ஏப்ரல் 18, 2011

இலங்கை போர்க்குற்றங்களும் இந்தியாவும்...! ஜோதிஜி - Gorden Weiss

எந்த செய்தி தளத்தில் கண் பதித்தாலும் தென்படுவது இலங்கை குறித்த ஐ. நா. வின் மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையும் அது குறித்த ஆய்வுகளுமே. இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், ஈழத் தமிழர்கள் மீது என்ன அவ்வளவு அக்கறையா என்று தலையை உடைத்துக்கொண்டிருந்தேன். அதைத் தவிர்த்துவிட்டு தாண்டிப்போகவும் முடியவில்லை. முழுமையான அறிக்கை வெளியிடப்படாத வகையில் எல்லா ஊடகங்களும் இலங்கையின் Island பத்திரிகை வெளியிட்ட பகுதியின் விகுதியை வைத்தே கல்லாக் கட்டுகிறார்கள். புலிகள் மீதான போர்க்குற்றங்கள் என ஊடகங்கள் விமர்சிக்கும் போது, எனக்கு Noam Chomsky வியட்னாம் குறித்து எழுதிய அமெரிக்க ஊடகங்களின் "Manufacturing Content" தான் நினைவுக்கு வருகிறது. 

எப்படியோ, இந்த அறிக்கை உலகில் ஓர் முக்கியமான காலகட்டத்தில் வந்திருப்பதாக ஊடகங்கள் முதல் சர்வதேச சட்ட வல்லுனரான Francis Boyle வரை குறிப்பிடுகிறார்கள். லிபியாவின் தலைவர் கடாபி மீதான விசாரணைகளை மேற்கொள்ள தற்போது ஐ. நா. வின் மனித உரிமைகள் அமைப்பின் மூலம் ஓர் சர்வதேச குழு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்ட வரைவுகளுக்கு இணங்க அமைக்கப்பட்டிருக்கிறதாம். ( ஒரு விதத்தில் பார்த்தால் லிபியாவின் கடாபி மீதான விமர்சனங்கள் மற்றும் சர்வதேசத்தின் செயற்பாடுகள், இவைதான் இலங்கை பக்கமும் அதன் அதிபர் மீதும் சர்வதேசத்தின் பார்வை திரும்ப காரணமோ என்று யோசிக்க வைக்கும் அளவில் இருக்கிறது. இருந்தாலும் கூடவே, Brian Senewiratne சொன்ன, "Libiyan's oil is thicker than Tamils' Blood" என்பதும் கசப்பான ஓர் உண்மை. 

இலங்கை மீதான போர்குற்ற விசாரணைகள் நடைபெற ஏதுவான எல்லா காரணிகளும் வலுவாக இருப்பதாக தற்போது பொதுவாக கருதப்படுகிறது. லிபியா விடயத்தில் சர்வதேசமும் ஒரே அணியில் இருப்பதால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வரையறைகளுக்கு உட்பட்டு மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கூடவே இலங்கை விடயத்தில் அப்படி ஒரு விசாரணை மேற்கொள்ளப்படுவது நிறையவே சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகிறார்கள். 

காரணம், எல்லோராலும் ஊகிக்க முடிந்தது தான். இந்தியா, இந்தியா, இந்தியா.....! இந்தியாவோடு கூடவே சீனா, ரஷ்யாவும் உண்டு. அதாவது ஆசியாவின் மிகப்பெரிய வல்லரசுக் கனவோடு போட்டி போடுபவர்கள் கூட ஈழத்தமிழன் விடயத்தில் எப்படி ஒன்றாய் ஒரே அணியில் எதிர்க்கிறார்கள்!!! இது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்காவின் "Strategic Interest" ஆகிப்போன இலங்கையைச் சுற்றியுள்ள கடல் தான். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதை நிச்சயமாய் இந்தியா, சீனா, ரஷ்யா எதிர்க்கும் என்பது முடிவான உண்மை. மனித உரிமை சபையில் இவர்கள் எல்லோரும் ஒரே அணியில் அப்போதே வாக்களிந்திருந்தால், இன்று இந்த ஐ. நா. வின் அறிக்கை என்கிற ஒன்றே இல்லாமல் போயிருக்குமோ!  

இலங்கைப் போர்க்குற்றங்கள் என்கிற பேச்சு வரும்போது இந்தியாவின் பங்கு குறித்த கேள்விகளும் இயல்பாகவே அப்பாவி ஈழத்தமிழன் முதல் சர்வதேசம் வரை தோன்றாமல் இல்லை. இந்த அறிக்கை குறித்த அமளிதுமளியில் சிலரது கருத்துகளை இங்கே இணைக்கிறேன். 

