ஏப்ரல் 16, 2011

முள்ளிவாய்க்காலும் சர்வதேசமும்!

அண்மைக்காலங்களில் நிறையவே உள்ளூர் உலக அரசியல் மாற்றங்கள் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாததாய் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. மீண்டுமொரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி, சர்வாதிகார ஆட்சி கவிழ்ப்பு, ஜனநாயகத்தேர்தல்கள் என்று அநேகமான நாடுகளில் என்னென்னவோ நெருக்கடிகள். எல்லாமே ஏதோவொரு மாற்றத்தை, தீர்வை, விடிவை நோக்கிய நகர்வுகளாய் நிறையவே எதிர்பார்ப்புகளோடு. எல்லோருக்கும் எங்கேயோ இருந்து ஓர் வலுவான ஆதரவும், அதன் முடிவு நோக்கிய பயணமும் தொடர்கிறது. ஈழத்தமிழர்களுக்கும் ஓர் முக்கிய நிகழ்வாக கடந்த 2009 May மாதம் இடம்பெற்றதாக கருத்தப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கி-மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த வருடம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும், ஈழத்தின் இறுதியுத்த இழப்புகளும் ஐ. நாவின் பான் - கி- மூன் அமைத்த மூன்று பேர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட ஈழம் தொடர்பான அறிக்கை மூலம் நீதியைப் பெறுமா என்கிற எதிர்பார்ப்புகளோடு! இந்த குழு குறித்த புரிதல்களும், குழப்பங்களுமே ஆரம்பத்தில் விவாதத்திற்கு உள்ளாகியது. இந்தக் குழு போர்க்குற்றங்களை விசாரிக்க அமைக்கப்படவில்லை என்கிற அரிய, பெரிய உண்மையை வழக்கம் போல் இலங்கையின் இறையாண்மையை கட்டிக்காக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் கண்டுபிடித்து சொன்னார்கள். 
இது May 2009 ஐ. நாவின் செயலர் இலங்கைக்கு சென்றபோது ராஜபக்க்ஷேவுடன் பேசியதன் பிரகாரமே உருவாக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட குழு ஈழத்தின் இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டனவா, மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டனவா என்றும்; அப்படியானால், அது குறித்த இவர்களின் தீர்வுக்குரிய ஆலோசனைகளும் என்ன என்பது தான்.

முன்னாள், ஐ. நாவின் பேச்சாளர் Gordon Weiss ஓய்வுபெற்றபின் இலங்கையின் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இலங்கை அரசு குறித்து சொன்னதை நாங்கள் மறக்கவில்லை. அறிக்கை தயாரித்து ஐ. நா. செயலரிடம் சமர்ப்பித்தாகிவ்ட்டது.  இனி அவர் அதை பகிரங்கப்படுத்துவாரா என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கிறது. மூன்று பேர் கொண்ட குழுவை எந்த காரணம் கொண்டும் இலங்கைக்குள் எந்தவொரு விசாரணை செய்யவும் அனுமதிக்கமாட்டோம்; இந்த குழு சட்டாபூர்வமானதால என்றெல்லாம் சொல்லிவிட்டு; அமெரிக்காவில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்த குழுவை ஐ. நாவின் அரசியல் விவகாரங்களுக்கான Lyn Pascoe வின் ஏற்பாட்டில் பான்- கி- மூன் சம்மதத்துடன் இரகசியமாக சந்தித்ததாக Sunday Times பத்திரிகை சொல்கிறது. அந்த இரசிய சந்திப்பு வெளிப்பட்டு சிரிப்பாய் சிரித்தது தனிக்கதை. இப்போ, ஐ. நா. இலங்கையிடம் சமர்ப்பித்த இந்த அறிக்கையை இலங்கை அரசு பக்கச்சார்பானது, "Fundamentally Flawed" என்றும் விமர்சிக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவான Island பத்திரிகையில் அந்த அறிக்கை குறித்த சில விடயங்கள் கசிந்திருப்பதாக தெரிகிறது. ஆனால், Island பத்திரிகையில் பகுதியாக வெளிவந்த அறிக்கைப்படி இலங்கை அரச படைகளின் குற்றங்களோடு, புலிகள் பற்றிய குற்றங்களும், ஐ. நா. மக்களை காப்பாற்ற தவறி விட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இனி அது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு இட்டுச்செல்லுமா என்கிற எத்தனையோ கேள்விகள் இன்னும் மிச்சமிருக்கிறது. 

