மே 18, 2011

புலம்பெயர் தமிழர்களும் (கனடா) ஈழமும்!

தமிழர்கள் நாங்கள் புலம் பெயர்ந்து உலகின் எந்த மூலையில் சிதறிக்கிடந்தாலும் எங்களை ஒன்றாய் சிந்திக்க, பேச, செயற்பட வைப்பது 'ஈழம்' என்கிற ஒற்றைச்சொல்லும் அதன் உயிர்நாடியும் தான். நாங்கள் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடிகள்! வரலாறு சொல்கிறது. அப்படிப்பட்ட வரலாற்று இனமான பெருமைக்கும் எங்களிடம் குறைவில்லை, சிறுமைக்கும் குறைவில்லை. 

ஒரு நாள் வேலைத்தளத்தில் என்னோடு பணிபுரிபவர் சொன்னார் உங்கள் தமிழ் சமூகத்திலும் "Millionaire" இருக்கிறார்கள் என்று. நான் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, "ஒ! அப்படியா!" என்றேன். நான் யோசித்ததைப் பார்த்துவிட்டு அவர் சிரித்துக்கொண்டே கேட்டார், இதற்கேன் இவ்வளவு யோசித்து பதில் சொல்கிறாய் என்று. நான் சொன்னேன் ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். சராசரியாய் ஒரு சாதாரண வியாபாரம் தொடங்கவோ அல்லது அதை கொண்டுநடத்தவோ கிட்டத்தட்ட அவ்வளவு பணம் கனேடிய டொலர்களில் தேவை. அப்படிப் பார்த்தால் உன் பார்வையில் எங்களில் பல லட்சாதிபதிகள் இருக்கிறார்கள் என்று. 

அடுத்து கல்வியை எடுத்துக்கொண்டாலும் எம் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் புலத்தில் எந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கும் குறைவில்லாத வகையில் கல்வியில் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு என் குடும்பத்தில் இருந்தே உதாரணங்கள் காட்டலாம். அது ஒருபுறமிருக்க, புலம்பெயர் தமிழ் சமூகம் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வியக்க வைக்கும். வேற்றினத்தை சேர்ந்தவர்களிடமிருந்தே இதை நான் கேட்டிருக்கிறேன். உங்கள் சமூகத்தில் உள்ளவர்கள் கல்வியை நிறையவே மதிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு சரஸ்வதி பூஜை பற்றி எல்லாம் குறிப்பிட்டார் ஒருவர். ஓர் பாரம்பரிய யூத இனத்தை சேர்ந்தவராய் இருந்து இதை அவர் சொன்னது தான் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தியது. அடிக்கடி அவர் எனக்கு சொல்வது நீங்கள் இங்கே Toronto வில் இருக்கும் வேற்றின சமூகத்திற்கு உங்கள் பிரச்சனைகளை சொல்லி புரியவைக்கவேண்டும் என்பது தான்.


இன்னோர் உதாரணம் அடிக்கடி அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுவது, நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தீமோர் மற்றும் சூடானிலிருந்து தெற்கு சூடான் சமூகத்தின் கல்வியறிவு வீதத்தோடு ஒப்பிடும்போது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சமூகம் கல்வியில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் முன்னணியில் இருக்கிறது என்பது தான். இருந்தும் அந்த வளம் என்பது ஈழவிடுதலை நோக்கிய முயற்சிகளில் முற்றுமுழுதாக பயன்படுத்தப்படவில்லை என்பதும் தான். அவர்களின் அரசியல் களம் வேறாக இருக்கலாம். ஆனாலும், அந்த முயற்சி அவர்களிடமிருந்து புலம்பெயர் சமூகமான நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
தனியார்துறை, பொதுத்துறை, சேவைகள், அரசியல் என்று தமிழர்களும் புலம்பெயர் தேசங்களில் கல்வி மூலம் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த முன்னேற்றம் ஒருவரின் சுயமுன்னேற்றமாக மட்டுமின்றி புலத்தில் எங்களை பண்பான, அறிவுசார் தகமைகள் கொண்ட ஓர் இனமாகவும் பெருமையோடு அடையாளப்படுத்துகிறது. எவ்வளவுதான் படித்து முன்னேறினாலும் எங்கள் வேர்களை மறக்காமல் விடுதலையை நோக்கிய பயணத்தில் தங்கள் நேரம், அறிவு, துறைசார் வல்லமை என்பவற்றையும் ஈழத்திற்காய் அற்பணித்தவர்கள், அற்பணிப்பவர்கள் நிறையப்பேர்.

கனேடிய தமிழர் தேசிய அவையின் முயற்சியில் கனேடிய சமூகத்தில் ஓர் சமூகமாக இன்று இரத்ததானத்தில் முன்னணியில் இருப்பவர்கள் என்றால் அது ஈழத்தமிழர்கள் தான். தானங்களில் சிறந்தது இரத்ததானம் என்பார்கள். அதையும் எம்மவர்கள் வன்னியில் மாண்டவர்கள் நினைவாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எத்தனையோ முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டாலும் இது தான் அதிகம் அறியப்பட்ட ஒன்று. ஆனால், வன்னியில் தண்ணியே இல்லாமல் நாவறண்டு செத்துப்போன எம் குழந்தைகளை நினைக்கூட இங்கே பெரும்பாலானவர்கள் மறந்தே போகிறார்கள் என்பதும் ஓர் கசப்பான யதார்த்தம்.

இங்கேயெல்லாம் தமிழன் நிற்கிறான்!!! 

பிறகு, எங்கே தலை குப்புறவா விழுகிறான் என்று யோசிக்கிறீர்களா! 

தமிழன் தலைகுப்புறவா விழுந்திருக்கிறேன் என்பது கூட தெரியாத நிலையில் இருக்கிறானோ என்று யோசிக்க வைக்கும் நிலையில் இருக்கிறான் என்பது தான் கவலையளிக்கும் விடயம். கடந்த முள்ளிவாய்க்கால் முடிவுக்காலங்களில் தமிழர்களிடம் நிறையவே வியக்கும் படியான ஒற்றுமை இருந்தது என்னவோ உண்மை தான். இடையில் கொஞ்சகாலம் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் போய்விட்டது. அதற்கு காரணம், ஒன்று பாரிய இழப்புகளில் இருந்து உளவியல் ரீதியாக மீளமுடியாமல் தமிழர்களுக்கு ஈழம் குறித்த அடுத்த செயற்பாடு என்ன என்கிற குழப்பம். 

