மே 24, 2011

இந்திய ஜனநாயகம் Vs தமிழக ஜனநாயகம்!

நட்சத்திரப் பதிவர் வாரம் முடிந்த கையோடு சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். இருந்தும், இரண்டு பேர் சொன்ன கருத்துகள் இந்த நிமிடம் வரை என் மூளைக்குள் ஏதோ எதிரொலிப்பது போல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

"இந்திய ஜனநாயகத்தில் இங்குமங்கும் குறைபாடுகள் இருந்தாலும் ஜனநாயக பாதையில் தளைத்து நிற்கிறதென்றே கூறலாம்." - ராஜநடராஜன்

"சீமான் பற்றி பலரும் பேசப் பயப்படுகிறார்கள்". - ஜோதிஜி.

இந்த இரண்டு கூற்றுக்களையும் இரண்டு வெவ்வேறு பதிவுகளில் படித்த போது இந்தியாவில் தானே தமிழகம் இருக்கிறது. பிறகேன் சீமான் பற்றி பேசக்கூட தமிழக தமிழர்கள் பயப்பட வேண்டும் என்று நினைக்கத்தோன்றியது. இவற்றுக்கிடையே இருக்கும் உண்மை, பயம், வேற்றுமைகள் நிறையவே யோசிக்க வைக்கின்றன. 

சீமான் பற்றி பேசப்பயப்படுகிறார்களா அல்லது சீமான் பேசும் உண்மைகளும் கருத்துகளும் பயம் காட்டுகின்றனவா? இந்திய இறையாண்மை எத்தனை தடவைகள் சீமானை மட்டும் சிறையில் வதைத்து தண்டித்தது என்று யோசிக்கும் போது இந்திய ஜனநாயகம் குறித்த ஐயப்பாடு எழவே செய்கிறது. 

இறையாண்மை என்கிற கருத்தியலே இப்போதெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது அது பற்றி இலங்கையும், இந்தியாவும் மட்டுமே எப்போதும் இடைவிடாது பேசுவதன் நோக்கம் புரியாததல்ல. இலங்கையின் இறையாண்மை பற்றி இந்தியாவிற்கு இருக்கும் அக்கறை இந்தியாவின் இறையாண்மை பற்றி இலங்கைக்கு கிடையாது. அதற்குரிய அரசியல் சூழ்நிலைகள் இந்திய அரசியல் அறிவுஜீவிகலாலேயே  உருவாக்கப்பட்டுவிட்டது. அதன் ஆழ, நீள, அகலங்கள் இலங்கையில், இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தின் எல்லை கொண்டே தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. 

சீனாவின் String of Pearl Theory- Bluewater Ampition என்றெல்லாம் வர்ணிக்கப்படும் எந்த ஒரு திட்டமும் இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் இல்லையாம். சீமான் பேசும் போது மட்டும் இறையாண்மை களங்கப் படுகிறதாம். சிறையில் அடைபட்டும் சீமான் தனக்கு மட்டும் மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்காமல் இன்றுவரை பேசிக்கொண்டே இருக்கிறார். இனி எதிர்காலத்தில் அவர் மீது எந்த ஜனநாயகம் காக்கும் கறுப்புச் சட்டம் பாயும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


நாங்கள் அதில் தானே வல்லவர்கள். சீமான் போல் யாராவது பேசினால், செயற்பட்டால் அவர்களைப் பற்றி விமர்சிப்பதோடு எங்கள் கடமையை முடித்துக்கொள்வோம்! ஏதாவது கருப்புச்சட்டம் பாயும் என்றால் பிறகு அவர் பற்றி பேசக்கூட பயப்படுவோம். 

சுப்பிரமணிய சுவாமி பேசினால் களங்கப்படாத இந்திய இறையாண்மை சீமான் பேசினால் மட்டும் களங்கம். ஒருவேளை சு.சுவாமி அறிவுஜீவி, intellectual! சீமான் தமிழன் என்கிற வேறுபாடாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இந்த ஒப்பீடு அறிவீனமானதாக கூட இருக்கலாம். எஸ். எம். கிருஷ்ணா இந்தியா அல்லாத ஓர் நாட்டு அறிக்கையை தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பது கூட தெரியாமல் ஐ. நா. மன்றத்தில் நின்றபோது எத்தனை இந்தியர்கள் வெட்கித்தலை குனிந்தீர்கள்!

அருந்ததி ராய் இந்திய ஜனநாயகம் அதன் குறைபாடுகள் பற்றி சர்வதேசத்திற்கும் கேட்குமளவிற்கு பேசிக்கொண்டிருக்கிறார். அவரை ஒருநாளுக்கு மேல் சிறையில் அடைக்க முடியாது!! மிஞ்சிப்போனால் தங்கள் உரிமைகளுக்காக நியாயமாகப் போராடும் யாரையாவது ஆதரிக்கிறாய் என்று ஒப்புக்கொள் என்று தேசிய மைய ஊடகத்தில் பேட்டி காணுவார்கள். அருந்ததி ராயை சிறையில் அடைக்கத்தான் விருப்பம் இந்திய ஆளும்வர்க்கத்திற்கு. ஆனால் அவரை சிறையில் அடைத்தால் இந்திய ஜனநாயகம் சர்வதேச அரங்கில் சிரிப்பாய் சிரிக்கும் என்பது தான் யதார்த்தம். 

இறையாண்மை என்பது ஜனநாயக பண்புகளை, தார்மீக விழுமியங்களைப் பேணுவதால் தான் காப்பாற்றப்படும் என்றால் இந்தியா அதிலிருந்து என்றோ மிக மோசமாக தவறிவிட்டது. இந்தியா போன்றதோர் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு ஏன் 'பொடா' என்கிற பயங்கரவாத தடுப்பு சட்டம். இந்தியா தன்னைச் சுற்றியுள்ள அயல்நாடுகளின் இறையாண்மையை பாதிக்கும் அல்லது பாதுகாக்கிறேன் பேர்வழி என்கிற இந்திய கொள்கையை ஜனநாயகத்துக்கு பாதகமாய் யாரும் கருதுவதே இல்லையா! திபெத்தின் தலாய் லாமாவை இந்தியா ஆதரித்தால் அது சீனாவின் இறையாண்மைக்கு களங்கம் இல்லை! சீமான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காய் பேசினால் இறையாண்மைக்கு களங்கம். 


ஈழம் பற்றி எரிந்துகொண்டிருந்த போது தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். பிறகு, அது எப்படி சந்தடியே இல்லாமல் காணாமற் போனது என்கிற போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து தான் போகிறது. 


