ஜனவரி 07, 2011

இது சும்மா.....பலதும் பத்தும்!!


எதைப்பற்றி எழுதுவது என்ன எழுதுவதென்று ஒன்றுமே தோன்றவில்லை. எதையாவது எழுத்தொடங்கினாலும் அது எங்கே ஈழத்தில் போய் முட்டிமோதி நிற்குமோ என்று பயம் வருகிறது. அது பற்றி யோசிக்கதொடங்கினால் முடிவின்றி நீளும் நினைவுகள். வெளியே போகலாமென்றால் குளிருக்குப் பயம். கண்ணாடிக்கு வெளியே பனியை வேடிக்கைபார்ப்பதும்; செய்தித்தளம், தமிழ்மணம் என்றும் பொழுது கழிந்தது. செய்தியில் ஈழத்தில் வடக்கில் ராணுவமும், தமிழ்நாட்டில் அ. தி. மு. க. காரர்களும் கைகளில் மரக்கறி வகைகளோடு காட்சியளித்தார்கள். ஈழத்தில் இப்போ சிங்களராணுவம் விவசாயிகளிடமிருந்து மரக்கறிவகைகளை வாங்கி, பிறகு அதை பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு விற்கிறார்களாம். ம்ம்ம்ம்.... நாங்கள் நம்பிட்டம்!! தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வைக்குறித்து மாநில, மத்திய அரசை கைகளில் மரக்கறிவகைகளை ஏந்தியபடி எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். இருந்தாலும், உள்துறை அமைச்சரும் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டாராம். 


பாத்தீங்களா....!!! இலங்கை அரசுக்கு, சிங்கள ராணுவத்துக்கு தமிழர்கள் மீதுள்ள அக்கறை இந்தியாவில் ஓர் மத்திய உள்துறை அமைச்சருக்கு இருக்கா அப்படீன்னு யாரும் குண்டக்க, மண்டக்கவா கேள்வியெல்லாம் கேட்ககூடாது. அமெரிக்காவில் இரண்டு சகோதரிகள் $11 டொலர்களை திருடியதற்காக பதினாறு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்களாம். பிறகு ஓர் சகோதரி மற்றவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் தன் இரண்டில் ஓர் சிறுநீரகத்தை மற்றவருக்கு தானமாய் கொடுக்கிறாராம். இப்போ இரண்டு பெறும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்களாம். 

என்னப்பா இது....! 17, 60, 00, 00, 00, 000/ 1.76 லட்சம் கோடி ரூபாய் அடிச்சவங்களையே ஆற, அமரத்தான் இந்தியாவில் விசாரிக்கிறார்கள். அப்பிடியே விசாரிச்சாலும் தண்டனை கிடைக்குமா என்றெல்லாம் நாங்க ஆவலோட காத்திருக்கிறோம். இவங்க வெறும் பதினோரு டொலருக்கு பதினாறு வருட தண்டனையாம். இந்த அமெரிக்கா காரங்க எப்பவுமே இப்பிடித்தான் Living Together தொடக்கம் விக்கிலீக்ஸ் வரைக்கும் எல்லா விஷயத்திலேயும் மற்ற நாட்டுக்காரர்களை பொறாமைப்பட வைக்கிறது. பிறகு அதை சரியா அமெரிக்கர்கள் மாதிரியே follow பண்ணத்தெரியாமல் சொதப்புவது. 

அப்புறமா, இங்கே கனடாவில் விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி இரண்டுமே ஓடிட்டிருக்கு, Promotion போல!! எப்போ சனல் மாத்தினாலும் மைக் ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு யாராவது இரண்டு, மூன்று பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நேரெதிரே இன்னொருவரும் மைக் ஒன்றை பிடித்தபடி!!! இவர்களுக்கு கையும், வாயும் வலிக்காதா என்று எனக்கு கஷ்டமா கிடக்கு. எல்லா நிகழ்ச்சிகளுமே பெரும்பாலும் சினிமா சம்பந்தப்பட்டவர்களை அல்லது அது சம்பந்தமான நிகழ்ச்சிகளாகவே இருக்கு என்பது நான் கவனித்தது, கவலைப்பட்டது. 

தன்னை அதிகம் வெளிக்காட்டாமல் எப்போதுமே தன்னடக்கத்தோடு மூன்று தளங்களை வைத்து ஜமாய்க்கும் "தவறு" அவர்களின் தளத்தில் என்னை கவர்ந்த படங்கள் இரண்டு. அப்படியே படத்தோட சேர்த்து ஒரு தத்துவமும் சொல்லியிருக்கிறேன் :))

இது கொஞ்சம் தனியாய்... எல்லாத்திலிருந்தும் விட்டுவிலகி...!!!


இது தான் ஊரோடு ஒத்துவாழ்வதோ...!!இறுதியா, விக்கிலீக்ஸ் பற்றி இங்கே தமிழ் தொலைக்காட்சியில் ஓர் கலந்துரையாடல். அதில் ஓர் ஆய்வாளர் சொன்னார் இப்போவெல்லாம் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் எல்லோருடைய அந்தரங்கமும் எட்டிப்பார்க்கப்படுகிறது, தெரிந்ததுதானே.

