ஜூலை 24, 2011

பதிவர் தெகாவுக்கு ஓர் பதில்!!தெகா,

"I am experiencing an Oscar moment". என் உடைந்த ஆங்கிலம் புரியாதவர்களுக்காக, நான் சொல்லவருவது, நான் ஓர் ஆஸ்கார் விருது வாங்கியதைப் போன்ற ஓர் கணத்தினுள் சந்தோசத் திணறல்களோடு இருக்கிறேன். இந்த ஆஸ்கார் விருதை வாங்க வருபவர்களை கவனித்தால், குறிப்பாக அவர்கள் முக பாவங்களை, முகத்தின் அத்தனை அசையும் தசைநார்களும், கண்களும் அவர்களின் சந்தோஷ தருணங்களை முகத்தில் படம்பிடித்துக்காட்டும். சிலர் பேச்சில் திணறுவார்கள்.

நீங்கள் என் பதிவுகளான "காட்சிப்பிழைகள்" மற்றும் "இதயம் பேசுகிறேன்" பதிவுகளுக்கு கொடுத்த இழுத்துக்கட்டிய புற்களின் பொக்கேவை தான் சொல்கிறேன். "இயற்கை நேசியின் சார்பில் அதுக்கு ஒரு பிடி இழுத்து கட்டிய புற்களின் பொக்கே பிடிங்க :))". இந்தப் புற்களின் பொக்கே இனி என் எழுத்தின் ஓவொரு சொல்லையும் ஆளுமை செய்யும் என்பதில் ஐயமில்லை.

உங்களைப்பற்றி ஜோதிஜி சொல்லக்கேட்டதிலிருந்து உங்கள் கள்ளிக்காட்டு இதிகாச இயல்புகள் மீது ஓர் தனி மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்ப்பட கதாநாயகியை கடத்திக்கொண்டு போன நாயகன் போல், நீங்கள் ஜோதிஜியை இரண்டு நாட்கள் காட்டிற்குள் கடத்திச்சென்று, பத்திரமாய் திருப்பி கூட்டிவந்ததை இன்றும் சிலாகித்து சொல்வார். பதிவுலகில் இது போன்ற நட்புகள் அமைவது அபூர்வம்.

ஜோதிஜி என்றவுடன் தான் இன்னோர் விடயமும் சொல்லத்தோன்றுகிறது. நான் இவ்வளவு நாளும் ஜோதியை என் பெரிய குருஜி என்று தான் பதிவுலகில் குறிப்பிட்டிருக்கிறேன். இன்றிலிருந்து அதை மாற்றலாம் என்றிருக்கிறேன். அதாவது, ஜோதிஜி எழுத்தின் உச்சங்களை தொட்டுக்கொண்டிருப்பதால், இனி அவரை என் குருஜி என்று சொன்னால், அவரின் தரத்துக்கு என் எழுத்தும் இருக்கவேண்டும். அது சாத்தியமா தெரியவில்லை எனக்கு. அதனால் இன்றுமுதல் நான் ஜோதிஜியின் எழுத்துக்கு ஓர் வாசகியாக இருப்பதே சாலப் பொருந்தும் என்று நம்புகிறேன். திறக்காத கதவொன்று திறந்திருக்கிறது. அது பற்றி ஜோதிஜி விரைவில் ஓர் பதிவெழுதி அசத்த வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன்.

அப்புறம் தெகா, என் சின்னக் குருஜி விந்தைமனிதன் என்கிற ராஜாராமன் கூட இன்று என் பதிவுலக அசுர வளர்ச்சியை பார்த்து "சந்தோசமாருக்கு" ன்னு கண்ணு கலங்கி கடுதாசு போட்டுப்பிட்டு ஊருக்கு போயிட்டாரு. ஒரு விஷயம், இந்த "அசுர வளர்ச்சி", "கண்கலங்கினார்" என்பதெல்லாம் நானாக கொடுத்துக்கிட்ட ஓர் பில்டப்!! :) மற்றதெல்லாம் நெசம். நம்புங்க. நம்பணும் நீங்க!!!