ஈழத்தில் தமிழர்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்று சிங்கள பெளத்த ஆட்சியாளர்கள் கற்றுக்கொண்டதே இந்திய-காஷ்மீர், சீன-திபெத்திய அடக்குமுறைகளின் மூலம் தான். 

இப்போ ஐ. நாவின் மனித உரிமைகள் சபையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா அமரப்போகிறது. இனிமேல் ராஜபக்க்ஷேவுக்கு கொண்டாட்டம் தான். இந்தியாவின் இன்னோர் ஜனநாயக முகம் இனிமேல் வெளிப்படும் என்பதில் ஆச்சர்யமில்லை. ஈழத்தமிழர்களுக்கு இந்தியா எந்தவொரு உரிமையையும் பெற்றுத்தரப்போவதில்லை என்று உறுதியான பின் இந்தியாவின் ஜனநாயக மூடி மனித உரிமைகள் சபையில் கிழிபட்டால் எங்களுக்கு சந்தோசமே!


இன்று உலகமே போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களை இந்தியா வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கிறது. ஆனால், வெட்கக்கேடு தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஓர் சீமானை தமிழ்தேசியம் பேசுபவர்கள் கூட ஒரே அணியில் சேர்ந்து நின்று ஆதரிப்பதில்லை என்பது தான். என்ன காராணம், Power Struggle or Ego!!!!


29 கருத்துகள்:

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' சொன்னது…

தங்கள் மீது சாந்தி நிலவட்டும் சகோ.ரதி.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.சகோ. ஆனால், இங்கே ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆதங்கம் மட்டுமே முக்கியம் என்றும் அதற்கே அனைவரின் குரலும் ஒருமிக்கவேண்டும் எனவும் ஓரணியில் நிற்க வேண்டும் எனவும் விழைகின்றனர். அதன் பலன் எவருடைய ஆதங்கமும் வெற்றி பெறுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். அனைவரும் அடுத்தவர் வலிகளை புரிய வேண்டும். அப்போதுதான் இதற்கு வழி பிறக்கும்.

பெயரில்லா சொன்னது…

@ ரதி - சகோதரி ! தங்களின் ஆதங்கம் புரிகின்றது. ராஜநடராஜன் சொன்னது போல இந்திய ஜனநாயகம் என்பது முழுமையடையாத ஒன்று தான், அதனால் அது ஜனநாயகம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. ஜனநாயக, மதச்சார்ப்பற்ற நாடு தான் - ஆனால் இந்தியாவை மேற்குலகோடு ஒப்பிட்டால் அது ஜனநாயக நாடு போலத் தோன்றாது .. காரணம் அதில் இருக்கும் பல ஓட்டைகள் தான்.

ஜோதிஜியின் பதிவை நான் படிக்கவில்லை .... சீமான் பற்றி பலரும் பேசப் பயப்படுகின்றார்கள் எனில் அந்த பலர் மக்களா? அல்ல அரசியல்வாதிகளா? அல்ல சமூகப் போராளிகளா? என்பதை விளக்கி இருக்கலாம்.

சீமானைப் பற்றி மிகுந்த தமிழார்வலர்களும் மட்டுமே பேசுகின்றார்கள். ஏனையோர் அவரின் ஆவேசத்தை இரசிக்கின்றார்கள் ஆனால் அதற்கு மேல் ஒன்றுமில்லை என சென்றுவிடுகின்றார்கள். மக்கள் பேசாமல் இருப்பதற்கு இது தான் காரணம்.

சீமானைப் பற்றி அரசியல் வாதிகள் அலட்டிக் கொள்வதில்லை. காரணம் ஏற்கனவே பலர் அரசியலில் இருக்கின்றார்கள். சீமானைப் பற்றிப் பேசி இவரையும் ஒரு பெரிய அரசியல் வாதி ஆக்க/போட்டிக்கு இன்னொருவர் வருவதை விரும்பாமல் இருக்கலாம். அதே போல ஈழத் தமிழர் போராட்டம் நடத்தியதைத் தவிர அரசியல் பணி என எதனையும் அவர் இன்னமும் செய்யவில்லை. ஆகையால் பேசவில்லை.

அவரைக் கண்டோ, அலல்து அவர் பேசுவதில் உள்ள நியாய அநியாயங்களைக் கண்டோ யாரும் பயப்படுவதாகத் தெரியவில்லை.

இந்திய சட்டப்படி இந்திய இறையாண்மைக்கு குந்தகமாக பேசினால் உள்ளே தள்ளிவிட சட்டத்தில் இடமுண்டு, பின்னர் கோர்டில் வாதாடி வெளியே வந்துவிடலாம். உள்ளே தள்ளிவிடுவது என்பது வெள்ளையர் ஆட்சியின் நீட்சியால் தொடரும் சட்டம். வெளியே வந்துவிட உரிமை தருவது இந்திய ஜனநாயகம், நன்றிகள் அம்பேத்கார் !

இப்படி குழப்பமானது தான் இந்திய சட்டத் திட்டங்கள்.

தொடர்கின்றேன் ...

பெயரில்லா சொன்னது…

சீனா, இந்தியா ஆகிய இரண்டுக்குமே போட்டி கடுமையானது. சொல்லப் போனால் அது ஒரு 21ம் நூற்றாண்டின் பனிப்போர். சீனாவுக்கு இலங்கை மட்டுமல்ல பாகிஸ்தான், வங்கதேசம் கூட ஆதரவு தருகின்றது. இந்தியா நேரிடையாக அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இல்லை. எதோ இராஜதந்திரம் என்ற பெயரில் சொதப்பி வருகின்றார்கள். உண்மை தான்.

இந்தியா போரிடுமாயின் தற்போது அது பெறும் அந்நிய முதலீடுகள் தடைபடலாம், அது சீனாவுக்கு ஏதுவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சீனாவு அதைத் தான் விரும்புகின்றது.

இலங்கை விடயத்தில் இந்தியா ஒரு காலத்தில் pro tamil என இருந்து, பின்னர் pro lanka ஆக மாறி, பின்னர் pro tamil or pro lanka ஆவா எனக் குழம்பி நிற்கின்றது. இதைத் தான் நேருவின் non-alignment policy -ஆக இருக்குமோ எனவும் தோன்றச் செய்தது. ஆக மொத்தத்தில் ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வின் போது இந்தியா அதிரடியாக இறங்கி இலங்கைக்கு அடிக்க வேண்டும் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அது யதார்த்த சாத்தியமில்லாத ஒன்று, மற்றொன்று புலிகள் அழிவதை இந்தியாவும், அமெரிக்காவும் விரும்பவே செய்தன என்பது தான். ஒருவேளை அவ்விடத்தில் புலிகள் இல்லாமல் மக்கள் மாத்திரமே இருந்திருந்தால் அமெரிக்காவோ , இந்தியாவோ நேரிடையாக எதையாவது செய்திருக்கும் என்பது எனதுக் கணிப்பு. .........

