மே 19, 2011

தமிழீழ தேசிய தலைமையாய் பிரபாகரன் என் பார்வையில்!


வரலாறு மாமனிதர்களை உருவாக்குகிறதா அல்லது மனிதர்கள் வரலாற்றை படைக்கிறார்களா என்று நான் சிந்திப்பதுண்டு. என் மனதில் எழும் இந்தக் கேள்விக்கு நான் விடை தேடி அதிகம் எங்கும் வரலாற்றின் பக்கங்களில் விழுந்து புரள வேண்டி இருக்கவில்லை. ஓர் இனத்தின் மானத்தை, வரலாற்றை உயிர் மூச்சாய் கொண்டே வரலாறாகிப்போன ஓர் மனிதர் இவர்! அவர் எங்கள் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். இன்னும் எங்கள் விடுதலை உணர்வில் நீங்காமல் கலந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் தங்கள் தமிழ்த் தேசிய தலைவராய் வரித்துக்கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே. 

இலங்கையில் தமிழினம் என்கிற ஓர் பாரம்பரிய, வரலாற்று தேசிய இனத்தின் மீதான அடக்குமுறை தான் பிரபாகரன் என்கிற ஓர் தனிமனிதனை வரலாறு உருவாக்க காரணமானது. தன் பதின்பருவங்களில் இருந்து கல்வி, அரசியல், பொருளாதார அடிப்படையில் ராணுவ அடக்குமுறையால் அடக்கி ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழினத்துக்காய் வாழ்ந்து இன்னும் ஈழக்கனவை தமிழர்கள் நெஞ்சில் வாழவைத்துக்கொண்டிருப்பவர். இந்த தனிமனிதனின் கொண்ட கொள்கை மேலிருந்த பற்றும், இறுதிவரை குலையாத உறுதியும் ஓர் வரலாற்றை படைத்திருக்கிறது. யார் ஏற்க மறுத்தாலும் ஓர் தமிழினத் தலைவராய் அவரை உயர்த்தியிருக்கிறது. வரலாறு பற்றி அவர் சொன்னது, 

"வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீகச் சக்தியன்று. அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திரப்பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஓர் வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கிறான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கிறான்"

கொண்ட கொள்கை வேறு, மேடைப் பேச்சு வேறு, செயல் வேறு என்று தலைவர் என்கிற தகமைக்கு புது அர்த்தங்கள் கொடுப்பவர்கள் மத்தியில், இப்படித்தான் தன் தலைவிதியை இவர் தன் இனத்துக்காய் நிர்ணயித்துக்கொண்டாரோ!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற அமைப்பு இன்று உலகில் எத்தனையோ நாடுகளால் அவர்களின் புவிசார் பிராந்திய, பொருளாதார தேவைகள் கருதி பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு தடை செய்யாத நாடுகளும் உண்டு. அந்த தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். ஓர் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றால் அதன் தலைவரையும் பயங்கரவாதி என்று தானே நாமகரணம் சூட்டுவார்கள். அப்படித்தான் முத்திரை குத்தினார்கள் புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்டதைப் பற்றி Karen Parker, மனித உரிமைகள் மற்றும் ஆயுதப்போராட்டம் பற்றிய சர்வதேச சட்டங்களை கற்றறிந்த, நீண்டகாலமாக தமிழீழப் போராட்டம் பற்றி பேசி வந்தவர், கூறியது, 

"I state categorically that LTTE is not a "terrorist" organization, but rather an armed force in a war against the government of Sri Lanka. Characterization of the LTTE as a "terrorist" organization is politically motivated having no basis in law or fact". (Brian Senewiratne, Diaspora Referenda on Tamail Eelam in Sri Lanka).

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல. அது இலங்கை அரசுக்கு எதிரான ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பு. புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வர்ணித்தது சட்ட அல்லது உண்மைகள் அடிப்படையிலோ  இல்லாமல் அரசியல் நோக்கம் கொண்டது.  இது தான் மேற்சொன்ன கூற்றின் சாரம். 

ஐ. நா. வின் ஜெனீவா ஒப்பதப்படியும் ஆயுதப் போராட்டம் என்பது ஒன்றும் சட்டத்திற்கு புறம்பானதல்ல. இருந்தும் எழுதப்படாத சர்வதேச விதிகளின் படி புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டுவிட்டார்கள். அமெரிக்கா தடை செய் என்று சொன்னவுடன் பெரும்பாலான நாடுகள் கேள்வி இல்லாமலேயே அதை செய்து விட்டார்கள். தடைகளால் இவர்கள் முடக்க நினைத்தது புலிகளை அல்ல, ஈழப்போராட்டத்தை.

ஈழத்தையும், ஈழத்தமிழர்களையும் (சில விதிவிலக்குகள், வில்லங்கங்கள் தவிர்ந்த) பொறுத்தவரையில் புலிகள், அதன் தலைமை இரண்டுமே இலங்கை என்கிற நாட்டில் ஓர் தேசிய இனமான எங்களின் மறுக்கப்பட்ட அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். உரிமைகள் மறுக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் தனி  ஈழம் என்கிற தீர்வை நோக்கிய புலிகளின் போராட்ட வழிமுறைகள் அவரவர் அறிவுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்றாற் போல் விமர்சிக்கப்படுகிறது. இதை யோசிக்கும் போது Brian Senewiratne அவர்கள் சுட்டிக்காடிய தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா அவர்களின் பேச்சு இங்கே பிரபாகரனுக்கும் ஈழப்போராட்டத்திற்கும் சாலப் பொருந்தும்.  

"All lawful modes of expressing opposition to the principle (of white supremacy) had been closed by legislation, and we were placed in a position in which we had either to accept a permanent state of inferiority, or defy the government. We chose to defy the law" (Diaspora Referenda On Tamil Eelam in Sri Lanka - Brian Senewiratne).

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் எல்லாவிதமான சட்டரீதியான வழிமுறைகளும் அரசியல் யாப்பின் மூலம் அடைக்கப்பட்டபின் ஒன்று வெள்ளையின மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது அரசை எதிர்க்கவேண்டும். அவர்கள் சட்டத்தை எதிர்ப்பதை தங்கள் வழியாய் தேர்வு செய்தார்கள் என்கிறார் நெல்சன் மண்டேலா.

தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவும் 'பயங்கரவாதி' என்று முத்திரை குத்தப்பட்டு அமெரிக்காவுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டவர் தான். அது நோபல் பரிசை அவர் வாங்கச் செல்லும் போது தான் பெரிதாய் கிளம்பியது. இவர் நோபல் பரிசுக்கு தகுதியானதும், கனடா இவருக்கு 'கெளரவ குடியுரிமை' கொடுத்ததும் உலகறிந்த தனிக் கதை.

ஆனாலும், பிரபாகரன் அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன், நெல்சன் மண்டேலாவை விட இந்தியாவின் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், பகத் சிங், காந்தி இவர்களாலேயே அதிகம் கவரப்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பின் குறைபாடுகளை, அதில் பெளத்த சிங்களர்கள் அல்லாதவர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெறுவதை மையமாய் வைத்து  தந்தை செல்வாவின் காந்தீய வழிமுறைகள் நம்பிக்கையற்று, தோற்றுப்போனபின்  பிரபாகரன் கூட நெல்சன் மண்டேலா மேலே குறிப்பிட்ட வழியில்  தான் போராட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டார். சிங்களப் பேரினவாத ராணுவ அடக்குமுறைக்கு காந்தீய வழிகளில் போராடுவதில் பயனில்லை என்பதை தந்தை செல்வாவின் வழிமுறைகள் தோற்றுப்போனதில் இருந்து கற்றுக்கொண்டவர். ஈழவிடுதலைக்காய் ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்தார். ஈழவிடுதலையை விரும்பியவர்கள் அவரோடு இணைந்துகொண்டார்கள்.

