ஏப்ரல் 29, 2011

இலங்கையின் மே தின ஐ. நா. எதிர்ப்பும் பலியாடாய் தமிழனும்!

மே தினம் என்பது உழைப்பாளர் தினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான ஓர் அடையாள நாள். எந்த நாளாய் இருந்தால் என்ன இலங்கைக்கு தமிழனை வதைக்கும் எல்லா நாளுமே நல்லநாள் தான்.

ஏற்கனவே ஐ. நா. வின் செயலருக்கு இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்க அமைத்த மூவர் குழுவுக்கு "Lemon Puff" பிஸ்கட் புகழ் விமல் வீரவன்சே காந்தீய வழியில் உண்ணாவிரதமோ அல்லது உண்ணும் விரதமோ இருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், இலங்கைக்காக.  இலங்கையின் இறையாண்மையை மீண்டுமொருமுறை காப்பாற்றிவிட்டு வைத்தியசாலையில் படுத்துகொண்டார். ஊடகங்களுக்கு தீனி போட்டார். தமிழர்கள் மீதான இனத்துவேசத்தை நிறைத்துவைத்து மார்க்சீயம் பேசும் ஜே. வி. பி. இலிருந்து பிரிந்து ஓர் கட்சிவைத்து ராஜபக்க்ஷேவுக்கு அடிப்பொடியாய் செயற்படுபவர் என்பது அவரது சிறப்புத் தகுதி.

இவரின் ஐ. நா. எதிர்ப்பு உலகப் பிரசித்தி பெற்றதென்றாலும், இப்போ மிக அண்மையில் ஐ. நா. மூவர் குழு  இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அதன் செயலருக்கு ஆலோசனைகள், பரிந்துரைகள் வழங்கிய அறிக்கை மறுபடியும் இலங்கையின் இறையாண்மையை சீண்டிப்பார்த்துவிட்டதாம். அதற்காக வரும் மே மாதம் ஒன்றாம் திகதி ஒட்டுமொத்த இலங்கையும் இவரின் தலைமையில் பொங்கி எழப்போவது யாவரும் அறிந்ததே.

இவர்களின் ஐ. நா. எதிர்ப்புக்கு இப்போ வடக்கில் இருந்து தமிழர்களை பேருந்துகளில் நிரப்பி ஏற்றிச் செல்வதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழர்களில் மிகப் பெரும்பான்மையோர் விருப்பமின்றியே சிங்கள ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதுவும் அவர்களின் வழமையான பயமுறுத்தி, உயிர்ப்பயம் காட்டி, இந்த ஐ. நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்ளாவிட்டால் கொல்லப்படுவார்கள்   என்று தமிழர்களை மிரட்டியதாகவும் தமிழ் நெட் செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் ஏற்கனவே இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, இப்போ விடுதலை செய்யப்பட்டவர்களே இப்படி மிரட்டி அழைத்துச் செல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. கூடவே, இலங்கையின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப் படக்கூடாது என்பதை கையெழுத்து வேட்டையில் ஐ. நா. செயலருக்கு கடிதமும் அனுப்பப்போகிறர்ர்கள்.

அது தவிர, யாழ்ப்பாணத்திலும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்டாய ஆள்சேர்ப்பு, வன்முறைகளை தூண்டும் திட்டம் என்பனவும் சிறப்பாய் முன்னெடுக்கப் படுகிறதாம். இந்த கட்டாய ஆட்சேர்ப்பில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிலரின் சிறப்பான செயற்கரிய செயலும், திறனும் அடக்கம்.

ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை குறித்த காணொளிகள் இலங்கையை உலகெமெங்கும் பிரபலமடைய வைத்திருக்கும் வேளையில், இது போன்ற விடயங்கள் மட்டும் தப்புமா தொழில்நுட்பத்தின் கண்களிலிருந்து என யாரும் யதார்த்தமாக சிந்திக்கலாம். இலங்கை எந்தப் பொய்யைச் சொன்னாலும் அதைப் பலப்படுத்த இந்தியாவின் உதவி, சீனாவின் ஆதரவு, அமெரிக்காவின் அனுசரணை எல்லாமே உண்டு. கூடவே, ஐ. நாவுக்குத் தேவை காகிதங்களில் இருக்கும் கையெழுத்துகள் மட்டுமே. அது எப்படி சேகரிக்கப்பட்டது என்பதெல்லாம் தேவையில்லாத விடயம் என்று இலங்கை ஆணித்தரமாக நம்புகிறது போலும்.

இது எல்லாத்தையும் விட ஓர் யாழ்ப்பாணத்தமிழர் சொன்னது தமிழ்நெட்டில், 

"This is tacitly supported by some international elements too that abetted the crimes.   Familiarising Eezham Tamils to the life of subjugation is what meant by ‘reconciliation’ by those who conceived the paradigm, said a social worker in Jaffna." 