முதலில் ஜோதிஜி சொன்னது,  என்னுடைய முள்ளிவாய்க்காலும் சர்வதேசமும் பதிவிலிருந்து 

//இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும்//


வாய்ப்பேயில்லை. காரணம் இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த நாடும் இந்தியாவை பகைத்துக் கொள்ள பைத்தியமா பிடித்திருக்கு. உள்ளே வந்தால் என்ன வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று உருவாக்கியுள்ள அமைப்பின் படி உள்ள இந்திய ஜனநாயகத்தை யாராவது கெடுத்துக் கொள்வார்களா? குறிப்பா அமெரிக்கா?//


அடுத்து என் முந்தைய முள்ளிவாய்க்காலும் சர்வதேசமும் என்கிற பதிவு 'யாழ் களத்தில்' இருப்பதை என் புள்ளிவிவரப் பட்டியிலில் இருந்து தெரிந்துகொண்டேன். அங்கே யாழ் கள உறவு சொன்ன ஓர் கருத்து, 

//கோமகன், இந்தியா கட்டாயம் விசாரிக்கப் பட வேண்டும். இல்லாதவிடத்து, இலங்கையைப் போர்க்குற்றவாளியாக்க இந்தியா ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன்,நம்பியார் ஆகியோர் தனிப்பட்ட முறையிலாவது விசாரிக்கப் படவேண்டும்.இரசாயனத் தாக்குதல் பற்றிய உண்மைகள் வெளியுலகத்துக் தெரியவேண்டும். அம்பதினாயிரம் + உயிர்கள் பறிக்கப் பட்ட உண்மையும்,அதில் இந்தியாவின் தார்மீகப் பொறுப்பின்மையும் உலகத்திற்குத் தெளிவாகத் தெரியப் படுத்தப் பட வேண்டும்.தண்டனைகளைப் பற்றி நாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.ஆனால் உண்மைகள் வெளிக்கொணரப் பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்க முடியாது!!!//

இறுதியாக ஐ. நாவின் முன்னாள் பேச்சாளர் Gordon Weiss ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு வழங்கிய பெட்டியில் சொன்னது,

//This is going to make it very difficult for the UN not to take action. It's going to make it very difficult for any member of the United Nations, and in particular, I'm thinking of India, China, Russia to obscure or obstruct a serious and credible international investigation into what happened in the tail end of this long civil war//

http://www.radioaustralia.net.au/connectasia/stories/201104/s3194620.htm

ஆக மொத்தத்தில் இந்தியா ஏதோவொரு வகையில் வகை தொகையின்றி அழிக்கப்பட்ட ஈழத்தமிழனுக்கு சர்வதேசத்தின் மூலம் நீதி கிடைக்க குறுக்கே நிற்கும் என்பதில் யாருக்கும், சாதாரண பொதுமகன் முதல் Gordon Weiss வரை சந்தேகமே இல்லை. 

சோனியா காந்தி, நாராயணன், சிவ சங்கர் மேனன், பிரணாப் முகர்ஜி, விஜய் நம்பியார், சிதம்பரம், கருணாநிதி உட்ப்பட்ட  அனைத்து இந்தியர்களுக்கும் எங்கள் நன்றிகள் பல :(((
24 கருத்துகள்:

TNChn சொன்னது…

Please create pressure for the UN to officially publish the report. Visit

http://amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka

Yoga.s.FR சொன்னது…

உண்மையில் எப்போதுமே முந்துவது பலன் தராது என்பதை இப்போது ஆட்சியாளர்கள்?!புரிந்து கொண்டிருப்பார்கள்.உள் நாட்டில் ஆதரவை திரட்டுவதற்காக,ஐ.நா (பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்க அவரே நியமித்த குழு)வின் அறிக்கையை கசிய விட்டதன் மூலம் "எங்களுக்கு அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடும் கஷ்டத்திலிருந்து விடுவித்திருக்கிறார்கள்!எப்படியாயினும் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்துக்கு பான் கி மூனை தள்ளியிருக்கிறார்கள்!நல்லது தானே?மேலும், நிபுணர் குழு அறிக்கை இரண்டு தரப்பினருமே குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாகவே சொல்கிறது!கடைசி நிமிடத்தில் சரணடைந்தோரை ஐ.நா மற்றும் மேற்குலகு காப்பாற்றி விடக் கூடுமென்று கருதி "தம்பி"கொல்வதற்கு உத்தரவிட்டார்!அது மீண்டும் நாம் "மோட்டுச் சிங்களவரே" என நிரூபித்திருக்கிறது!இப்போது அரசும்,எதிர் தரப்பு அரசியல் வாதிகள்,பெளத்த?!பிக்குகள் துள்ளுவது அறிக்கையிக் கூறப்பட்டிருக்கும் "போர்க்குற்றம்"சம்பந்தமாக அல்ல!அவர்களின் கூற்று இலங்கையின் "உள் நாட்டு விடயம்" என்பது எதனைக் குறிக்கிறது என்றால் நிபுணர்கள் குழு,அறிக்கையில் கடைசில் குறித்திருக்கும் இன முரண்பாட்டுக்கான தீர்வு குறித்தே!தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்கி அதனைக் கண்காணிக்க "சர்வதேச "மட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையே அதிர்ச்சியளிப்பதாக இலங்கை அரசு சொல்கிறது!உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய காலம் இப்போது முகிழ்ந்திருக்கிறது.அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்,புலம்பெயர் தமிழர்கள் அவரவர் வாழும் நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் முனைப்புகளில் மீண்டும் ஈடுபட வேண்டும்.இப்போது விட்டால் எப்போதுமே இல்லை!போர்க் குற்றங்களிலிருந்து விடுபடுவதற்காகவே மகிந்தர் உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு என்று ஒரு உப்புச் சப்பில்லாததை(அதிகாரமற்றதை)உருவாக்கினார்.அது சேடம் இழுக்கிறது.த.தே.கூ வுடன் பேசுகிறோமென்று புலுடா விடுகிறார்,சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க.அவர்களும் இழுபடுகிறார்கள்!எந்த வகையிலும் மகிந்தர் ஆயுததாரிகளை ஒழித்து விட்டு,தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவேனென்று சர்வதேசத்துக்குக் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது என்ற முடிவுக்கு வந்த சர்வதேசம் ஐ.நா செயலருக்கு ஆலோசனை வழங்க அவரே நியமித்த குழு மூலம் தீர்வினை சொல்லியிருக்கிறது!இதன் மூலம்,இந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம்,விடுதலைப் புலிகளும் குற்றம் இழைத்தார்கள் என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் எங்கள் இனத்துக்கு விடிவு கிடைக்கலாம்,கிடைக்க வேண்டும்!அதற்காக எங்கள் மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவதாக அர்த்தமாகாது!அவர்கள் எங்கள் விடுதலையை இலட்சியமாகக் கொண்டு மாவீரர் ஆனார்கள்!இந்த விடுதலை அவர்களால் கிடைத்தது என்று இந்தப் பூமிப் பந்து உள்ளவரை மறக்கப்படாது என்பது உண்மை.

Rathi சொன்னது…

TNChn, நிச்சயமாய் செய்ய வேண்டும். ஆனால், பான்-கி-மூன் இனி அறிக்கையை வெளியிடாமல் இருக்கும் அளவிற்கு நிலைமைகள் இல்லை என்று தான் நினைக்கிறேன்

Rathi சொன்னது…

Yoga.s. FR.,

இலங்கை அரசிடம் யார் தமிழர்களுக்கு தீர்வு சொன்னாலும் உடனேயே குதிக்கத்தொடங்கிவிடுவார்கள். அது தானே அவர்களின் வரலாறு. தமிழ் நெட்டில் தீர்வு குறித்த Model (Retributive justice, Restorative justice) அழகாக விளக்கப்பட்டிருந்தது. படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

புலிகளின் போற்குற்றங்களை நிரூபித்து தங்கள் நடுநிலையை பிரஸ்தாபிக்கும் தனிநபர்கள் முதல் சர்வதேசம் வரை அதே நடுநிலைமையுடன் புலிகளின் உயரிய நோக்கம் குறித்தும் பேசவேண்டும் என்பதே என் கருத்து. ஆதி முதல் சர்வதேச ஊடகங்கள் எப்போதுமே அவர்கள் மீது கரி பூசும் வேலையை தானே தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கிறார்கள். இணைய ஊடகம் நடத்தும் உங்களுக்கு புரியாததல்ல. என் அறிவுக்கு எட்டியதைச் சொன்னேன். :)

நியுசிலாந்து உச்சநீதிமன்றத்துக்கு 'Freedom Fighters' ஆக தெரியும் புலிகள் ஏன் அமெரிக்காவுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு மட்டும் பயங்கரவாதிகளாய் தெரிகிறார்கள் என்று சாதாரண என் போன்றவர்களின் மனதில் தோன்றுவதில் தவறில்லையே.