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் கடைசிவரை செய்யாதவர் என்றுதான் பார்க்கப்படுகிறார். போர்க்காலங்களிலும் சரி, அமைதிப் பேச்சுவார்த்தகளிலும் சரி எப்போதும் ஈழத்தமிழர்களின் உரிமைகளை, நலன்களையே முன்னிறுத்தியவர். இதை அனிதா பிரதாப் என்கிற இந்திய பத்திரிகையாளர் தனது 'Island of Blood' என்கிற புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். 1983 ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குப் பிறகு எல்லா விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் அலுவலகம் திறப்பதிலும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதிலும் முனைப்பாயிருக்க, புலிகள் அமைப்பை பிரபாகரன் அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று. அவர்களை அவ்வாறு தனியே பிரித்துக்காட்டியது பிரபாகரனும் அவரது போராளிகளும் சயனைட் குப்பிகள் மூலம் ஈழத்திற்காய் தாங்கள் செய்த, செய்ய துணிந்த தியாகத்தை வெளிப்படுத்தியது தான் என்கிறார் அனிதா பிரதாப்.

ஆனாலும், மற்றைய விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களை இல்லாதொழித்தார்கள் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. இவரும் அமெரிக்காவையும், இந்தியாவையும் அனுசரித்துப் போனால் ஓர் வரதராஜப்பெருமாள் போல் இந்தியாவில் சொகுசாய் வாழ்ந்திருக்கலாம். கருணா போல் சிங்கள பெளத்த பேரினவாதத்தை அனுசரித்திருந்தால் அமைச்சே இல்லாத ஓர் அமைச்சர் ஆகியிருக்கலாம். அல்லது, டக்ளஸ் தேவானந்தா போல் தமிழர்களின் தேசிய அடையாளங்களை அழித்து சிங்கள பெளத்த தேசியத்தை வடக்கில் வளர்க்க அரும்பாடு பட்டிருக்கலாம். இவரோ இவை எலாவற்றுக்கும் விதிவிலக்காய் இருந்தார். விதிவிலக்காய் இருந்ததாலோ என்னவோ எப்போதுமே மற்றவர்களை விடவும் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்.

ஈழத்தமிழர்களின் உரிமைகள் எந்தக் காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாத ஒன்று என்கிற இவரின் உறுதி தான் ஈழப்போராட்டம் இன்று வரை உறுதியோடு இருக்க காரணம். போராட்டத்தின் களங்களும், வடிவங்களும் தான் மாறியிருக்கிறது. உரிமைப் போராட்டத்திற்கான காரணம் இன்றும் அதே வீச்சுடன் சர்வதேச அரங்கில் தொடர்கிறது.

தன் பதினேழு வயதில் புதிய தமிழ்ப் புலிகள் என்கிற இளையோர் அமைப்பை 1972 இல் வல்வெட்டித்துறை கடற்கரையோரத்தில் ஆரம்பித்து, அதுவே பின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கிற அமைப்பாய் வளர்ந்ததாய் சொல்லப்படுகிறது. தன் பதின்பருவங்களிலேயே இலங்கை காவற்துறை, மற்றும் ராணுவத்தால் தேடப்பட்டு தன் வயதிற்குரிய இளமைக்கால சந்தோசங்களை கூட தொலைத்தவர். தான் ராணுவத்தால் தேடப்படுவதால் தன் குடும்பம் பாதிக்கப்படுகிறது என்று குடும்பத்தை விட்டு தனியே தன் பதின்பருவத்தில் பிரிந்து சென்று ஈழத்திற்காய் தனை முழுமையாய் அர்ப்பணித்துக்கொண்டார். 

தனக்கு எப்போதும் வழிகாட்டியாய் அவர் குறிப்பிட்டவை; "இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவ மெய்யுணர்வுக் கோட்பாடு. வரலாறு எனது வழிகாட்டி" என்பது தான். ஈழவிடுதலை நோக்கிய பயணத்தில் நம்பிக்கை துரோகம், தோல்விகள் தவிர்க்கமுடியாததாய் இருந்தபோதும், தளராது தான் கொண்ட இலட்சியத்தை நோக்கி பயணித்த உறுதி அளப்பரியது. இவர் கொண்ட கொள்கையை விடவும் இவரது போராட்ட வழிமுறைகளே அதிகம் விமர்சிக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்.

போராடியவர்களில் எத்தனையோ பேர் இந்தியாவில் தஞ்சம் கோர, சிலர் சிங்களப் பேரினவாதத்திற்கு குற்றேவல் புரிய, அரசியல்வாதிகள் பெரும்பாலும் கொழும்பில் குளிர்காய மறுக்கப்பட்ட தமிழர்கள் உரிமைகள் மட்டும் எப்போதும் போல் கிணற்றில் போட்ட கல்லாய் கிடந்தது.  அந்தக் கல்லை புரட்டி எடுத்து இன்று உலகின் கண்கள் முன்னால் போட்டவர்கள் புலிகளும் அதன் தலைமையுமே.  

ஆயுதப் போராட்டத்திற்கு கொடுத்த அதே சம பங்கை சமாதான அமைதி முயற்சிகளுக்கும் கொடுத்தார் என்றாலும், எப்போதுமே சிங்கள பெளத்த ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒருவிதமாகவும், எதிர்க்கட்சியில் இருக்கும் போது இன்னோர் விதமாகவும் மாற்றி, மாற்றி பேசி சமாதான முயற்சிகளுக்கு குந்தகம் செய்பவர்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டவர். அதை தனது 2003 ம் ஆண்டு மாவீரர் உரையில் குறிப்பிட மறக்கவில்லை. தற்போதைய எதிர்கட்சி தலைவர் ரணிலுக்கு அன்று ஜனாதிபதி தேர்தலில் (2005) ஆதரவு தெரிவிக்காதது தவறு, அது சமாதான முயற்சிகளை பாதித்தது என்கிற குற்றச்சாட்டும் இவர்மேல் வைக்கப்படுகிறது.

ஈழம் பற்றிய வரலாற்றில் ஒவ்வொருவருக்கும் ஒரு திருப்புமுனை இப்படி இருந்திருந்தால் முடிவு இப்படி இருந்திருக்கலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். நான் கூட பிரேமதாசா அரசியல் யாப்பில் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கியிருந்தால் ஆயுதப் போராட்டம் அரசியல் வழியில் திரும்பியிருக்கும் என்று நினைத்ததுண்டு. அப்படி ஒன்று தான் புலிகள், முன்னாள் பிரதமரும் இந்நாள் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கேவின் பேச்சுவார்த்தை முயற்சிகளும் அதன் விளைவுகளும்.

ரணிலுக்கு அன்று தமிழ்த் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தெரிவிக்காவிட்டாலும் தமிழர்கள் தலைவிதி நிச்சயமாய் மாறியிருக்கப்போவதில்லை என்பது தான் என் புரிதல்.

ரணில் விக்ரமசிங்கே அவர்கள் மற்றைய சிங்கள பெளத்த ஆட்சியாளர்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டவர் என்கிற பார்வை சிலரால் முன்வைக்கப்படுகிறது. எப்போதும் போல் பிரபாகரன் புலிகளின் கண்ணோட்டத்தில் ஈழப்பிரச்சனையை பார்த்தவர்கள், இப்போதும் அப்படித்தான் பார்த்தார்கள். இங்கே ரணில் விக்ரமசிங்கே சமாதானம் விரும்பி ஆக்கப்பட்டுவிட்டார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோதே புலிகள் தடை செய்யப்பட்டது ரணிலுக்கு தெரியாமலா நடந்தது! என்பது என்போன்ற சாராசரி ஈழத்தமிழனுக்கு கூட புரியும். அத்தோடு ரணில் மிதமான அரசியல் போக்குகளால் மேற்குலக பொருளாதார நலன்களுக்கு துணை போனவர் என்கிற குற்றச்சாட்டும் உண்டு.

தேர்தலில் போட்டியிட்ட போது ஐக்கிய தேசிய கட்சி தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொள்கை விளக்க அறிவிப்பில் எல்லா சமூகத்தின் பெரும்பான்மையினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஓர் அரசியல் தீர்வு எட்டப்படும் வரை அரசியல் யாப்பில் எந்தவொரு மாற்றத்தையும் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று ஒரு உறுதியையும் வழங்கினார்கள். (Anton Balasingam - War & Peace, Pg.354). இதைவிடவும் தமிழர்களுக்கு அதை செய்வோம், இதை செய்வோம் என்று என்னென்னவோ சொன்னார்கள், வழக்கம் போல். 