அடுத்து, எந்த செயற்பாடாயினும் அதை உண்மையான ஈழம்பற்றிய அக்கறையோடு செய்பவர்கள் யார் என்கிற பயம் கலந்த இன்னோர் குழப்பம். சிங்கள கைக்கூலிகள் எம் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஊடுருவியதும், உளவியல் தாக்கத்தை உண்டுபண்ணுவதும் இன்றுவரை தொடர்கிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அண்மையில் ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் தோற்றுப்போனது. இரண்டு தமிழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் அது தமிழர்களின் அரசியல் நிலையை கனடா போன்ற ஓர் நாட்டில் ஸ்திரப்படுத்தாதா! 

சிறிது காலத்திற்கு முன் கே.பி. என்கிற பத்மநாதன் அழைத்தார் என்று ஓர் கூட்டம் ஈழத்தில் வடக்கில் பொருளாதார முயற்சிகளில் பங்கெடுக்கிறோம் பேர்வழி என்று கிளம்பிப் போனார்கள். அது குறித்த எந்தவொரு விளக்கமும் தமிழ் ஊடகங்கள் மூலமாகவேனும் சரியான முறையில் தமிழர்களுக்கு அறியத்தரப்படவில்லை என்பது என் கருத்து. ஒருவேளை அதை அறியத்தந்து நான் கவனிக்காமல் விட்டேனா தெரியவில்லை.

ஈழத்தில் வடக்கில் பொருளாதார முயற்சிகளில் எம்மவர்கள் கை ஒங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. அது பசில் ராஜபக்க்ஷேவை மீறி நடக்குமா என்கிற யத்தார்த்தை கொஞ்சம் ஒதுக்கிவிட்டுப் பார்ப்போம். ஆனால், அதை ராஜபக்க்ஷேவின் பிடியில் இருக்கும் பத்மநாதனின் அழைப்பின் பேரில் போய் செய்தோம் என்பது தான் எனக்கு எரிச்சலாய் பட்டது. இப்படி தமிழ் செயற்பாட்டாளர்களாகவும் அதே நேரம் ராஜபக்க்ஷேக்களின் உறவை பேணியது பற்றிய சரியான ஓர் விளக்கம் தமிழ் சமூகத்திற்கு கொடுக்கப் படாமையும் தமிழர்கள் யார் எதிரி, யார் நண்பன் என்கிற குழப்பத்தின் குட்டைக்குள் தள்ளப்பட்டது தான் மிச்சம். ராஜபக்க்ஷேக்களுடன் ஈழம் பற்றி எங்களின் உரிமைகள் பற்றி பேசுவதில் தவறில்லை. ஆனால், அது குறித்த மிகத் தெளிவான விளக்கம் தமிழ்சமூகத்திற்கு அளிக்கப்படவேண்டும். இல்லை என்றால் அது தவறான புரிதலுக்கே வழிசமைக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் உங்களை யாராவது பிரதிநித்துவப் படுத்துகிறோம் என்பவர்களிடம் அவர்கள் செயல்களுக்கான விளக்கத்தை விலாவாரியாய் கேளுங்கள். நிச்சயமாய் அவர்களுக்கு என்றோர் தளம் இருக்கும். அங்கே சென்று அவர்களின் பணித்திட்டம் (Mission), தொலைநோக்கு (Vision) என்பன பற்றி தெரிந்துகொள்ளுங்கள், கேள்வி கேளுங்கள், அவர்களிடமிருந்து சரியான, திருப்தியான பதில் கிடைக்கும் வரை. உங்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம் என்பவர்களுக்கு, உங்களுக்கு பதில் சொல்லும் பொறுமையும், கடமையும் அவர்களுக்கும் உண்டு என்பதை தெளிவுபடுத்துங்கள். உங்களுக்கு யார் திட்டம் சரியென்று படுகிறதோ அவர்களோடு உங்களை உறுப்பினராய் இணைத்துக்கொள்ளலாம். நிச்சயமாய் புலம்பெயர் தேசங்களின் சட்டதிட்டங்களை மதித்து அதற்கேற்றாற்போல்  தான் எந்தவொரு அமைப்புமே இயங்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

கனடாவில் நான் கவனித்த வரையில் பெரும்பாலும் இவ்வாறான அமைப்புகளை சேர்ந்தவர்கள் தமிழ் ஊடகங்கள் மூலம் தங்கள் செயற்பாடுகள் பற்றி பெரும்பாலும் விளக்கம் அளிக்கிறார்கள். அவ்வாறான அமைப்புகளை சாராமல் அநாமதேயமாய் வருபவர்களிடம் கவனமாய் இருப்பது நலம். 

சில சமயங்களில் சில அமைப்புகளே என்னைப் போன்றவர்களை குழப்பத்துக்குள் தள்ளி விடுவார்கள். கடந்தவருடம் நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியில் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களும் உழைத்துக்கொண்டிருக்க, கனடாவில் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆரம்பத்தில் அது பற்றி அதிகம் கவனம் செலுத்தாதவர்களாக காணப்பட்டார்கள். உண்மையில் இவர்கள் ஒன்றும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அக்கறை இல்லாதவர்கள் அல்ல. கனேடிய மண்ணில் ஈழத்தமிழர்களை தேசிய நீரோட்ட அரசியலில்  பிரதிபலிக்கும் நம்பகரமான ஓர் முக்கிய அமைப்பு. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அடுத்து என்னை யார் பிரதிநிதித்துவப் படுத்தவேண்டும் என்று யாராவது கேட்டால் கனேடிய தமிழ் காங்கிரஸ் என்று தான் சொல்வேன். கனடாவுக்கு அகதிகள் கப்பலில் வந்தபோதெல்லாம் கனேடிய சட்டதிட்டங்களின் படி அவர்களின் உரிமைகளுக்காக தங்கள் நேரம், பசி, தூக்கம் மறந்து உழைத்தவர்கள். ஆனால், நாடுகடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியில் இவர்கள் ஏன் விலகியே நின்றார்கள் என்பது எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று. OK! Past is past!