இதற்கிடையே அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிளேக், லிபியாவின் கடாபியை கண்டித்த கையோடு இலங்கையையும் போகிற போக்கில் கண்டித்து வைத்தார். இவர் அகம், புறமாக கண்டித்ததோடு நில்லாமல் அமெரிக்காவின் 'Strategic Interest' இலங்கை என்பதை வெளிப்படையாகவே சொல்லியும் விட்டார். இதை பல பத்திரிகைகள், ஆய்வாளர்கள் விமர்சித்து தீர்த்துவிட்டார்கள்.  கூடவே புலத்தில் உலக தமிழர் பேரவை தலைவரையும் சந்தித்திதார், பேசினார். இலங்கை இதற்காக கோபப்பட பிறகு Island பத்திரிகையில் கொஞ்சம் சமாதானப்படுத்தவும் முயன்றிருக்கிறார். ஒரே இலங்கைக்கும் அமைதியும், சமாதானமுமான தீர்வு என்கிறார். ஒரே இலங்கை  இருக்கும், தமிழர்களுக்கு அமைதியும், சமாதானமும் இருக்குமா! இன்றுவரை ஈழத்தமிழர்கள் தங்களுக்குரிய தீர்வாக தனி ஈழம் ஒன்றையே இறுதித் தீர்வாக கருதுகிறார்கள். அது எங்கேயோ காற்றில் இருந்து வருவிக்கப்பட்டதல்ல. மக்கள் ஆணையாக வழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமே  புலிகளால் Defacto State ஆக வடிவம் கொடுக்கப்பட்டது. இன்று அதுவே நாடு கடந்த தமிழீழம் ஆகவும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் வடிவம் மாற்றம் பெற்றிருக்கிறது. காலமும், வடிவமும் மாறினாலும் எங்கள் இலக்கு எப்போதுமே ஈழம் தான் என்பதை ஆணித்தரமாக சொல்லவேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு. எங்கள் காலத்தில் இல்லை என்றாலும் அடுத்த சந்ததி அந்த லட்சியத்தை தொடர வேண்டும், தமிழனுக்கு ஈழத்தில் சுதந்திரம் கிடைக்கும் வரை. 

வருகிற மே மாதம் பத்தொன்பதுக்கு முன் பான்-கி-மூன் முதல் பிளேக் வரை எல்லோருமே ஏதோவொரு நிகழ்ச்சிநிரலோடு பேசுவார்கள். பான்-கி-மூனுக்கு இந்த வருட முடிவோடு பதவிக்காலம் முடிய இருக்கிறதாம். மீண்டும் பதவியில் தொடர எதையாவது சாதிக்க நினைத்து ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கு நியாயம் கிடைக்க ஏதாவது செய்வாரா? ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிற போதிலும் இன்னும் அவர்களின் மரணத்திற்கு நீதியோ, நியாயமோ கிடைக்காத நிலையில் எல்லோருமே எதையோ செய்ய முனைவது போல் ஓர் தோற்றப்பாட்டை உருவாக்கிகொண்டிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. 

என்னுடைய மனதில் தோன்றும் கேள்விகள் ஈழத்தில் போர் மூழ, புலிகள் அழிய அதிக ஆதரவை வழங்கிய இந்தியா, அமெரிக்காவின் நிலைப்பாடு இந்த அறிக்கை குறித்து என்னவாக இருக்கும். ராஜபக்க்ஷேவை அவரது இனவாதத்தை ஊட்டி, ஊட்டி வளர்த்தவர்கள் இந்த இருசாராரும் தானே. இனி ஈழம் குறித்த அவர்கள் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும். ஒருவேளை போர்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் இந்தியாவும் இனப்படுகொலைக்குத் துணை போனதுக்கு விசாரிக்கப்படுமா????  இந்தியா விசாரிக்கப்படுகிறதோ இல்லையோ ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்கை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. 

16 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

ம்ம்ம்... டைம்’ஸ்ன் ஓட்டொடுப்பு எதனையோ முன்னிருத்திதான் இந்த சமயத்தில் நடத்தப்படுகிறது எனவும் கருதுகிறேன்.

மீண்டும் வருகிறேன்...

ஜோதிஜி சொன்னது…

இந்தியாவின் பங்கை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது

இதென்ன ரதி முழுக்க நனைந்த பிறகு முக்காடு?