இவர்கள் இருவரையும் தவிர என் எழுத்தை எப்போதும் மறக்காமல் ஊக்கப்படுத்தி என்னோடு பயணிக்கும் இன்னும் இருவர், என் ஈழத்து உறவு ஹேமா மற்றும் சக பதிவர் தவறு. ஹேமா என்னை உரிமையோடு ரதி "உஷ்" என்று மிரட்டுமளவிற்கு உரிமையுள்ளவர். :) பதிவர் தவறு என்றதும் தான் ஓர் விடயம் ஞாபகம் வருகிறது. என் காட்சிப்பிழைகள் பதிவு எப்பவோ எழுத தொடங்கி நாலு வரிகளோடு நிறுத்தியிருந்தேன். அவரது அறியது தளத்தில் நான் பார்த்த அந்தப் படம் தான் என் மிச்சப்பதிவை எழுத தூண்டியது. முகத்தில் உதடுகள் வரையப்படாமல், எதையோ சொல்ல நினைத்தும் சொல்லமுடியாதது போன்றதும், உடலும் மனமும் பிரிந்துகிடக்கும் அந்த படம் எதையோ சொல்லாமல் சொல்வது போலிருந்தது.

சில பதிவுலக வரையறைகள் தாண்டி என் எழுத்தை உண்மையான அக்கறையோடு விமர்சிப்பவர்கள் இன்னும் எல்லோருக்கும் என் நன்றிகளை இந்த கடிதம் மூலம் தெரியப்படுத்துகிறேன். குறிப்பாக என் அரசியல் அறிவையும் மதிச்சு என்னோடு அரசியல் பதிவுகளில் மல்லுக்கட்டும் பதிவர் ராஜ நடவுக்கு என் நன்றிகள்.

சரி, என் பதிவு குறித்த உங்கள் விமர்சனத்துக்கு வருவோம்.  காட்சிப்பிழை பதிவில் நான் குறிப்பிட்ட Schizophrenia குறித்து ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன். குணா படத்திலும் கமல்ஹாசன் Schizophrenia குறித்து முக்கிய காதாபாத்திரமான குணா மூலம் சொல்லியிருப்பார். அதில் அவர் விவரித்துக் காட்டிய "Catatonic Schizophrenia" என்கிற, ஓர் இடத்தில் ஆடாமல், அசையாமல் நின்றோ, இருந்தோ, அல்லது ஏதாவதொரு நிலையில் மணிக்கணக்காக அப்படியே உறைந்துபோவதை காட்சிப்படுத்திய விதம் அருமை. ஏதோவொரு இடத்தின் உச்சியில் மணிக்கணக்கில் ஒற்றைக்காலில் கமல் நிற்கும் காட்சியைத்தான் சொல்கிறேன். மனதில் பதிந்து போனது அது.

ஆனாலும், கமல் ஏன்தான் Schizophrenia குறித்துக் காட்சிகளில் விளக்கும் போதில் ஓர் பெண்ணால் தான் அந்த ஆணின் நிலை மோசமானது என்கிற மாதிரி காட்சி அமைக்கிறார் என்றும் கேள்வி எழுகிறது. ஆளவந்தானின் சித்தி கொடுமை, குணாவின் தாயார், ரேகாவின் கதாபாத்திரம், மற்றும் அபிராமி கதாபாத்திரம். இதுவும் காட்சிப்பிழைகளோ!!! கமலின் திரைப்படங்களில் பெண்களின் கதாபாத்திரத்துக்கு முக்கியம் கொடுப்பதில்லை எனபது கூட ஓர் குற்றச்சாட்டுத்தான். அதுவும் இதுவும் பொருந்திப் போகிறதோ!

தெகா, நீங்க சொல்ற மாதிரி கமல் தமிழ் ரசிகர்களுக்காக எதையாவது காட்சியை கரைத்துக்கொடுக்க நினைத்து அது வேறு விதமாய் முடிந்து போகிறது. சில சமயங்களில் தேவையில்லாத காட்சிப்பிழைகள் ஆக ஆகிப்போகிறது.

அது சரி, ஆஸ்கார் விருது வாங்குறவங்க இப்பிடித்தான் உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்களோ!!! :)))

நன்றி தெகா. மீண்டும் சிந்திப்போம். 

Image: Google.

22 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ரதி....எங்களுக்கெல்லாம் புல்லுக்கட்டு இல்லையா !

கமலைப் பற்றி எனக்குள்ளும் ஆதங்கம்.நல்ல சிறந்த அற்புதமான கலைஞன்.நிறையவே பிடிக்கும்.
எங்கள் அரசியல்,பெண்களைத்
தரப்படுத்தலில் அவர் பக்கம் கசப்புத்தான்.

ஒருவேளை சொந்த வாழ்வில் பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
குடிகார அப்பா என்றால் உலகிலுள்ள அத்தனை ஆண்களும் குடித்துவிட்டு அடிப்பவர்கள் என்று கணக்குப் போட்டுத் திருமணமே வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்போல,
சிலரது வாழ்வியல் அவர்கள் அனுபவத்தைப் பொறுத்ததே !

