ஜூன் 15, 2011

வலியின் மொழி!!! As one we will rise!!பாப் மார்லி பாடிய "Buffalo Soldiers" என்கிற பாடல் கறுப்பின மக்களின் அடிமைத்தனத்தை பேசமுடியாத துன்பத்தை, சோகத்தை தனக்குள் புதைத்து வைத்திருப்பதாக சொல்வார்கள். 

இன்று ஈழத்தமிழர்களின், அமெரிக்காவால் கவர்ச்சியாய் பேசப்படும் தனிமனித உரிமைகள், சுதந்திரம், ஓர் இனத்தின் கெளரவம், காலங்காலமாய் நாங்கள் இறுமாந்திருந்த பெருமைகள் சிதறடிக்கப்பட்டு மண்டியிட்டு கெஞ்சியும் கூட மறுக்கப்பட்ட உயிர்ப்பிச்சை இதையெல்லாம் சொல்லும் ஓர் பாடல் தான் இது. 

ஈழம் குறித்த வலிகள் சொல்ல எந்த ஊடகம் வேண்டும் என்று அடிக்கடி எண்ணங்கள் என்னை வதைப்பதுண்டு. வலி சொல்ல சில சமயங்களில் மொழி கூட தேவையில்லை. மெளனம் கூட சிலசமயங்களில் போதுமானது. ஆனாலும், ஈழத்தின் வலியை உலகமே கேட்குமளவிற்கு மீண்டுமொருமுறை உரக்க வாய்விட்டு கத்தவேண்டும் போல் உள்ளது. ஈழம் குறித்த நினைவுகளில் இந்தப்பாடலின் வரிகளும், காட்சிகளும் கூட அடக்கம்.

நேற்று பிரித்தானிய ஊடகமான சனல் நான்கு வெளியிட்ட ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை ஆவண காணொளிகள் எனக்குள் அப்படி ஓர் உணர்வை மிச்சம் விட்டுச்சென்றிருக்கிறது. இது ஆங்கிலம் தான். சில தடவைகள் கேட்டால் நிச்சயம் புரியும். மொழி புரியாவிட்டாலும், காட்சிகளின் தொகுப்புகளின் மூலம் ஈழத்தின் கதையை சொல்லியிருக்கிறார்கள் எம் இளையவர்கள். 


8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ரதி...அந்தக் காணொளி பார்த்தபிறகு இன்னும் மனம் என்னை என்னையே நொந்துகொண்டிருக்கிரது.என் கடமையை நான் இன்னும் சரிவரச் செய்யவில்லை.உயிரோடு இருப்பதே வீண் !

Rathi சொன்னது…

ஹேமா, நேற்றிலிருந்து உங்கள் வார்த்தைகளை படிப்பதும், பிறகு ஏதும் சொல்லமுடியாமல் திரும்பிப் போவதுமாய் இருந்தேன். என்னுடைய உணர்வுகளை அந்த பாடலின் மூலம் வெளிப்படுத்தினேன், அவ்வளவு தான்.

மற்றப்படி பார்வையாளர்களின், பாதிக்கப்படாதவர்களின் நடுநிலைமை நாடகங்களை பார்த்துக்கொண்டும், படித்துக்கொண்டும் நகர்ந்துகொண்டிருக்கிறேன்.

எங்கள் உறுவுகளை நாங்கள் தான் ஹேமா காப்பாற்ற வேண்டும். இங்கே வேறு யாரும் துணைக்கோ, உதவிக்கோ வரப்போவதில்லை. இதை எம்மவர்கள் புரிந்துகொள்ளவேண்டும், செயற்ப்படவேண்டும்.

தவறு சொன்னது…

ரதி வலிகளே வாழ்க்கையாக மாறிவிட்டால் கிடைக்கும் சில மகிழ்வுகளை கூட அனுபவிக்க தெரியாத உயிர்ப்பாய் நாம்...

Rathi சொன்னது…

தவறு, அதென்னங்க "கிடைக்கும் சில மகிழ்வுகள்"? கொஞ்சம் வரையறை செய்து ஓர் பட்டியல் கொடுங்கள். தெரிந்துகொள்கிறேன்.

மகிழ்வு என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை பற்றிய அவரவர் புரிதலின் அடிப்படையில் அது வேறுபடும்.

உங்களுக்கு மகிழ்வாய், சரியாய் தெரிவது எனக்கோ, மற்றவர்களுக்கோ சில நேரம் தவறாக தெரியலாம் இல்லையா?

தவறு சொன்னது…

வயதுக்கு உரியமகிழ்வுகளை அனுபவிக்க முடியாமல் ஏற்படும் துன்பம். ஒன்று நாம் அனுபவித்தது இரண்டு நம்மவர்கள் அனுபவிப்பதை தொடர்ச்சியாகபார்த்துகொண்டே இருப்பது ரதி.

கிடைக்கும் சில மகிழ்வுகள் என்று நான் குறிப்பிடுவது அள்றாட நிகழ்வுகளில் நமக்கு திருப்பதியான செயல்கள் (இதுஅவரவர் பார்வைக்கு ஏற்ப மாறுப்படும்).

இதில் தாங்கள் மற்றவர்களின் மகிழ்வை முழுமையாக அனுமதித்து அவர்களுடைய மகிழ்வை ரசிப்பீர்கள்.

எந்த விசயத்திலும் தங்களுடையபாணி கை அளவே...திக்குமுக்காடி விடமாட்டீர்கள்என்பது என்னுடைய எண்ணம் ரதி.

Rathi சொன்னது…

தவறு,

"hakuna matata it means no worries for the rest of your days..."

இந்தப் பாடல் கேட்டிருக்கிறீர்களா. இது தான் என் கொள்கை :))))

தவறு சொன்னது…

பாடல் லிங்க் இருந்தா கொடுங்க ரதி நான் கேட்டதில்ல..நீங்க சிரிச்சிகிட்டே பதில் சொல்லியது மட்டும் தெரியுது ரதி.

இல்லாட்டினா நீங்களே கொஞ்சம் விளக்கமா சொல்லலாம ரதி !!!

Rathi சொன்னது…

தவறு, நானும் கேட்டு நாளாகிவிட்டது. Lion King ஆங்கிலத் திரைப்படத்தின் பாடல் என்பதாய் ஞாபகம். Yoy tube இல் தேடிப்பாருங்களேன்.