ஆனாலும், இன்று நாடு கடந்த தமிழீழ அரசு முயற்சியில் May 18, 2011 அன்று ஐ. நா. சபை அலுவலகம் முன்பு நியுயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வுக்கு தங்கள் ஆதரவை ஓர் ஊடகம் மூலம் இருவரும் ஒன்றாய் சேர்ந்து தெரிவித்ததும், கனடா நாம் தமிழர் இயக்கம் இவர்கள் உட்பட எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நிற்பதும் உண்மையிலே தமிழர்களின் ஒற்றுமையை மீண்டும் தமிழர் சமூகத்திற்கு உறுதிப்படுத்தும். இருந்தாலும் கனேடிய தமிழர் தேசிய அவையை சேர்ந்த பிரதிநிதியை காணவில்லையே என்று யோசித்தேன். 

ஏன் ஒவ்வொரு நாட்டிலுள்ள தமிழர் அமைப்புகளும் சேர்ந்து ஓர் கூட்டமைப்பை உருவாக்க கூடாது என்று கூட நான் யோசிப்பதுண்டு. எல்லோரும் அவரவர் கோட்பாடுகளுக்கு ஏற்ப செயற்படுங்கள். ஆனால், பாரிய ஈழம் குறித்த முன்னெடுப்புகளில் ஒன்றாய் நின்று தமிழர்களின் தரப்பை வலுப்படுத்தலாமே. அங்கே பொதுசனம் குழம்பிப் போவதை தவிர்க்கலாம். தமிழ் அமைப்புகள், அவற்றின் தெளிவான, உறுதியான செயற்பாடுகளின் வழியிலேயே பெரும்பாலும் தமிழர்களின் ஒற்றுமையும் தங்கியுள்ளது தவிர்க்கமுடியாததாகிறது.

ஈழத்தமிழர்கள் மேல் மிகவும் அக்கறையுள்ள அமைப்புகளே சில பாரிய முன்னெடுப்புகளில் தங்களை தாங்களே விலக்கி வைத்து பார்வையாளர்களாய் இருக்கும் போது என் போன்றவர்கள் குழம்பித்தான் போகிறோம். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல்வேறு அமைப்புகள், செயற்பாடுகள் என்பன தவிர்க்கமுடியாதவை. ஆனால், ஒரு அமைப்பு முன்னெடுக்கும் ஈழம் சார்ந்த முயற்சிக்கு இன்னோர் அமைப்பு தங்கள் தார்மீக ஆதரவை ஏன் தெரிவிக்க கூடாது இவர்கள். அது ஏற்கனவே குழம்பியிருக்கும் தமிழர்கள் மத்தியில் ஓர் தெளிவை உருவாக்கும் என்பது என் புரிதல். எந்தவொரு அமைப்பின் ஈழம் தொடர்பான முயற்சிக்கும் ஏதாவது கருத்து முரண்பாடு இருந்தால் அதை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ளலாம். இல்லையேல், அது பற்றி பொதுசனத்திற்கு விளக்கம் கொடுக்கலாம்.

இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, விலகியிருப்பதால் என் போன்ற பொதுசனம் தான் குழம்பி போகிறோம். அது ஒட்டுமொத்த முயற்சிகளையும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆக்கிவிடும்.

சில புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தவிர்த்தல் நலம் என்று நான் கருதுவது, ஒவ்வொரு நாட்டிலும் பத்து தமிழர் அமைப்புகள் இருந்து, பத்து அமைப்புகளும் அவரவர் நிகழ்ச்சி நிரலுடன் அரசியல் உள்மட்டத்தில் உள்ளவர்களை சந்திக்காமல் எல்லோரும் ஓர் கூட்டமைப்பாக ஒரே நேரத்தில் சந்திக்கலாமே.

இறுதியாக, ஓரிரு வார்த்தைகள் தமிழ் ஊடகங்கள் பற்றி. பொதுவாகவே புலம் பெயர் தேசங்களில் தமிழ் ஊடகங்களுக்கு குறைவில்லை. அது ஆரோக்கியமாகவும், தமிழர்களை குழப்பும் வகையிலும் இரண்டு விதமாக செயற்படுகின்றன என்பது தான் நான் கவனித்தது. காட்சி ஊடகம், பத்திரிகைகள், வானொலி என்று எதை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் ஈழம் பற்றிய தெளிவான கருத்துகளையே முன்வைக்கிறார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் தவிர. மிக மோசமான ஒன்றாக நான் கருதியது நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலில் வாக்களித்தால் இலங்கை செல்லும் போது அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கிற வகையில் ஓர் பரப்புரையை ஓர் தமிழ் வானொலி செய்தததாக படித்தேன்.

ஆக, இலங்கை அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல் புலத்தில் இவர்கள் செய்திகளை உருவாக்கம் செய்வது, கருத்து திணிப்புகளை செய்வது, இது தான் இவர்களின் வேலையோ என்று சில தமிழ் ஊடகங்களை சேர்ந்தவர்கள் யோசிக்க வைக்கிறார்கள்.

இலங்கை சிங்கள பெளத்த ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை "தமிழனாக' பிறந்ததே பாரதூரமான குற்றம் தான். இதில் நாடு கடந்த அரசின் ஜனநாயக தேர்தலில் ஜனநாயக தேர்வு என்பது தமிழனுக்கு புதிதாய் எந்தவொரு தண்டனையையும் உருவாக்கப்போவதில்லை. எப்படிப்பார்த்தாலும், இலங்கையின் அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தச்சட்டப்படி தமிழீழம் கேட்பது, நாடு கடந்த அரசுக்கு வாக்களித்தது எல்லாமே குற்றம் தான். நாங்கள் வாழும் நாட்டின் சட்டதிட்டப்படி, சர்வதேச சட்டங்களின்படி அது தவறே இல்லை. அனால், இலங்கை எப்போது சர்வதேசம் பற்றி கவலைப்பட்டது.

