ஜூலை 19, 2011

தமிழகமும் ஹிலாரி கிளிண்டனும்!!!

 
 
ஈழமக்களின் விடுதலை என்பது இன்று சர்வதேச அரசியலாகிவிட்டது. அதன் களங்களும் ஈழம் தாண்டியும் வியாபித்திருக்கிறது. அந்தக் களங்களில் ஒன்று தான் தமிழகம். அது மட்டுமல்ல, கடந்த மே 2009 என்பதற்கு பிற்பட்ட காலத்தில் தமிழகத்திலும், தமிழர்கள் வாழும் புலம் பெயர் தேசங்களிலும்  அது பல்வேறு வடிவங்களைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் தமிழின வரலாறு, ஈழவிடுதலையின் அவசியம், அதன் பூகோள அரசியல் என்பன முன்னைக்கு இப்போ பலரால் புரிந்துகொள்ளப்படிருப்பதாக தோன்றுகிறது. அதன் விளைவாய் இன்று தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கம், மே பதினேழு இயக்கம் அவர்களின் செயற்பாடுகளுக்கு கிடைக்கும் பொது மக்களின் ஆதரவும் அங்கீகாரமும் நாம் கண் முன்னே காணும் சாட்சியங்கள்.
 

தமிழீழம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கண்டுபிடித்த கொள்கை என்பது போலவும்; அது ஏதோ ஆப்கானிஸ்தான் அல்ஹைடா தீவிரவாதிகளின் அடிப்படைவாதம் போல் முத்திரைகுத்தப்பட்டு அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பின்பும் இன்றும் கூட பொதுவாக தமிழர்கள் மத்தியில், குறிப்பாக புலம்பெயர் தேசம் மற்றும் தமிழகம், ஈழப்பிரச்சனையின் தீர்வு தனித்தமிழீழம் தான் என்பதை உலகிற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை மீண்டும் இன்னோர் முறை உரக்கச் சொல்ல வேண்டிய தேவையும், சந்தர்ப்பமும் தமிழகத்திற்கு எழுந்திருக்கிறது.


ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரேயொரு தன்னிகரில்லாத் தலைமை இருந்ததும், இன்று அதுவே ஈழவிடுதலையின் இன்னோர் படிநிலை வளர்ச்சியாய் கூட்டு தலைமைத்துவம் (Collective Leadership) என்கிற வடிவம் பெற்றிருப்பதும்; அது எல்லாத் தமிழர்களின் கைகளிலும் கொடுக்கப்பட்டிருப்பதும் நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டிய ஒன்று.


ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்க செயலர் ஹிலரி கிளிண்டனின் தமிழக வருகை குறித்து தான் பேசுகிறேன். இந்த அமெரிக்க ராஜாங்க செயலர் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து பேசுவார், பேசமாட்டார் என்கிற இரட்டை நிலை ஆரம்பத்தில் இருந்தது. இருந்தும், தமிழக தமிழர்களின் ஈழம் குறித்த காத்திரமான நிலை குறித்தோ அல்லது ஏதோவொரு காரணத்தாலோ இப்போ அவர் தமிழக முதல்வருடன் இது குறித்தும் பேசுவார் என்று சொல்லப்படுகிறது. இதில் தமிழகத் தமிழர்களின் செயற்பாடுகள் எந்த நிலை குறித்து இருக்க வேண்டும் என்கிற ஓர் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.


ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்க செயலர் ஹிலரி கிளிண்டனின் இந்திய வருகை குறித்து தான் பேசுகிறேன். இந்த அமெரிக்க ராஜாங்க செயலர் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து பேசுவார், பேசமாட்டார் என்கிற இரட்டை நிலை ஆரம்பத்தில் இருந்தது. இருந்தும், தமிழக தமிழர்களின் ஈழம் குறித்த காத்திரமான நிலை குறித்தோ அல்லது ஏதோவொரு காரணத்தாலோ இப்போ இது குறித்தும் பேசுவார் என்று சொல்லப்படுகிறது. இதில் தமிழகத் தமிழர்களின் செயற்பாடுகள் எந்த நிலை குறித்து இருக்க வேண்டும் என்கிற ஓர் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

அது குறித்து,

"வாய்ப்புக்கள் கிடைப்பது அரிது. அப்படியான வாய்ப்புக்கள் கிடைக்கும்போது தமதாக்கிக் கொள்வதே சாலச் சிறந்தது. ஹில்லரி அவர்கள் தமிழகத்தில் தங்கியிருக்கும் வேளையில் தமிழக மக்கள் தமது உணர்வுகளை உரத்துக் கூறினால் நிச்சயம் ஹில்லரி அம்மையார் அவர்கள் ஈழத்தமிழர் விடயத்தில் அதீத கரிசனை காட்டுவார் என்பது மட்டும் திண்ணம். ஏழு கோடித் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் மக்கள் பலம் என்னவென்று ஹிலரி அம்மையாருக்கு அமைதி வழியில் புரியவைப்பதன் மூலமாக உலகத்தமிழர்களின் பலம் என்னவென்று ஹிலரி அம்மையாருக்கு தெரியும். கிடைக்கப்பெற்றிருக்கும் அரிய சந்தர்ப்பத்தை தமிழக மக்கள் தவறவிடக் கூடாதென்பதுதான் உலகத்தமிழர்களின் அவாவாக இருக்கிறது.