அவர் சொன்னது எனது தமிழில், போர்க்குற்றங்களுக்கு துணைபோன சர்வதேசமே இப்போதும் இதற்கு மெளனமாக ஆதரவு வழங்குகிறது. பயமுறுத்தி, அடிமைப்படுத்தி தமிழர்களை அந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்துவது தான் 'மீளிணக்கம்' என்பது அவர்களது எண்ணக்கரு என்று சொல்கிறார்.


நன்றி: படம் Google

10 கருத்துகள்:

தவறு சொன்னது…

தானா செத்துபோறத்துக்கு வெக்கமா இருக்கு..கஷ்டபட்டு செத்தோம் அப்படீன்னாவது வரலாறு பதிவு செய்யட்டுமே ரதி !!!

என்னமோ போங்க....

பெயரில்லா சொன்னது…

நல்லிணக்கம் இலங்கைத் தீவில் வரும் என நான் நினைக்கவில்லை - ஒன்று சிங்கள அரசின் தமிழ் விரோதப் போக்கு, மற்றொன்று புலம் பெயர் சமூகத்தின் சிங்கள விரோத முனைப்பு. இரண்டுப் பக்கத்திலாலும் பாதிக்கப்படுவது சிங்கள அரசின் கீழ் இருக்கும் தமிழர்கள் தான் என நினைக்கின்றேன். முதலில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இரண்டாவது அவர்களின் வாழ்வாதார மேன்மையடை முயற்சி செய்தல் வேண்டும். இரண்டும் இருந்தால் மட்டுமே இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பு தக்க வைத்துக் கொள்ளப்படும்.

சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு தடையாக இருக்கு, புலம் பெயர் தமிழ் தரப்பு இலங்கைத் தமிழர்களின் பொருளாதார மீள்வளர்ச்சியில் அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள்.

ஆகவே படிமுறையாக இலங்கைத் தீவில் இருந்து தமிழ் பேசும் மக்கள் வெளியேறி வருகின்றார்கள். இது அவர்களின் தொகையை குறைத்துவிடும் என்பதில் ஐயமே இல்லை ......... இருப்பவர்களும் பொருளாதார பிரச்சனையால் சிங்கள கிராமங்களுக்கு குடியேறி வருகின்றார்கள்.

பார்ப்போம் என்ன நடக்குதுனு ..........

Namy சொன்னது…

Yesterday in marina beach, a march organised by TGTE support group. No of participant very less compare to nearby beach. People are enjoying with family, lover, children. Thats the situation in 7.2 crore people of TN. Then how we expect India don't act favour of Lankan gov.

Namy சொன்னது…

Yesterday in marina beach, a march organised by TGTE support group. No of participant very less compare to nearby beach. People are enjoying with family, lover, children. Thats the situation in 7.2 crore people of TN. Then how we expect India don't act favour of Lankan gov.

Rathi சொன்னது…

தவறு,

இதுவரை எந்தவொரு அசம்பாவிதமும் நடந்ததாக நன் செய்திகளில் படிக்கவில்லை. நம்பிக்கையோடு இருப்போம்.

Rathi சொன்னது…

இக்பால் செல்வன்,

''.... புலம்பெயர் சமூகத்தின் சிங்கள விரோத முனைப்பு...",

உண்மையிலேயே என்னை ஆச்சர்யப்படுத்தியது உங்கள் கருத்து. You always give me the impression that you have knowledge deficit in Eezham Tamils issue.

என்னைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் ஓர் விடயத்தில் தெளிவாகவே இருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் சிங்கள பொதுமக்களை எப்போதுமே எதிரியாய் கருதியதில்லை. சிங்கள ஆட்சியாளர்கள், பேரினவாதிகள் இவர்களின் கொள்கைகள், ராணுவ அடக்குமறை இவற்றுக்கெதிராகவே தமிழர்கள் அன்றுமுதல் இன்றுவரை போராடி வருகிறோம்.

"...இலங்கை தீவிலிருந்து தமிழ் பேசும் மக்கள் வெளியேறி வருகின்றார்கள்...",

நீங்கள் அண்மைய அறிக்கைகள் எதையும் படித்ததில்லை போலும். இலங்கையிலிருந்து வெளியேறும் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. காரணம், இலங்கையில் அமைதி நிலவுகிறது என்பதல்ல. அவர்கள், ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா எங்கும் போகமுடியாதபடி அந்தந்த நாடுகள் சட்டங்களை இறுக்கமாக்கியதும்; தமிழர்கள் இலங்கையில் வாழ்வதற்குரிய சூழ்நிலைகள் மேம்பட்டு வருவதாக சிறிதுகாலத்துக்கு முன் ஐ. நா. வெளியிட்ட ஓர் உண்மைக்குப் புறம்பான அறிக்கையும் தான்.

