ஜூன் 11, 2011

தமிழ்த்தேசியம் கேள்வி - பதில்.


கேள்வி: 

1. தந்தை பெரியார் தமிழ்தேசியத்தை அந்நாளில் ஆதரிக்கவில்லை அல்லது அந்தக் கருத்தியலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஏறக்குறைய அதே கருத்தை வே. மதிமாறன் போன்றோரும் இக்காலத்தில் முன்வைப்பது எனக்கே கூட சற்று விநோதமாகப் படுகிறது. 

2. அத்தோடு சீமான், முத்துராமலிங்கத் தேவர் மற்றும் குஜராத் மோடி போன்றோரை உயர்த்திப் பேசுவதாக பலர் அதிருப்தி கொண்டிருப்பதாக படித்தேன். இங்கே முன்நிலைப்படுத்தப்படுவது ஜாதி மற்றும் மதம் என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. இதனால் சீமானின் தமிழ்த்தேசியமும் காயம்பட்டுப்போகிறது. இது பற்றி உங்கள் பார்வை என்ன?

பதில்: 

திராவிட இயக்கம் பெரியார் வழியொற்றி வந்ததன் காரணமாகவும்.. தமிழ் வரலாற்றில் பெரியாருக்கு இருந்த கசப்புகள் காரணமாகவும் அவர்கள் அந்த காலத்திற்கு மட்டுமே உகந்த ஒரு கொள்கையை தீவிரமாக முன் வைத்து போராடினார்.. ஆனால் இந்த காலகட்டத்தில் நிச்சியம் அவர் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவே செய்வார்.

அப்படியான ஒரு கொள்கை மாற்றம் இருக்குமெனில் அது தமிழ் தேசியமாக்கத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் பிறப்பால் ஒரு கன்னடராக இருந்தவர் தன் கடைசி மூச்சு வரை தமிழ் மக்களின் இருளை போக்கவே அயராது பாடுபட்டார். 

திரு வே. மதிமாறன் நிகழ்கால அரசியல் போக்கினை எதையும் அவர் உள் வாங்க வில்லை என்பது எனது கருத்து.  நானோ நீங்களோ நாம் ஒரு கொள்கையை அழமாக கடைப்பிடிப்பது தவறில்லை. அந்த கொள்கைகள் காலத்தின் தேவைக்கு ஈடுகொடுக்கிறதா.. என்பது தான் நமது முக்கிய தேடல்களாக இருக்கவேண்டும். அவ்வண்ணமே  அனைத்து விடுதலைக்கான பாதைகளாகவும்  இருக்கவேண்டும். அதை விடுத்து கொள்கையை சடங்கு போல் பாவித்தால் இறுதியில் அதுவும் ஒரு மதமாக மாறி மனிதர்களின் கழுத்தை இறுக்கிவிடும் என்பது எண்ணம். 

தமிழகத்தில் நிறைய பிரதிநிதிகளிடம் இப்படி கரடு தட்டிப்போகும் அளவுக்கு கொள்கைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருப்பதன் முதற்காரணம் அவர்கள் யதார்த்தை நேர்கொள்ள அச்சபட்டு கொள்கையை கவர்ச்சிபடுத்தி முன்னிறுத்துவது. பெரும்பான்மையின் அசட்டுத்தனங்களை சமதானம் செய்து கொள்வதல்ல என் நோக்கம்...  பெரும்பான்மையின் கவனம் இல்லாமல் செயல்படுவது ஆபத்தை விளைவிக்கும் என்பது என் கருத்து.

பெரியார் ஏன் அவ்வளவு உக்கிரமாக பணியாற்றியும்  இன்னும் முடநம்பிக்கை பரவலாக இருக்கிறது ...?

ஒரே காரணம் அதற்கான மாற்று வழிகள் இல்லாததே. அதை அவர் உருவாக்கியிருக்கவேண்டும் என்பது என் வாதமில்லை. அதில் அவர் அவனம் கொண்டு இருக்கலாம் என்பது எண்ணம்.