ஹிலரி அவர்களின் சென்னை விடயம் என்பது பெரிதாக அலட்டிக்கொள்ளப்பட வேண்டியுள்ளது. சென்னை சென்று பின்னர் தென் கிழக்கு நாடு செல்கிறார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சென்னையூடாக தென் கிழக்கில் அமைந்திருக்கும் இந்தோனேசியாவுக்கு செல்வதென்பது இலகுவான பிரயாணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், சென்னையில் தங்கி சிவில், சமூக மற்றும் அபிவிருத்தி விவகாரம் தொடர்பான கொள்கையாளர்களையும், அரச-சார்பற்ற அமைப்புக்களையும் அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், வர்த்தக குழுவினரையும் சந்தித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக வந்துள்ள செய்தி மிக முக்கிய இடத்தை பெறுகிறது. குறிப்பாக, அரசசார்பற்ற மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதனூடாக தமிழக மக்களின் ஆதங்கங்களை கேட்டறிவார் என்பது மட்டும் திண்ணம்."
பொதுமக்களின் பிரதிநிதிகள் தமிழக மக்களின் உணர்வுகளை எடுத்துச்சொல்ல வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். அயல் நாடுகள் விடயங்கள் தொடர்பாக எந்தவிதப் பேச்சும் குறித்த சந்திப்புக்களில் இடம்பெறாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் அறிவித்துள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை அமைதி வழியில் ஹிலரி அம்மையாருக்கு வெளிப்படுத்த வேண்டியது பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு உண்டு. அவர்கள் அப்பணிகளைச் செய்யத் தவறினால், பொது மக்கள் திரண்டு தமது ஆதங்கங்களை தெரியப்படுத்த வேண்டும். ஆகவே, முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு, ஈழத்தமிழரின் பிரச்சினையைப் பற்றி தமிழக மக்கள் ஆழ்ந்த துன்பத்தில் இருக்கிறார்கள் என்கிற விதத்தில் ஹிலரி அம்மையாருக்கு தெரியப்படுத்த வேண்டும்."


6 கருத்துகள்:

Rathi சொன்னது…

விடிவெள்ளி, உங்கள் கருத்துரை என் மின்னஞ்சலில் உள்ளது. ஏனோ தளத்தில் காணவில்லை.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!இறுதியானதும்,உறுதியானதுமான ஒரு தீர்வு வரும் வரை ஜெயலலிதாவின் செயல்கள் மேகமாக மறையப்போகிறதா அல்லது தமிழர்களின் மனங்களில் சாரலைப்பொழிகிறதா என்பதையும் இன்னும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கருணாநிதி செய்யத்தவறியவைகளை பல காரணங்களுக்காக ஜெயலலிதா முன்னெடுப்பது வரவேற்க தக்கது என்பதோடு தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் செயலாகவும் இருக்கிறது.

"Innovative and creative ideas" என்ற ஹில்லாரி கிளிண்டனின் வார்த்தை அரசுரீதியான பொருளாக எந்தவிதத்தில் உருவாகுமென்பதையும் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

ஒருநாள் திருவிழாவாய் புதிதாய் பிறந்த ஜெயலலிதா,ஹில்லாரியின் சந்திப்பை அடுத்து ஜெயலலிதா அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் போது நாடு கடந்த தமிழீழ அரசின் நிர்வாக குழு ஜெயலலிதாவுடனான நட்புறவை பலப்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமையலாம்.

Rathi சொன்னது…

ராஜ நட, ஜெயலலிதா குறித்த உங்கள் பார்வை தான் எனக்கும்.

ஹிலரி கிளிண்டன் சொன்ன "Innovative and Creative ideas" என்பது என் பார்வையில் அவர் பேசியதின் சில பகுதிகளை கவனித்தவரையில் இந்திய ஜனநாயக பல்கலாச்சார தீர்வொன்று தான் இலங்கைக்கும் ஓர் பொருந்தும் என்று சொல்வது போல் தோன்றுகிறது.