ஆக, இவர்கள் அரசியல் யாப்பில் எந்தவொரு மாற்றத்தையும் அவ்வளவு சுலபத்தில் செய்யமாட்டோம் என்று குயுக்தியாய் ஓர் உத்தரவாதத்தை பெரும்பான்மை சமூகத்திற்கு உறுதியளித்துவிட்டுத் தான் பின் கதவால் சமாதான பேரம் பேசினார்கள், பேசுகிறார்கள். அரசியல் யாப்பு திருத்தப்படாமல் எப்படி அரசியல் தீர்வை எட்ட முடியும்! எல்லா சிங்கள அரசியல்வாதிகளைப் போல் காலம் கடத்தி தங்கள் நோக்கத்தில் கவனமாய் இருந்தார்கள்.

பழ. நெடுமாறன் அவர்கள் தன், "தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார்" என்கிற கட்டுரையில் ரணில் பற்றி சொன்னது,

"குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர். ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார். இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார். உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவு படுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்த பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை."


இன்று ராஜபக்க்ஷேக்களின் கருவியாய் மாறியிருக்கும் கருணா கூட ரணிலின் கட்சியை சேர்ந்த ஓர் எம்.பியின் மூலம் தான் திரைமறைவு சதிமூலம் உருவாக்கப்பட்டார் என்று புலிகளின் வரலாறு தெரிந்த வை. கோ. சொல்கிறார். இந்த முயற்சி ஓர் பிரதம மந்திரியாய் ரணிலுக்கு தெரியாமலா இருந்திருக்கும்!

என் பார்வையில், ரணில் அவர்கள் நினைத்தால் கூட எந்த தீர்வையும் தமிழர்களுக்கு கொடுக்க முடியாதபடி இலங்கை அரசியல் யாப்பு பெளத்த சிங்கள ஆட்சியாளர்களால் வகுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இங்கே அனேகம்பேர் புரிந்துகொள்ளாத ஓர் உண்மை. ரணில் அவர்கள் ஆட்சி அமைத்திருந்தாலும் இலங்கை அரசியல் யாப்பில் தமிழர்கள் உரிமை தொடர்பில் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்திருக்கப் போவதில்லை. அடுத்து, சீமான் சொன்னது போல் ஒருவேளை ரணில் விக்ரமசிங்கே அன்று ஆட்சி அமைத்திருந்தாலும் இந்தியா காங்கிரஸ் அதன் மூலம் தமிழர்களுக்கு கிடைக்கும் தீர்வுக்கு குறுக்கே நின்றிருக்கும் என்பது தான் உண்மை. தனித்தமிழீழம் கோரியதால் புலிகளை அழிப்பது தானே என்றைக்குமே இந்தியாவின் நோக்கம்.

ஆக, ராஜபக்க்ஷேவுக்கு பதில் ரணில் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆகியிருந்தாலும் ஈழத்தின் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்பது என் புரிதல். சமாதானக் காலத்தில் புலிகளை தடை செய்து, நோர்வேயும், இந்தியாவும் காட்சியில் மறைவில் வர, தொடங்கியது ஈழத்தின் வீழ்ச்சி. மறுவளத்தில், ஈழப்போராட்ட வரலாற்றில் பிரபாகரன் என்பவர் நீண்டதோர் சகாப்தம் ஆகிப்போனதால் ஈழம் தொடர்பான முடிவுகளுக்கு அவரே குற்றவாளியாக்கப்படுகிறார் சிலரால். "தலைவருக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லை" என்று அங்கலாய்க்கிறார்கள். சரி, பிரபாகரன் இப்போது காட்சியில் இல்லை. நோர்வேயும், இந்தியாவும் இன்னும் ஆட்டத்தில் உள்ளது. சிங்கள பேரினவாத அரசியல் வாதிகளை மீறி சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள் ஈழத்திற்காய் இனிமேலாவது எதையாவது சாதிப்பார்களா!

ஈழத்தின் முடிவும், புலிகளின் இழப்பும் ஈடுசெய்யமுடியாது தான். இருந்தும், ஈழவிடுதலை நோக்கிய பயணம் நீண்ட நெடுந்தொலைவு கொண்டது. பிரபாகரன் கேட்டதை, அவருக்கு கொடுக்காததை  நாங்கள் வேறுயார் கேட்டாலும் கொடுக்கப்போவதில்லை என்று சிங்கள பெளத்த ஆட்சியாளர்கள் சொல்லலாம். தமிழர்கள் விரும்பியத்தைத்தான், மக்கள் ஆணை மூலம் அனுமதி கொடுத்ததை தான்  புலிகளும் பிரபாகரனும் கேட்டார்கள் என்கிற உண்மை உலகிற்கு உறைக்கும் போது பிரபாகரன் என்பவரும் புரிந்துகொள்ளப்படுவார். மகாத்மா காந்தியும், சுபாஸ் சந்திரபோசும் எதற்காய் போராடினார்களோ, அதே காரணத்திற்காய் தான் புலிகளும் பிரபாகரனும் போராடினார்கள் என்கிற உண்மை இந்தியாவுக்கும் புலப்பட்டாலும் புலப்படும்.

ஈழத்தின் தந்தை செல்வா என்றால், தமிழீழ தேசிய தலைமை என்பது எப்போதுமே பிரபாகரன் தான் என்பதை பெரும்பான்மை தமிழர்கள் இனி தங்கள் மனதிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் மாற்றவோ, மாறவோ போவதில்லை.

Photo Courtesy: Google - Wikipedia 

39 கருத்துகள்:

J.P Josephine Baba சொன்னது…

உண்மை உண்மை!

சார்வாகன் சொன்னது…

அருமையான பதிவு!!!!!!!!
உங்கள் எதிரிகள் உங்களை புகழ்ந்தால் நீங்கள் பயனற்று போய்விட்டீர்கள் என்று படித்திருக்கிறேன்.இராஜபக்சே உட்பட்ட எதிரிகள்,துரோகிகள் இவரை தினமும் பழிப்பதை பார்த்தாலே உண்மை விளங்கிவிடும்

தமிழ் உதயம் சொன்னது…

கருணா உருவாக்கம் - ரணிலாலும் நடந்தது என்றால் மிகையில்லை. ஒரு முறை - பேட்டியொன்றில் புலிகள் இயக்க பிளவு குறித்து சொன்னார், "ராணுவத்தினருக்கு எந்த இழப்பும் இன்றி கிழக்கை மீட்டோம்" என்று.

அனாமிகா துவாரகன் சொன்னது…

/அமெரிக்கா தடை செய் என்று சொன்னவுடன் பெரும்பாலான நாடுகள் கேள்வி இல்லாமலேயே அதை செய்து விட்டார்கள். //
It was our fault for not protesting when other countries banned tigers.

ALAS! The time we realized it, it was too late.

Australia did not ban tigers. =))

ஹேமா சொன்னது…

பின்லாடனுக்கும் எங்களுக்கும் ஏதாச்சும் போன ஜென்மத்துப் பகை இருக்குமோ ரதி.ஒவ்வொரு இடத்திலயும் எங்களை விழுத்தி எதையாவது சொல்ல வைக்கிறார்.செத்திட்டார் எண்டு சொன்ன நேரத்திலகூட !

முள்ளிவாய்க்கால் நினவஞ்சலியில் பராபிரபா சொன்னது ஞாபகம் வருது ரதி.தமிழர்கள் எல்லோருமே ஒவ்வொரு புலிகள்தான்.அதாவது படிப்பில்,பாட்டில்,எழுத்தில்,நடையில்.....இப்பிடி இப்பிடி.அப்ப...புலிகள்தான் நாங்கள் !

அகதியா இருக்கிற நாங்கள்தான் அவர்கள் போட்ட பாதையைச் சரிப்படுத்தவேணும்.செய்வோம் !

