்ச்சி செய்தார் என்று சொல்கிறார் இல்லை. வானொலியில் வேலை செய்தவரை அரசாங்கம் முகாமில் போடாமல் வெளியே விட சந்தர்ப்பமில்லை.

நிறைய பொய்களைப் போட்டிருக்கிறார் என்று தான் நான் சுட்டிக்காட்டுகிறோம். இதை தனிமனித தாக்குதல் என்று எப்படி சொல்லுகிறீர்கள். என கடைசி பதிவு படிச்சுப் பாருங்கள் புரியும்.

Rathi சொன்னது…

பலே பிரபு, "ஈழமக்களை நம்பவைத்து புலிகளை ஏமாற்றினார்" என்று ஒரு தலைப்பிலும், அந்த கட்டுரையில் விடுதலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தன்வர்களை, பிரபாகாரன் உள்ளிட்ட, விமர்சனத்துக்கு உள்ளாகும் போது.... மீதியை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

நிரூபன் சொன்னது…

@அனாமிகா துவாரகன் சொன்னது…//

பலே பிரபு, நாங்கள் அவரின் படைப்புகளைப் படிக்கவில்லை என்று சொல்லுகிறீர்களா? படிச்சிருக்கிறோம். தலைப்புக்கும் கருவுக்கும் தொடர்பில்லாமல் அவரே போட்டிருக்கேன் இனி அப்படி நடக்காது என்று ஒரு பதிவு போட்டிருந்தார். வன்னியில் நடந்ததைச் சொல்லுறேன் என்று அவர் எழுதுவது எல்லாம் பலருக்கும் தெரிஞ்சவையே. விகாரமாக எழுதியிருக்கிறார். நிறைய பொய்களை (புலிகள்) பற்றி எழுதி இருக்கிறார். அங்கு அவர் வாழ்ந்ததாகச் சொல்வது நம்ப முடியவில்லை. ஏன் என்றால் அங்கே கட்டாய ஆட்கள் சேர்க்கப்படும் போது அவர் அங்கிருந்திருந்தால் சேர்க்கப் பட்டிருப்பார். அப்படி சேர்ந்திருந்தால் சண்டை முடிந்த பின்னர் புணர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டிருப்பார். இரண்டுமே இல்லாமல் வன்னியில் இருந்துவிட்டு இப்ப நல்ல வேலையில் இருக்கிறார் (நாள் முழுதும் வலைத்தளத்திலேயே இருக்கு சாதாரண வேலையில் இருக்க முடியாது.)//

வன்னியில் நான் இருந்தது, தடுப்பு முகாமில் இருந்தது பற்றி நான் என் பதிவில் கூட எழுதியுள்ளேன், ஒருவனின் கருத்தினைப் பொய்ப்பிக்க வேண்டும் என்றால் இவ்வாறும் அபத்தமாக எழுதலாம் என்பதற்கு நீங்கள் இங்கே போட்டுள்ள பின்னூட்டம் உதாரணம்,.

இங்கே வலையுலகில் யார் யாரிடம் என்னைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும், எந்த நிகழ்ச்சி என்று விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மதிசுதா கூடத் தடுப்பில் இருந்தார். அவர் ஒரு மருத்துவராக வேலை செய்கின்றாரே..
அப்போ அதுவும் பொய்யா?

வன்னியில் வாழ்ந்த நீங்கள் நாகரிக மோகத்தில் ஆங்கிலத்தில் பெற்ற தாயைத்........கேவலமனா சொற்களால் திட்டும் போது, வன்னியில் வாழ்ந்த நாம் தடுப்பு முகாமை விட்டு வெளியேறி ஒரு நல்ல வேலையில் இருப்பதில் என்ன தவறு?

உங்களை முதலில் நீங்கள் யார் என்று ஆவணப்படுத்தி, அடையாளப்படுத்தவே துணிவின்றித் தான் மதிசுதாவின் மின்னஞ்சல் கக் பண்ணிய பதிவின் பின் ஒதுங்கியிருந்தீர்கள்.

உங்களைப் போன்றவர்களுக்கெலாம் நான் என்னை யார் என்று இனங்காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

நிரூபன் சொன்னது…

@அனாமிகா துவாரகன் சொன்னது…

பலே பிரபு, நாங்கள் அவரின் படைப்புகளைப் படிக்கவில்லை என்று சொல்லுகிறீர்களா? படிச்சிருக்கிறோம். தலைப்புக்கும் கருவுக்கும் தொடர்பில்லாமல் அவரே போட்டிருக்கேன் இனி அப்படி நடக்காது என்று ஒரு பதிவு போட்டிருந்தார்.