அமெரிக்கா இந்திய ஜனநாயகம் போன்ற அமைப்புத் தான் என்று கொஞ்சம் அழுத்திச்சொல்லும் போதே இலங்கையில் அமெரிக்காவின் நிகழ்ச்சிநிரலுக்குரிய அம்சங்கள், ஆட்சியாளர்கள் என்பன உள்ளடக்கப்பட்டுவிடும்.

ஆனால், இந்த இடத்தில் தமிழர்கள் ஹிலாரிக்கு இந்திய பல்லின கலாச்சார அமைப்பு, தமிழர்களின் இவ்வளவு இழப்புகள், இலங்கை அரசியல், பொருளாதார, மொழி, மற்றும் அடிமைப்படுத்தல் என்பது அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் போது எப்படி அது பொருந்தாது என்பதை கொஞ்சம் காத்திரமாக சொல்லலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசுடன் ஜெயலலிதா உறவை பலப்படுத்த முதல் அவர் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்திய கொள்கைகளுக்கு எதிரான ஓர் கருத்தை, கொள்கையை தமிழக முதல்வர் கொண்டிருக்கவும் அதற்கேற்றாற்போல் செயல்படவும் அதிகாரம் இருக்கும் போது தான் அது ஒருவேளை சாத்தியப்படலாம் என்பது என் கருத்து. அல்லது இந்தியா தன் கொள்கைகளை ஈழத்தமிழர்கள் விடயத்தில் மாற்றிக்கொள்ளும் போது அது சாத்தியம்.

எத்தனையோ நாடுகள் மறைமுகமாகவும், புதிதாய் பிறந்த தெற்கு சூடான் நேரடியாகவும் நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரிக்கும் போது தமிழ்நாட்டில் நாடு கடந்த தமிழீழ தோழமை மையம் என்கிற ஓர் சிறியளவிலான அமைப்பைத்தவிர வேறெந்த ஆதரவு கூட இல்லாதிருப்பது பலவீனம் தானே.

Reverie சொன்னது…

எனக்கு ஜே , மு க ...இரண்டு பேர் மேலயும் எந்த ஒரு நம்பிக்கையும் கிடையாது...ஹிலாரி ஒரு கானல் நீர்...அமெரிக்கா இன்னும் இருபது வருடங்களுக்கு...யாருக்கும் உதவி செய்யும் நிலையில் இல்லை...அது நாட்டாண்மையும் இல்லை இப்போது...

நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

Rathi சொன்னது…

Reverie, அமெரிக்கா உதவி செய்ததில்லை. நாட்டாமை தான் செய்து பழக்கம். அமெரிக்காவின் சுயலாபங்களுக்கான கண்டுபிடிப்பான பயங்கரவாத ஒழிப்புத்தான் எங்கள் இறுதிப்போரின் அழிவிற்கும், உரிமைப்போர் சிதைக்கப்பட்டதிற்கும் காரணம். இலங்கையின் "Genocide Regime" ஒன்றுக்கு தெரிந்தே முண்டுகொடுத்து, தமிழர்களுக்கு அரைகுறைத் தீர்வை திணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வமும், அவசரமும் ஏன்!!!

JOTHIG ஜோதிஜி சொன்னது…

உலகத்தில் உள்ள தலைவர்கள் என்ற பெயரில் உள்ள நாதாரிகள் ஈழம் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நான் கவனிப்பதே இல்லை. இன்று கோவையில் திமுக குடுமிபிடி மாநாடு தொடங்கியது. செலக்ட்டீவ் அம்னிசியாவில் இருந்த கலைஞர் வரிசை வரிசையாக ஈழம் குறித்து தீர்மானம் மேல் தீர்மானமாக நிறைவேற்றி படம் காட்டியிருக்கிறார். நேற்று உடல் நலக்குறைவு என்ற போதும் கும்மி ஐந்து நிமிடம் பேசினார். ராஜபகேஷ திரைப்பட நடிகர்களை இலங்கைக்கு அழைத்துப் போய் படம் காட்ட நினைத்த விசயங்களில் தோற்று இப்போது கல்லூரி மக்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொண்டு இருக்கிறார். சிடிசி என்று அழைக்கப்படும் மென்பொருள் நிறுவன நாதாரிகள் இலங்கைக்கு செல்ல இருந்த பயணத்தை நிறுத்திய பெருமை மே 17 இயக்கத்தையே சாரும். நிறையவே நம்பிக்கை அளிக்கும் உருப்படியான செயல்பாடுகளை மே17 இயக்கம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. என்னவொன்று வெளியில் அதிகம் தெரியவில்லை. அதை விரைவில் கொண்டு வருகின்றேன்.