போட்டுத் தாக்க வேண்டியது தானே?

ஆனால் வெட்கமில்லாமல் சென்னை தீவுத்தீடலில் நடந்த கூட்டத்தில் சோனியா உரையாற்றுவது என்ன தெரியுமா? அங்குள்ள தமிழர்களின் நலன்களை ஈழ அரசின் இறையாண்மையை பாதிக்கவாறு காப்பற்ற (கவனிக்க) முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும்.

நீங்க வேணா பாருங்க... இந்தம்மா தெரிந்த செய்த தவறுக்கு, இவருக்கும் ஒத்து ஊதும் உபிகளுக்கு காலம் நிச்சயம் தண்டனை வழங்கும் பாருங்களேன்.

ஆயிரம் கோடி தெரிந்து... தெரியாமல் எத்தனை கோடியோ? இந்த கேடிகளுக்கு உயிர்களின் மதிப்பும் தெரியாது. இன்னமும் வீடு திரும்பாமல் இருக்கும் தமிழர்களின் அழுகுரலும் கேட்காது.

நிறைய எழுத வேண்டும் போலுள்ளது. ஆனால் பலவித செய்திகளுக்காக நான் தினந்தோறும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன்.

Rathi சொன்னது…

தெகா, உங்கள் முதல் வருகை உற்சாகமளிக்கிறது. Times வாக்கெடுப்பு கவனித்தேன். நான் முக்கியமாக அறிக்கையில் கவனம் வைத்திருந்தேன், அதிகம் வாக்கெடுப்பை கவனிக்கவில்லை.

Rathi சொன்னது…

குருஜி உங்கள் வருகை நீண்ட நாட்களுக்குப் பிறகு!! ஜோதிஜி, இந்தியாவை நீங்கள் சொல்வது போல் போட்டு தாக்குவது பிரச்சனை இல்லை. நான் விரும்புவது இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும் என்பது தான். எங்கள் ரணமும் வலியும் அப்போதாவது புரியவேண்டும் இவர்களுக்கு. தவிர, இந்தியாவை நேசிக்கும் நிறைய தமிழ்நாட்டு தமிழர்களின் மனதை என் எழுத்து மூலம் காயப்படுத்தவும் விரும்பவில்லை.

சோனியா காந்தியின் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரப் பேச்சை கேட்டேன். என் இரத்தம் கொதிநிலையின் உச்சத்துக்கே போய்விட்டது.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!ஐ.நா மூவர் குழு அறிக்கை படித்தீர்களா?

http://www.dailymirror.lk/top-story/10913-summary-of-un-panel-report.html

மேலும் எனது பதிவான டைம்ஸ் இதழின் ராஜபக்சேவின் அங்கீகாரம் வாசிக்கவும்.

Rathi சொன்னது…

நன்றி ராஜ நடராஜன். நீங்கள் சொல்லும் சுட்டி படிக்கவில்லை. படிக்கவேண்டும்.

ராஜ நடராஜன் சொன்னது…

//எங்கள் காலத்தில் இல்லை என்றாலும் அடுத்த சந்ததி அந்த லட்சியத்தை தொடர வேண்டும், தமிழனுக்கு ஈழத்தில் சுதந்திரம் கிடைக்கும் வரை. //

கண்முன்னே நிகழ்ந்த அவலங்களை நாம் கண்டும் அதற்கான உழைப்பை முன் வைப்போம்.இதென்ன நமது கடனை அடுத்த சந்ததி தீர்க்கும் என்ற சோம்பல்.

புலம்பெயர்த் தமிழர்கள் உல்லாச கலைநிகழ்ச்சிகள்,கோயில் கதைகள்,தமிழகத்திலிருந்து இரவல் வாங்கும் தொலைக்காட்சி சீரியல்களை முதலில் தொலைக்கட்டும்.இதனை விட உட்பூசல்கள் தவிர்க்கவும்,நாடு கடந்த தமிழீழ அரசை வலுப்படுத்த முயல்வோம்.

அனைத்துலக நீதிமன்றத் தீர்ப்பு,HRW,Amnesty இன்னும் மனித உரிமைக்குழுக்கள் ஆதரவு,ஐ.நா வின் மூவர் குழு அறிக்கையுடன் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வோம்.

