ஜனவரி 04, 2011

மன்மதன் அம்பு - ஈழத்தமிழர்கள் - அறிவுமதி.

மன்மதன் அம்பு திரைப்படம் நான் இன்னும் பார்க்கவில்லை. நடிகர் கமல்ஹாசன் அத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்கள் பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என்ன கருத்துக்களை சொல்லியியிருக்கிறார் என்பது தெரியாது. இது யாழ் தளத்தில் நான் கண்ட கவிதை, கவிஞர் அறிவுமதி எழுதியது.   


நடிகர் கமல்ஹாசன் ஈழப்போராட்டம் பற்றி குயுக்தியாய் தன் சில திரைப்படங்களில்  கடந்தகாலங்களில் விமர்சித்தவர் என்பது ஈழத்தமிழர்கள் அறிந்ததே. ஆனால், இதையெல்லாம் மனதில் நிறுத்தி ஈழத்தை இதுபோல் விமர்சிப்பவர்களின் திரைப்படங்களை புறக்கணிப்பவர்களும் அல்ல புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள். 


30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு...

இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..

கமல் படம்.

மன்மதன் அம்பு.

மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு

வந்து விட்@டா@மா

என்கிற அளவிற்கு

ஒரே கமலஹாஸன் களும்!

கமல ஹாஸிகளும்!



அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்

பதுங்கிக் கொண்டு

நூல்தனம் காட்டும் அவரை

பரமக்குடி பையன் என்றும்

பெரியாரின் பிள்ளை என்றும்

பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்

இந்த

அம்பு...

இராம பக்தர்களின் கைகளிலிருந்து

இராவண திசை நோக்கி

குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று

என்பதை

உணர்ந்து திருந்துதல் நல்லது.



கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்

பெரும்பகுதித் தமிழர்களுக்கு

அறிமுகமானவர்,

நவராத்திரித் தமிழனை

தசாவதாரத்தால்

முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.



இந்த மன்மத அம்புவின்

வாயிலாக...

தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,

தாய்த் தமிழை

இழிவு செய்வதில்

உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை

புகழ் சுஜாதா ஆகியோரைத்

தாண்ட முயற்சி

செய்திருக்கிறார்.



"தமிழ் சாகுமாம்...

தமிழ் தெருப் பொறுக்குமாம்.'



வீடிழந்து, நாடிழந்து,

அக்காள் தங்கைகளின்

வாழ்விழந்து...

ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...

கொத்துக் கொத்தாய்

தம்

சொந்தங்களை

மொத்தமாய்ப் பலியெடுத்த

கொடுமைகளுக்கு

இன்னும் அழுதே முடிக்காத

அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்

இடத்திற்கே போய்..

பனையேறி விழுந்தவரை

மாடு

மிதித்ததைப் @பால...

வாடகை வண்டி ஓட்டுகிறவராக

ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..

பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..

கதா பாத்திரமாக்கி..

ஒரு செருப்பாக அன்று..

இரு செருப்பாகவும்

என்று

கெஞ்ச வைத்து..



இறுதியில்

அந்த எங்கள்

ஈழத் தமிழரை

செருப்பால் அடிக்கவும்

ஆசைப்பட்டு ஏதோவோர்

ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள

முயன்றிருக்கிறீர்களே

கமல்!

அது என்ன ஆத்திரம்!



போர்க்குற்றவாளியாகிய அந்தக்

கயவனின் தானோடு ஆடுகிற

சதைதானா உங்களுடையதும்! ஆம்..

சதைதானே உங்களுடையதும்!



அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.

அங்குள்ள கோயில்களில்

கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய

தங்க நகைகளாய்த் தொங்க விட்டு

உங்களவர்களை அர்ச்சகர்களாக

அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!



தங்கள் பிள்ளைகளுக்கான

பரதநாட்டிய பயிற்சிக்காவும்,

அரங்கேற்றத்திற்காகவும்

இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்

கொடுத்து அழைத்து, வரவேற்று,

சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!

