ஜனவரி 16, 2011

கவிதைகள் இரண்டுவிதம்!கொடிய வறுமை !
ஒளவையார் பாடிய
இளமையில் வறுமை
என் வாழ்விலும்
அடித்துப் பிடித்து
வறுமைக்கோட்டை அழித்துவிட்டு
திரும்பிப்பார்த்தேன்...
வயதோடு
வாழ்க்கையையும் கோட்டைவிட்டிருந்தேன்

*********************************************************
அலைந்து பெற்ற அனுபவம்
செல்வத்தை தந்தது
வறுமைக்கோட்டை
தாண்டிவிட்டோம் என்று
திரும்பிப் பார்த்தேன்
நான்
இழந்த இளமை
என்னைப்பார்த்து சிரித்ததுதிருட்டும்...! லஞ்சமும்....!!
சின்னச் சின்ன திருட்டில் தான்
ஆரம்பித்தது
முதலில் பார்வை
சிரிப்பு, உன் அசைவுகள்
யாருமில்லா நேரத்தில் நீ செய்யும்
அசட்டுத்தனங்கள்
புரியாத உலகை
விழிகள் விரியப் பார்க்கும்
உன் குழந்தை தனம்....
பிறகு உத்தேசமாய் யோசித்தேன்
காதலின் பெயரால் உன்னை
உன் இதயத்தை
மொத்தமாய் திருட....
ம்ஹீம்... வேண்டாம்
பல நாள் திருடன்/திருடி
ஒரு நாள் அகப்படும்போது பார்த்துகொள்வோம்
காதலை லஞ்சமாய் கொடுத்து
உன்னிடம் ஆயுள் கைதி ஆகிறேன்.

**********************************************************

சிரிப்பு, உன் அசைவுகள்
யாருமில்ல நேரத்தில் நீ செய்த
அசட்டுத்தனங்கள்
அத்தனையும் எனக்கு
காதலை அறிமுகப்படுத்தியது
திருடிய நீ வெளியேயிருக்க
நான் மட்டும் உன் காதலை ஏற்று
ஆயுள் கைதி ஆகிப்போனேன்.6 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நான்
இழந்த இளமை
என்னைப்பார்த்து சிரித்தது///

உங்கள் குழந்தைகளாவது எதையும் இழக்காமல் அனுபவிக்குமே.

ஹேமா சொன்னது…

கடவுளே கவிதை.சரிதான் போட்டியா. ஜோதிஜிதானே உங்களைக் கிளறிவிட்டார்.
இருக்கட்டும் பாத்துக்கிறேன் !

ரதி....இழப்போம் இழப்போம் இருக்கும் வரைக்கும்.எடுத்துத் தொடரட்டும் எம் குழந்தைகள் !

காதல் திருடன் உங்கள் வீட்டிலுமா.கள்வர்கள் தினம் என்று ஒன்று கொண்டு வரணும் !

தவறு சொன்னது…

அட ரதியா...இது ஜமாய்ங்க...கொடிய வறுமை பாதிக்கிறது. உண்மை ரதி.

விந்தைமனிதன் சொன்னது…

புது அவதாரம் நல்லாத்தான் இருக்கு!

Rathi சொன்னது…

தமிழ் உதயம், ஹேமா, தவறு, ராஜாராமன் எல்லோருக்கும் நன்றி.

ஹேமா, நான் சில விடயங்களில் ஏதோவொருவிதத்தில் ஒளவையாரை பின்பற்றுபவள். :))

Myth: நான் குண்டக்க, மண்டக்கவா என்ன எழுதினாலும் அதுக்கு "ஜோதிஜி" தான் காரணம் என்று சொல்வது.

I feel sorry for you, Jothiji :)))

ஜோதிஜி சொன்னது…

ஹேமா படித்தவுடன் சிரித்துவிட்டேன். சரியான கெட்டிகாரபுள்ள.

ரதி எழுத எழுத அடித்த எழுத எழுத யோசித்து எழுத எழுத நாம ரெண்டு பேரும் ஹேமா வையும் தாண்ட முடியும்.

பேராசிரியர் போல யோசிக்கும் நீங்கள் சீக்கிரம் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் போல வாழ்த்துகள்.

அப்புறம் ராஜபக்ஷே இப்போது அமெரிக்கா வரப் போகிறார். கனடா அமெரிக்கா நிகழ்வுகளைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்.