ஈழம் தொடர்பாக எந்தவொரு ஜனநாயக எதிர்ப்பை காட்டும் ஆர்ப்பாட்டம், ஒன்று கூடலிலும் இப்போது சில தமிழர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு தான் நிற்கிறார்கள். ஏனென்று கேட்டால் யார், யாரோவெல்லாம் படம் பிடிக்கிறார்கள். அதை இலங்கை அரசுக்கு அனுப்பினால், நாங்கள் இலங்கை போகும் போது பிரச்சனைகளை உருவாக்கும், உயிர்ப்பயம் என்கிறார்கள். 

இந்த இருப்பு பற்றிய பயம், ஜனநாயக உரிமைகள் இவற்றுக்கிடையே தான் ஈழம் என்கிற யதார்த்தம் ஊஞ்சலாடுகிறது புலத்தில். 

அத்தோடு பதிவர் ராஜ நடராஜன் ஈழத்தமிழர்களிடம் வலியுறுத்த விரும்பும் கருத்தையும் இணைத்துள்ளேன்.

"Also I would like to emphasize on the diaspora to shorten the luxury of spending so much on temple,gold and other substances and build a strong fund to flow for people who survived the war atrocities and others too, plus to donate for democratic Eelam activities through a legalized proper channel.Why not an Internaional Tamil bank too?"

ராஜ நடராஜனின் கருத்தை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஆனால், புறக்கணிக்க கூடிய ஒன்று அல்ல என்பதே என் கருத்து. இலங்கை அரசை தவிர்த்து எங்கள் உறவுகளுக்கு நிறையப்பேர் உதவியிருக்கிறார்கள், இன்னும் உதவிக்கொண்டிருக்கிறார்கள் சில சர்வதேச அமைப்புகளின் ஊடாக. தமிழர்களுக்கென்று ஓர் சர்வதேச வங்கி ஆரம்பிப்பது தொடர்பில் எனக்கு எந்தவொரு அறிவும் கிடையாது. யாரும் விளக்கினால் தெரிந்துகொள்ள ஆவல்.

புலம்பெயர் தமிழர்களின் நிறைகுறைகளை சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்தாலும், அங்கே நிறைகளே அதிகம். இருக்கும் ஒன்றிரண்டு குறைகளை களைந்து இன்னும் முன்னேறவேண்டும். இன்று, ஈழப்பிரச்சனை சர்வதேச அரங்கில் பேசப்பட புலிகள் ஒரு காரணம் என்றால், புலம் பெயர் தமிழர்கள் இன்னோர் காரணம். எங்கள் ஒன்றுபட்ட முயற்சியே நல்ல பலனைத் தரும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
எங்களுக்குள் ஒற்றுமை நீங்கின் அது அனைவர்க்கும் தாழ்வே என்பதை எல்லோரும் மனதில் நிறுத்திக்கொண்டால் நன்று. இது அறிவுரை அல்ல, வேண்டுகோள். 

புலம்பெயர் தமிழ் சமூகத்தால் நிறையவே சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும்!!!! அதுதான் ஈழத்தில் குரல்வளைகள் நெறிக்கப்படும் எங்கள் உறவுக்களுக்கான குரல்.


நன்றி: படம் 'அறியது' தளம்.

29 கருத்துகள்:

அனாமிகா துவாரகன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அனாமிகா துவாரகன் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள். 108 அமைப்பும் ஒன்றாகச் சேர்ந்தால் எவ்வளவு நேரவிரயம், பலம் எல்லாமே கிடைக்கும். நாங்கள் தமிழர்கள். ஒன்றினைவோமா? சந்தேகம் தான்.

ராஜ நடராஜனின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். ஆனால் யாரை நம்பி ஆரம்பிப்பது.

நாடு கடந்த அரசாங்கத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்களது தெளிவின்மையோ என்னவோ, அதற்காக செலவழித்த பணக்கணக்கைப் பார்த்த போது (எனது அங்கிள் ஒருவர் கொடுத்த காசு கணக்கைப் பார்த்து வெலவெலத்துப் போனேன்) அந்தக்காசை வன்னி மக்களுக்குக் கொடுத்திருக்கலாமே என்று இருந்தது.

போன முறை இங்கிலாந்தில் ஒரு விலை உயர்ந்த மண்டபத்திற்கு கொடுத்த காசில் எத்தனையோ வீடுகளைக் கட்டி இருக்கலாம். என்னிடம் கேட்டால் சனத்தை பக்கத்தில் இருக்கிற பாக்கிற்கு கூட்டத்திற்கு கூப்பிட்டாலும் போய் இருக்கும். அந்த மண்டபத்தில் தான் கூட்டம் வைக்க வேண்டும் என்றில்லை. பெரிய பெரிய விளம்பரங்கள் கொடுக்கவும் தேவையில்லை. ஒரு எஸ்.எம்.எஸ் ஒரு ஃபேஸ்புக் மெசேஜ் சனத்திற்கு கொண்டு செல்லப் போதும்.

மெல்பேனில் நடந்த கூட்டத்திற்குப் போன போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சேர்ந்து அழுதுவிட்டு வந்தோம். அதை வீட்டிலேயே செய்திருக்கலாமோ என்று தோன்றியது. சிலவற்றை முன்னெடுக்க இளைஞ்ர்கள் முன் வந்தாலும், பெரியவர்கள் இடம் கொடுப்பதில்லை. வயது மூத்தவர்களிடம் அனுபவம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இளையவர்களிடம் புதிய ஐடியாக்கள் இருக்கின்றன. கேட்க ஆள் இல்லை. சிலவேளைகளில் அதற்கு கிடைக்கும் ரெஸ்பொன்ஸ் எங்கள் மன உறுதியை தளர்ந்தும்.