Thekkikattan|தெகா சொன்னது…

இருந்தாலும் கூடவே, Brian Senewiratne சொன்ன, "Libiyan's oil is thicker than Tamils' Blood" என்பதும் கசப்பான ஓர் உண்மை. //

ரதி, அதில் ரொம்ப உண்மை இருக்குங்க. ஆனா, அது போன்றதொரு பொருளாதாரம் கச்சா பொருள் அடிப்படையில் மட்டும் அங்கே சிக்கியிருந்தா நிலமை எப்படி எப்படியெல்லாமோ திசை திரும்பி இருக்கும் by now.

இருப்பினும் நில அரசியல் அமைப்பின் படி இந்தியா அல்லவா அந்த கடல் பிராந்தியத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். சீனா, ரஷ்யா, பாகிஸ் போன்ற நாடுகள் கூட அங்கே வந்து பங்கிட்டு கொள்ளும் நாளுக்கு முன்னயே. இன்று strategically இந்தியா தன் இருப்பை இழந்து பங்கிட்டு கொள்ளும் ஒரு துர் பாக்கிய நிலையில் கையேந்தி நிற்பது போல் தன்னை அங்கு போட்டுக் கொண்டது.

இன்னமும் புரியவில்லை, இந்தியாவின் அரசியல் நகர்வுதான் என்ன என்று. இந்த நாடுகளின் இப்படியானதொரு அணுகு முறைக்கும் அதாவது இது எங்கள் உள் நாட்டு பிரச்சினை வேறு யாரும் (மேற்குலகம்) மூக்கை நுழைக்காதீர்கள் என்று எடுத்திருப்பதற்கு பிறகான இன்னொரு திட்டமாக நான் நினைப்பது இந்த நாடுகளில் எப்பவெல்லாம் உள்நாட்டு பிரச்சினைகள் எழுந்தாலும், ஈழம் போன்றே கொன்று நிரவிக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பிலாக இருக்கக் கூடுமோ!

அதாவது தன் சொந்த மக்களையே நாளை நிரவும் படி சூழ்நிலை இருந்தால் என் சொந்த பிரச்சினை நான் எப்படி வேண்டுமானாலும் இதனை தீர்த்துக் கொள்வேன் வேறு யாரும் வர வேண்டாம் என்ற முன் யோசைனையின் படி.... ???!!

ஜோதிஜி சொன்னது…

ரொம்பவே பயந்து போய் விட்டேன். ஒரு வேளை என் பெயரில் வேறு யாராவது இருப்பாங்களோன்னு உள்ளே வந்தேன்.

கடைசி கட்ட தாக்குதலின் போது விவரணையாக ஒவ்வொன்றாக கோர்த்த தகவல்கள் பதிப்பகதில் உறங்குகின்றது. ஒரு வேளை போர்க்குற்றவாளியாக தண்டிக்கும் நேரத்தில் பதிப்பக மக்களுக்கும் விழிப்பு நிலை வருமோ?

Rathi சொன்னது…

தெகா,

இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கை தான் என்னவென்று நான் யோசிப்பதுண்டு. எதுவுமே புரிவதில்லை. அரசியலில் உள்ளூரில் ஆட்சியைப் பிடிப்பதிலேயே கவனம் போலும். வெளிநாட்டுக் கொள்கை, இந்து சமுத்திரப்பிராதியத்தில் சீனாவின் ஆதிக்கம் பற்றி எல்லாம் யார் யோசிப்பார்களோ?

Rathi சொன்னது…

ஜோதிஜி,

சேச்சே, அந்தப் பெயரில் பதிவுலகில் நீங்கள் ஒருவர் தான்.

கடைசி நேரத்திலாவது யாராவது விழித்துக்கொண்டால் சரி.

Rathi சொன்னது…

ஜோதிஜி, தெகா,

இந்த இணைப்படித்துப்பருங்கள். முழு அறிக்கையும் வெளிவந்தால் இந்தியாவும் பாதிக்கப்படுமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
http://www.valampurii.com/online/viewnews.php?ID=18238

ஜோதிஜி சொன்னது…

Google Buzz ல் பகிர்ந்துள்ளேன் ரதி. ஒரு வகையில் ஆப்பு உண்மை தான். ஆனால் நடக்க வேண்டுமே?

