மே 18, 2011

அவசர வேண்டுகோள்!

புலம் பெயர் தமிழர்களிடம் என் பணிவான ஓர் வேண்டுகோள்! தயவு செய்து நீங்கள் வாழும் நாடுகளில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் உங்கள் பங்களிப்பை செய்யுங்கள். இது முற்றுமுழுதாக ஜனநாயக வழிமுறைப் போராட்டமே. இதில் தயங்கவோ, நம்பிக்கை இழக்கவோ எதுவுமே இல்லை.

எங்கள் எந்தவொரு சிறு முயற்சியும் ஈற்றில் ஏதோவொரு விதத்தில் நன்மையே தரும். போர்க்குற்றங்கள் இழைத்தவர்களே நெஞ்சை நிமிர்த்தி ஐ. நா. அறிஞர் குழு அறிக்கைக்கு எதிராக செயற்பட்டு, அதற்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தி மனிதத்திற்கு எதிராய் தங்கள் சுயமுகம் காட்டுகிறார்கள். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். நாங்கள் எங்கள் பங்களிப்பை செய்யவில்லை என்றால், நாங்கள் மறைமுகமாக சிங்கள பேரினவாத அடக்குமுறையை ஆதரித்தவர்களாவோம். 

நாடு கடந்த தமிழீழ அரசு போர்க்குற்ற விசாரணைகள் சுயாதீனமாக சர்வதேசத்தால் முன்னெடுக்கப்பட வேண்டுமெண்டு எனக்கோரி கையெழுத்து சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்கிற அழுத்தத்தை ஐ. நாவுக்கு நாங்கள் கொடுக்கவில்லை என்றால் வேறு யாரும் அதை எங்களுக்காய் செய்யப்போவதில்லை. பாதிக்கப்பட்ட நாங்களே அதற்கான நீதியை இறைந்து கேட்கும் சூழ்நிலையில் இருப்பது துர்ப்பாக்கியம் தான், மறுப்பதற்கில்லை. ஆனாலும், நாங்கள் எங்கள் முயற்சிகளில் இருந்து பின்வாங்கவோ, அல்லது அவற்றை கைவிடுவதோ அறிவீனம். 

யாராவது உங்களிடம் கையெழுத்து கேட்டால் அதில் எழுதியிருப்பதை படித்துப் பார்த்துவிட்டு கையொப்பம் இடுங்கள். தமிழர்களுக்கு எதிராக செயற்படுபவர்களும் கூட எதையாவது எழுதி உங்களிடம் கையெழுத்து கோரலாம். கவனமாக இருக்கவும். 

இது எங்களுக்குரிய இன்னோர் சந்தர்ப்பம். அதை தவறவிட்டால் வரலாற்றில் தோற்றவர்கள் ஆவோம். 

நான் உங்கள் எல்லோரையும் போல் ஓர் சராசரி ஈழத்தமிழ். நான் யார் சார்பிலும் அல்லது எந்தவொரு   அமைப்பு சார்ந்தும் பேசவில்லை. ஈழம் தொடர்பில் எது என் அறிவுக்கு சரியென்று தோன்றியதோ அதை எழுதுகிறேன்.

எல்லோரும் நாங்கள் இழந்த உறவுக்களுக்காய் செய்யவேண்டிய கடமையை செய்வோம். 

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

I am sharing it in my blog as well.

Yoga.s.FR சொன்னது…

வேண்டுகோள் வைத்து கலந்து கொள்ளும் நிகழ்வு அல்ல!மானசீகமாக ஒவ்வொருவரும் தமிழர் என்ற ரீதியில் கலந்து கொள்ள வேண்டும்!இன்று பிரான்சில் நடந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கில் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தார்கள்!முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவாக இறுவட்டு ஒன்றும்,(தீயது மூட்டிய தீராத வீரம்)மற்றும் எமது மக்களின் அரசியல் நகர்வு குறித்த ஒரு நூலும்(என்ன செய்யப் போகிறோம் இதற்காக)வெளியீடும் நிகழ்ந்தது!நன்றி.

Rathi சொன்னது…

அனாமிகா துவாரகன், நன்றி.

Yoga. s. FR., நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான். நான் கொஞ்சம் யதார்த்தமாக யோசித்தேன், அவ்வளவு தான். பிரான்ஸ் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள்.