".... இருப்பவர்களும் பொருளாதார பிரச்சனையால் சிங்கள கிராமங்களுக்கு குடியேறி வருகின்றார்கள்",

உங்களைப் போல் சிலர் சொன்னாலே போதும் இலங்கையில் தமிழனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மொத்தமாய் முடிவுகட்டி விடுவார்கள்.

Rathi சொன்னது…

Namy,

Thanks for your first visit and opinion.

Well, I have been talking about Tamil Nadu Tamils' active role in Eezham Tamils issue for a while. I am always reminded not to expect a 'Democratic Uprising' in Tamil Nadu re: Eezham Tamils.

As a Tamil who lives in Tamil Nadu, I believe, you know about them better than I do. It would be really interesting to know your views why a democratic uprising is not possible in Tamil Nadu.

Once again, thanks for for your thoughtful opinion.

ராஜ நடராஜன் சொன்னது…

Namy!you are the only person brought this news here.TGTE support group organised a march itself seems to be not well planned and advertised.

Rathi சொன்னது…

ராஜ நட, என் கருத்தை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு.. TGTE concept ஆரம்பத்தில் எங்களுக்கே புதிதாய் இருந்தது. தமிழ்நாட்டில் அது குறித்து பேசப்படுவதே குறைவாய் இருக்கும் பட்சத்தில் அதற்குரிய ஆதரவு எவ்வளவு தூரம் மக்களிடம் சென்று சேரும்.

ஆனாலும், இது ஓர் நல்ல முயற்சிதான். கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் ஒரு முறை ஓர் கருத்தரங்கு நடத்தப்பட்டது என்று படித்திருக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

புலம் பெயர் சமூகத்தின் சிங்கள் விரோதப் போக்கு !!!

சிங்கள் இனவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் சிங்கள் பொதுமக்களை ஈழப் போராளிகள் படுகொலை செய்ததே இல்லையா ? அப்பாவி தமிழ் மக்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டதுப் போன்றே சிங்கள விவசாயிகளும் பலமுறை தமிழர் தரப்பால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள் என்பதை மறுக்க முடியுமா?

இலங்கை தீவிலிருந்து தமிழ் பேசும் மக்கள் வெளியேறி வருகின்றார்கள் !!!

ரத்தத்துக்கு ரத்தம் தீர்வு சொல்லாது ... தமிழர்கள் தம்மை பொருளாதார நிலையில் இலங்கைத் தீவுக்குள் வலுவான நிலையில் நிலை நிறுத்திக் கொள்வதால் மட்டுமே அவர்களின் உரிமைகளை பெற முடியும். அதுவரை வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை சிங்கள அரசு சமாளித்துவிடும் என்றே தோன்றுகிறது

போருக்குப் பின்னான சூழலில் தமிழர்கள் வெளியேறவில்லை எனக் கூற முடியாது. வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழும் சூழல் இல்லை என்பதும் உண்மையான நிலவரம். எத்தனை ஆயிரம் ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக செல்லும் எண்ணத்தில் மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்றுக் கொண்டு தான் உள்ளார்கள். இன்னும் பலர் திருமணம், அனுசரனை போன்ற வழிகளில் நாட்டைவிட்டு வெளியேறித் தான் வருகின்றார்கள். ஈழத்தமிழர்களின் மக்களின் பிறப்பு வீதத்தினை விடவும், அவர்களின் வெளியேற்றம் அதிகமானது, அது தொடர்ந்துக் கொண்டே இருக்குது.

'' இருப்பவர்களும் பொருளாதார பிரச்சனையால் சிங்கள கிராமங்களுக்கு குடியேறி வருகின்றார்கள் ''

இக்கருத்தில் ஒரு சின்னத் திருத்தம் சிங்கள நகரங்களுக்கு என வந்திருக்க வேண்டும், அனேக தமிழ் இளைஞர்கள் கல்வி வேலை வாய்ப்பு பெறவும், வடக்கில் வாழும் சூழல் இல்லாத நிலையிலும் கொழும்பு போன்ற நகரங்களுக்கு பணி, கல்வி, பாதுகாப்புக்காக இடம் பெயர்ந்து வருவதை அங்குள்ள எனது தோழர்கள் ஊடாக அறிந்து கொண்ட செய்தி தான் சகோதரி.

அங்கு நடக்கும் யதார்த்தத்தைத் தான் நான் பதிவு செய்தேன் ..........

இந்த யதார்தங்களை சொல்வதால் தமிழனுக்கு எந்த பிரச்சனை இல்லை என நம்புவோர் முட்டாள்கள் தானே !!!