Rathi சொன்னது…

J.P. Josephine Baba, நன்றி.

சார்வாகன், ராஜபக்க்ஷேக்கள் பழிப்பதை விட சில தமிழர்கள் இவரை இழிவுபடுத்துவது எம் இனத்தையே இழிவு செய்யும் செயல்.

தமிழ் உதயம், எனக்கு ரணிலின் அந்த கூற்று மறந்து போய்விட்டது. சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.

Rathi சொன்னது…

அனாமிகா, புலிகளை தடை செய்யாத நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. May 2009 இல் நாங்கள் கனடாவோடு மல்லுக்கு நின்றபோதெல்லாம் உங்களைப் பார்த்து பொறாமைப் பட்டிருக்கிறேன்.

ஹேமா, பின்லேடனை எங்களோடு ஒப்பிட்டு தங்கள் வழக்கமான வேலையை காட்டியது சிங்கள தேசிய மைய ஊடகங்கள். பின் லேடனை அமெரிக்கா ஒழித்ததையும் ஈழத்தையும் தொடர்புபடுத்தி ஒன்று போர்க்குற்றங்களில் இருந்து தப்பும் முயற்சி.

இன்னொன்று தாங்களும் அமெரிக்கா போல் வல்லரசு என்று காட்டும் காமெடி. வேறென்ன சொல்ல.

தவறு சொன்னது…

அன்று ஈழம் என்றாலே புலிக்ளும் அதனுடைய தலைவரும் தான் ஞாபகத்துக்கு வருவார்கள் இன்று வதைப்படும் எம்மவர்களின் ஞாபகம் தான் ரதி.

ஆனாலும் ஈழம் என்றாலே மனதில் தோன்றுவது பிரபாகரன்.

Rathi சொன்னது…

தவறு, ஈழம் பற்றி எதை நினைத்தாலும் இப்போது வலி மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

ஜோதிஜி சொன்னது…

ரணில் பற்றி பொத்தாம் பொதுவாக குறையாக சொல்லிவிட முடியாது ரதி. பிரேமதாசா ரணிலும் ஒரே மாதிரியாக பார்க்கப்பட வேண்டியவர்கள். ஆனால் ரணில் காலத்தில் உருவான விசயங்களை முறைப்படி முன்னெடுத்து செல்ல முடியாத காரணங்கள் பல. மொத்தத்தில் ரணில் காலத்தில் தான் மொத்த விடுதலைப்புலிகளுக்கு வீழ்ச்சியும் பழியும் உருவாகத் தொடங்கியது. ஆனால்?

ஜோதிஜி சொன்னது…

ரணில் சந்திரிகா ஆடுபுலி ஆட்டத்தில் ரணிலை வைத்தே சந்திரிகா பல பல்லாங்குழி ஆட்டத்தை நடத்திக் காட்டினார். இந்த சமயத்தில் தமிழீழ பிரதேசத்தில் அமைதி தவழ்ந்து கொண்டிருந்தது. எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இனி பூரண அமைதி என்று. ஆனால் ரணிலும் சந்திரிகாவும் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருந்தாலும் இருவரும் சிங்கள இனவாதம் என்ற ஒற்றைப்புள்ளியில் அதற்கு மேலாக நாடு கவிழ்ந்து போகும் சூழ்நிலையில் இருந்த காரணத்தால் வெளியுலகத்திற்கு தெரியாத பல ஒப்பந்தங்கள் இப்போது தான் நடந்தது. இது தான் முக்கியமானது. வெளியுலகம் அறியாத ஒன்றும்.

ஜோதிஜி சொன்னது…

ரணில் விக்ரமசிங்கேவுக்கும் விடுதலைப்புலி இயக்கத்திற்கும் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆறு சுற்றாக தாய்லாந்தில் செப்டம்பர் 16 2002 ல் தொடங்கி ஜப்பான் நாட்டில் ஹக்கோனெ நகரில் 2003 மார்ச் மாதம் முடிவ்டைந்த போது வேறொன்றும் உள்ளே நடந்து முடிந்திருந்தது.
.
வெவ்வேறு திசையில் முட்டி மோதிக் கொண்டுருந்த சந்திரிகாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய சர்வதேச ஒப்பந்தங்கள்

அமெரிக்காவுடன் சுதந்திர வான்வெளி ஓப்பந்தம்,. இதன் மூலம் அமெரிக்காவின் சகல விமானங்களும் எந்தத் தேவைகளுக்காவம் இலங்கையின் வான்வெளி எல்லைக்குள் பறந்து செல்லலாம். எந்த விமான நிலையத்தையும் பன்படுத்திக் கொள்ளவும் எரிபொருள் நிரப்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை நிலத்தடியில் உள்ள 100 எண்ணெய் குதங்களில் 15 ஐ இந்தியப் பெட்லோலிக்வட்டுத் தாபனத்திற்கு கொடுக்கவும் இலங்கையில் 100 பெட்ரோல் நிரப்பு விற்பனை நிலையங்களை நடத்தவும் புதுடெல்லியில் கையெழுத்து இடப்பட்டது.

ஜோதிஜி சொன்னது…

இலங்கையில் பயங்கரவாத ஒழிப்புக்க இராணுவ ஒத்துழைப்பு தரக்கூடிய கடல் பிராந்திய ஒப்பந்தம் அத்துடன் இலங்கையின் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கும் சீனாவுடன் ஒப்பந்தம், .


ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் பெல்ஜீயத்தின் தலைநகரான பிரஸெல்ஸ்சில் கைச்சாந்திடப்பட்டது. .

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம். இதன் மூலம் இராணுவ ஆயுத வழங்கல் மற்றும் பயிற்சி ஆலோசனைகள் அமெரிக்காவிடம் இருந்து திட்டவட்டமாக பெறப்படும்.

இந்தியாவில் இலங்கையின் அதிரடிப்படைப் போலீசாருக்கு விசேட பயிற்சி, . இதன் மூலம் வட கிழக்குப் பகுதிகளில் இருந்து வரும் அதிரடிப்படைப் போலீசார் நவீன பயிற்சியும் படைக்கலன்களும் பெறுவார்கள்.

ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுருந்த இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தங்கள் மீள் ஆய்வு செய்யப்படும்

ஜோதிஜி சொன்னது…

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே பெரிய பாலம் அமைக்கப்பட்டு திரிகோணமலைக்கான தரைவழி நெடுஞ்சாலை அமைக்கப்படும். திரிகோணமலை புதிய நிர்மாணம் செய்யப்படும். இது இந்தியாவால் மேற்கொள்ளப்படும்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இந்தியாவிடம் கொடுக்கப்பட்டு அதன் மூலம் காங்கேசன் துறைமுகமும் இந்தியாவின் பொறுப்பில் விடப்படும்.

அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் ஜப்பான் ஆகியவற்றுடன் மேலும் விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தங்கள் கைசாந்திடப்பட ஏற்பாடு நடந்தது.

எந்த அளவிற்கு இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்க உதவப் போகின்றது என்பதை உணராத விடுதலைப்புலிகள் உள்ளே அமைதிக் காற்றை சுவாசித்துக் கொண்டுருந்தனர். அதிபர் சந்திரிகாவும் பிரதமர் ரணிலும் அமெரிக்கப் பயணம் அடுத்தடுத்து செய்து அதிபர் புஷ்ஷை சந்தித்தித்து மில்லினியம் சேலஞ்ச் திட்டத்தின் கீழ் பலகோடி டாலர் உதவி பெற வழிவகுத்தனர்.

ஜோதிஜி சொன்னது…

இத்துடன் கருணாவை முஸ்லீம் தலைவர் மூலம் கொழும்புக்கு கொண்டு வ்ந்து சேர்த்தது. உருவாக்கியது ரணில். பயன்படுத்த நினைத்தவர் சந்திரிகா. ஆனால் அதிர்ஷ்டக்காரர் ராஜபக்ஷே.

பாருங்க இப்ப சந்திரிகா வசிக்கக்கூட அரசாங்க இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில்.