அனாமிகா துவாரகன் சொன்னது…

இளைஞர்கள் புது புது ஐடியாகக்ளுடன் வேலை செய்ய ஆயத்தமாக இருக்கிறோம். பெரியவர்கள் கை கொப்பார்களா?, இளைஞர்களும் பெரியவர்களும் சேர்ந்து கை கோர்க்க வேண்டும். இல்லையேல் இன்னும் பின் தள்ளப் படுவோம்.

ஆஸியில் சைனீஸ் மாணவர்களும் நாங்களுமே என்றும் படிப்பில் முன்னிற்கிறோம். தமிழனுக்கு எங்கு போனாலும் படிப்பு முக்கியம் என்பது மனதில் இருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

ஆனாலும் ஒரு கூட்டம் சினிமா கலாசாரத்தால் (அதுவும் விஜய் அஜித் பைத்தியங்களாக) தோடு குத்திக் கொண்டு, சிகரட்டை சுழற்றிப் பிடித்துக்கொண்டும், போத்தல் போத்தலாக குடித்துக்கொண்டும் குட்டிச்சுவராவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும்.

அதை விட இன்டலெக்சுவல்சாம் தாங்கள் என்று சொல்லி நாங்கள் நடத்திய மறியல் போராட்டங்களைப் பற்றி அரம்புறமாக எழுதிய கூட்டமும் இருக்கிறது. அந்த நேரத்தில் நாசாப் போ தமிழா என்று மனதுள் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை.

இக்பால் செல்வன் சொன்னது…

// நாடுகடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியில் இவர்கள் ஏன் விலகியே நின்றார்கள் என்பது எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று //

மிகவும் யதார்த்தமான ஆனால் உண்மைத் தாங்கி நிற்கும் பதிவு இது. கனடா தமிழ் காங்கிரஸின் ஒரு சாதரண உறுப்பினன் நான், என்னைப் பொறுத்தவரை கனடா தமிழ் காங்கிரஸ் மிகவும் ஆழமாக யோசித்து எதையும் செய்யும் ஒருக் கூட்டம். அவர்கள் எப்போதுமே புலிகளாலோ, வேற்றவர்களாலோ அவப்பெயரை சந்திக்கத் தயாரனாவர்கள் இல்லை என்பதை நான் நன்கு உணர்வேன்.

நாடு கடந்த தமிழீழ அரசு எப்படி அரசியல் ரீதியாக செயல்படுகின்றதோ, அதே போல கனடியத் தமிழக் காங்கிரஸ் சமூகவியல் மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் உன்னதமாக செயல்படுகின்றார்கள். அவர்கள் மீது சிலர் துரோகிகள் எனவும் கூறினார்க்ள். ஆனால் பொறுமையாக முடிச்சுகளை அவிழ்ப்பவர்கள். அது தவறும் இல்லை என்பது எனது நிலைப்பாடு.

இக்பால் செல்வன் சொன்னது…

@ ராஜ நடராஜன் கூறியது போல சர்வதேச தமிழ் வங்கிப் போன்ற ஐடியாக்கள் ஒன்னும் புதுசு இல்லை. ஏற்கனவே காந்திய சமூகம் என்பதனின் நிறுவனரும் ஈழத்தின் பிரபல ஆர்கிடெக்டும், பெரியாரிஸ்டுமான எஸ்.ஏ.டேவிட் இதனை தமது நூலிலும், எழுத்திலும் அடிக்கடிக் குறிப்பிட்டது தான். அப்படியான மனிதர்களின் பேச்சை எல்லாம் யாருங்க மதிச்சா ? தாம் சம்பாதித்த ஏகப்பட்ட செல்வத்தை எல்லாம் ஈழ மக்களுக்காக கொட்டிக் கொடுத்துவிட்டு இன்று, சென்னையில் ஓர் மூலையில் யாரின் கண்ணில் படாமல் வாழ்ந்து வருகின்றார். வே.ஆனைமுத்துவின் தயவால் அவ்வப்போது எழுதுகின்றார்.

தவறு சொன்னது…

ரதி ...உண்மையே அசத்திட்டீங்க...

இன்றைய எதார்த்தம் எவ்வளவு அழகா சொன்னீங்க...

என்னுடைய கருத்துப்படி முன்னெடுத்து சரியாய் கொண்டு செல்ல ஓர் அமைப்பு இருந்தாலே சுதந்திர ஈழம் சாத்தியமே ரதி.

வணங்குகிறேன்....

Open Talk சொன்னது…

//கனேடிய தமிழர் தேசிய அவையின் முயற்சியில் கனேடிய சமூகத்தில் ஓர் சமூகமாக இன்று இரத்ததானத்தில் முன்னணியில் இருப்பவர்கள் என்றால் அது ஈழத்தமிழர்கள் தான். //

இது கனடியத் தமிழர் தேசிய அவையினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியல்ல. கனடியத் தமிழர் தேசிய அவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே கனடியத் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்பட்டு செயற்படுத்தப்படும் முயற்சி. கடந்த மூன்று ஆண்டுகளிற்கு முன்னர், 2008 ஆம் ஆண்டு, ஆரம்பிக்கப்பட்டு ஆண்டு தோறும் கனடியத் தமிழர் பேரவை மேற்கொண்டு வரும் முயற்சிக்குப் போட்டியான கனடியத் தமிழர் தேசிய அவையின் தாங்களும் இரத்ததான நிகழ்வினை முன்னெடுக்கிறார்கள். http://canadiantamilcongress.ca/BloodDonation.htm . இதன் மூலம் கனடியத் தமிழர் அவையினால் கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு கனடியத் தமிழரை கனடிய சமூகத்தில் முதன்மைப்படுத்திக் காட்டிய ஒரு செயற்திட்டம் இன்று தமிழர்களிடையே இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படப் போகின்ற ஓர் துயரமான நிலை உருவாகியுள்ளது. கனடியத் தமிழர் தேசிய அவை போட்டித் தன்மையைக் கைவிட்டு சிறந்த முன்முயற்சிகளை மேற்கொள்வது கனடியத் தமிழர்களிற்கு நன்மைபயக்கும்.