ஒசை. சொன்னது…

தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஓர் சீமானை தமிழ்தேசியம் பேசுபவர்கள் கூட ஒரே அணியில் சேர்ந்து நின்று ஆதரிப்பதில்லை என்பது தான். .////

சீமானை எவ்வளவு தூரம் கொச்சைப் படுத்தலாம் என்று சில பிரிவினர் கங்கணம் கட்டி கொண்டு அலைகின்றனர். அவருக்கு சாதி மூலாம் பூசுகின்றனர். திடீர் தமிழ் தலைவர் என்று திராவிட தலைவர்கள் கேலி பேசுகின்றனர். மோடியின் நிர்வாகத்தை புகழ்ந்துவிட்டார் என்பதற்காக இன்னும் தரம் தாழந்து மத அரசியல் பேசுகின்றனர். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழே சிறையில் தள்ளினார் தமிழின தலைவர். ஆனால் ஒருவருக்கும் அறிந்து கொள்ள விருப்பமில்லை. ஒருவனின் தமிழின உணர்வை கொன்று நாமென்ன சாதிக்க போகிறோம் என்று.

பெயரில்லா சொன்னது…

இந்தியாவில் பேச்சுரிமை இருக்கு, ஆனால் அது ஒரு எல்லை மட்டும் தான். கொஞ்சம் மீறினாலும் அடித்து நெருக்கிவிடுவார்கள். இதில் வெள்ளையர் கால பாணி இன்றும் தொடர்கின்றது.

சுப்ரமணி சுவாமி, அருந்ததி ராய் போன்றோர் பேசுவதற்கும் - சீமான் பேசுவதற்கும் ஒரு மயிரிழைதான் வித்தியாசம். அந்த மயிரிழை வித்தியாசம் இருப்பதால் தான் கனடா அரசே அவர் பேசும் போதே கைது செய்து நாடு கடத்தியது .. நியாபகம் இருக்குதா?

கனடாவில் கூட வெளிப்படையாக எலிசபெத் இராணியை கடுமையாக விமர்சித்துப் பாருங்கள்.. பேச்சுரிமை எப்படி வேலை செய்கின்றது என்பதை அறிந்துக் கொள்ள முடியும் ... ?

முழு பேச்சு சுதந்திரம் உள்ள கனடாவிலேயே இப்படி எனில் .. முழமையடைதா இந்தியாவில் அதிகப்படியான பேச்சுகளை அனுமதி அளிப்பார்கள் என யதார்த்தவாதியான எனக்குப் படவில்லை....

பெயரில்லா சொன்னது…

இந்தியா மேற்குலகம் போல முழுமையான ஜனநாகயமாக மாற வேண்டும் என்ற பேரவா? எம்மைப் போன்றோருக்கு நிச்சயம் உண்டு.. அதற்கான குரல் வந்துக் கொண்டே இருக்கும். எதையும் பொறுமையாகத் தான் சாதிக்க முடியும் .. இந்திய விடுதலைப் போர்க் கூட 50-60 ஆண்டுகாலப் பொறுமையானப் போராட்டம் என்பது தானே !!

பெயரில்லா சொன்னது…

// தமிழ் ( ஈழ ) தேசியத்தை நேசிக்கும் ஓர் சீமானை தமிழ்தேசியம் பேசுபவர்கள் கூட ஒரே அணியில் சேர்ந்து நின்று ஆதரிப்பதில்லை என்பது தான். //

தமிழ் ஈழ தேசியமோ, தமிழ் நாட்டுத் தேசியமோ - அரசியல் மேடையில் ஒற்றைக் கருத்துடையவர்களாக எனக்குப் படவில்லை. ஒவ்வொருவரும் ஒரு விதக்கருத்துக் கொண்டுள்ளார்கள். அனைத்தையும் இழுத்துப் பிடித்து ஒன்றாக கட்டி ஒருமித்தக் கருத்து ஏற்படுத்த தமிழ்நாட்டில் நாரதர் என்று எவருமில்லை... !!!

மற்றப்படி சீமான வீராவேசப் பேச்சில் இருந்து விலகி இன்னும் நிறைய செய்யவேண்டி இருக்கு.. செய்தால் சித்தம் பலிக்கலாம்? இல்லையாயின் சித்தம் சிதறலாம்?

பெயரில்லா சொன்னது…

// ஈழத்தில் தமிழர்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்று சிங்கள பெளத்த ஆட்சியாளர்கள் கற்றுக்கொண்டதே இந்திய-காஷ்மீர், சீன-திபெத்திய அடக்குமுறைகளின் மூலம் தான். //

தங்கள் கூற்றில் உண்மையும் இருக்கலாம் ...

இந்திய-காஷ்மீர் பிரச்சனை என்பது 1960களில் தோன்றியது. சீன-திபெத் என்பதும் 1950-களில் தோன்றியது தான். ஆனால் தமிழ்-சிங்கள பிரச்சனை என்பது நீண்டகாலத் திட்டத்துடன் 1915-யிலே சிங்கள-தமிழ் முஸ்லிம் கலவரத்தோடும், 1930களில் சிங்கள குடியேற்றத் திட்டத்துடன் தோன்றியது.

அதே போல இந்திய அரசு காஷ்மீரத்தை தமது நாட்டுக்குள் வைத்திருக்க ஆசைப்படுகின்றது. ஆனால் அது ஒருபோதும் காஷ்மீரத்தில் இந்தி மொழிப் பேசுவோரையோ, பிற இந்தியரையோ குடியேற்றி இன மாற்றியமைக்கும் வேலையோ, அல்லது நேரிடையாக மக்களைக் கடத்திக் கொல்வது, மக்கள் மீது குண்டு வீசுவதையோ செய்ததில்லை.

மக்கள் மீதான இராணுவ அடக்குமுறை காஷ்மீரத்திலும், மணிப்பூரில் உண்டு என்பதை மறுக்கவில்லை.. ஆனால் அது இலங்கை இந்தியாவிடம் இருந்து கற்கும் அளவுக்கு இல்லை , மாறாக இலங்கையிடம் இருந்து இந்தியா கற்குமோ என அச்சமாக இருக்கின்றது..