இந்தப் படம் எடுக்கப்போன

இடங்களில் கூட... நீங்கள்

பெரிய்ய நடிகர் என்பதற்காக

உங்களுக்காக

தங்கள் நேரத்தை வீணாக்கி

தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,

எவ்வளவோ உதவியிருப்பார்களே!



அத்தகைய பண்பாடு மிக்க

எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு

நீங்கள் காட்டுகிற

நன்றி இதுதானா கமல்!

செருப்புதானா கமல்!



ஈழத் தமிழ் என்றால்

எங்களுக் கெல்லாம்

கண்ணீர்த்

தமிழ்!

குருதித்

தமிழ்!



இசைப்பிரியா என்கிற

ஊடகத் தமிழ்த்தங்கை

உச்சரித்த

வலிசுமந்த

தமிழ்!



ஆனால்.. உங்களுக்கு மட்டும்

எப்படி கமல்...

அது

எப்போதும்

நகைச் சுவைத்

தமிழாக மட்டுமே

மாறிவிடுகிறது!



பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.

தாங்கள் நடித்த

படத்திற்குக் கோடிகோடியாய்...

குவிக்க.. தமிழனின் பணம்

வேண்டும்.



ஆனால்

"அவன் தமிழ்

சாக வேவண்டும்

அவன் தமிழ்

தெருப் பொறுக்க

வேண்டும்.''



தெருப் பொறுக்குதல்

கேவலமன்று.. கமல்.

அது

தெருவைத் தூய்மை

செய்தல்!



தோட்டி என்பவர்

தூய்மையின் தாய்..

தெருவை மட்டும் தூய்மை

செய்தவர்கள் இல்லை..

நாங்கள்

உலகையே

தூய்மை செய்தவர்கள்..



"யாதும் ஊரே யாவரும்

கேளிர்' என்று

உலகையே பெருக்கியவர்கள்

நாங்கள்.

எங்களைப் பார்த்து

செருப்பைத் தூக்கிக்

காட்டிய

கமல் அவர்களே..

உங்களை

தமிழ்தான்

காப்பாற்றியது.

பசி நீக்கியது. நீங்கள்

வாழ்கிற வீடு, நீங்கள் போகிற

மகிழ்வுந்து,

நீங்கள் உடுத்துகிற உடை

அனைத்திலும்..

உங்கள்

பிள்ளைகள் படிக்கிற

படிப்பில்.. புன்னகையில்

எல்லாம்

எல்லாம்...!

கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட

எங்கள்

ஈழத் தமிழ் உறவுகளின்

சதைப் பிசிறுகள்...

இரத்தக் கவுச்சிகள்

அப்பிக் கிடக்கின்றன.

அப்பிக் கிடக்கின்றன.



மோந்து பாருங்கள்.

எங்கள் இரத்த வாடையை

மோந்து பாருங்கள்

மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி

உங்கள்

படத்தில் வருகிற கைபேசியின் மேல்

வருகிற

மூத்திர வாடைதானே உங்களுக்கு

அதிகமாய் வரும்.



கமல்..

நகைச் சுவை என்பது

கேட்கும் போது

சிரிக்க வைப்பது!

நினைக்கும் போது

அழ வைப்பது!

ஆனால் உங்கள்

நகைச்சுவை

செருப்பால் அடித்து

எங்களைச்

சிரிக்கச் சொல்கிறதே!

இதில் வேறு... வீரம்..

அகிம்சைக்கான

வியாக்யானங்கள்!



அன்பான கமல்..

கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்

கையெழுத்து மரபிற்கு

அய்யாவும் அண்ணலும்

கரையேற்றி விட்டார்கள்.

இனியும் உங்கள்

சூழ்ச்சி செருப்புகளை

அரியணையில் வைத்து ஆளவிட்டு

அழகு பார்க்க மாட்டோம்.



சீதையைப் பார்த்து

"உயிரே போகுதே'

பாட மாட்டோம்.

சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட

வன்மம் அள்ளித்தான்

"உயிரே போகுதே'

பாடுவோம்.

ஆம்.. கமல்

தாங்கள் சொல்லியபடி..

எம்

தமிழ்

தெரு பொறுக்கும்!

எவன்

தெருவில்

எவன் வந்து

வாழ்வது

என்று

தெரு பொறுக்கும்!



அப்புறம்

எவன் நாட்டை

எவன்

ஆள்வது

என்ற

விழிப்பில்

நாடும்

பொறுக்கும்.



அதற்கு

வருவான்

வருவான்

வருவான்

"தலைவன்

வருவான்!'

இந்தத் தலைப்பையாவது

கொச்சை செய்யாமல்

விட்டுவிடுவது நல்லது கமல்.



நீங்கள் பிறந்த இனத்திற்கு

நீங்கள்

உண்மையாக

இருக்கிறீர்கள் கமல்!



நாங்கள்

பிறந்த

இனத்திற்கு

நாங்கள்

உண்மையாக இருக்க வேவண்டாமா?


அன்புடன்

அறிவுமதி



நன்றி: கவிதை - யாழ் தளம், படம் - sathis-sathis.blogspot.com 

8 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

பலவருஷங்களுக்கு முன்னால் கமலின் பேட்டி ஒன்றை வாசித்தேன். அதில் இப்படி இருந்தது. "கமலஹாசனின் படங்களில் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் நான் கமலஹாசனின் படங்களை பார்ப்பதில்லை" என்று. உண்மை தான. அவர் படங்களில் ஒன்றும் இல்லை தான். அவராலேயே காணசகிக்காத அவர் படங்களை நாம் ஏன் பார்க்க வேண்டும் என்று நானும் கமல் படங்களை பார்ப்பதை விட்டு விட்டேன். நீங்களும் விட்டு விடுங்கள்.

KANTHANAAR சொன்னது…

சற்றும் ஏற்க முடியாத கவிதை... எந்த சாரமும் இல்லாமல் தெருவில் அது பாட்டுக்கு சென்று கொண்டிருக்கின்ற நாயை அடிக்கிற விடலைப் பையனைப் போல அறிவுமதி நடந்து கொண்டிருப்பது வேடிக்கையானது.. தேவையற்ற கவிதை தேவையற்ற குற்றச்சாட்டு தேவையற்ற சர்ச்சை...

ஹேமா சொன்னது…

ரதி....மனம் கொதிக்கிறது.அதுசரி....இதுக்கு முன்னம்மட்டும் என்ன கிழிச்சவர் கமல்.நளதமயந்தியில் எவ்வளவு.பிறகு தெனாலியில்...இன்ரும் தொடர்கிறது.எனக்கு நடிகர் என்கிற வரிசையில் என்றும் மதிப்பு
அவர்மீது.தமிழனாயில்லை அவர் !

Rathi சொன்னது…

தமிழ் உதயம்,

கமல் போன்று ஈழத்தமிழர்களை குயுக்தியாய் விமர்சிப்பவர்களின் படங்களை பார்ப்பதை விட்டுவிடுங்கள் என்று புலத்து தமிழர்களுக்கு சொன்னால் எங்கே கேட்கிறார்கள். புலத்திலிருக்கும் ஊடகங்கள் கூட "நடுநிலைமை" என்று சாக்குபோக்கு சொல்லி இவர்களின் படங்களுக்கு Promotion செய்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை தவறு என்பது ஈழத்தமிழர்களிடமும் இருக்கிறது இந்த விடயத்தில். இவர்கள் திருந்தினாலேயன்றி, இதுபோல் சினிமா கருத்தாக்கங்கள் நிகழாமல் இருக்கப்போவதில்லை. ஒரு காலத்தில் இப்படித்தான் நடிகர் விஜயகாந்தின் படங்களை புலத்தில் ஓடவைத்தார்கள். இன்று அவரைப்பற்றி புரிந்துகொண்டதுபோல் தெரிகிறது. நடிகர் கமலின் படங்களில் கருத்துருவாக்கங்கள் பெரும்பாலும் மறைபொருளாய் சொல்லப்படுவதால் ஆளாளுக்கு அதை வேறு விதாமாய் அர்த்தபடுத்தி, அவரது கருத்துக்களை நியாயப்படுத்துகிறார்கள். அவரின் குயுக்தி பெரும்பாலோருக்கு புரிவதில்லை.