பதிவிற்கும் தலைப்பிற்கும் தொடர்பில்லை என்று நான் ஒரு போதும் ஈழம் பற்றிய பதிவுகளுக்குச் சொல்லியதில்லை.

நான் எழுதிய சில, கவர்ச்சி. சினிமாப் பதிவுகளுக்குத் தான் பதிவிற்கும் தலைப்பிற்கும் தொடர்பில்லை என்று கூறினேனே அன்றி,
ஈழம் பற்றிய பதிவிற்கும், தலைப்பிற்கும் தொடர்பில்லை என்று ஒரு போதும் கூறவில்லை.

மேலே நான் வைத்த கேள்விகளுக்கு பதில்களை முன் வைக்கத் திராணியற்று, இப்போது பதிவுகளைப் பற்றி ஆராய்கின்றீர்களே..

இது தானா உங்களால் முடிந்தது.
இதுவும் கடந்து போகும்!

பெயரில்லா சொன்னது…

//மதிசுதாவின் மின்னஞ்சல் கக் பண்ணிய பதிவின் பின் ஒதுங்கியிருந்தீர்கள். //
ஒதுங்கி இருந்தேனா? ஹா ஹா ஹா. நல்ல காமடி.

மதி சுதாவின் எக்கவுன்ட்டை நான் தான் ஹக் பண்ணினேன் என்டு மதி சுதா நூத்தி எட்டு பின்னூட்டம் போட்டது போது இக்னோர் பண்ணிக்கொண்டே வந்தேன். ஆனால், நிரூபன் தான் எனது கணக்கை மீட்டுத்தந்தான் என்று அவரே உளறிய போது தான் உங்களிடம் கேட்டன் ஏன் நான் என்டு பொய் சொல்லுறீங்கள் நிரூபன் என்டு. அதன் பிறகு நடந்த பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் (திட்டமிட்ட சதிகளுக்கும்) என்னைப் பழியாக்கி நீங்கள் எல்லோரும் போட்ட நாடகத்தை கடவுள் என்று ஒருவன் இருந்தால் தெரிந்து கொள்வான். வலை உலகை விட்டு ஒதுங்கியது உங்கள் கேவலமான நாடகம் இல்லை. எனக்கு கடைசி செமஸ்டர் படிப்பை ஒழுங்காக முடிக்க வேண்டிய கட்டாயம்.

நான் இன்ட்லியில் மெசேஜ் அனுப்பிய போது ஃபேஸ்புக்கில் அனுப்புறேன் என்று பொய் சொன்னது நீங்கள் தான்.

ஒரு நிகழ்ச்சியின் பெயரைச் சொல்வதால் உங்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை. நான் புலிகள் வானொலியில் வேலை செய்திருக்கிறேன் என்று தைரியமாகச் சொன்ன உங்களால் ஏன் நடத்திய நிகழ்ச்சியைப் பற்றி சொல்ல இஷ்டமில்லை நிரூபன். அதைச் சொல்லுவதால் என்ன ஆபத்து.

//மேலே நான் வைத்த கேள்விகளுக்கு பதில்களை முன் வைக்கத் திராணியற்று, இப்போது பதிவுகளைப் பற்றி ஆராய்கின்றீர்களே..//
உங்கள் கேள்விகளைப் படிக்க முதலே நான் இதைச் சொல்லி இருக்கிறேன். அதற்குப் பிறகு வந்த பின்னூட்டங்களை வாசித்து நேரத்தை வீணாக்க எனக்கு இஷ்டமில்லை.

//வன்னியில் வாழ்ந்த நீங்கள் நாகரிக மோகத்தில் ஆங்கிலத்தில் பெற்ற தாயைத்........கேவலமனா சொற்களால் திட்டும் போது, வன்னியில் வாழ்ந்த நாம் தடுப்பு முகாமை விட்டு வெளியேறி ஒரு நல்ல வேலையில் இருப்பதில் என்ன தவறு?//

என்ன முட்டாள் தனமான லொஜிக் இது. ஆங்கில மோகத்திற்கு நல்ல வேலைக்கும் என்ன சம்மந்தம். உங்கள் பதிவின் தலைப்பையும் உள்ளடக்கத்தையும் போலவே லாஜிக் இல்லாத உளறல்கள். சபாஷ்.

