பிப்ரவரி 28, 2011

இணையமும் ஊடகங்களும்!

இன்றைய காலங்களில் சமூக கருத்து பரிமாற்ற ஊடகங்களின் பாவனை தவிர்க்கமுடியாததாகவும், தடுக்கமுடியாததாகவும் மனித தேவைகளோடு இணைந்துபோய் பிரிக்க முடியாததாய் இருக்கிறது. இருந்தால், நின்றால், நடந்தால் என்று எந்தவேலையின் நடுவிலும் இந்த சமூக கருத்துப் பற்றிமாற்ற ஊடகங்கள் அதன் தலையை எங்கள் வாழ்வில் நுழைப்பதற்கும் அனுமதிக்கப் பழகிவிட்டோம்.


அண்மைக்காலங்களில் அரபுநாடுகளில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியை 
கவனிப்பவர்கள் இந்த இணையம்தொடர்பான தொடர்பாடல் ஊடகங்கள் 
கணிசமான பங்கை வகிக்கவில்லையா என்று யோசிக்கலாம். துனிசியா முதல் எகிப்து வரை அதன் மக்கள் கிளர்ச்சி பற்றிய சில அரசியல் ஆய்வாளர்களின் கருத்து இந்த எழுச்சிக்கான விதை இரண்டு  அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொழிற்சங்கங்கள் மற்றும் துறை சார் நிபுணர்களால் படிப்படியாக ஒழுங்கமைக்கப்பட்டது என்றும், அது உச்சக்கட்டத்தை அடைந்தபோது தான் சமூக கருத்துப்பரிமாற்று  ஊடங்கங்கள்  தன் பங்கை வகித்தன என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், 'Mainstream Media' என்று சொல்லப்படும் தேசிய மைய ஊடகங்கள் தொழிற்சங்கங்கள் பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எப்படியென்றாலும் சமூக கருத்துப்பரிமாற்ற ஊடகங்கள் மற்றும் இணையத்தின் பங்கை இந்த அடக்குமுறைக்கெதிரான மக்கள் கிளர்ச்சி மற்றும் போராட்டங்களில் மறுப்பதற்கில்லை.

இணையம் மற்றும் சமூக கருத்துப் பரிமாற்று ஊடகங்கள் மூலம் இப்படியான எவ்வளவோ நன்மைகள்உண்டென்றாலும்,  இணையவியாபார  உத்திகளின் மூலம் வியாபாரமும் நடைபெறுகிறது. Online Shopping இல் இணையத்தில் கடன் அட்டைகளை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்வதையும் இளையவர்களிடம் ஊக்கப்படுத்துகிறது.

தேசிய மைய ஊடகங்கள், ஆளும் அரசியல் கட்சிகள் மற்றும் பாரிய நிறுவனங்களின் விளம்பரதாரர்களின் அரசியல், வியாபாரக் கொள்கைகள்  
பற்றிய பிரச்சார பீரங்கிகளாக செயற்படுவது தவிர, பொது சனத்திற்கு விளையாட்டு,  செக்ஸ், வன்முறை மற்றும் கேளிக்கை சம்பந்தமான விடயங்களையும் இணையத்தில் விற்கத் தவறுவதில்லை. எங்களை ஓர் மெய்நிகர் உலகில் மூழ்கவைத்து சமூக பிரச்சனைகள் பற்றிய உணர்வுகளையும் மழுங்கடிக்கப்பதே நோக்கம். நாட்டு நடப்பு தெரியாதவர்களுக்கு இதுபோன்ற மற்றைய விடயங்கள் நன்கு தெரிந்திருக்கும் போது, இதெல்லாம் தெரியாத நான் ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்திருக்கிறேனா என்பது போல் தோன்றுகிறது.

கிரிக்கெட் முதல் Hockey, American Football, Oscar வரையும்; அதேபோல் கோலிவுட் முதல் ஹோலிவுட் வரையுள்ள சினிமா நட்சத்திரங்களின் சொந்தவாழ்க்கை முதல் அவர்களின் போதைப்பழக்கம் வரை செய்தியாக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது.  விளையாட்டும், கேளிக்கைகளும் மனித உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவே என்கிற வரைமுறைகள் மாறி நீண்ட நாட்களாகிவிட்டன. தொலைக்காட்சியில் விளையாட்டுக்களை பார்த்து ரசிக்கும்போது பீர் குடித்துக்கொண்டே பார்ப்பது அமெரிக்க ஊடகங்களாலும், பீர் தயாரிக்கும் நிறுவனங்களாலும் அவற்றுக்கான விளம்பரங்களால் ஓர் கலாச்சாரமாகவே மாற்றப்பட்டுவிட்டது. இப்படி எவ்வளவோ சொல்லலாம். ஒரே செய்தி ஒளிபரப்பில்  லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் உயிர்பறிக்கப்பட்டதையும், பிரித்தானியாவின் அடுத்த இளவரசரின் திருமணமும் செய்திகளாகும்போது எந்த செய்தியின் யாதார்த்ததுடன் ஒன்றுவது.