ஒவ்வொரு நாட்டின் பொதுமக்களுக்கும் தெரிய வேண்டிய (Right to Information) குறிப்பிட்ட செய்திகள் கூட மறைக்கப்பட்டோ அல்லது திரிக்கப்பட்டோ தானே குத்துயிரும், கொலையுயிருமாய் வெளியிடப்படுகின்றன. இப்போ எத்தனையோ நாடுகள் பற்றிய உண்மைகள் விக்கிலீக்ஸ் மூலம் உலகின் கண்களின் முன்னே. ஆனால், இதையெல்லாம் நாங்கள் வெறும் பார்வையாளராய் (Spectator) பார்த்துக்கொண்டிருக்கப்போகிறோமா அல்லது எங்களை எல்லாவிதத்திலும் பாதிக்கும் இந்த விடயங்களை ஏதாவது நடைமுறைச் சாத்தியங்களோடு கூடிய செயற்திறனோடு எதிர்த்து செயற்படப் போகிறோமா!! 


9 கருத்துகள்:

தவறு சொன்னது…

தனிமை ஏகாந்தம் என்றால் மகிழ்ச்சியை அனுபவிப்பதிலும் ரதி அளவு தான் போலிருக்கு...

1.76 போனது போனதுதான் ரதி.

Rathi சொன்னது…

//தனிமை ஏகாந்தம் என்றால் மகிழ்ச்சியை அனுபவிப்பதிலும் ரதி அளவு தான் போலிருக்கு...//

:)

விந்தைமனிதன் சொன்னது…

அடேங்கப்பா! நாலஞ்சு நாள் இணையம் பக்கம் போகாம இருந்த கேப்ல அடிச்சி தூள் கெளப்பியிருக்கீங்க போலயே! ம்ம்ம்... நல்லாத்தான் போவுது...! அப்புறம் நானும் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கேன்... இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டையையும், இண்ட்லி பட்டையையும் இணைக்கிறது?

விந்தைமனிதன் சொன்னது…

//எதைப்பற்றி எழுதுவது என்ன எழுதுவதென்று ஒன்றுமே தோன்றவில்லை. //

இதைத் துவக்கமா வெச்சி என்னோட புதுவருசக் கணக்கை ஆரமிக்கலாம்னு இருக்கேன் :)))

ஹேமா சொன்னது…

ரதி...இது சும்மா இல்ல மனச்சுமை !

Rathi சொன்னது…

Welcome back விந்தைமனிதன்.

ஹேமா,

அறிவுமதியின் கவிதை படித்ததிலிருந்து அடிமனதில் ஏதோவொரு சுமை தான், ஒத்துக்கொள்கிறேன். அதன் விளைவுதான் "அவரவர் இயல்புகளோடும், கடமைகளோடும்..." என்று எழுதவைத்தது. கமலுக்கு மன்மதன் அம்பு பட விடயத்தில் வக்காலத்து வாங்குபவர்கள் "திவ்வியரஞ்சினியன்" என்கிற இந்த ஈழத்தமிழரின் பதிவையும் அதிலுள்ள காணொளியையும் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.


http://thiviyaranchiniyan.blogspot.com/2011/01/blog-post.html

இந்த கட்டுரையை கட்டாயம் படியுங்கள், ஹேமா.

ஜோதிஜி சொன்னது…

நீங்க ஹேமாவை படிக்கச் சொன்ன சுட்டியை நானும் படித்து விட்டேன். இருங்க ஒரு நிமிடம். சண்டைககு தயாராக இருங்க.

ஜோதிஜி சொன்னது…

அதென்ன கமல் பற்றி நான் சொன்னதிற்கு ஏதோ சொல்ல வந்து விட்டு நீக்கி விட்டமாதிரி தெரியுது.

ஒரு வலி என்பது உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். என்று நீங்க சொல்லவர்றீங்க. சரிதானே?

அப்புறம் இந்த இடுகை கற்றதும் பெற்றதும், எண்ணங்கள், இது போன்ற நிகழ்வுகளில் பலவிதமாக கோர்த்து இருக்கலாமே ரதி.

ஜோதிஜி சொன்னது…

தன்னை அதிகம் வெளிக்காட்டாமல் எப்போதுமே தன்னடக்கத்தோடு மூன்று தளங்களை வைத்து ஜமாய்க்கும் "தவறு"

விந்தை மனித ராசப்பா நீ அடுத்து செய்ய வேண்டியது இரண்டு தன்னடக்க ஆளுமைகள் என்ற தலைப்பில் எழுதனும்.

ஆம்ம்ம்ம் சொல்லிப்புட்டேன்.

ரதி உங்க மனசுல இருக்கிற விமர்சனத்தை ஊண்டி அடிக்ககோனும். நான் எப்போதும் கொஞ்சம் தாமதமாத்தான் வருவேன். இன்றைக்கு கொஞ்
சம் ஓய்வில் ஒரு இருபது பதிவுகள் பார்த்து படித்து இருப்பேன். ஆனால் ஏதோ ஒன்ற உங்ககிட்ட கத்துக்க முடியும்ங்ற நம்பிக்கையில தான் வந்துக்கிட்டுருக்கேன். தயக்கம் தூரத்தில் இருக்கட்டும்.