JOTHIG ஜோதிஜி சொன்னது…

ஆத்தாடி ஒரு வாரத்துக்குள் ரொம்பவே மாறிப்போயிடுச்சு போலிருக்கே. அட நீங்க வேற? இனிமேல் எழுதவே முடியாது போலிருக்கே. குழந்தைகள் வளர வளர ஒவ்வொரு விசயத்திலும் போட்டிக் கொண்டு என்னுடன் மல்லுக்கட்டத் தொடங்கி விட்டார்கள். ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா? புதிய ஆட்சி தமிழகத்தில் வந்தவுடன் மின்சாரத்தடை வெறுக்கும் அளவுக்கு இல்லை. ஓய்வு கிடைத்த நேரத்தில் இந்த மின்சாரத்தடை படுத்தி எடுத்து எழுதவிடாமல் தடுத்தது. ஆனால் இப்போதோ ஞாயிறு ஒரு நாள் தான் வாய்ப்பு அமைகின்றது. அதுவும் காலையில் நான் 6 மணி எழுந்து வெளியே வருவதற்குள் மூன்று தேவியர்களும் போட்டி போட்டுக்கொண்டு இந்த மடிக்கணினியை கைப்பற்றி மதியம் வரைக்கும் படுத்தி எடுக்கிறார்கள். யோசிக்க முடியல்ல. எழுத முடியல. என்று எல்லாமே முடியாமலே போய் விடும் போலிருக்கு. அதிக சுதந்திரங்கள் கூட நமக்கு ஆப்பு வைத்து விடும் என்ற அழகாக தத்துவ பாடத்தை கற்றுக் கொண்டு இருக்கின்றேன்.

அப்புறம் தவறு மன்னாதி மன்னர். அவர் ஊருக்கே அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு சென்னையில் சந்திக்கும் போது ரியல் அல்வா கொடுக்க தயார் செய்து கொண்டு இருக்கின்றேன்.

ஹேமாவுக்கு வாய்ப்பும் நேரமும் இருக்கிறது. பொளந்து கட்டிக்கொண்டு இருக்கிறார்.

தெகா என் செல்ல டார்லிங். என் பொஞ்சாதி கூட பல முறை (அங்கேயும் அவரு பொஞ்சாதியும் அப்படித்தான் சொல்கிறாராம்) சொல்கிறார்.

ஐ லவ் யூடா.

vidivelli சொன்னது…

சகோ பிறர் கருத்துக்களை ஏற்று நீங்கள் தான் என்ற பிடியில் இருக்காமல் விளங்கிக்கொண்ட தன்மை பிடிச்சிருக்கு உங்கள் பதிவின் ஆழத்திற்கு பாராட்டுக்கள்..

Rathi சொன்னது…

ஹேமா, அந்த புல்லுக்கட்டு பொக்கே தெகா எனக்கு கொடுத்தது, என் பதிவைப் பாராட்டி. அதான் அங்கே அதை பார்வைக்கு வைத்திருக்கிறேன் :))

நீங்கள் சொல்வது சரிதான். கமல் தமிழ் சினிமாவை தரம் உயர்த்தியவர் தான். ஆனாலும், ஈழத்தமிழர் பிரச்சனை, பெண்கள் பற்றிய பார்வை என்பன சர்ச்சைக்குரிய கருத்துக்களோடு தான் இன்னமும் இருக்கிறார்.

எம்மவர்களே எட்டப்பன்கள் ஆக இருக்கும் போது மற்றவர்களை குறை சொல்லி என்ன செய்வது.

Thekkikattan|தெகா சொன்னது…

ஆஹா! இங்கே என்ன நடக்கிது. படிச்சு முடிச்சவுடன் மனதில் தோன்றியதை அப்படியே எழுத்தில வைச்சதிற்கு இத்தனை பெரிய இம்பாக்ட்டா - அதுவும் புல் கட்டோட ஒரு பதிவு. :) அசத்தல், போங்கோ!!

//ஜோதிஜி எழுத்தின் உச்சங்களை தொட்டுக்கொண்டிருப்பதால், இனி அவரை என் குருஜி என்று சொன்னால், அவரின் தரத்துக்கு என் எழுத்தும் இருக்கவேண்டும்.//

இங்க இன்னொன்னையும் சேர்த்துக்கலாம். அவரோட நண்பர்னு சொல்லிக்க பெருமையும் பட்டுக்குவோம், குறைந்த பட்சம். நாம எழுத்து சீடர்களாக ஆக்கிக் கொள்ள தகுதியற்ற நிலையில் :)) .