ஜோதிஜி சொன்னது…

இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும்

வாய்ப்பேயில்லை. காரணம் இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த நாடும் இந்தியாவை பகைத்துக் கொள்ள பைத்தியமா பிடித்திருக்கு. உள்ளே வந்தால் என்ன வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று உருவாக்கியுள்ள அமைப்பின் படி உள்ள இந்திய ஜனநாயகத்தை யாராவது கெடுத்துக் கொள்வார்களா? குறிப்பா அமெரிக்கா?

தமிழ்நாட்டு தமிழர்களின் மனதை

8 கோடி தமிழர்களில் நீங்க எதிர்பார்க்கும் மனதுள்ள தமிழர்கள் 1 லட்சம் பேர்கள் தேறக்கூடும். அவர்களில் வலையுலகம் பகக்ம் வருபவர்கள் 500 பேர்கள் இருக்கலாம்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரப் பேச்சை கேட்டேன்.

தவறு. இது ஒரு விதமான வெளியே தெரியாத மிரட்டலும் அதைச் சார்ந்த புரிதலும்.

இந்த பெண்மணியை எவராலும் ஜெயிக்க முடியாது. கடைசி வரைக்கும். பல காரணங்களை வைத்து சொல்கின்றேன்.

ஆனால் முடிவு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போலவே இருக்கும் என்பது என் தனிப்பட்ட கணிப்பு.

ஜோதிஜி சொன்னது…

//எங்கள் காலத்தில் இல்லை என்றாலும் அடுத்த சந்ததி அந்த லட்சியத்தை தொடர வேண்டும், தமிழனுக்கு ஈழத்தில் சுதந்திரம் கிடைக்கும் வரை. //


இன்னும் 50 வருடங்கள் கழித்து ஈழத்தில் 5 லட்சம் தமிழர்கள் இருப்பார்கள். உயிரை கையில் பிடித்துக் கொண்டு. இது தான் என் கணிப்பு.

காரணம் இன்னமும் பிரபாகரனை குறை சொல்லி நக்கித்தனமான வேலைகளை செய்பவர்கள் தான் அதிகம். அவர்களைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷே போடும் பிச்சையே போதுமானது. தேவையில்லை வேறு எதுவும்?

Rathi சொன்னது…

ராஜ நட, அது ஏதாவது எங்கள் காலத்தில் நடவாது போகுமா என்கிற ஆதங்கம்.

ஜோதிஜி, எங்கள் வீட்டில் ஒருவர் பேசுவது போலவே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்கு பக்கத்தில் இருந்திருந்தால் கை கொடுத்திருப்பேன். கடைசி இரண்டு விமர்சனமும் பலபேரை சிந்திக்க வைக்கவேண்டும்.

ஜோதிஜி சொன்னது…

உங்கள் கருத்துக்கு பக்கத்தில் இருந்திருந்தால் கை கொடுத்திருப்பேன்

அட நீங்க வேற? நான் எப்போதுமே கலைஞரை, சோனியா வகையறாக்களை குறை சொல்லவே மாட்டேன். காரணம் என்ன தெரியுமா?

அய்யா நெடுமாறன்
வைகோ
பழைய வீரமணி
பழைய சுப வீரபாண்டியன்
திராவிடர் கழத்தில்பிரிந்த கோவை ராமகிருஷ்ணன்
சீமான்

இன்னும் வெளியே தெரியாத பல பேர்கள். இவர்கள் அத்தனை பேர்களும் ஈழத்திற்காக போராடியவர்கள்?

ஏன் இன்னமும் ஒன்று சேர மாட்டேன் என்கிறார்கள். ஈழத்தில் பிடிபட்ட அங்கயற்கண்ணியை விசாரித்த ஒரு ஈழ புலானய்வு அதிகாரி கேட்ட கேள்வி இது.

உங்க சீமான் ஒரு தொகுதியில நின்னு ஜெயிப்பானா? என்றாராம்.

பாருங்க. நம்ம பிளவு அவர்களுக்கு எத்தனை நக்கலாக யோசிக்க கூடியதாக இருக்கு பாத்தீயளா?

காலம் முழுக்க கத்திக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.

வலைதளத்தில் மீனவ பிரச்சனை குறித்து செய்லப்பட்டுக் கொண்டிருப்பவர்களை முடக்க என்பதற்கே இங்கே ஈழ ஆதரவு மக்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இது வரையிலும் மொத்தம் எத்தனை மீனவர்கள் இறந்தார்கள் என்பது எந்த தலைக்கும் தெரியாது. சும்மா குத்து மதிப்பா 500 530 என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால் அந்த தகவல் இல்லை என்கிறார்களாம். எப்பூடீ?