சீமான் அதில் தெளிவாக இருக்கிறார் என்பது என் எண்ணம்  நீங்கள் இந்து மத சாயங்கள் மெல்ல தடவியிருக்கிறார் என்று கூறியிருந்தீர்கள். ஈழ விஷயத்தில் அவர்   நிச்சியமாக காங்கிரஸை நாட முடியாது. அதற்கு மாற்றாக நரேந்திரமோடியை துணைக்கு அழைக்கிறார்  இதில் பெரிய கொள்கைள் முரண்களை கண்டிருக்கிறார்கள்... பெரியார் கொள்கையாளர்கள். உண்மையில் நமக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவேண்டிய இயக்கம் இடது சாரிகள். ஆனால் அவர்கள் ஆள் காட்டி கொடுப்பதில் போட்டி போட்டு தமிழர்கள் கொன்றார்கள். இப்பொழுது சொல்லுங்கள் கொள்கைகோமான்கள் லட்சணங்கள் எப்படிபட்டதென்று. 


13 கருத்துகள்:

Amudhavan சொன்னது…

சிலரைப் பற்றிய உங்களின் கணிப்புகள் மிகச்சரியாக இருக்கின்றன. 'தமிழகத்தில் நிறைய பிரதிநிதிகளிடம் இப்படி கரடுதட்டிப்போகும் அளவுக்குக் கொள்கைவாதிகள் இருக்கிறார்கள்' என்பதும் 'அவர்கள் யதார்தத்தை நேர்கொள்ள அச்சப்பட்டு கொள்கையைக் கவர்ச்சிப்படுத்தி முன்னிறுத்துகிறார்கள்' என்பதும் மிகவும் அருமையான படப்பிடிப்பு. நுட்பமான ஒரு விஷயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். தமிழனின் இன்றைய நிலைமைக்குக் காரணம் இதுதான். தங்களின் அழகிய விளக்கத்துக்குப் பாராட்டுக்கள்.

JOTHIG ஜோதிஜி சொன்னது…

பெரியார் மட்டுமல்ல காஞ்சி பெரியவர் கூட ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தார். பணம் அதிகமாக ஒருவரிடம் சேரச் சேர அவர்கள் கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு மற்ற விசயங்களில் சமரசம் செய்து கொள்ளத் தொடங்குவர்கள் என்று.

இப்போதுள்ள வீரமணியிடம் பார்ப்பது இதைத்தான். அவரைப் பொறுத்தவரையிலும் சேர்த்துள்ள சொத்தை காப்பாற்ற வேண்டும். தனக்குப் பிறகு தன் மகனிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்பதே பிரதான கொள்கை.

மாற்று ஏற்பாடு உருவாவதற்கு முக்கிய காரணம் என்ன?

திமுக திக வில் உள்ள தலைவர்கள் பெயர் அளவிற்கு கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர்களும் உங்களையும் என்னையும் விட தீவிர கடவுள் ஜாதகம் போன்றவற்றை விரும்புவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தவறு சொன்னது…

இப்பொழுது காசுதாங்க கொள்கையா மாறிட்டு...அடிப்படை கொள்கைகள் முன்னெடுக்கும் தலைவர்களாலயே தனக்காக மாற்றிகொள்ளும்போது இயக்கம் பற்றிய நம்பிக்கைகள் காணாமல் போய்விடுகிறது.

ஆகையால் அடிமட்ட தொண்டனும் சந்தர்ப்பவாதியாக மாறுகிறான். உண்மைகள் எப்பொழுதும் மௌனமாய் பின்னால் தான். ஏனென்றால் கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர்கள் ரதி.

தங்களுடைய அரசியல் தெளிதல் ஆச்சரியப்படவைக்கிறது ரதி வாழ்த்துகள்.

Rathi சொன்னது…

அமுதவன், தமிழீழத் தேசியம், தமிழ்நாட்டு தேசியம் இவை இரண்டுக்கும் இடையே இது ஓர் பாலம்.

கடந்த May 18, 2009 இற்கு முன் என் சிந்தனைக்குள் தமிழ்த்தேசியம் ஓர் விதையாய் மட்டுமே விழுந்திருந்தது. இன்று என் சிந்தனைகளில் அது கிளை பரப்பி வியாபித்திருக்கிறது.

தமிழ்த்தேசியம் அல்லது சுயநிர்ணய உரிமை பற்றி யோசிக்கும் போது நான் அடிக்கடி நினைத்துப்பார்த்து பதில் தெரியாமல் குழம்பிப் போகும் ஓர் விடயம் இது. இரண்டாம் உலகப்போரின் பின் தான் ஐ.நா. உருவாக்கம் பெற்றது. அதற்கு முன் அது வேறோர் பெயரில் இயங்கிவந்தது (League of Nations). ஐ. நாவின் உருவாக்கத்திற்கு முன்பே ஸ்டாலின் தேசம், தேசியம் குறித்த கருத்தியலோடு மட்டும் நில்லாமல் அதற்கு வடிவமும் கொடுத்தவர், உ-ம்: பின்லாந்து. கார்ல் மார்க்ஸ் கூட ஐரிஷ் விடுதலையை ஆதரித்தவராமே!! சமகாலத்தில் மார்க்சியம்-லெனினியம் பேசுபவர்கள் கூட தமிழ்த்தேசிய கருத்தியலை ஏற்றுக்கொள்ளாதது ஏன்!! கேட்டால், ஜாதி, மதம் என்று பதில் வந்தாலும் வரும்.