இந்த பதிவின் மூலமா எல்லாரையும் பெருமைபட்டுக்கிற வைச்சிட்டீங்க - வி்ந்தைமனிதன், ராஜநட, ஹேமா மற்றும் தவறு எல்லாருக்கும் கேட்டுச்சா... இந்த மாதிரி எழுத்த படிக்கக் கொடுக்கிற உங்களுக்கும் நன்றி அவங்க சார்ப்பா திரும்பவும் நான் சொல்கிறேன்.

//தெகா என் செல்ல டார்லிங். என் பொஞ்சாதி கூட பல முறை (அங்கேயும் அவரு பொஞ்சாதியும் அப்படித்தான் சொல்கிறாராம்) சொல்கிறார்.

ஐ லவ் யூடா.//

ஹாஹாஹா.... யோவ்! முண்டாசு என்னய்யா இதெல்லாம். பார்த்து பின்னாடி துணையாள் தோசை கரண்டி ஃப்ளையிங் கிஸ் பண்ணிடப் போவுது ;)
__________________

Thekkikattan|தெகா சொன்னது…

//ஓர் பெண்ணால் தான் அந்த ஆணின் நிலை மோசமானது என்கிற மாதிரி காட்சி அமைக்கிறார் என்றும் கேள்வி எழுகிறது. ஆளவந்தானின் சித்தி கொடுமை, குணாவின் தாயார், ரேகாவின் கதாபாத்திரம், மற்றும் அபிராமி கதாபாத்திரம். இதுவும் காட்சிப்பிழைகளோ...//

ஓர் ஆணின் பார்வையில் அவருக்கு பட்டென்று இரடும் விசயங்களை பெரும்பாலான பார்வையில் சரியென்று படுவதாக திரைக்கதை கொண்டு விரிக்கிறாரோ என்னவோ!

அப்படியே ஹேமா சொன்ன விசயத்தை எடுத்துக்குவோம்...

...குடிகார அப்பா என்றால் உலகிலுள்ள அத்தனை ஆண்களும் குடித்துவிட்டு அடிப்பவர்கள் என்று கணக்குப் போட்டுத் திருமணமே வேண்டாம் என்று சொல்லும் பெண்கள்போல,
சிலரது வாழ்வியல் அவர்கள் அனுபவத்தைப் பொறுத்ததே !
சரியாக இருக்குமே அவர்வர்கள் மன உலகில் காண்பதே வெளி உலகம் :)

பெண்கள் விசயத்தில் அப்பா அப்படியாக ஒரு அப்யூசராக குடும்பத்தை வைத்து நிர்வகித்திருந்தால் பெண்களும் தங்களுக்கே தெரியாமல் அந்த சூழலில் தங்களை கிடத்தி வளர்ந்து வருவதால் , சப்கான்சியஸ் நிலையில் ‘கொடுமை’ நிகழ்த்தும் ஒரு நபராக தன்னைச் சுற்றி வந்து போகும் உறவுகளுக்கிடையே சிக்கலை உருவாக்கிக் கொள்வதும் இந்த உளவியல் பின்னணியில்தானே இருக்கும் :) ...

உ.தா: நம்முடைய சமூகத்தில் தகப்பன் சார்ந்த வளர்ப்பு (patriarchical) முறையே மோலோங்கி இருப்பதால் அதனில் உழன்று வளர்ந்த பெண் பிள்ளைகள் அதனை போன்ற ஒரு வாழ்வுச் சூழல் அமையாத பட்சத்தில் தேவையற்ற உறவுச் சிக்கல்களை உருவாக்கிக் கொள்வது நடைமுறையில் காண்பதாக உள்ளதே :) ... சில கற்றறிந்த நம்மூர் ஆண் மக்கள் அவதானித்து சொல்லியிருக்காங்க. இதுவும் காட்சிபிழையா?

என்னவோ சொல்ல வாரேன். சரியா கடத்திச் சென்று சேர்த்திருக்கேனா தெரியல. நீங்கதான் சொல்லணும்.

Rathi சொன்னது…

ஜோதிஜி, முனகாதீங்க! குழந்தைங்க வளர்ந்தால் அவர்களுக்கென்று ஓர் கணணி வாங்கி அதுக்கென்று நேரம் ஒதுக்கி உட்கார்த்துங்க.

