ஜனவரி 31, 2011

துணிவே துணை!ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதி
Uploaded by valarytv. - Up-to-the minute news videos.

இது யாழ் தளத்தில் காணப்பட்ட ஓர் காணொளி. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கும் (எங்கேயோ கேட்ட பெயர் போல் இருக்கா!) நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கத்திற்கும் இடையே நடந்த ஓர் கருத்து மோதல்.

தன்னுடைய பயத்தை ஒத்துக்கொள்ளும் அதேவேளை, இலங்கை ஐ. நா. பிரதி வதிவிடப்பிரதிநிதியை (முன்னாள் ராணுவ அதிகாரி) கேள்விகேட்ட இந்த தமிழ்ப்பெண்ணின் துணிச்சல் எனக்கு பிடித்திருக்கிறது.

சவேந்திரா சில்வா, போற்குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர், ஐ. நாவின் பிரதிநிதி என்கிற பதவியைப் பெற்றது மனித உரிமை அமைப்புகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும்;  ஈழத்தில் நாற்பதாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதில் இவருக்கு முக்கிய பங்கு (Key Role) இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


நன்றி: படம் அறியது

5 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

அந்தப் பெண்ணின் குரலில் உள்ள ஆக்ரோசம்....இந்த வேகத்தை உணர்வை ஒடித்து அடியோடு இல்லாமல் ஆக்கத்தானே எல்லோருமாக முயற்சி செய்கிறார்கள் !

Rathi சொன்னது…

ஹேமா,

பார்க்கலாம் எவ்வளவு நாள் இப்படியே போகிறதென்று. எங்கள் வாழ்நாளில் ஓர் விடிவு வராமலா போகப்போகிறது.

ஜோதிஜி சொன்னது…

இந்த மத நம்பிக்கையில் இருக்கும் பேய் பிசாசு பூதம் இவையெல்லாம் உண்மைதானா? நெஞ்சு விம்மி செத்தவர்கள் ஒருத்தர் கூட இவர்களின் தூக்கத்தை கெடுக்க மாட்டார்களோ?

ஜோதிஜி சொன்னது…

காணொளியை முழுமையாக பார்த்துவிட்டு வருகின்றேன்.

News சொன்னது…

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org