இப்போது ரணில் செல்லக்காசாக. பெயருக்கென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் நம் தமிழர்கள் மட்டும் இன்னும் பிரபாகரன் குறித்து அவர் கொள்கைகள் குறித்து அடிப்படையும் தெரியாமல், முழுமையாகவும் தெரியாமல், அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு மட்டும் அளவில்லாமல் உளறிக் கொண்டு.

என்னத்த சொல்ல. பிரபாகரன் குறித்து நேர்மையான முறையில் பதிவு செய்தமைக்கு நன்றி ரதி.

இக்பால் செல்வன் சொன்னது…

நல்லதொரு பதிவு ! ஆனால் மிகவும் பக்கச்சார்புள்ள ஒரு பதிவாகவே இருக்கின்றது. புலி ஆதரவு உள்ள இயல்பான ஒரு ஈழத்தமிழரின் பார்வையில் இருந்து வருவதால் அதில் ஆச்சரியம் இல்லை.

// ஐ. நா. வின் ஜெனீவா ஒப்பதப்படியும் ஆயுதப் போராட்டம் என்பது ஒன்றும் சட்டத்திற்கு புறம்பானதல்ல. இருந்தும் எழுதப்படாத சர்வதேச விதிகளின் படி புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டுவிட்டார்கள். அமெரிக்கா தடை செய் என்று சொன்னவுடன் பெரும்பாலான நாடுகள் கேள்வி இல்லாமலேயே அதை செய்து விட்டார்கள். தடைகளால் இவர்கள் முடக்க நினைத்தது புலிகளை அல்ல, ஈழப்போராட்டத்தை. //

அப்படியா சகோதரி. தமிழ்ப் புலிகள் ஈழத்தமிழர்களுக்காகப் போராட ஆரம்பித்தவர்கள் தான் அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர்கள் பயங்கரவாதிகள் ஆவதற்கு காரணமே நீங்கள் கூறிய ஜெனிவா முடிவுகள் தான்.

முதலில் ஜெனிவா கன்வன்சனின் மூன்றாம் ஆர்டிக்கள் படி எந்தவொரு இயக்கமும், ராணுவமும் சொந்த மக்கள் மீதோ, கைப்பற்றப் பட்ட நிலத்தில் உள்ள மக்கள் மீதோ தாகுதலையோ, அச்சுறுத்தலையோ பயன்படுத்தக் கூடாது என்ற விதியை தமிழ்ப் புலிகள் கடைப்பிடித்துள்ளார்களா?

வடக்கு கிழக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டது, கடத்தப்பட்டது, முஸ்லிம்கள் விரட்டப்பட்டது, சிங்கள கிராமங்களில் படுகொலைகள் நடத்தப்பட்டது என ஏராளம் சொல்லலாம்.

மற்றொன்று அதே ஜெனிவா கன்வன்சனின்படி வேற்று தேச தலைவர்களையோ, வேறு தலைவர்களையோ படுகொலை செய்யப்படக்கூடாது - இதனையும் புலிகள் செய்யவில்லையா?

அத்தோடு நிற்காமல் ஆள்கடத்தல், ஆயுதக் கடத்தல், பண மோசடி, குழந்தைப் போராளிகள், மனித வெடிகுண்டு, படுகொலைகள், என பல தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து நடத்தியவர்கள் தானே !!!

இதனால் தான் அவர்களைத் தடை செய்தார்கள். பக்கச்சார்பில் நியாயங்கள் மறந்துவிடுவதுண்டு சகோதரி.

இக்பால் செல்வன் சொன்னது…

ஈழத் தமிழர்கள் வரலாற்றில் புலிகளின் பங்கு மறுக்கமுடியாத ஒன்று தான். ஆனால் அவர்கள் செய்த அனைத்தையும் நியாயப்படுத்த நினைப்பது நியாயமற்ற செயலாகும். தொடர்ந்து ஒளிகீற்றுக்களைப் பார்த்து மூளைச் சலவை செய்யப்பட்ட மக்கள் தான் உண்மையை மறந்துவிடுவார்கள். உலக நியதிகளையும், நியாயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழ் புலிகள் பல்வேறு நிலைகளில் ஜனநாயகத்தைத் தழுவதுப் போல பாசிசத்தைப் புணர்ந்துள்ளார்கள் - அதனால் தான் பல நேர்மையற்ற வழிகளினால் பணங்களைச் சேர்த்தது முதல் மனித வெடிகுண்டு வரை நிகழ்த்தியுள்ளார்கள்.

பலர் இங்கு எனதுக் கருத்தை எதிர்ப்பார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நியாயமான சிந்தனையுடையோ நிச்சயம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

இக்பால் செல்வன் சொன்னது…

ராஜபக்ஷேவை ஆட்சியில் ஏற்று சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டார்கள் தமிழ்ப் புலிகள். அதனால் தான் இந்த முள்ளிவாய்க்காலில் லட்சம் தமிழர்களைப் பறிக்கொடுத்த நிகழ்வு. இதனைக் கூடத் தடுத்து இருக்கலாம், கிளிநொச்சி நகரை இழந்த போதே மக்களை அவர்கள் போக்கில் விட்டு இருந்தால் பலர் உயிர் தப்பி இருப்பார்கள் என்பதையும் கூறத்தலைப்பட்டு இருக்கின்றேன்.

ரணில் வந்திருந்தால் என்ன செய்திருப்பார் என சிலர் கேட்கின்றார்கள் ? ஒன்றும் நடந்திருக்காது - ஆனால் உக்கிர போர் முடிவுகளை சிங்கள அரசு எடுத்திருக்காது, அல்லது பின் போடப்பட்டிருக்கும் ...

புலிகள் ஒருவேளை ஆயுதம் தூக்கவிடின் என்ன நடந்திருக்கும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்? அந்த இடத்தை வேறொரு குழு நிரப்பி இருக்கலாம் ??? தமிழ்ப் புலிகளை விடவும் ஆயுத பலமும், அனுபவமும், கல்வியறிவும் கொண்ட பல குழுக்கள் அக்காலத்தில் இருந்தன.. அவர்களை விட தாழ்மையான ஆயுதக் குழுக்களும் அப்போது இருந்தன ... என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Rathi சொன்னது…

ஜோதிஜி,

ஒரு சின்ன திருத்தம். பிரபாகரன் குறித்த நேர்மையான பதிவா தெரியவில்லை எனக்கு. ஆனால், பிரபாகரனின் நேர்மையை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.

ரணில் பற்றி நீங்கள் விளக்கமாக சொன்னதை நான் ஒரே வரியில் சொன்னேன். இருந்தாலும் இவ்வளவு விளக்கத்திற்கு உண்மையிலேயே நன்றி. இவ்வளவுக்குப் பிறகும் ரணில் ஈழத்தமிழர்களுக்கு நல்லது தான் நினைத்திருப்பார் என்று நாங்கள் நம்ப வேண்டுமா!!!

விந்தைமனிதன் சொன்னது…

பிரபாகரன் பற்றிய பதிவு என்பதாலோ என்னவோ, ஒவ்வொரு வரியும் சிலிர்ப்பூட்டுகிறது. வரவ்ரத் தேர்ந்த எழுத்தாளராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் அக்கா! வாழ்த்துக்கள்... ஈழக்களத்தில் உங்கள் எழுத்துக்களும் ஆயுதமாக!

Rathi சொன்னது…

விந்தைமனிதன், வாங்க! இந்தப்பதிவுக்கு எங்கே வராமல் போவீங்களோ உங்கள் எண்ணங்களை பகிராமல் விடுவீர்களோ என்று நினைத்தேன். உங்களுக்கு என் வந்தனம், வந்தனம், வந்தனம்.