Open Talk சொன்னது…

கனடியத் தமிழர் பேரவை - Canadian Tamil Congress (CTC)

கனடியத் தமிழர் தேசிய அவை - National Council of Canadian Tamils (NCCT)

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

அன்புடைய இரதி அவர்களே
தங்கள் கட்டுரை முழுவதும் படித்தேன்
நெஞ்சைத் தொட்டது நிறைவாக ஆனால் ஏனோ
தெரியவில்லை என்னுள் இனம் தெரியாத ஒரு
ஏக்கம் அதன் விளைவாக----

விருந்துண்டு வாழ்கின்ற வயதாயில்லை-நாளும்
விட்டுவிட்டு வருகிறதே நோயின் தொல்லை
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கைதானே-ஆனால்
மனத்தளவில் என்றென்றும் இளைஞன்நானே
இருந்துண்டு நாளதோறும் ஈழம்பற்றி-நான்
எழுதுகிறேன் பெறுவோமே நாமேவெற்றி
அருந்தொண்டே அனைவருமே ஒன்றுகூடி-பணி
ஆற்றுவோம ஒற்றுமை நம்முள்தேடி

புலவர் சா இராமாநுசம்
புலவர்குரல்

ஹேமா சொன்னது…

ரதி...முதல்ல உங்க எழுத்தைப் தெளிவா சொல்ற பாங்கு பார்த்துப் பொறாமைப்பட்டுக்கொள்றன்!

மனதில் நாட்டுப்பற்றோடு இருக்கும்
ஒட்டுமொத்த ஈழத்தமிழனின் குரலாய் குரல் கொடுக்கிறீர்கள்.நன்றி !

ஜோதிஜி சொன்னது…

வந்த பின்னூட்டங்கள் மணிமகுடம்.

அனாமிகா நிறை குறைகளை அப்பட்டமாக தெளிவாக தந்தமைக்கு நன்றிங்கோ.

Rathi சொன்னது…

அனாமிகா துவாரகன்,

நாடு கடந்த அரசு எந்த செயற்பாட்டில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள், புரியவில்லை எனக்கு. அடுத்து ஆஸ்திரேலியா - மெல்போர்ன் அங்கெல்லாம் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. எனக்கு புரிந்தவரை அவர்கள் சம்பளம் இன்றி தங்கள் சொந்தவேளைகளுக்கு மத்தியில் தான் ஈழம் தொடர்பான வேலைகளையும் கவனிக்கிறார்கள். தங்கள் சொந்த பணத்தில் தான் இன்னும் சில முயற்சிகளை ஈழத்தின் பெயரில் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஓர் இளையவராய் உங்கள் ஆதங்கம் புரிகிறது. எந்தவொரு சமூகம் என்றாலும் அடிப்படையில் எல்லோரும் சாதாரண மனிதர்கள் தான். ஓர் அமைப்பு, செயற்பாடு என்று வரும்போது தான் தனித்தன்மைகள், குறைபாடுகள், தலைமைத்துவ தகமைகள், Leadership Skills, என்பனவற்றில் எது முன்னிலையில் இருக்கும் என்பது தெரியவரும். அதை வைத்தே மிகுதி எல்லாம் தீர்மானிக்கப்படும். இது உங்களுக்கு தெரியாதததல்ல.

நீங்கள் சொல்வதை மூத்தவர்கள் உள்வாங்கவில்லை என்றால் அங்கே communication barrier, misunderstanding கூட இருக்கலாம் என்பது என் ஊகம். எல்லா நேரமும் எல்லாருமே சரி என்று கூறமுடியாதல்லவா. So, all we need is conflict resolution.

Rathi சொன்னது…

எந்தவொரு முயற்சியும் மற்றவர்களால் விமர்சிக்கப்படத்தான் செய்யும். அதிலுள்ள குறைகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதால் நான் மேலும் முன்னேறலாம் இப்படித்தான் நான் நினைப்பதுண்டு. ஆனால், சில சமயங்களில் அது கொஞ்சம் காலம் கடந்து தான் புரியும். என்னுடைய முயற்சியும் அதன் நோக்கமும் என்னைப்பொறுத்தவரையில் தெளிவாய் இருந்தால் நான் யார் விமர்சனம் பற்றியும் கவலைப்படுவதில்லை.

இது அறிவுரை இல்லை அனாமிகா, என் அனுபவம். பகிர்ந்துகொண்டேன்.

இளைய தலைமுறை, சினிமா, சிகரெட், மது என்று சிலர் அலைகிறார்களா? எங்கள் வேலைத்திட்டங்களில் அதுவும் ஒன்றாய் அவர்களை எப்படி ஈழம் குறித்த யாதார்த்தங்களை உணரவைப்பது பற்றி நாங்கள் தான் சிந்திக்க வேண்டும். அவர்கள் சிந்திக்கவில்லை. ஆனால், நீங்களும் உங்களைப்போன்றவர்களும் சிந்திக்கிறீர்கள் அல்லவா. அதுவே பெரிய விடயம்.

அனாமிகா, இளையவர்களால் நிறையவே சாதிக்க முடியும், சாதித்திருக்கிறீர்கள் புலத்தில் உங்கள் நோக்கத்தில், செயலில் நீங்கள் தெளிவாய் இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மேலே செல்லுங்கள்.

நான் பொதுவா இளையவர்களுக்கு அறிவுரை சொல்வதையே வெறுப்பவள். அவர்களின் லெவலுக்கு தான் நான் போயிருக்கிரேனே தவிர, என்னை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் அதிகம் அக்கறைப்படுவதில்லை.

மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டேன். நீங்கள் என்னை திட்டினால் கூட கோபப்பட மாட்டேன். :)

Rathi சொன்னது…

இக்பால் செல்வன், உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

தவறு, நீங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

Open Talk, நான் சொன்ன தமிழர்கள் தலை குப்புறவா விழுவது என்பதற்கு உதாரணம் காட்டியிருக்கிறீர்கள்.