பிரதமர் பதவி இந்தியாவில் மிக மலிவான பதவியோ?

சுந்தரவடிவேல் சொன்னது…

என் நாடு போர்க்குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததை எண்ணி அவமானமடைகிறேன். இதற்கான கழுவாயைத் தேடிக்கொள்ள அரசியல் ரீதியாகப் போராடுவதே 'சத்யமேவ ஜயதே' என்ற எங்கள் தேசிய விழுமியத்துக்கு நான் செலுத்தும் மரியாதை என்று ஒவ்வொரு இந்தியரும் உறுதியெடுத்துக் கொள்ளும் நிலை வரவேண்டும். நாட்டுப்பற்றுமில்லை, மனசாட்சியுமில்லை என்று திரிவாருக்குக் காலம் விடை கொடுக்கும்.

Rathi சொன்னது…

ஜோதிஜி, ஐ. நாவின் அறிக்கையில் இலங்கையின் போர்க்குற்றத்திற்கு இந்தியா துணைபோனது என்றாலே ஓர் ஜனநாயக நாடாக தன்னை பிரஸ்தாபிக்கும் நாட்டுக்கு அவமானம் இல்லையா? அரசியல் வாதிகள் வழக்கம் போல் துடைத்தெறிந்துவிட்டு போய்விடுவார்களோ? ஓர் உண்மையான, இந்தியாவை நேசிப்பவருக்கு அது கசப்பாத்தானே இருக்கும். Channel 4 மறுபடியும் ஓர் காணொளி வெளிடப்பட்டது. அதில் சொன்னார்கள் இறுதிப்போரில் இறந்தோர் தொகை அதிர்ச்சியூட்டும் வகையில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று.

Rathi சொன்னது…

சுந்தரவடிவேல்,

இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களை மதித்து இந்தியா செய்த, செய்யும் குற்றங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் தட்டிக்கேட்டாலே போதாதா. ஆனால், இந்தியாவின் போர்முகமும், ஈழத்தின் மீது காழ்ப்பு கொண்டதும், போர்க்குற்றத்திற்கு துனைபோனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் அறியுமா??

ராஜ நடராஜன் சொன்னது…

//லிபியாவின் கடாபி மீதான விமர்சனங்கள் மற்றும் சர்வதேசத்தின் செயற்பாடுகள், இவைதான் இலங்கை பக்கமும் அதன் அதிபர் மீதும் சர்வதேசத்தின் பார்வை திரும்ப காரணமோ என்று யோசிக்க வைக்கும் அளவில் இருக்கிறது. இருந்தாலும் கூடவே, Brian Senewiratne சொன்ன, "Libiyan's oil is thicker than Tamils' Blood" என்பதும் கசப்பான ஓர் உண்மை. //

பதிவின் சாரமே இந்த வரிகளில் அடங்கி விடுகிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

//இலங்கையைப் போர்க்குற்றவாளியாக்க இந்தியா ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன்,நம்பியார் ஆகியோர் தனிப்பட்ட முறையிலாவது விசாரிக்கப் படவேண்டும்.//

திலிபனின் உண்ணாவிரத காலத்தில் இந்தியப்பிரதிநிதி தீக்‌ஷித்துக்கு எப்படி பங்கு இருந்ததோ அதே மாதிரி போரின் இனப்படுகொலைகளுக்கு குறிப்பிட்ட மூவரும் காரணகர்த்தாக்களாக இருந்தாலும் புரோட்டகால் படி பிரணாப்முகர்ஜியே முதல் குற்றவாளி.

ராஜ நடராஜன் சொன்னது…

//சோனியா காந்தி, நாராயணன், சிவ சங்கர் மேனன், பிரணாப் முகர்ஜி, விஜய் நம்பியார், சிதம்பரம், கருணாநிதி உட்ப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் எங்கள் நன்றிகள் பல :(((//

ஏனையவர்களை விட வரலாற்றைத் திருப்பி போடும் வலிமையும்,பதவியும்,மக்கள் ஆதரவு இருந்தும் போரின் சமகாலத்தில் ஸ்பெக்ட்ரம்,தமது மக்களுக்குப் பதவி என்ற சுயநலத்தில் மூழ்கிப்போன கருணாநிதி தமிழர்களைப் பொறுத்த வரை குற்றவாளியே.