Rathi சொன்னது…

இக்பால் செல்வன், நான் எவ்வளவு தூரம் ஜனநாயகப் பண்புகளை, விழுமியங்களை மதிக்கிறேன் என்பதை உங்கள் பின்னூட்டங்கள் மூலம் உணரவைக்கிறீர்கள். :)

இக்பால் செல்வன் சொன்னது…

@ ரதி - தங்களின் ஜனநாயக பண்பியலில் எனக்கு சந்தேகம் இல்லை சகோதரி, ஒவ்வொருவரின் கருத்துக்களை மதிப்பவன், தனி நபராக யாரையும் நான் வசைவதில்லை. விவாதக் களங்களில் நியாய தர்மங்களை சீர்த்தூக்கியே நான் பின்னூட்டமிடுகின்றேன் சகோதரி. இருப்பினும் நடுவு நிலைமையும், ஒவ்வொரு தரப்பில் இருந்தும் ஒவ்வொரு பிரச்சனையை அணுகுவது சிறப்பு. தங்களின் நிலைப்பாட்டை பதிவு செய்கின்றீர்கள், திருந்தங்கள் இருப்பின் சுட்டிக் காட்டுவதும், நியாயங்களை நோக்கிய நகர்வுகளை ஏற்படுத்துவதும் வாசகர்களின் கடமையாகின்றது. அதனையே நான் செய்கின்றேன்.

ஒன் வே பாய்ண்ட் ஆஃப் வீயுவை நான் ஆதரிப்பதில்லை... தொடருங்கள் சகோதரி.

Nesan சொன்னது…

சரியான ஆய்வு தலைவர் என்று மற்றவர்கள் ஆடும் கூத்துகளைப் பார்க்கும் போது தேசியத்  தலைவர் என்பவர் எப்படி இருக்கனும் என்பதுக்கு வாழும்போதே உதாரனம் எங்கள் கரிகாலன் காலத்தின் வரவு அவர் எங்கள் விடிவு!

ராஜ நடராஜன் சொன்னது…

தாமதமாக வருவதில் மாற்றுக் கருத்துக்களையும் உணரும் வாய்ப்பு கிடைக்கிறது.சில தினங்களுக்கு முன்பு இக்பால் செல்வனுடன் புலம் பெயர்ந்தவர்கள் தாய் மண்ணில் இருப்பவர்களுக்கு உதவாமல் போர் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொருள் படவும்,மக்கள் இலங்கையில் சுகமாக பசியோடு உறங்குகிறார்கள் எனவும் சொல்லியிருந்தார்.இங்கேயுள்ள அவரது பின்னூட்டங்கள் மூலம் அவரது உள்மன நிலைப்பாடு என்னவென்பதை இப்போது உணர முடிகிறது.

பிரபாகரன் குறித்த முந்தைய விமர்சனங்கள் சரிதானோ என்று நினைக்குமளவுக்கு பிரபாகரன் குறித்த எதிர்ப்பு நிலை கருத்துக்களை முன்பு நினைக்கத் தோன்றும்.ஆனால் இதனையெல்லாம் புரட்டிப்போட்ட இனவெறியாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் ராஜபக்சே அரசின் செயல்பாடுகளும்,பிரபாகரன் இல்லாத நிலையில் வட,கிழக்கு தமிழர்களின் வாழ்வு நிலை பற்றி நன்றாகவே இப்பொழுது உணர முடிகிறது.

வெளிநாடுகளிலிருந்து வளைகுடா நாடுகளில் பணிபுரிவோர் ஓரளவுக்குப் பணமீட்டும் வசதியுடனே இருக்கிறார்கள்.ஆனால் எத்தனை வருடம் பணிபுரிந்தாலும் அவர்களுக்கு எந்த வித உரிமையோ கிடையாது.இருக்கும் வரை சுகமென்பது மாதிரி இக்பால் சொல்வதும் உரிமை பற்றியெல்லாம் சிந்திக்க தேவையில்லையென்றால் வட,கிழக்கு ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் முதன்மைக் குடிமகன்,இரண்டாம்தரக் குடிமகன் நிலை சுகமானதே.(இதற்காகத்தானே இந்த ஈழ இதிகாசம்)

மேலும் பிரபாகரனை போர்கால சாகசங்கள்,பின்னடைவுகள்,மக்கள் நிலை என்றும் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு ராஜபக்சேவின் செயற்பாடுகள்,மக்கள் நிலை,போராட்டக் குரல், இனி செல்லும் பாதையென்ற முறையிலே மதிப்பீடு செய்ய இயலும்.

Rathi சொன்னது…

நேசன், நீங்கள் சொல்வது தான் என் கருத்தும். ஈழத்தமிழர்கள் இனி எப்போது சரியான ஓர் தலைமையின் கீழ் ஒன்றாய் இணைகிறார்களோ அன்று தான் அதிக நன்மைகள் கிடைக்கும்.

Rathi சொன்னது…

ராஜ நட, புலிகள் குறித்து பலருக்கு மாறுபட்ட கருத்துகள் உண்டு. எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்க முனைகிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் புலிகள் இனி காட்சியில் இல்லை என்பது ஈழத்தமிழர்களுக்கு சரியான, உறுதியான ஓர் பிரதிநித்திதுவம் இல்லை என்பதே ஆகும்.

அனாமிகா துவாரகன் சொன்னது…

சிலபேர் வாந்தி எடுக்கிறதுக்கு என்றே பதிவுலகிற்கு வருகிறார்கள். என்ன நடந்தது என்று தெரியாமல் பல இலங்கை முஸ்லிம்களுக்கு தலைவரில் கடுப்பு. அதனாலேயே அவரை வாய்க்கு வந்த மாதிரி பேசுவார்கள். இதில் இவர்கள் எல்லாம் நடுநிலைவாதிகளாம். வாயில நிறைய வருகிறது. வாந்தி எடுப்பவருடன் சேர்ந்து வாந்தி எடுத்தால் என் தகுதி என்ன ஆவது. அதனால் கண்டுகொள்வதில்லை. இவர்கள் பின்னூட்டத்தை மட்டுறுக்க இயலாதா? தூங்கிறது மாதிரி நடிக்கிறார்கள். என்றுமே எழும்பப் போவதில்லை. பிறகேன் அதைப் பார்த்து நாங்கள் டென்சன் ஆகவேண்டும்.

ரதி அக்கா, மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுக்கத் தான் வேண்டும். ஆனால், இங்கு இருக்கும் சிலபேருடைய கருத்தோ வரவோ உங்கள் பக்கத்திற்கு அவசியம் இல்லை என்று தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்.

அனாமிகா துவாரகன் சொன்னது…

ராஜ நடராஜன்,

சார் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

நீங்கள் சிலருடன் காரசாரமாக நடாத்திய வாதங்களைப் பார்த்திருக்கிறேன். உங்களை மாதிரி உதவ நினைப்பவர்களையும் கெடுத்து தமிழனை பழிவாங்க ஒரு தமிழ் பேசும் கூட்டம் ஆடுகிறது. பொய்யையும் புரட்டையும் சொல்லி பலரைக் குழப்புகிறார்கள். இதை எல்லாம் நம்பி சோடை போகாதீர்கள். அது மட்டும் தான் சொல்லுவேன்.

தூங்கிறவன் மாதிரி நடிக்கிறார்கள். எழுப்ப முயற்சிப்பது வீணே. விட்டுத் தொலையுங்கள். அது மட்டுமே சொல்லமுடியும். அதனாலேயே எதற்கும் எதிர் கருத்து சொல்லாமல் விட்டுவிட்டேன்.

புலம் பெயர்ந்தவர்களில் போராளி மாவீரர் குடும்பமும் உண்டு. வீட்டு நிலையால் கடன்பட்டு போனவர்களும் உண்டு, மமதையில் இருப்பவர்களும் உண்டு. மக்களை வன்னியில் இருந்து செத்து இருக்க வேண்டும் என்று சொல்லும் கல் நெஞ்சம் அந்த மமதை பிடித்தவர்களுக்கு கூட இல்லை என்பது தான் உண்மை.

யார் செத்தாலும் என்ன, என் குடும்பம் நன்றாக இருக்கிறதே அதுவே போதும் என்று நினைத்த ஒரு கூட்டமும் இருந்தது. தங்கள் இன்டலெக்சுவல் நிலையைக்காட்ட போராட்டத்தை சில்லறைத்தனமாக விமர்சித்த அவர்களும் ஒரு புலம்பெயர்ந்த கூட்டமே.