Rathi சொன்னது…

Open Talk, கனேடிய தேசிய பேரவை, கனேடிய தேசிய அவை இந்த இரண்டு அமைப்புகளும் இது பற்றி தங்களுக்குள் குழப்பிக்கொண்டதாய் எனக்கு தெரியவில்லை. குழப்பினாலும், கனேடிய தேசிய அவை என்பது ஜனநாயக முறையில் வாக்களித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களை கேள்வி கேட்கும் எல்லா உரிமையும் மக்களுக்கு உண்டு.

Rathi சொன்னது…

புலவர் இராமாநுசம் அவர்களே, சரியாய் சொன்னீர்கள். மனதுக்குள் நிறைவாய் இருந்தாலும் நெஞ்சை நெருடிய ஒன்று தான் என்னை இந்தப்பதிவை எழுதத்தூண்டியது.

உங்க கவிதை அருமை.

ஹேமா, தவறு போலவே நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

Rathi சொன்னது…

ஜோதிஜி, பின்னூட்டம் பாக்க வந்தீங்க போல :)

Rathi சொன்னது…

தவறு, உங்க தளத்தில் சுட்ட படம் பொருந்துதா, சொல்லவேயில்லை :)

தவறு சொன்னது…

ரதி..மிகசரியாய் பொருந்துகிறது.மிக்க மகிழ்ச்சி...என்ன அன்பின் கொஞ்சநாளா மௌனம் காக்கிறார்.

vanathy சொன்னது…

ரதி,
முதலில் நட்சத்திர பதிவராக தெரிவு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
பல ஈழ ஆதரவாளர்கள் பதிவுகளை நிறுத்தி மௌனம் ஆகிவிட்ட இந்த சூழலில் உங்கள் போன்றோர்
சளைக்காமல் பதிவுகள் போடுவது பாராட்டத் தகுந்தது.உங்கள் போன்றே ஜோதிஜி அவர்களும் ஈழம் பற்றிய பல அருமையான பதிவுகளை போட்டுக் கொண்டு வருகிறார்.அவருக்கும் நன்றிகள் .நீங்கள் சொல்வதுபோல் புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் நிறைகள் குறைகள் இரண்டுமே உண்டு .
கல்வியில் மட்டுமல்லாமல் அரசியல் சமூக வர்த்தக ஊடக துறைகளிலும் தமிழ் சமூகம் கவனம் செலுத்த
வேண்டும்,ஆனால் அவற்றுக்கு கல்விதான் அடிப்படை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.குறிப்பாக தேசிய ஊடகங்கள் தேசிய கட்சிகளில் பங்குதாரராக வருவதின் மூலம் மற்றைய சமூக மக்களுக்கு எங்கள் விடுதலை போராட்டத்தின் நியாயத் தன்மையை அவர்களுக்கு உணர்த்தி அவர்கள் ஆதரவை
எதிர்காலத்தில் பெற முடியும்.
அந்த விதத்தில் கனடாவில் ஒரு தமிழ் பெண் பாராளுமன்றத்திற்கு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது நல்ல ஆரம்பம்.
பெரிய கட்சிகளின் வேட்பாளராக நின்றால் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர்கள்
பாராளுமன்றம் செல்லக் கூடிய சாத்தியங்கள் கட்டாயம் உண்டு.
நீங்கள் சொன்னமாதிரி கடந்த இரு ஆண்டுகளாக தமிழர் பலர் குழப்பம் விரக்தி என்ற உணர்வுகளால்
பாதிக்கப் பட்டு இருந்தது உண்மையே.ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெறத் தொடக்கி உள்ளார்கள்.வன்னிப்போரின் முடிவு தந்த
அதிர்ச்சி ஒரு விதத்தில் தமிழரின் சிந்தனையில் முதிர்ச்சியை கொடுத்துள்ளது.உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருப்பது மட்டும்
போதாது அறிவு பூர்வமாக தொலை நோக்கு பார்வையுடன் எதிர்காலத்தை அணுக வேண்டும் என்ற எண்ணம் தமிழர் மத்தியில் உருவாகிக் கொண்டுள்ளது

அனாமிகா
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஒரு புதிய பரிமாணம் ,இப்போது அது தொடக்க காலத்தில் உள்ளது.
ஒரு பெரிய அமைப்பு நடத்தப் படுவதற்கு பணம் தேவை என்பது யதார்த்தமான உண்மை.ஆனால்
பணத்தை வீணாக விரயம் செய்யாமல் சரியான வேலைத் திட்டங்கங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் வர்த்தக நிறுவனங்கள் மாதிரி வரவு செலவு வெளிப்படையாக மக்களுக்கு காட்டப்போவதாக அவர்கள் சொன்னார்கள்.ஆனபடியால்தானே உங்களுக்கு அதனை பார்க்கக்கூடியாதாக இருந்தது.அத்துடன்
சட்ட ரீதியாக மக்களை கட்டாயப் படுத்தாமல் மக்கள் தாமாக மனமுவந்து தரும் பணத்தையே பெறப்போவதாக
சொன்னார்கள்.அங்கீகரிக்கப் பட்ட அரசுகள் மக்கள் வரிப்பணத்தில் இயங்குவார்கள்.இவர்கள் இயங்கவும் வேலைத்திட்டங்களுக்கும் பணம் தேவைதான்,ஆனால் அவர்கள் சரியான வழியில் நடக்கிறார்களா என்பதை மக்களாகிய நாங்கள்தான் கவனித்து தவறு செய்பவர்களை ஜனநாயக முறையில் அகற்ற வேண்டும்.
முள்ளி வாய்க்காலில் நடந்த அவலம் எந்த ஒரு இனத்துக்குமே இனி நடக்க கூடாது.குற்றம் புரிந்தவர்களை நீதிக்கு முன்பு நிறுத்துவதற்கும்
ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கும் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்திட்டங்களை முன்னேட்டுக்க வேண்டும்.
--வானதி

Open Talk சொன்னது…

Dear Rathi,

NCCT is just registered a group ID for with Canadian Blood Bank, which obviously indicates they just want to keep the community divided. You can also this information with Canadian Blood Bank and any other sources related to those two organizations.

Sorry I don't have a tool to type in Tamil at this moment.