நடைமுறை யாதார்த்தம் கொள்கைகளின் இருப்பை தக்கவைக்கும் முயற்சியில் மறுக்கப்படுகிறதோ!

ஒரு சாமானியப் பெண்ணான என் வாசிப்பின் எல்லைகள் தொட்ட தூரத்தில் இருந்து என்னை நோக்கி எறியப்பட்ட கேள்விகள் இவை!!

Rathi சொன்னது…

ஜோதிஜி, காஞ்சி பெரியவர், வீரமணி, திமுக, திக,.... முரண் நகைப்பட்டியல் இத்தோடு முற்றுப்பெற்றதா!! இருந்தாலும் யாரை அடையாளம் காட்டவேண்டுமோ அவர்களை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்.

Rathi சொன்னது…

தவறு, தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி.

Rathi சொன்னது…

என் கருத்துரையில் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட தவறிவிட்டேன். தேசம், தேசியம் குறித்த வரையறை ஜோசெப் ஸ்டாலினால் சொல்லப்பட்டது. பின்லாந்து விடுதலையை ஆதரித்தவர் லெனின்.

ஹேமா சொன்னது…

ரதி...இவ்வளவு தூரம் உலக-அரசியல் அறிவு என்னிடம் இல்லை.உங்களிடம் நிறையவே படித்துக்கொண்டிருக்கிறேன்.
இதனாலேயே சிலசமயம் பின்னூட்டம் போடக்கூடப் பின்னுக்கு நிற்கிறேன் !

வலிபோக்கன் சொன்னது…

பணமே ,இந்த இழிநிலைக்கு காரணம் அகநிலையா? புறநிலையா?

Rathi சொன்னது…

ஹேமா, நான் தொடர்ந்து இந்தமாதிரி எழுதிக்கொண்டிருந்தால் பதிவுலகில் எனக்கு என்ன நடக்கும் என்பதும் தெரியும். :)

தவறு அவர்களின் தளத்தில் விட்டுச்சென்ற கருத்து இந்த நிமிடம் வரை மனதை ஈழம் குறித்து அலைக்கழிக்கிறது. பவளமல்லியும், அசோகா பூவும் என்று ஓர் பதிவு போடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழ்ப்பெண்கள் சிங்கள ராணுவத்துக்கு விருந்தாகட்டும். தமிழ் ஆண்களின் குருதியில் கடல் சிவப்பாகட்டும் என்று சொன்ன இனவெறிக்கு நாங்கள் எங்கள் ஒற்றுமையின்மை, கட்சி அரசியல், வறட்டுக் கொள்கைகள் மூலம் தானே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதன் விளைவு தான் இப்படியான என் பதிவுகள். வேறொன்றுமில்லை. மற்றப்படி நான் இன்னமும் எழுத்தின், அரசியல் பாடத்தின் முதல் படியிலேயே இருக்கிறேன். கற்றுக்கொண்டிருக்கிறேன், அவ்வளவு தான்.

Rathi சொன்னது…

வலிபோக்கன், நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது என் அறிவுக்கு எட்டவில்லை.

கருணாகார்த்திகேயன் சொன்னது…

//சீமான் அதில் தெளிவாக இருக்கிறார் //

சோனியா கட்சிக்கு தன்னுடைய ஒரு இழப்பு என்ற பார்வை மற்றுமே ..

மற்ற இழப்புக்கள் பற்றி கவலை இல்லை

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

Rathi சொன்னது…

கருணா கார்த்திகேயன், இப்போ தமிழ்நாட்டில் காங்கிரசைப் பொறுத்தவரை சீமானை தவிர வேறு யாரும் மாற்று அரசியலுக்காய் இருப்பதாய் தெரியவில்லையே.

சோனியா காங்கிரஸ் எப்போ தமிழர்களைப் பற்றி கவலைப்பட்டது!!!