தெனாலியில் ஓர் இடத்தில் சொல்வார், ஈழத்தில் ஏன் சண்டை நடக்கிறது என்று தனக்கு சிறுவனாய் இருந்தபோதும் புரியவில்லையாம். இப்போதும் புரியவில்லையாம்!!! ஆனால், உண்ணாவிரத மேடையில் உரிமைகள மறுக்கப்பட்டால் தீவிரவாதம் பிறந்தே தீரும் என்று பொதுப்படையாய் பேசிவைப்பார்.

Rathi சொன்னது…

கந்தனார்,

உங்க வருகைக்கு நன்றி.

உங்கள் கருத்தில் அறிவுமதியின் கவிதை ஏற்கமுடியாதது. அதேபோல், கமலின் படத்தில் சொல்லப்படும் ஏதோவொன்று அறிவுமதிக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருந்திருக்கலாம். அதன் வெளிப்பாடு தானே இது. அதிலென்ன சர்ச்சை. எனக்குத்தெரிந்து அறிவுமதி சர்ச்சைக்காய் எழுதுபவர் அல்ல. அதேபோல், ஓர் ஈழத்தமிழராய் அவர் கவிதையில் இருக்கும் வலியும் புரிகிறது.

Rathi சொன்னது…

ஹேமா,

இவர்கள் விமானத்தில் ஏறி நாடு, நாடாய் போய் ஈழத்தமிழர்களின் நொட்டை, நொடிகளை சொல்வதை விட, தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை தமிழக அரசும், இந்திய அரசும் எப்படி நடத்துகிறது என்பது படம் பிடித்துக் காட்டமாட்டார்கள். பிறகு, அது இந்தியாவின் கெளரவம், இறையாண்மை இல்லையா! ஈழத்தமிழன் மட்டும் ஈன, மான, ரோசமில்லாமல் இருக்கவேண்டும் இவர் போன்றவர்களுக்கு.

இவர்களை சொல்லி குற்றமில்லை, ஹேமா. தவறு இந்தவிடயத்தில் எங்கள் பக்கமும் இருக்கிறது.

ஜோதிஜி சொன்னது…

வசமா மாட்டிக்கீட்டீங்க. ஹேமா இங்கிருந்து ஒரு உதையை அனுப்பி வைக்கின்றேன்.

அதென்ன எல்லாரும் ஒரு நடிகர் என்றவுடன் பாசம் பொத்துக்கிட்டு வரனும்ன்னு எதிர்பார்க்கிறீங்க?

கந்தனார் சொன்னது தான் சரி.

மொத்த கவிதையின் சாரம், அறிவுமதி உருவாக்கிய தாக்கம் எல்லாமே சரி தான். அது ஏன் நடிகர்களை கொண்டு போய் அந்த வட்டத்திற்குள் சேர்க்கிறீங்க. கமலிடம் ஒரு பிரச்சனை எப்போதுமே உண்டு. ஒரு சரியோ? எது முடியுமோ? என்ன சாத்தியமோ அதை மட்டும் தான் பேசுவார் எழுதுவார். சும்மா டகால்டி வேலையை காட்ட மாட்டார். அப்புறம் இங்கு எதுடா வாய்ப்பு கிடைக்கும் என்று ஒவ்வொருவரையும் பொலி போட்டுத்தள்ள ஒரு கூட்டமே அலைந்து கொண்டுருக்கும். ஒவ்வொரு நடிகரும் இதை தாண்டி உடைத்து வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.

Rathi சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.