Rathi சொன்னது…

வானதி,

நான் வினவு தளத்தில் சந்தித்த அதே வானதி என்றே நம்புகிறேன். உறுதிப்படுத்துவீர்களா!

ஈழம் பற்றி எழுதுவதை எப்போதோ நிறுத்தியிருப்பேன். என்னை இந்த நிலை வரை கொண்டுவந்தவர்கள் ஜோதியும், விந்தைமனிதன் என்கிற ராஜாராமனும் தான்.

ஜோதிஜி ஈழம் பற்றி ஓர் புத்தகம் எழுதியிருக்கிறார். எப்போது வெளிவரும் என்று எனக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை.

நீங்கள் குறிப்பிடும், நாங்கள் வாழும் நாடுகளில் உள்ள தேசிய ஊடகங்களில் கூட எங்கள் இளையோர் தங்கள் வழிகளில் பங்கேற்க வேண்டும் என்பது என் கருத்து.

Rathi சொன்னது…

Dear Open Talk,

NCCT பற்றிய இந்த குற்றச்சாட்டை நானும் செவிவழியே கேட்டிருக்கிறேன். எனக்கு உங்களைப்போல் இந்த தமிழர் அமைப்புகளின் உள் அரசியல் தெரியாது. நான் ஓர் சாராசரி ஈழத்தமிழ். இது பற்றி எல்லாம் எழுதவே வெறுப்பாக இருந்தது. இருந்தும் ஈழம் பற்றிய ஓர் அக்கறையில் தான் இதையும் எழுதினேன். நான் விரும்புவது எங்கள் சமூகத்தின் "ஈழம்" என்கிற இலக்கு நோக்கிய ஒற்றுமை மட்டுமே. அது தவிர என்னிடம் வேறு நோக்கம் கிடையாது.

தவிர, எமது சமூகத்தை பிரிக்கும் முயற்சி, நோக்கம் கொண்டவர்களை ஏன் நீங்கள் இன்னும் தெளிவாய் வெளிப்படுத்தக் கூடாது.

தவறாக எண்ணாதீர்கள். உங்களை நான் எப்போதோ சந்தித்திருக்கிறேன் என்கிற ஓர் உணர்வு. மீண்டும் சந்தித்தால் என்னை அடையாளப்படுத்திக்கொள்கிறேன், சகோதரி.

Sriram சொன்னது…

//வன்னிப்போரின் முடிவு தந்த
அதிர்ச்சி ஒரு விதத்தில் தமிழரின் சிந்தனையில் முதிர்ச்சியை கொடுத்துள்ளது.உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருப்பது மட்டும்
போதாது அறிவு பூர்வமாக தொலை நோக்கு பார்வையுடன் எதிர்காலத்தை அணுக வேண்டும் என்ற எண்ணம் தமிழர் மத்தியில் உருவாகிக் கொண்டுள்ளது //
Well said Vanathy!

An average Tamil needs a trouble free identity to be associated with. If we have someone like DalaiLama in our community, we could get all we want- within 2 years.

இக்பால் செல்வன் சொன்னது…

@ open talk - ஆம் தங்களின் கருத்து உண்மையே. கனடா தமிழ் காங்கிரசே இரத்த தான முகாம்களை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றார்கள். நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா அவை எந்த முகாம்களை நடத்தியதாக நான் அறியவில்லை. அவர்களின் செயல்பாடுகள் பல வெளியே தெரியாத அரசியல் செயல்பாடுகள் தான். கல்வி, சமூகம் போன்ற பணிகளை கனடா தமிழ் காங்கிரஸ் தான் நடத்துகின்றது.

கனடா தமிழ் காங்கிரஸின் சாதரண உறுப்பினன் என்பதால் இவர்களின் முழுச் செயல்பாடுகளையும் நான் அறிவேன்.

இக்பால் செல்வன் சொன்னது…

கனடா தமிழ் காங்கிரஸின் சமூகப் பணிகளை ஓரங்கட்ட ஏற்கனவே தமிழ் வின் போன்ற புலம் பெயர் ஊடகங்கள் செயல்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. வானொலிகள் கேட்பதில்லை, அதிலும் இப்படியாக நடந்துக் கொள்வதாக ஒரு நண்பர் கூறியிருந்தார். ஏன் இப்படி சிலர் நடந்துக் கொள்கின்றார்கள் என எனக்குத் தெரியவில்லை?

vanathy சொன்னது…

Yes Rathy.I am the same 'Vanathy'.
I used to be more enthusiastic and write lot of comments in the past but nowadays I only put comments occasionally.I think there is an other blogger called Vanathy,I don't know whether people confuse me with her.

-Vanathy

vanathy சொன்னது…

Rathy,one more thing,When I said that Tamils should get involved in national media and national political parties,I meant Media and political of the countries where they have become citizens.(I know that joining national parties in Srilanka is a waste of time )
Eg CBC in Canada,BBC in UK,ABC in Aussie etc and especially print media in the western countries like Globe and Mail,Toronto star In Canada,Guardian, .The Times Etc in UK and popular news papers in Aussie and European Countries ,these media still have lot of power in shaping popular opinion among the ordinary people.By joining political parties and the political process in western countries we become stakeholders and will be able to influence the foreign policies of those countries.

_Vanathy

Rathi சொன்னது…

வானதி, பதிவுலகில் இன்னோர் வானதி இருப்பதாய் உணர்ந்ததால் தான் உறுதிப்படுத்த கேட்டேன்.

நான் புலம் பெயர் நாடுகளில் தேசிய மைய ஊடகங்களில் எம்மவர்களின் பங்களிப்பைத் தான் குறிப்பிட்டேன். இங்கே ஈழம் குறித்த எந்தவொரு பிரச்சனை குறித்தும் பேட்டிகளில் தேசிய மைய ஊடகங்களில் எம் இளையோர் மிக தெளிவாகவும் அறுத்துறுத்தும் பேசுவார்கள். அந்தளவிற்கு ஈழம் பற்றிய அறிவையும், மொழிவளத்தையும் வளபடுத்தியிருக்கிரார்கள். அது மேலும் புலம் பெயர் தேசத்தில் வளரவேண்டும்.