மருத்துவ கல்வி முடிக்கமுடியவில்லை என்று வேறு வேலையில் இருப்பதாக மதிசுதா சொல்லி இருந்தார்.

நான் சொல்வதை வேணும் என்றே கணக்கில் எடுக்காமல் இருப்பது எப்படி என்று தெரியவில்லை. எப்படி கட்டாய ஆட்சேர்ப்பின் போது நீங்கள் விடுபட்டீர்கள் என்பதே எனது சந்தேகம். அவ்வளவு தான்.

ஒன்றுக்கொன்று முரணாகச் சொல்லி நீங்களே வாசிப்பவர்களை குழப்பி விட்டு ஏன் எங்களைச் சாடுகிறீர்கள்.

ஈழத்தைப் பற்றி வந்த உங்கள் எல்லா பதிவுகளுமே அபத்தமாகவே எனக்குப் பட்டது. இது என்னுடைய கருத்து. உங்கள் எழுத்தை நல்லது என்று நான் சொல்லவேணும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்.

வலையிலேயே இருக்கிற வேலை மட்டும் தான் நீங்கள் பார்ப்பது போல இருக்கிறது. அப்படி வேலையே செய்யாமல் இருக்கும் வேலை யாழ்ப்பாணத்தில் கிடைத்திருக்கிறதை இட்டு மகிழ்ச்சி. =))

JOTHIG ஜோதிஜி சொன்னது…

அனாமிகா என்னுடைய வேண்டுகோள் இது. வேண்டாம். இதுக்கு மேல். விவாதகங்களை விட்டு விட்டு வேறு விசயங்களை நோக்கி இந்த விமர்சனங்கள் போய்க் கொண்டு இருக்கின்றது.

நிரூபன் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதுங்க. அடிப்படையில் நீங்கள் ஒரு தமிழர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதுங்க.

இங்கு திமுக என்றால் நீ அதிமுக என்று கேட்பார்கள். அதுவே அதிமுக என்றால் நீ திமுக என்று கேட்பார்கள்.

இதைப்போலவே பிரபாகரன் எதிர்ப்பு பிரபாகரன் ஆதரவு என்றே ஈழத்தில் பிரிந்து இருப்பது புரிகின்றது.

இதைத்தவிர யாழ்பாணம், கடற்கரையோர பகுதிகள், இதைத்தவிர கொழும்பு என்று பல்வேறு கூறுகளாக ஈழத் தமிழர்கள் 100 ஆண்டுகளாக பிரிந்து இருப்பது இன்று வரை மாறாமல் இருப்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது.

இதுவே தான் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலைமையும் போல.

இனிமேலாவது தலைப்பு வைக்கும் போது நிரூபன் கவனமாக இருங்க. காகிதங்கள் நிச்சயம் ஒரு காலத்தில் அழிந்து விடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரைக்கும் இந்த வலையில் உள்ள எழுத்துக்களை யாரோ படித்துக் கொண்டு இருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்க.

படித்தவன் பாவம் செய்தால் ஐயோ என்று போவான் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்க.

எப்படியோ சிங்களர்களுக்கு அவர்களின் அடிமையாகத்தான் ஈழத் தமிழர்கள் வாழ்ந்தே ஆக வேண்டும் என்பது விதி போல.

வாழ்க தமிழர்களின் ஒற்றுமை.

Rathi சொன்னது…

அனாமிகா, ஜோதிஜி சொல்வது தான் சரி என்று எனக்கும் படுகிறது. இத்தோடு விட்டுவிடுவோம் இந்த விவாதங்களை. என் பதிவையும் தாண்டிப் போகிறது விவாதங்கள். சில விடயங்கள் எனக்கு புதிது, பதிவுக்கு அப்பால் பேசப்படுபவை.

நிரூபன், எங்கள் ஒற்றுமையை நாங்களே உலகிற்கு பறைசாற்றவேண்டாம், ஜோதிஜி சொல்வது போல். தாழ்மையுடன் கேட்கிறேன் இத்தோடு இதை விட்டுவிடுவோம்.

பெயரில்லா சொன்னது…

hi i didn't see ur email id. i haven't blogspot i like ur blogspot keep it up