மன்னாதி மன்னர், the great Halwa man, haah..haah...haah.... தவறு மாட்டப்போகிறார் என்கிறீர்கள். அவர் யாருன்னு கண்டுபிடிச்சு எங்களுக்கும் சொல்லுங்க. நாங்க ஒரு குரூப்பா அல்வா கொடுப்போம்.

//ஐ லவ் யூடா// வா!

தெகாவுக்கு எதிரொலியாய் கேட்டு கீழே பதில் சொல்லியிருக்கிறார். மறக்காமல், the so called... flying objet... தோசைக்கரண்டி... Please, learn to catch that... :))

Rathi சொன்னது…

விடிவெள்ளி, நான் தான் என்கிற ஈகோ தொலைந்து போகவேண்டும் என்று நிறைய வாசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். வாசிப்பு எழுத்தையும், எழுது வாசிப்பையும் உள்வாங்கிக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்.

Rathi சொன்னது…

தெகா, இருங்க அப்பால வந்து நீளமா ஓர் பதில் எழுதுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

ரதி...ஒரு நடிகரை...நடிகராய் பார்த்தால் பாதி பிரச்னை இருக்காது...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>தமிழ்ப்பட கதாநாயகியை கடத்திக்கொண்டு போன நாயகன் போல், நீங்கள் ஜோதிஜியை இரண்டு நாட்கள் காட்டிற்குள் கடத்திச்சென்று, பத்திரமாய் திருப்பி கூட்டிவந்ததை இன்றும் சிலாகித்து சொல்வார்.

haa haa ஹா ஹா ரசித்து சிரித்தேன்

Rathi சொன்னது…

Reverie,

அப்படியா!!! :)

Rathi சொன்னது…

சி. பி. செந்தில்குமார், ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அச்சு, பிச்சு காமெடியை :)

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இந்த ஆட்டத்திற்க்கு நான் வரல...

Rathi சொன்னது…

தெகா, முதலில் நீங்க சொன்ன, Rambling mindful jottings... , என் மனவானில் என்பதற்கு பொருந்திவருவதால் அதையே முகப்பின் விளக்கமாய் குடுத்திருக்கிறேன். என் மனவானில் என்பதற்கு இவ்வளவு நாளும் எனக்கு பிடித்த மாதிரி எதுவமே மனதில் தோன்றவில்லை. இப்போதான் சரியான வரிகளை கண்டுபிடித்தேன். நன்றி, நன்றி.

ஒரு ஆணின் பார்வையில் இரடும் விடயங்களை கமல் தன் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கலாம்! சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் அவர் பெண்களை காட்சிகள் மூலம் உருவகப்படுத்தும் விதம் ஏனோ எனக்கு உடன்பட முடிவதில்லை. நிறைய உதாரணங்கள் அவர் படங்களில் இருந்து சொல்லலாம்.


ஆண்களை விட பெண்கள் இயல்பாய் இயற்கையில் உடல், உள ரீதியாக பலவீனமானவர்கள் என்று தான் பெரும்பாலான ஆண்கள் சொல்கிறார்கள். கமலும் அதுக்கு விதிவிலக்கல்ல. உடல் ரீதியாக வேண்டுமால் ஆண்கள் பலமானவர்களாக இருக்கலாம். அது இயற்கை. பெண்களை உள ரீதியாக பலவீனப்படுத்துவது சில சமூக ஒழுக்காற்று விழுமியங்கள் குறித்த கற்பிதங்களே. இருந்தும் இதையெல்லாம் தாண்டி நிறையவே பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். அப்படி முன்னேறக் காரணம் ஆண்கள் கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் Political, economical, psychological support தான். இது மூன்றையும் கமல் தன் பெண்கள் குறித்த காட்சியமைப்புகளில் காட்டத் தவறுகிறார். நான் சொல்லவருவது இவர் ஏன் சாதனைப் பெண்மணிகள் (இதுக்கு விளக்கம் சொல்ல வெளிக்கிட்டா விடிஞ்சிடும், தெகா. இருந்தாலும் ஜோதிஜி ஓர் பதிவில் அழகாய் விளக்கியிருக்கிறார்) பற்றி அல்லது அந்தக் கோணத்தில் காட்டுவதில்லை.