அடடா, எல்லாவகையிலும், எல்லாச் செய்திகளையும் ஊடகங்கள் பொதுமக்களின் நன்மை கருதியே வெளிக்கொணருகின்றன; அவர்கள் எப்போதுமே நடுநிலை தவறாதவர்கள் என்று ஒருகாலத்தில் அப்பாவித்தனமாய் நானும் நினைத்ததுண்டு. ஈழப்பிரச்சனை சர்வதேச ஊடகங்களால் திரித்துக்கூறப்பட்ட போதுதான் எனக்கும் கொஞ்சம், கொஞ்சமாக  
இந்த ஊடக அரசியல் புரியத் தொடங்கியது. ஆனாலும், இன்று இணையம், தேசிய மைய ஊடகங்கள் என்பவற்றை தாண்டியும் உண்மைகளின் சரியான பக்கங்களை வெளிக்கொணர இந்த சமூக கருத்துப்பரிமாற்ற ஊடகங்கள் பயன்படுகின்றன, மறுப்பதற்கில்லை. ஆனால், அது மட்டுமே எந்த ஒரு பிரச்சனைக்குரிய தீர்வை நோக்கிய பயணத்துக்கு வழிகாட்டாது என்பது என் கருத்து.

லிபியாவில், ஈரானில் அதிபர்கள் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் பொங்கியெழும் மேற்கத்தைய ஊடகங்கள் ஈழத்தமிழன் ராஜபக்சேக்களால் கொன்று அழிக்கப்பட்டபோது அதற்கு வேறு காரணங்கள்  கண்டுபிடித்தார்கள்.  பயங்கரவாதம் என்று எல்லாத்தையும் உலகின் கண்களிலிருந்து மூடி மறைத்தார்கள். அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் எந்த நாட்டு மக்களை கொன்றாலும் அது "படுகொலைகள்"/இனப்படுகொலைகள் கிடையாது. அது போர் தான் என்றில்லை; பொருளாதாரத்தடை என்கிற பெயரில் ஈராக்கில் கொல்லப்பட்ட   ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆனாலும் சரி. இனப்படுகொலை என்கிற வார்த்தையை கூட ஈழத்தமிழர்கள் விடயத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதில் இந்த ஊடகங்கள் மிக அக்கறையாக இருக்கின்றன. இது தான் ஊடகங்களின் "நடுநிலைமை" தவறாத லட்சணம். இந்த நடுநிலைமை தவறாமை என்கிற போலித்தனம் எல்லா நாட்டின் ஊடகங்களுக்கும் வஞ்சகமில்லாமல் பொருந்தும்.

லிபியாவின் கடாபிக்கும், இலங்கையின் ராஜபக்க்ஷேக்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பது சாதாரணமாய் செய்திகளை கவனிப்பவர்களுக்குப் புரியும். ஆனால், உலகின் முன்னணி ஊடகங்கள், குறிப்பாக மேற்கத்திய  ஊடகங்களுக்குப் புரியவில்லையோ!!! எண்ணெய் உற்பத்தி, இறக்குமதி கவலைகள் தவிர அவர்களுக்கு இப்போ இருக்கிற கவலையெல்லாம் மத்தியகிழக்கு நாடுகளில் நடக்கும் மக்கள் புரட்சிகளினால் இஸ்ரேல் என்கிற நாடு தன்னந்தனியன் ஆகிவிடுமோ என்பதது தான். அதனால் இலங்கை அதிபருக்கும் லிபிய அதிபருக்கும் இடையுள்ள ஒற்றுமை காலம் கடந்து தான் புரிந்தாலும் புரியும்.

எப்படியோ, சமூக கருத்துப் பரிமாற்ற ஊடகங்கள் என்பது கார்பரேட் செய்தி ஊடகங்களின் அரைகுறையான, அரசுகளின் ஊதுகுழலாய் செயற்படும் "நடுநிலைத்தன்மையால்" வெறுப்பாகிப் போனவர்களுக்கும் ஓர் சிறிய விடுதலை தான்!! அதனால் தானே இப்படி பதிவெல்லாம் கூட எழுதமுடிகிறது. :)

நன்றி: படங்கள் Google.

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

http://www.tamilwin.com/artspecial.php

ரதி...இந்தப் பக்கத்தில பாருங்கோ !

தவறு சொன்னது…

அனைத்து ஊடகங்களுமே இப்படிதானா ரதி? தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரும்பாலும் இப்படிதான்.
தனி மனித கிளர்ச்சிகளை உண்டுபண்ணியே அடிமையாக்கப்பட்டுவிட்டோம்.

விந்தைமனிதன் சொன்னது…

துல்லியமான பார்வை! இணைய ஊடகங்கள் இணை ஊடகங்களாகிக் கொண்டிருக்கும் வேளை இது. இந்தப்போதில் நமக்குச் சாதகமான, சமூக மாற்றத்தினையும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் துணைநிற்கும் சக்திகளை நாம் இணையத்தில் வளர்த்தெடுக்க வேண்டும்.

அல்லவை களைந்து, நல்லவை விளைக்க விடுதலை அரசியல் பேசும் சக்திகள் தொடர்ந்து முன்னெடுப்பு செய்யவேண்டும்.

Rathi சொன்னது…

நன்றி ஹேமா.

தவறு,

எப்போது அதிலிருந்து விடுதலை என்பது தான் தெரியாமல் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது வெறும் தொலைக்காட்சி, கேளிக்கை, செல்பேசி என்று இல்லாமல் அவையும் சமூக, அரசியல் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுவர உதவ வேண்டும், குறிப்பாக கிராமங்களில் என்பது என் கருத்து. அதுக்கு இன்னும் எத்தனை வருடங்கள் செல்லுமோ?

விந்தைமனிதன்,
சரியாகச் சொன்னீர்கள்.

ஜோதிஜி சொன்னது…

விமர்சனத்தை அனுப்பி வைக்கின்றேன்.

Part Time Jobs சொன்னது…

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com