இதே நிலை தான் சீனா-திபெத்திலும் அங்கும் மக்கள் மீது குண்டுவீசியோ, இன மாற்றங்களை , குடியேற்றங்களை செய்தாதக எனக்குப் படவில்லை சகோதரி .. அரசியல் அடக்குமுறை உண்டு தான். ஆனால் அது மக்கள் மீதான பெரும் போராக இல்லை.

Rathi சொன்னது…

முஹம்மத் ஆஷிக், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு மேல் நான் என்ன சொல்ல.

Rathi சொன்னது…

/ ///தமிழ் ( ஈழ ) தேசியத்தை நேசிக்கும் ஓர் சீமானை தமிழ்தேசியம் பேசுபவர்கள் கூட ஒரே அணியில் சேர்ந்து நின்று ஆதரிப்பதில்லை என்பது தான். ////

இக்பால் செல்வன், முதலில் ஒருவரின் எழுத்திலிருந்து Direct Quote ஒன்றை எடுத்தாளும்போது அதில் நீங்கள் உங்கள் இஸ்டத்திற்கு புதிதாக ஒன்றை சேர்க்காதீர்கள். அது தான் உலகவழக்கு. இங்கே நீங்கள் தனியாக அடைப்புக்குறிக்குள் (ஈழ) என்று திணித்து சேர்த்துக்கொண்டது உங்கள் கருத்து, எண்ணம், சிந்தனை. அது நான் எழுதியதல்ல.

Rathi சொன்னது…

இக்பால் செல்வன், இங்கே என் எழுத்தில் ராஜ நடராஜன், ஜோதிஜி சொன்னதாக நான் சொன்னது என் தளத்தில் என் பதிவுக்கான இரண்டு விமர்சங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இது ஜோதிஜியின் தனிப் பதிவிலிருந்து எடுக்கப்பட்டதல்ல.

//அவரைக் கண்டோ, அலல்து அவர் பேசுவதில் உள்ள நியாய அநியாயங்களைக் கண்டோ யாரும் பயப்படுவதாகத் தெரியவில்லை//

:))) சிரித்து மாளவில்லை எனக்கு. சீமான் யாரையும் தனக்கு பயப்படச் சொல்லவே இல்லை.

//ஆக மொத்தத்தில் ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வின் போது இந்தியா அதிரடியாக இறங்கி இலங்கைக்கு அடிக்க வேண்டும் என எதிர்ப்பார்த்தார்கள்.//

இதை நீங்கள் என் தளத்தில் முன்பும் ஒருமுறை குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகம். இதுவே உங்கள் ஈழம் சம்பந்தமான உச்சபட்ச "அறியாமை".

அதைப்போலவே கனடாவின் பேச்சுரிமை குறித்த உங்கள் கருத்து என்னை வியப்புக்குள்ளாக்கியது.

அப்புறமா, சீமான் கனடாவில் ஏதோ பேசினார் என்கிறீர்களே. அவர் கனடாவின் இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று நாடுகடத்தப்படவில்லை. அன்று சீமான் கனடாவை விட்டு துரத்தப்பட்டதற்கு இந்தியா காரணமே இல்லையா?? சீமானை கனேடிய அதிகாரிகள் விசாரிக்கவில்லை. விசாரித்ததேல்லாம் இந்திய அதிகாரி தான்.

நான் இன்னும் பதிவுலக ஜனநாயகத்தை மதிக்கிறேன். இருந்தாலும், நீங்கள் உங்கள் தளத்தில் இது பற்றியெல்லாம் தெளிவாக எழுதினால் அது பலரை சென்றடையலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

Rathi சொன்னது…

ஓசை, உங்கள் வருகைக்கும், யாதார்த்தபூர்வமான கருத்துக்கும் என் நன்றிகள். தமிழின உணர்வை அழித்தால் தமிழ் தேசியத்தின் நியாயத்தை அழிக்கலாம் என்கிற நினைப்பாய் இருக்கலாம்.

தமிழீழத்தேசியம், தமிழக தமிழ்த்தேசியம் இரண்டுக்குமே குந்தகம் விளைவிக்க நினைப்பது இந்தியா தான். இந்த உண்மையை சீமான் சொல்வதால் தானே இவ்வளவு விமர்சிக்கப்படுகிறார். இந்த விமரசனங்களை தாண்டி சீமானின் நியாயமும் ஒரு நாள் புரிந்துகொள்ளப்படும்.

சார்வாகன் சொன்னது…

இந்திய ஜனநாயகம் என்பது மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரம்,மாநிலத்தில் ஒரு வரம்புக்கு உட்பட்ட சில உரிமைகள் என்பதை அடிப்படையாக கொண்டது.மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப் படும் போது பழைய சமஸ்தானங்கள் எதுவும் எந்த விதத்திலும் மீட்சி பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தப்ப்ட்டது.
______________
ஒவொரு மாநிலத்திலும் இந்திய அரசு வித்தியாசமாக சட்டங்களை நடைமுறை படுத்தும்.காஷ்மீர்,வடகிழக்கு அரச நடைமுறைகள் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தெரியாது,புரியாது.சுய நிர்ணய உரிமை என்றால் பல‌ படித்தவர்களுக்கு கூட தெரியாது.இந்தியா கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை அற்றது.ஆகவே இந்திய தேசியம்(?) தவிர வேறு கருத்தியல்களை பிரிவினைவாதமாகவே அணுகுகிறது.ஆனால் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை இந்த மத்திய அரசால் தீர்க்க முடிந்தது இல்லை. இந்தியா ஒன்றாக இருப்பதும் சந்தை பொருளாதார சந்தையாக வளருவதும் தொடர்புடையன.
________________________
தமிழ் தேசியம் என்பது இப்போது சீமானால் முன்னெடுக்கப் படுகின்றது.ஆனால் இவருக்கு முன்பு இக்கொள்கை கொண்ட அனைவருமே இந்திய தேசியத்தோடு ஏதோ ஒருவகையில்(அடக்குமுறை+சிறை) கல்ந்து நீர்த்து போய் விட்டார்கள்.இவர் இக்கொள்கையில் நீடிக்க வேண்டுமெனில் பல அடக்கு முரைகளை எதிர்கொள்ள நேரிடும்.தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏதோ தமிழ் ,ஈழம் என்று குரல் கொடுப்பது பாவனை மட்டுமே,ஏனெனில் அவர் வெற்றியில் இக்கொள்கை கொஞ்சம் உதவி செய்து இருக்கலாம் .தமிழகத்தில் சீமான சில சமயம் பேசுவதை பார்த்தால் இப்படி எல்லாம் தமிழகத்தில் பேச முடியுமா என்று ஆச்சரியப் படவைக்கிறது.