எல்லா புலம் பெயர்ந்தவர்களும் உதவ நினைப்பவர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால், இதில் என்ன வேடிக்கை என்றால், தங்களை இன்டலெக்சுவலாகக் காட்டிக்கொண்டு மக்கள் வீதியில் இறங்கி போராடியதை, ஸ்டுபிடிட்டி என்று சொன்னவர்களை இவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் வீதியில் இறங்கி போராடிய தமிழனை கேவலப் படுத்துவார்கள்.

அனாமிகா துவாரகன் சொன்னது…

கொழும்பில் இருக்கும் உணர்வு உள்ளவனால் அதைச் சொல்ல முடியாது. அரசை தட்டிக் கேட்கும் சிங்களவனையே சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இதில் சாமானிய தமிழனால் என்ன செய்ய முடியும். ஆனால் புலிகளை குறை சொல்லும் பெரிய கூட்டம் புலம்பெயர்ந்த நாட்டில் உள்ளது போல கொழும்பிலும் இருக்கிறது. தறுதலை என்று சொல்லுவார்களே. அப்படி கைகழுவி விட்ட கேஸ் என்று கட்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்.

பட், அவர்கள் ஈழ மக்களுக்காக போராடும் தமிழக தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் என்ன ஆனாலும் சரி என்று எனது கண்டனத்தை கொஞ்சம் அக்ரசிவாகவே பதிவேன்.

இலங்கைத் தமிழனை கொச்சைப்படுத்து, பொறுத்துப் போவேன். உன் நாட்டில் பிறந்த குற்றத்திற்காக அவனைக் கேவலப்படுத்து, நாய் ஊளை இடுகிறது என்று கண்டுகொள்ளாமல் போவேன். வேறு நாட்டில் பிறந்து எங்களுக்காக போராடுபவனை எந்த சந்தர்ப்பத்திலும் கொச்சைப்படுத்த விடமாட்டேன். அதனால் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்குகிறேன்.

ஒசாமாவுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்துவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. வயிறு பற்றி எரிகிறது.

இலங்கையில் நடந்த எல்லா குண்டு வெடிப்புகளுக்கும் புலிகள் பொறுப்பல்ல. பத்தில் ஒன்பதும் அரசாங்கமே வைத்துவிட்டு மக்களை இயக்கத்தை வெறுக்க வைத்தார்கள். இது தான் உண்மை.

இயக்கம் சிங்கள மக்களை கொல்ல ரயிலில் குண்டு வைக்குமளவு முட்டாள்கள் இல்லை. ஒரு குண்டை கொண்டு செல்ல எவ்வளவு பேர் இடையே செத்துப் போகிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு கொண்டு போகும் குண்டுகளை, ஹாபரில் உள்ள கப்பல்களையும், மக்கள் இல்லாத விமானங்களையும், எண்ணெய் குதங்களையும் எரிக்கவே இயக்கம் பயன்படுத்தியது. அப்படித்தான் பயன்படுத்துவார்கள் என்பது கொமன் சென்ஸ். கஷ்டப்பட்டு நாட்கணக்கில் பதுங்கி பதுங்கி கொண்டு செல்லும் குண்டை பொது சனத்தை சாகடிக்க வீணாக்குவார்களா இல்லை பொருளாதாரத்தை சேதமாக்கவோ + இராணுவ தளபதிகளைக் கொல்லவோ பயன்படுத்துவார்களா என்று கொமன் சென்ஸ் உள்ளவர்களுக்குப் புரியும்.

எந்த சிங்களவர்களையும் இயக்கம் வெட்டிக்கொன்றதில்லை. அப்படியான மோசமானவர்கள் அவர்களில்லை.

முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது மட்டுமே அவர்கள் செய்தது. அடித்து விரட்டவில்லை. வெளியேறுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். இது தான் உண்மை.

சண்டைக்கு காசு கொடுத்த புலம்பெயர்ந்தவர்கள் மக்களுக்கு கொடுப்பதில்லை என்று எல்லோரையும் குற்றம் சாட்ட முடியாது. சண்டைக்காக ஆயிரக்கணக்கில் கொடுத்த கடனை அடைப்பதற்காக வயிற்றைக் காயப்போட்டுக் கொண்டும் வீட்டு மோர்கேட்ஜ் கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டும் இருக்கும் குடும்பங்களை எனக்குத் தெரியும்.

இவர்கள் சொல்லும் பண வசதியை காட்டும் சில புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்காக ஒரு சல்லியும் கொடுக்காத கூட்டம். அவர்களைப் பார்த்துவிட்டு நாட்டுக்காக காசு கொடுத்தவனும் இப்படித் தான் பகட்டாக அவன் இலங்கையில் இருக்கும் குடும்பத்திற்கு காசை வாரி இறைக்கிறான் என்று நினைக்கிறார்கள். நாட்டிற்காக கொடுத்தவன் இன்னும் முடிந்த அளவு மக்களுக்கு உதவுகிறார்கள் என்பது உண்மையே.

எல்லா புலம்பெயர்ந்தவர்களும் சண்டைக்கு காசு கொடுத்தவர்கள் என்று சொல்லமுடியாது. சண்டைக்கு காசு கொடுத்தவர்கள் 10% கூட இருக்காது. அந்த 10% உம் இப்போது மக்களுக்கும் காசு கொடுக்கிறார்கள். மற்றய 90% ஆனவர்களும் அப்பவும் எதுவும் செய்ததில்லை இப்பவும் எதுவும் செய்ததில்லை. அவர்கள் தான் லட்ச கணக்கில் வீட்டைக் கட்டி யாழில் வசதியாக வாழ்கிறார்கள். அவர்களைப் பார்த்து புகையும் இந்த வாந்தி எடுக்கும் கூட்டம் காசு கொடுப்பவனை பழிக்கிறது.

உண்ணாவிரதம் இருந்தவனை பேக்கர் சாப்பிட்டான் என்று குற்றம் சொல்லி ஊளையிட்டவர்களுக்கு இப்போது தெரிந்திருக்கும் எது உண்மை என்று.

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்லுவார்கள். இவர்கள் எல்லாம் ஒரு நாள் அனுபவிப்பார்கள். அப்போது உதவ பயங்கரவாதிகளை சப்போட் பண்ணிய நடுநிலைவாதிகள் அல்லாத நாங்கள் தான் கைகொடுப்போம் என்பது மட்டும் உறுதி.

Rathi சொன்னது…

அனாமிகா, உங்களைப் போல் தான் நானும். சிலவற்றை எழுதினால் கோபம் குறையும். சிலதை புறக்கணித்து விட்டு போனால் தான் கோபம் குறைகிறது. இது இரண்டாவது ரகம். அதனால் தான் புறக்கணித்து விட்டுப் போக நினைக்கிறேன். ஈழப்போராட்டத்தின் நியாயத்தை புலிகளின் பிரதிநிதித்துவம் தான் சரியான வழியில் எடுத்துச் சென்றது என்று சொன்னால் இப்படி ஆகிவிடுகிறது. எங்களை வம்படியாய் கருத்து சொல்லு என்று நிற்கிறார்கள்.

நீங்கள் ராஜ நடராஜனுக்கு சொன்ன பதில்கள் எல்லாம் நான் பதிவுலகில் சொல்லிச்சொல்லி தேய்ந்துபோய்விட்டது.

ஜோதிஜி சொன்னது…

அனாமிகா உங்கள் விமர்சனத்திற்கு வாசகனாக மாறியுள்ளேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

அனாமிகா!நிறைய கோபத்தை அள்ளித் தெளித்திருக்கிறீர்களென்று மீண்டும் ஒரு முறை பின்னூட்டம் வரும் போது காண முடிந்தது.

இக்பால் செல்வன் போன்றவர்களுக்கும் அவரவர் கருத்தை வெளியிட உரிமையிருக்கிறதென்றே நினைக்கின்றேன்.அவரது தளத்தில் கலந்து கொண்டு விவாதித்ததை நீங்கள் காணமல் போனதால் நான் என்ன சொல்ல வருகிறேனென்று உங்களுக்குப் புரியவில்லையென நினைக்கிறேன்.