கடந்த மாதம் தான் இவருடைய "உன்னைப்போல் ஒருவன்" பார்த்தேன். அதில் லக்ஷ்மி, மற்றும் அந்த பெண் நிருபருடனான (மோகன் லால்) உரையாடல்கள் அரசாட்சியில், பத்திரிகைத்துறையில் இருக்கும் பெண்கள் குறித்த இவரது எள்ளி நகையாடல்கள் என்றே எனக்கு தோன்றியது.

They are just good at following protocol!! Or, they are instinct driven creatures என்று சொல்லவருகிறாரா என்று தோன்றியது.

ஹேமாவின் பதிலுக்கு நீங்கள் சொன்ன விளக்கம் குறித்து படித்தபோது நான் முன்பு எழுதிய ஆண் - பெண் Intimacy பதிவு ஞாபகம் வந்தது.

Rathi சொன்னது…

கவிதை வீதி செளந்தர், //இந்த ஆட்டத்திற்க்கு நான் வரல...//

இத சொல்லிட்டுப் போகத்தான் இம்புட்டு தூரம் வந்தியளோ... :))

Thekkikattan|தெகா சொன்னது…

இப்போதான் சரியான வரிகளை கண்டுபிடித்தேன். //

தளத்திற்கு வந்து முகப்பை பார்த்தவுடன் ஒரு ஸ்மைல் வந்தது... அட இது நம்ம அடிச்ச லைனாச்சேன்னு. எஞ்சாய்...

வேணா இடையில இதையும் சேர்த்துக்கோங்க Rambling yet Mindful Jottings அப்படின்னு -கம்ப்ளீட் ஆன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கிது :)

Rathi சொன்னது…

நன்றி தெகா!!

தவறு சொன்னது…

ரதி..இரண்டுநாட்களாய் இணையதொடர்பில் இல்லை அதற்குள்ளாகவே எனக்கு அல்வா பட்டம்
உங்களுக்கு பொக்கோ அதுவும் சரியான நபரிமிருந்துதான் கிடைத்திருக்கிறது...மகிழ்ச்சி ...

அன்பின் ஜோதிஜி சொல்லவே வேண்டியதில்லை...ம்ம்ம்...

ஹேமாக்கு...சரியான சமயத்தில் நீங்க ஒரு பொக்கே கொடுங்க ரதி..

ஹேமா சொன்னது…

ரதி...எனக்குப் புல்லுக்கட்டு வேணாம்.உப்புமடச் சந்திப்பக்கம் வாங்கோ.வாறதேயில்லை.

http://santhyilnaam.blogspot.com/

ரதி...தவறு என்னைச் சொல்லிட்டார்.உங்களைப்போல
நான் சிரத்தை இல்லாதனானாம்.
கண்டுபிடிச்சிட்டார்.
அதுக்குத்தானாக்கும் புல்லுக்கட்டு குடுக்கசொல்றார்.அவருக்கே குடுங்கோ !

கேக்கவேணும் எண்டு நினைச்சிருந்தன் ரதி.காட்சிப்பிழை பதிவில் குறும்படம் ஒன்று தந்தேனே பார்த்தீங்களா ?

Rathi சொன்னது…

தவறு, ................??!!!!

Rathi சொன்னது…

ஹேமா, தவறு இப்போது உங்களைப்பற்றி என்ன சொல்லவிளைகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால், முன்பு அவரே உங்களை பாராட்டவும் தவறியதில்லை. யார் என்ன சொன்னாலும் ஹேமா உங்களுக்கு தெரியும் நீங்கள் யார், உங்களால் என்னவெல்லாம் முடியும், உங்கள் திறமைகள் என்னென்ன என்பது. அது தான் முக்கியம் ஹேமா.

You know yourself better than anybody else.

நீங்கள் அனுப்பிய காட்சிப்பிழை காணொளி பார்த்தேன். ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது தெருவில் மற்றவர்கள் இயல்பாய் நடந்துபோக, அந்த சிறுவன் மட்டும் விமானச் சத்தத்திற்குப் பயந்து ஒடுங்குவது. நான் சொல்வது சரியா? அதை இன்னும் கொஞ்சம் தெளிவாய் காட்சிப்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து.

ஹேமா, உங்கள் வானம் வெளித்த பின்னே தளத்திற்கே அதிகம் பழகிவிட்டதால் ஏனோ உப்புமடச்சந்தியை கவனிக்காமல் விட்டுவிட்டேன். உங்கள் பதிவு கண்டேன். இப்போ அவசர வேலையாய் வெளியில் போகிறேன். அது ஆறுதலாய்ப் படிக்கவேண்டிய பதிவு. ஆறுதலாய் படித்துவிட்டு எழுதுகிறேன்.