தனி ஈழம்,த்மிழ் தேசியம் இரண்டையுமே இந்திய‌ ,தமிழக அரசுகள் வருங்காலங்களில் வெளிப்படையாகவே எதிர்க்கும்,அடக்குமுறை சட்டங்கள் அமல்படுத்தப் படும்எப்போது நடக்கும் என்பதே கேள்வி.

Rathi சொன்னது…

சார்வாகன், உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. நான் படிக்க வேண்டிய தளங்களில் ஒன்று என்று புரிந்துகொண்டேன். நன்றி.

அருமையான விளக்கமும், கருத்தும். இலங்கையில் எப்படி சட்டம் போட்டு தமிழ்த்தேசியம் என்கிற கருத்தியல் தடை செய்யப்பட்டதோ, அதே போல் இந்தியாவிலும் நடக்கலாம் என்பதே என் கணிப்பும். ஆனால், நீங்கள் சொல்வது போல் அது எப்போது என்று தான் தெரியவில்லை.

தமிழ்த்தேசியம் என்கிற கருத்தியல் ஆரம்பத்தில் திராவிட கழகத்தால் முன்வைக்கப்பட்டு பின்னர் அவர்கள் தேர்தல், அரசியலைச் சந்தித்தபின் அதை கைவிட்டு விட்டார்கள் என்று படித்திருக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

@ தமிழ் ஈழ தேசியம் என்று திணித்தது நான் தான் .. நான் அதனை ரதி சொன்னவை எனக் குறிப்பிட வில்லை என்பதையும் கவனிக்க... வலைப்பதிவுகளில் மேற்கோள் காட்டும் போது இப்படித்தான் காட்ட வேண்டும் என்ற வரன்முறையும் உலக வழக்கும் இல்லை ....

அதை எடுத்தாண்டுள்ளேனே தவிர ரதி சொன்னார் என நான் கூறவில்லையே.

சரி விடயத்துக்கு வருவோம் .. தமிழ் தேசியத்தை நேசிக்கும் சீமான் .. தமிழ் தேசியம் என்ன என்பதை விளக்கியுள்ளாரா? அவர் இது வரை விளக்கியது எல்லாம் தமிழ் ( ஈழ ) தேசியத்தைத் தான் .. என்பதையும் நினைவில் கொள்ள....

தமிழ் ஈழ தேசியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் பருப்பை வேக வைக்க முடியாது ... அது ஈழத்திலயே வேகுமா என்பது தனிக் கதை.. அதனுள் நான் நுழைய விரும்பவில்லை ...

சீமான் தமிழ்நாட்டுக்கு என்ன செய்துள்ளார்? அல்லது செய்யப் போகின்றார்... என்பதே மக்களின் கேள்வி .... ?

தனித் தமிழ் நாடு அமைத்து பிரதமராக அமரப் போகின்றாரோ

பெயரில்லா சொன்னது…

@ ரதி - // :))) சிரித்து மாளவில்லை எனக்கு. சீமான் யாரையும் தனக்கு பயப்படச் சொல்லவே இல்லை. //

சீமானைக் கண்டு யார் பயப்படுகின்றார்கள் ? அல்லது பயப்பட வேண்டும் என தாங்கள் சொல்லவருகின்றீர்கள் அல்லது விரும்புகின்றீர்கள் ...

சீமான் தமிழ்நாட்டில் பத்தோடு பதினொன்று. அவர் அரசியல் வாதியும் அல்ல, டைரக்டரும் அல்ல, நடிகரும் அல்ல, சமூகப் போராளியும் அல்ல, இலக்கியவாதியும் அல்ல..

அனைத்திலும் வாய்வைத்து விட்டு திரியும் ஒரு கத்தல் பேர் வழி.. இது எனது தனிப்பட்டக் கருத்து என தாங்கள் நினைத்தால் நன்றாக இன்னும் பலமுறை சிரித்துக் கொள்ளலாம் ..

பெயரில்லா சொன்னது…

@ ரதி - // ஈழம் சம்பந்தமான உச்சபட்ச "அறியாமை". //

பரவா இல்லை அறியாமையாகவே இருக்கட்டுமேன், அறியா பேதைக்கு கொஞ்சம் விளக்கினால் விளங்கிக் கொள்வேனே ..

ஈழப் பிரச்சனையில் முள்ளிவாய்க்காலின் போது இந்தியா என்ன செய்திருக்க வேண்டும் என தாங்களோ அல்லது ஈழப் புலி ஆதரவாளர்களோ விரும்பினார்கள் ?

விளக்கி ஒரு பதிவு போடலாமே !

பெயரில்லா சொன்னது…

@ ரதி - // கனடாவின் பேச்சுரிமை குறித்த உங்கள் கருத்து என்னை வியப்புக்குள்ளாக்கியது. //

கனடாவின் பேச்சுரிமைக் குறித்து மெய்யாலுமே எனக்கு 100 சதவீதம் தெரியாது. நான் இங்கு பிறந்தனன் அல்ல, கல்வி கற்றனன் அல்ல, மூன்றாண்டுகள் கூட ஆகவில்லை.. குப்பைக் கொட்ட இந்தியாவில் இடம் இல்லாத படியால் இங்கு கொட்டிக் கொண்டிருக்கின்ற .. கனடாத் தரத்தில் ஒரு ஏழை கனடா வாழ் அந்நியன் ... பித்தாலட்டம் செய்யத் தெரியாது, கள்ள மட்டைத் தெரியாது, இன்சுரன்ஸில் ஏமாற்றத் தெரியாது இன்னும் என்னவோ செய்து பிழைக்கத் தெரியாத ஒரு சராசரித் தமிழன் ... அவ்வளவே ...

பேச்சுரிமைக் குறித்து எனதனுபவத்தில் சொன்னேன் .. கொஞ்சம் நன்றாக விளக்கினால் அறிந்துக் கொள்வேன் ...

பெயரில்லா சொன்னது…

@ ரதி - // சீமான் கனடாவில் ஏதோ பேசினார் என்கிறீர்களே. அவர் கனடாவின் இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று நாடுகடத்தப்படவில்லை. //

சீமான் இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் நாடுக்கடத்தப்பட்டார் எனக் கூறவில்லையே. பேச்சுரிமை இருக்கும் எனில் ஏன் அவரை நாடுக் கடத்தினார்கள். பேச விட்டு இருக்கலாமே..

அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மாஸ் உருவாக்கினால் எவனும் விடமாட்டான். கனடாவிலேயே இப்படி என்றால் இந்தியாவில் விடுவார்களா?

அது நிற்க. சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசி அவருக்கு ஒன்றும் மரணத்தண்டனைக் கொடுக்கவில்லை. நல்ல திடகாத்திரமாகத் தான் வெளியில் சுற்றித் வருகிறார்.

இதனை இலங்கையில் நின்று சிங்கள அரசுக்கு எதிராகப் பேசி இருந்தாலோ,

புலிகள் ஆட்சியில் வன்னியில் நின்று ஈழ இறையாண்மைக்கு எதிராகப் பேசி இருந்தாலோ -- என்னா ஆகி இருந்திருக்கும் என்பதை யோசித்துவிட்டு பேசுங்கள் முதலில் ...

பெயரில்லா சொன்னது…

@ ரதி - // சீமான் கனடாவை விட்டு துரத்தப்பட்டதற்கு இந்தியா காரணமே இல்லையா?? சீமானை கனேடிய அதிகாரிகள் விசாரிக்கவில்லை. விசாரித்ததேல்லாம் இந்திய அதிகாரி தான். //

இந்தியாவின் தூண்டுதலால் தான் கனடாவில் இருந்து சீமான் நாடுக் கடத்தப்பட்டார் என்பதற்கு போதிய ஆதாரங்களை எடுத்து வையுங்கள் பார்க்கலாம்.. எந்த அதிகாரியால் எப்போது விசாரிக்கப்பட்டார், கனடாவை இந்திய அரசு நிர்பந்தித்தது என்பதற்கான ஆதாரம்.. என்ன ? முடியாது ! ஏனெனில் கட்டுக் கதைகளை நம்புவதில் ஈழவர்கள் பலர் நெம்பர் ஒன் .. !!! உண்மையை அலசி ஆராய அவர்களுக்கு நேரமில்லை அல்லது விருப்பமில்லை அல்லே !

ஆதரங்களோடு எழுதுங்கள் தங்களின் கூற்றுக்கு தலைவணங்குகின்றேன் ....

பெயரில்லா சொன்னது…

@ தமிழின உணர்வும், தமிழ் நாட்டுத் தேசிய அங்கீகாரமும் நிச்சயம் வேண்டும் .. அது கனடாவின் க்யுபெக் தேசியத்தைப் போன்று மக்கள் விருப்பத்தாலும், வாக்கு அரசியலும், ஜனநாயக வழிமுறைகளாலும் வர வேண்டும் ..

மேடைகளில் கத்துவதாலும், தீவிரவாதிகளை ஆதரித்து அதைப் போலவே தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும் என்பதும், தமிழ் அல்லாதோரை அடித்து விரட்டியும் தான், தமிழ் நாட்டுத் தேசியம் வளர்க்க நினைத்தால். அது அப்பட்டமான பாசிசம்..

பால் தாக்கரே, வட்டேல் நாகராஜுக்கும், சீமானுக்கு பிறகு என்ன வேறுபாடு இருக்க முடியும் ?

தமிழ்நாட்டுத் தேசியம் அங்கீகரிக்கப்பட்டால் தமிழ் ஈழத் தேசியத்துக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பதே ஐயம் தான். இரண்டும் வெவ்வேறானவை .. வெவ்வேறு வழிகளில் அடைய வேண்டியவை ...........

சீமான் அலை என்றெல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் சென்னை முதல் குமரி வரை சென்று இயல்பான மக்களிடம் பேசிப் பாருங்கள் நன்கு புலப்படும் ....

தமிழ்நாட்டில் மக்கள் பொருளாதார வளர்ச்சியையும், நல்ல வாழ்க்கைத் தரத்தையுமே முதன்மையாக விரும்புகின்றார்கள். அங்கு ஒரு மாநிலமும், தமிழ் மொழிக்கு ஒரு இருப்பிடமும் இருந்தாலே போதும் என்று தான் சாதரண மக்களின் சிந்தனை யோட்டம்..

திணிப்பின் மூலம் எந்த போராட்டமும் வெற்றியடையாது ( ஈழம், பயஃப்ரா ), மக்கள் விரும்பினால் மாற்றம் பெற 4 வாரம் போதும் ( எகிப்து ) ..............

பெயரில்லா சொன்னது…

@ ரதி - // தமிழீழத்தேசியம், தமிழக தமிழ்த்தேசியம் இரண்டுக்குமே குந்தகம் விளைவிக்க நினைப்பது இந்தியா தான். இந்த உண்மையை சீமான் சொல்வதால் தானே இவ்வளவு விமர்சிக்கப்படுகிறார். இந்த விமரசனங்களை தாண்டி சீமானின் நியாயமும் ஒரு நாள் புரிந்துகொள்ளப்படும். //

ஆம் ! அனைத்துக்கும் காரணம் இந்தியா மட்டும் தான். வேறு யாரும் இல்லை. !!!

விரைவில் இந்தியா நடுவண் அரசுக்கும், தனித் தமிழ் நாடு கேட்டுப் பெரும் போராட்டம் வெடிக்க வேண்டும். பொருளாதாரம் அருகி, தமிழ்நாட்டுத் தமிழனும் அகதியாக உலகெங்கும் அலைய வேண்டும் என்பது போல் உள்ளது ....

ஏன் தமிழ்நாட்டில் குதர்க்கத்தை ஏற்படுத்த முயல்கின்றார்கள் எனத் தெரியவில்லை. ஒரு வேளை இந்தியா ஈழத்தமிழகத்தில் மூக்கை நுழைத்தமைக்கு பழித்தீர்க்கவோ ?

பெயரில்லா சொன்னது…

@ சார்வாகன் - இந்தியா என்பது ஒரு loose federation ... அவ்வளவே .. இந்திய யூனியனை ஆங்கிலேயேர்கள் ஒரே நாடாகத் தான் ஆண்டார்கள் அதுவே தொடர்கின்றது. மொழி வழி மாநிலம் தேவை என்பதற்காக மாநிலங்களுக்கு சில அதிகாரங்களைப் பகிர்ந்தளித்துள்ளார்கள்.

சொல்லப் போனால் தமிழ் தேசியம் என்ற ஒன்றே புதிய சிந்தனைத் தான். அது மொழிவாரி மாநிலத்தில் இருந்து கிளைத்தது தான்.