எதிர் விமர்சனம் செய்பவர்கள் தீர்வுக்கான பாதைகளை சுட்டிக்காட்டாமல் வெறுமனே விமர்சனம் மட்டுமே செய்வது அயர்ச்சியை தோற்றுவிக்கிறது.பிரபாகரன் குறித்தும்,போர் குறித்தும் எதிர்க் கருத்துக்கள் கொண்டவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர் ஈழத்தை சார்ந்தவர்கள் என்பது மட்டுமே ஜீரணிக்க இயலாத ஒன்றாக இருக்கிறது.கருணா,பிள்ளையான்,டக்ளஸ்,ஆனந்தசங்கரி குழுக்கள் கூட அரசு சார்ந்த நிலையை தேர்ந்தெடுத்தார்கள்.தமது இருப்பு எனும் Survival தவிர இவர்கள் பயனுடையதாய் ஒன்றையும் செயல்படுத்தவில்லையெனும் போதே பிரபாகரனும்,இயக்கத்தையும் இவர்களாகவே வெற்றி பெறச்செய்து விடுகிறார்கள்.

தமிழகத்தில் ஈழப்பிரச்சினை பற்றி ஓரளவுக்கு அறிந்தவர்கள் உணர்வு பூர்வமாகமும்,அறிவு பூர்வமாகவும் சிந்திப்பதையும் கூட இவர்கள் ஹீரோ வொர்ஷிப்காரர்கள் என்ற பிம்பம் ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்கள்.

இன்னும் சொல்ல இருக்கிறது.மீண்டுமொரு பதிவில் கருத்துக்கள் வைக்க இயலுமா என பார்க்கிறேன்.

அனாமிகா துவாரகன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அனாமிகா துவாரகன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அனாமிகா துவாரகன் சொன்னது…

திருப்ப திருப்ப போடுவதற்கு மன்னிக்கவும். சில வார்த்தைகளை விழுங்கிவிட்டேன். திருப்ப படிக்கும் போது தான் தவறுகள் புரிந்தது.

@ ஜோதிஜி,
நன்றி நன்றி.

@ நடராஜன் சார்,
உங்களுக்கு இவர்களை கண்டு கொள்ளாதீங்க சார் என்று சொல்லிவிட்டு, மற்றதை பொது கருத்தாகப் போட நினைத்தேன். மறந்து போய் கொப்பி பேஸ்ட் பண்ணி எல்லாவற்றையும் ஒன்றாக போட்டுவிட்டேன். சாரி.

உங்களை திட்டவில்லை சார். திட்டற மாதிரி இருக்கா? உங்களைப் போன்றவர்கள் (வேற்று நாட்டில் பிறந்த தமிழர்கள்) எங்களுக்கு செய்யும் உதவியை கெடுப்பவர்களைத் தான் திட்டினேன். உங்களை திட்டறது மாதிரி இருந்தால் மன்னியுங்கள்.

நீங்கள் சொன்னதில் இருந்து தலைவரை திட்டுகிறீர்களா இல்லையா என்று புரியவில்லை. அதனால் தான் அப்படி கேட்டேன். ஹி ஹி. இன்னைக்கு ரொம்பவே குழம்பி இருக்கேன் போல. தலைவர் நல்லவர். எந்த நாட்டு தலைவரின் மகன் 24 வயதில் நாட்டிற்காக செத்திருக்கிறான்? 35 வருச போராட்ட வாழ்க்கை சார். அதெல்லாம் இந்த ***களுக்குத் தெரியாது.

இங்கு வாந்தி எடுப்பவர், தூங்கிற மாதிரி ஆக்டிங் கொடுக்கும் போது எழுப்ப முயற்சிப்பது வீண் வேலை. நாயின் வாலை நிமிர்த்த முடியாது என்று சும்மாவா சொன்னார்கள். Dogs bark but the caravan moves என்று ஒரு பழமொழி கூட இருக்கே.

அவர்கள் தரத்திற்கு நாங்கள் இறங்கிப் போகவேண்டுமா? அதனால் தான் அங்கே சப்போட்டுக்கு வரவில்லை.

படிச்சே எனக்கே அவ்வளவு அயர்ச்சி என்றால் உங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்று தெரியும்.

எல்லாவற்றையும் சேர்ந்து இன்று நெயில்ட் இட் என்று சொல்லுற மாதிரி ஒரு பதில் போட்டிருக்கிறேன்.

தமிழ் நாட்டு தமிழர்களின் உதவிக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்று தெரியும். நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. சொல்லித் தான் எங்கள் நன்றி உணர்ச்சி உங்களுக்கு புரிய வேண்டும் என்றில்லை என்ற எண்ணமும் இருப்பதால் நன்றி சொல்வதில்லை.

பிதற்றல்கள் முகிலன்(தினேஷ்) அண்ணா பக்கம் ஒரு வாட்டி நல்லாத் தான் இந்த புல்லுருவிகளுக்கு பதில் கொடுத்தேன். அப்பப்போ ஐ நெயில் தெம். =))

அடிக்கடி பதிலடி கொடுப்பதில்லை. ஆனாலும், இவர்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அது எவ்வளவு அயர்ச்சியை கொடுத்தாலும். =))

It is 3 am now. Let me get some sleep now. பதில் பார்த்த பின்னர் பேசுகிறேன்.

அனாமிகா துவாரகன் சொன்னது…

//அனாமிகா, புலிகளை தடை செய்யாத நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று//
அது ஜெய்க்குமார் என்ற ஒரு தனி மனிதனின் முயற்சியால் நடந்த ஒன்று. அவருடன் தோள் நின்ற மற்ற மக்களுக்கும் பங்கு இருந்தாலும், அது ஒரு தனிமனித சாதனை என்று இங்குள்ளவர்கள் சொல்லுவார்கள். அவர் ஒரு தீர்க்கதரிசி. அவரைப் பற்றி நிறைய கேள்வி பட்ட போது ஒரு வேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் ஒரு சிறிய மாற்றம் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றும்.

அனாமிகா துவாரகன் சொன்னது…

நீங்கள் பதிவு எழுத முதலே சிலருடைய பதிவுகளில் விடாமல் எழுதும் பின்னூட்டத்தைப் படித்திருக்கிறேன். அப்போதே பெரிய விசிறி. நீங்கள் எழுதத் தொடங்கிய போது இரண்டு முறை உங்கள் தளத்தை தொடர சேர்ந்த போதும் எந்த பதிவுகளும் என் பக்கம் அப்டேட் ஆனதில்லை. திருப்ப எல்லாவற்றையும் அழித்துவிட்டு சேர்த்த போது இப்போது ஒழுங்காக கிடைக்கிறது. சொல்லி பிரயோசனம் இல்லை என்றாலும் சொல்லாமல் இருக்க முடியவதில்லை. என்ன செய்வது. கடைசியாக ஒரு முறை சொல்லிப் பார்க்கிறேனே என்று முயல வைக்கும் மனதை எப்படி அடக்குவது.

//நான் எவ்வளவு தூரம் ஜனநாயகப் பண்புகளை, விழுமியங்களை மதிக்கிறேன் என்பதை உங்கள் பின்னூட்டங்கள் மூலம் உணரவைக்கிறீர்கள். :)//
ஹா ஹா ஹா. இதை விட யாராலும் சார்காசமாக ஒரு குத்து விட முடியாது.

நீங்கள் எழுதுவது போல ஒரு ப்லோவாக எழுத வருவகுதில்லை. ஐ என்வி யூ (இன் எ குட் வே) =))

Rathi சொன்னது…

அனாமிகா, நானும் இவ்வளவு தூரம் எழுதும் அளவுக்கு முன்னேறுவேன் என்றெல்லாம் நினைத்துப் பார்த்ததில்லை. எழுதுங்கோ, எழுத, எழுத அது தானே வரும்.

ஜோதிஜி உங்க விசிறியானதிற்கு வாழ்த்துக்கள்.

நீங்க அழிச்சு, அழிச்சு எத்தனை தரம் வேண்டுமாலும் என் தளத்தில் எழுதலாம்.

No problem!