ராஜ நடராஜன் சொன்னது…

//அய்யா நெடுமாறன்
வைகோ
பழைய வீரமணி
பழைய சுப வீரபாண்டியன்
திராவிடர் கழத்தில்பிரிந்த கோவை ராமகிருஷ்ணன்
சீமான்

இன்னும் வெளியே தெரியாத பல பேர்கள். இவர்கள் அத்தனை பேர்களும் ஈழத்திற்காக போராடியவர்கள்?

ஏன் இன்னமும் ஒன்று சேர மாட்டேன் என்கிறார்கள். //

ஜோதிஜி!வை.கோ,நெடுமாறன்,கோவை,ராமகிருஷ்ணன்,சீமான்,கொளத்தூர் மணி இன்னும் தங்கள் சொந்த வாழ்க்கையை கூட மறந்து களத்தில் நின்று ஜனநாயக ரீதியாகப் போராடினவர்கள் நிறைய பேர்.இவர்களுக்கான ஒருங்கிணைப்பு இல்லாமல் போனது தமிழ் உணர்வாளர்களுக்கு இழப்பே.

இதில் அலையின் வேகத்தில் இழுத்துப் போகப்பட்டவர்களாக சமூக நீதி காத்த வீராங்கனைப் புகழ் வீரமணி,ஜெயாவால் பொடாவில் மாட்டி கருணாநிதியால் மீட்கப்பட்ட சுப.வீரபாண்டியன்,மகன் பதவியே முக்கியமாகிப் போன ராமதாஸ்,ராஜபக்சே கைகுலுக்கல் புகழ் திருமா என திசை மாறிப்போனவர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணர்வாக ஈழ நிலையிலும்,அரசியலில் இவர்கள் பிரிந்திருப்பதற்கு காரணத்தையும் உங்கள் யோசனைக்கு விட்டு விடுகிறேன்.நன்றி.

ஹேமா சொன்னது…

ரதி....புலம்பெழர் நம் ஈழத்தவர்கள் நடத்திற கல்யாணவீடு,பூப்புனித நீராட்டு விழாவுக்கு ஹெலிக்கப்படரில பறந்து பூக்கொட்டி ஆசீர்வதிக்கிறது,50 ஆவது 70 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இதையெல்லாம் நடா மறந்திட்டார்.அவரது பட்டியலில் இவைகளையும் சேர்க்கவேணும் !

Rathi சொன்னது…

ஹேமா, ஜோதிஜி மாதிரி கமுக்கமான நகைச்சுவைக்கு நீங்க தான். பரவாயில்லை, ராஜ நட மறந்ததை நீங்க சொல்லிட்டீங்க. நான் கூட சில சமயங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன் இது போன்ற கூத்துகளை.

விடுங்கோ ஹேமா, சில பேரை மாற்றவே முடியாது போல. இன்று இவ்வளவு தூரம் நாங்கள் வந்திருக்கிறம் என்றால் அது முகம் காட்டாமல் ஈழத்துக்காய் உண்மையாய் உழைத்த எத்தனையோ தமிழர்களும் தான் காரணம்.

ராஜ நட சொன்னது போல் நாடு கடந்த தமிழீழத்தை பலப்படுத்துவோம்.

தவறு சொன்னது…

நாடுகளின் ராஜதந்திரத்திற்கு இல்லை இல்லை தலைவர்களின் சுயநல அரசியலுக்கு என்னவோ மனித உயிர்கள் தலைமுடிகள் தான். இழந்த ஈழத்து தலைமுடிகளை பற்றி யாரும் கவலைபட போவது கிடையாது ரதி ஏன் கொட்டியது என்று காரணங்கள் தேடி கொண்டிருக்கலாம் .

இருக்கும் தலைமுடிகள் எல்லாம் ஒன்று சேர்த்து மயிர்கற்றையாகினால் அலங்காரம் செய்ய வாய்ப்பு உண்டா தேடலாம்..ரதி.

Rathi சொன்னது…

தவறு, பதிவை விட உங்கள் விமர்சனங்கள் அதிரடி. தொடருங்கள். எழுதியாவது தீர்கிறதா எங்கள் வலிகள், பார்க்கலாம்.