வரலாற்றுக் காலம் முதல் தமிழகம் ஒரே நாடாக இருந்ததில்லை .... சேர, சோழ, பாண்டி என மூன்றாகவே இருந்தன. இன்றுக் கூட அது கேரளம் - தமிழ்நாடு என இரண்டாகத் தான் உள்ளது.

திராவிட இனங்களை உள்ளடக்கி திராவிட நாடு அமைக்கவே பெரியார் உட்ப்ட பலர் விரும்பினார்கள்.. ஆனால் அது பலிக்காமல் போனது. காரணம் அப்போதையக் காலத்தில் மக்கள் அதை விரும்பவில்லை ... அதே சமயம் இந்திய தேசத்தில் திராவிட இனங்கள் வஞ்சிகப்படுமோ என அஞ்சினார்கள்.. ஆனால் மொழி வாரி மாநிலம் கிடைத்தமையும், சீனாவின் அச்சுறுத்தல் இருந்தத்தாலும் - இந்திய தேசத்தில் ஐக்கியமானார்கள். அதே சமயம் மொழி வாரி மாநிலம் ஊடாக தனித்துவத்தைப் பேணினார்கள்.

இன்று தமிழ் தேசியம் கோருவோரின் உச்சக் கட்ட எண்ணம் எதுவென குழப்பமாகவே உள்ளது ?

தமிழ்நாடு விடுதலைப் படைப் போல தனிநாடு எடுப்பது தானா ? அல்லது loose federation -யில் இருந்து பூரண மாநில சுயாட்சி வாங்குவதா?

சீமான் விளக்குவாரா?

தனிநாடாக பிரியும் அளவுக்கு இந்தியாவில் ஒருக் குறையும் இல்லை தமிழ்நாட்டுக்கு .. நதி நீர் பிரச்சனையும், மீனவர் பிரச்சனையையும் சீரியஸாக மத்திய அரசு தீர்த்துவைத்தாலே போதுமானது தானே !!!

பெயரில்லா சொன்னது…

@ ரதி - // தமிழ்த்தேசியம் என்கிற கருத்தியல் ஆரம்பத்தில் திராவிட கழகத்தால் முன்வைக்கப்பட்டு பின்னர் அவர்கள் தேர்தல், அரசியலைச் சந்தித்தபின் அதை கைவிட்டு விட்டார்கள் என்று படித்திருக்கிறேன். //

தமிழக வரலாறைப் புரட்டிப் பார்க்கவும். தமிழ் தேசியம் என்று திராவிட கழக்கத்தால் முன்வைப்படவில்லை. அது திராவிட தேசியம் .. அது அனைத்து தெனிந்திய இனங்களை உள்ளடக்கியது ...

அவர்கள் அதனைக் கைவிட்டக் காரணங்கள் ஏராளமானவை ? அண்ணாவிற்கு இல்லாத அறிவா சீமானுக்கு .. போங்க.. இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் வீட்டில் உலைக் கொதிக்காது....

தமிழ் ஈழ மக்கள் பலர் வீட்டில் இன்று உலைக் கொதிக்கவில்லை , அவர்களுக்கு சோறு போட வழியிருக்கு செய்யலாமே ? அதன் பின் தனித் தமிழீழம் குறித்தும், அப்புறம் தனித் தமிழ் நாடுக் குறித்தும் பேசுவோம் ....

சார்வாகன் சொன்னது…

நண்பர் இக்பால் செல்வன்,
இவை என்னுடைய சுய புரிதல்கள் மட்டுமே

1.// இந்திய யூனியனை ஆங்கிலேயேர்கள் ஒரே நாடாகத் தான் ஆண்டார்கள் //
பிரிட்டிஷ் இந்தியாவில் பல சமஸ்தானங்கள் இருந்ததும்,சுதந்திரத்திற்கு பிறகே அவை இணைக்கப்பட்டன.

2.//இன்று தமிழ் தேசியம் கோருவோரின் உச்சக் கட்ட எண்ணம் எதுவென குழப்பமாகவே உள்ளது ?//
தமிழர்கள் உரிமைகள் பெற்று சுயமரியாதையுடன் வாழ வேண்டும்..தமிழர்கள் என்பவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற‌ தமிழகத்தில் வாழும் அனைவரையும் குறிக்கும்.

3,//தமிழ்நாடு விடுதலைப் படைப் போல தனிநாடு எடுப்பது தானா ? //

தேவையில்லை.

4//அல்லது loose federation -யில் இருந்து பூரண மாநில சுயாட்சி வாங்குவதா?//
தமிழருக்கு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களுக்கும் வேண்டும்.பரஸ்பர புரிந்துணர்வோடு கூடிய கூட்டாட்சி.

5. //தமிழ்நாட்டுக்கு .. நதி நீர் பிரச்சனையும், மீனவர் பிரச்சனையையும் சீரியஸாக மத்திய அரசு தீர்த்துவைத்தாலே போதுமானது தானே //

காவிரி நீர் தமிழ்நாடி,கர்நாடகா,கேரளா தொடர்புடைய பிரச்சினை .கர்நாடக அரசுகள் ஒரு தீர்வுக்கு இதுவரை ஒத்து வரவில்லை.இது போல மாநிலங்களுகிடையேயான எந்த பிரச்சினையுமே மத்திய அரசால் தீர்க்க முடியவில்லை.பாகிஸ்தான், இந்தியா,பங்களாதேஷ் நதிநீரை மிக எளிதாக பகிர்ந்து கொள்கின்றன.இந்த அரசமைப்பில் மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகளை தீர்க்க இயலாது.மாநிலங்களுக்கிடையே உள்ள பொருளாதார ,,இயற்கை வளங்கள் பங்கீடு குறித்து சில வழிவகைகள் அரசியலமைப்பு சட்டங்களில் ஏற்படுத்தி ,எதிர்காலத்தில் இம்மாதிரி பிரச்சினைகள் ஏற்படாமல் பார்க்க வேண்டும்.


மீனவர் பிரச்சினை என்று சாதரண்மாக சொல்லி விட்டீர்கள்.இதுவரை எந்த நாட்டிலாவது அண்டைநாட்டால் இவ்வளவு மீனவர்கள் கொல்லப் பட்டு இருக்கிறார்களா? எல்லை தாண்டினால் உலக சட்டத்தின் படி கைது செய்து தண்டனை கொடுக்கட்டும்.

தீர்க்கும் எண்ண‌ம் உண்டா?

இதுவரை செய்தது என்ன?

எப்போது தீர்ப்பார்கள் என்று கூற முடியுமா?