Rathi சொன்னது…

ராஜ நடராஜன்,

எங்களுக்கு வேண்டியதெல்லாம் இந்தியா செய்த இந்த குற்றத்திற்கு அதற்குரிய நீதியும், நியாயமுமே. அவர்கள் இலங்கைக்கு இனிமேலும் துணை போகாமல் இருந்தால் போதாதா என்கிற ஆதங்கம் தான்.

Rathi சொன்னது…

Just as Russia opposed any Council discussion of Sri Lanka during the final, bloody stages of the conflict in 2009, on April 18, 2011 in the Council Russia raised a number of “procedural” objections, sources told Inner City Press afterward.

It should be noted that in the cases of Ivory Coast, UN Secretary General Ban Ki-moon took action, even military action, over Russian objections. Now, Ban is on his way to Russia, seemingly to try to smooth that over and seek to protect his chances at a second term as Secretary General, which Russia could veto.

Will meaningful action on the UN Panel of Experts report on Sri Lanka be sacrificed to Ban's drive for a second term? Watch this site.


http://www.innercitypress.com/sripan1lanka041911.html

ஜோதிஜி சொன்னது…

ரதி உங்க பதிவு முதல் முறையாக தமிழ்மணத்தில் சூட்டில் மாட்டியுள்ளது?

இந்தியாவின் வின்ஸ்டன் சர்ச்சில் என்று வர்ணிக்கப்பட்ட ஜே என் தீட்சித் தான் அமைதிப்படை காலத்தில் செய்த அத்தனை தவறுகளையும் கடைசியாக ஒத்துக் கொண்டு புத்தகத்தில் எழுதியதைப் போல மன் மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, நாராயணன், போன்றவர்கள் ஒருவேளை தங்களின் கடைசி காலத்தில் மன்னிப்பு சாசனம் எழுதக்கூடும். என்னவொன்று அன்று ஈழம் முழுமையாக சீனாவின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கக்கூடும்.

அருள் சொன்னது…

ACT NOW! ஐ.நா அறிக்கையை உடனே வெளியிடுங்கள் பான் கி மூன் அவர்களே

http://arulgreen.blogspot.com/2011/04/act-now.html

Rathi சொன்னது…

//ரதி உங்க பதிவு முதல் முறையாக தமிழ்மணத்தில் சூட்டில் மாட்டியுள்ளது?//

ஜோதிஜி, எனக்குப் புரியவில்லை. 'மாட்டிவிட்டது", அப்படிஎன்றால் ஏதாவது பிரச்சனையோ?

இவர்கள் எப்போ திருந்தி, எப்போ புத்தகம் எழுதி.....??

தவறு சொன்னது…

”"Libiyan's oil is thicker than Tamils' Blood" என்பதும் கசப்பான ஓர் உண்மை. ”

அவங்க ரத்தம் சரியாக ஓடதான் ஆயில் பக்கம் ஓடுறாங்க. இன்னொரு சக மனித ரத்தமா என் இனமா? என் நாடா? அட எனக்கு ஏதாவது உதவி புரிபவனா ? எதுவுமே இல்லைன்னா அப்புறம் ஏப்பா அவுகள பத்தி நெனைக்க..

”எங்களுக்கு வேண்டியதெல்லாம் இந்தியா செய்த இந்த குற்றத்திற்கு அதற்குரிய நீதியும், நியாயமுமே. அவர்கள் இலங்கைக்கு இனிமேலும் துணை போகாமல் இருந்தால் போதாதா என்கிற ஆதங்கம் தான்.”

காங்கிரஸ் இருக்கிறவரைக்கும் இதெல்லாம் சாத்தியமா ரதி ???

Rathi சொன்னது…

அருள், நான் ஏற்கனவே என் கடமையை செய்து விட்டேன். நன்றி.

Rathi சொன்னது…

தவறு, வாங்க. நாங்கள் இந்தியராணுவம் எங்களுக்கு இழைத்த குற்றத்துக்காக கூட நியாயம் கேட்கவில்லை. ஈழத்தின் இறுதிப்போரில் மாண்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்கிறோம். குறைந்த பட்சம் அதற்கு தடையாகவேனும் இல்லாமல் இருக்கலாம் இல்லையா.

ஐ. நாவின் பாதுக்காபுச்சபையில் நிரந்த உறுப்பினர் உரிமை வேண்டும் என்கிற ஆசை உண்டாமே இந்தியாவுக்கு.