சார்வாகன் சொன்னது…

நண்பர் செல்வன்
இந்த திராவிட அரசியல் பலரை இருட்டடிப்பு செய்தது.அதில் ஒருவர் தமிழ் அரசு கழகம் கண்ட சிலம்பு செல்வர் திரு ம.பொ சிவஞானம் அவர்கள்.தமிழ் தேசியத்தை 1946 முதல் அரசியல் கொள்கையாக கொண்டவர்.சென்னை திருத்தணி தமிழ்நாட்டுடன் இருக்க போராடியவர்.அவர் எழுதிய சில கட்டுரைகள் தருகிறேன். படித்து பாருங்கள்.

தமிழ்த்தேச உருவாக்கச் சுவடுகள் : ம.பொ.சி

http://maposi.blogspot.com/2010/12/blog-post_20.html

பெயரில்லா சொன்னது…

@ சார்வாகன் - // பிரிட்டிஷ் இந்தியாவில் பல சமஸ்தானங்கள் இருந்ததும்,சுதந்திரத்திற்கு பிறகே அவை இணைக்கப்பட்டன. //

உண்மை தான். ஆனால் பிரித்தனியா இந்தியாவில் இந்த சமஸ்தானங்கள் பிரித்தானிய இந்தியாவுக்கு கப்பம் கட்டும் சிற்றரசுகளாகவே இருந்தன .... இந்திய யூனியனை ஆங்கிலேயர்கள் ஒரே நாடாக தான் ஆண்டார்கள் .. அவர்களின் நேரிடை ஆட்சி இந்திய யூனியனிலும், மறைமுக ஆட்சி சமஸ்தானங்களிலும் இருந்தன ... கோவா, புதுச்சேரி தான் தனியாக இருந்தன ...

// தமிழர்கள் உரிமைகள் பெற்று சுயமரியாதையுடன் வாழ வேண்டும்..தமிழர்கள் என்பவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற‌ தமிழகத்தில் வாழும் அனைவரையும் குறிக்கும். //

இதைத் தான் நானும் குறிக்கின்றேன். ஆனால் ரதி அல்லது அவர்களைப் போன்றோர் பேசும் தமிழ் தேசியம் எதுவாக இருக்கும் என அறிய ஆவல் .. ஏற்கனவே கூட்டாஞ்சோறில் ரதியினைப் பற்றி ஒரு பதிவைப் படித்தேன் ... இவர்கள் கூறும் தமிழ் தேசியம் தமிழ் நாட்டை தனிநாடாக ஆக்க வேண்டும் என்பதே .... !!! என நான் நினைக்கின்றேன் ...

// தமிழருக்கு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களுக்கும் வேண்டும்.பரஸ்பர புரிந்துணர்வோடு கூடிய கூட்டாட்சி. //

இந்தியாவில் வாழும் அனைத்து தேசிய இனங்களுக்கு பூரண சுயாட்சியும், கூட்டாட்சியும் தேவை, அதுவே போதுமானதும் கூட ....

// மாநிலங்களுகிடையேயான எந்த பிரச்சினையுமே மத்திய அரசால் தீர்க்க முடியவில்லை //

இதற்கு காரணமே நீர்வளங்கள் மாநில அரசின் கைக்குள் உள்ளன. நதிநீர் தேசிய மயமாக்கினால் பாராளமன்றத்திலேயே இதற்கு தீர்வு கிட்டும், நதி நீர்கள் இணைக்கப்படலாம் ...

மத்திய அரசால் நேரிடையாக மாநில ஆட்சியில் குறுக்கிட போதிய அதிகாரம் இல்லை என நினைக்கின்றேன். அது ஒருவகையில் நல்லதும் கூட ...

// இவ்வளவு மீனவர்கள் கொல்லப் பட்டு இருக்கிறார்களா //

எந்த நாட்டிலும் கொல்லப்பட்டது இல்லைங்க.. பாகிஸ்தான் கூட பக்குவமாகத் தான் நடக்குது. இலங்கையில் மட்டும் தான் இப்படி, இலங்கையில் சென்று மீன் பிடிப்பதில் அங்குள்ள தமிழர்களுக்கும் விருப்பம் இல்லை ... ஒரு தமிழ் சிங்கள பிரச்சனையாக எனக்குப் படவில்லை. இது பாக் நீரிணை மீது இலங்கைத் தீவினர் முழு ஆளுமை செலுத்த எத்தனிக்கும் சர்வாதிகாரமாக நான் பார்க்கின்றேன்.

மீனவர் பிரச்சனையில் கண்டிப்பாக தீர்வு ஏற்படுதல் வேண்டும். காங்கிரஸ் அரசு இந்த தேர்தல் மூலமாக மூக்குடைப் பட்டதை உணர்ந்திருக்கும் என நம்புகின்றேன் ....

பெயரில்லா சொன்னது…

@ சார்வாகன் - மா.பொ.சியின் நினைவு மீட்டமைக்கும், சுட்டிக்கும் மிக்க நன்றிகள். அறிந்திருக்கின்றேன். திருத்தணி மீட்பு போராட்டத்தில் வெற்றிக் கண்டார். ஆனால் தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் சேர்ப்பில் தோல்வி கண்டார். மறக்க முடியாத மாமேதை ...

தமிழ் தேசம் உருவாக பாடுபட்டவரில் அவரும் ஒருவர் என்பதையும், முதன்மையானவர் என்பதைய்ம் யாம் மறக்க இயலாது சகோ.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!எப்படியிருக்கீங்க?
சுப்ரமணியன் சுவாமியின் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக்கு காரணமென்ன என்ற தேடலில் www.janataparty.org என்ற அவரது தளம் சென்றதில் முழுமையான பதிவுகள் என்று இல்லாத போதும் முன்பு ஒருமுறை படிக்க கிடைத்த வாட்டர்கேட் ஊழலின் சம்பவங்களை விவரிக்கும் நிக்சனின் வெள்ளை மாளிகை கவுன்சல் John Dean எழுதிய Blind ambition எப்படி அமெரிக்காவின் அரசியலை விவரிக்கிறதோ அது போன்றதொரு வாசிப்பு அனுபவம் சுப்ரமணியன் சுவாமியின் தளத்தில் இந்திய அரசியலின் முகங்களைக் காண நேர்ந்தது.அங்கிருந்து வேறு குறிப்புக்கான கூகிள் தேடல் உங்கள் தளத்தில் இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டது.

எனது கருத்தை குறிப்பிட்டமைக்கு நன்றி.