டிசம்பர் 22, 2010

கொஞ்சம் ரசிக்க....!!

                         


இது குளிர்காலம்......!!


தமிழிலில் அண்மையில் கேட்ட ஓர் பாடல், "வெயிலோடு விளையாடி...". நாங்கள் கனடாவில் குளிரோடு மல்லுக்கட்டி என்று பாடவேண்டும் போலுள்ளது. கனடாவில் இது குளிர்காலம். இன்றுடன் குளிர்காலம் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும், ஒருவாரத்துக்கு முன்னமே பனி கொட்டத்தொடங்கிவிட்டது. பனி என்றால் அது ஓர் 5cm-25cm (ஏதாவது புரியுதா மக்களே!!) வரை கொட்டலாம். அத்தோடு உறைமழையும் கொட்டினால் அதோ கதிதான். கார்கள் வீதியில் சறுக்கும். மனிதர்கள் வீதியில் நடக்கும்போதே சறுக்குவார்கள். உறை பனியில் சறுக்கி விழுந்து, யாராவது தூக்கிவிட்டு எழுந்து, முடிந்தால் நடக்கலாம். இல்லையென்றால் எலும்பு முறிந்தோ அல்லது உடைந்தோ வைத்தியசாலை தான். இந்த வருடம் குளிர் காலம் கடுமையாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் கனடா அறிவித்திருக்கிறது. 

சரி விடுங்க, இந்த  படம் நண்பர் "தவறு" அவர்களின் அறியது தளத்தில் என்னை கவர்ந்தது. 

காதலில் கொஞ்சம் மதிமயங்கி ....!!

           
காதல் நினைவால் செயல் மறப்பர்-எதையும் 
கருதி செயல்படும் நிலை மறப்பர்

மயக்கம், மறத்தல், என
மோகமுற்று, பித்தாகி 

தயக்கமில்லை சாவதற்கென்று
தலைகொடுக்கத் துணிந்து விடும் காதலால் 

(தொல்காப்பியப் பூங்கா - காதலாகி கசிந்துருகி )

பதிவுலகில் நான் ....!!!
 தமிழ்மணமும் நட்சத்திரப்பதிவரும்.....!!

ஆரப்பா அது தமிழ்மணத்திடம் கோள்மூட்ட ஓடுறது. தயவு செய்து "கோள்மூட்டி" என்ற பட்டத்தை வாங்கிக்கொண்டு ஓடவும்.

ஹா..ஹா... ஹா..... நாங்களும் ரவுடிதான் 

ரவுடி மாதிதி சிரிக்க கஷ்டமாத்தான் இருக்கு.

இதெல்லாம் சும்மா பகிடி. யாரும் சீரியஸா எடுக்காதீங்க.

நன்றி: படங்கள் அறியது 

9 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

கடைசி போட்டோ பையனை (பொண்ணு மாதிரி தெரியுது) ரெம்ப ரசிச்சேன்.

தவறு சொன்னது…

கதம்பம் தனி அழகு ரதி.

ஹேமா சொன்னது…

என்ன கூத்து இது ரதி.பனிக்குளிர்ல ஏதோ ஆச்சுதோப்பா உங்களுக்கு.நேற்று வரைக்க்கும் நல்லாத்தானே இருந்தனீங்கள் !

Rathi சொன்னது…

தமிழ் உதயம், தவறு, ஹேமா, ஏதோ எப்பவுமே சீரியஸாக பதிவு போட்டுக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. அதுதான் இப்படி ஆகிவிட்டது.

ஹேமா, ஜோதிஜியிடம் தான் திட்டு வாங்குவேன் என்று நினைத்தேன். ஜோதிஜிக்குப் பதில் நீங்கள்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அந்த சின்னக்குழந்தையின் கண்களில் ஒரு வசீகரம் இருக்கிறது ...

ஜோதிஜி சொன்னது…

நீங்க மட்டுமல்ல ரதி எல் போர்ட் சீரியஸ் இந்தம்மா இந்த அளவுக்கு போடு போடுறாங்களே என்று அவர் தளத்திற்கு சென்றேன். அவர் எங்கிருந்து தொடங்கினார் என்று ஜனவரி மாதம் சென்று பார்த்தேன்.

வெட்டிப் பேச்சு சித்ரா போல எளிமையாய் நகைச்சுவையாய் போட்டு நம்மளப் போல மண்டை உடைத்துக் கொள்ளல் எல்லாம் அங்கில்லை.

ரோஸ்விக் சொன்ன பெண்களைப்பற்றி கருத்து தான் வலையுலகதில் எழுதும் பெண்களைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியல.

உங்களால் நிறைய எழுத முடியும்? எழுதுவதற்கு நிறைய விடயமும் உண்டு. ஆனால் நேரமின்மை என்ற ஒற்றை காரணம் என்பது எனக்கு உடன்பாடில்லை.

அப்புறம் அந்த பசங்க தொங்கின படத்தை பார்த்தவுடன் இப்போது எழுதி வைத்திருக்கும் பள்ளி முதல் பள்ளியறை வரை ( திட்ட வேண்டாம்) நினைவுக்கு வந்தது.

ஜோதிஜி சொன்னது…

கனடா குளிர் பற்றி சுடுதண்ணி சொன்னார். தொடக்கத்தில் குளிர் ரொம்ப பிடிக்கும். இங்கும் இப்போது அதிக குளிர். ஒருவர் தூங்கும் போது தான் என் பகலில் ஆடிய ஆட்டத்தின் மிச்சமாக இருமத் தொடங்க தினந்தோறும் தூக்கம் 4 மணி நேரம் மட்டும் தான். வலையுலகத்தை மறக்க வேண்டியதாக உள்ளது. ஹேமா போட்டிக்கு தோர்ந்தெடுத்த ஒரு தலைப்பு படித்தீர்களா? இரண்டு நாள் மனதை பிறாண்டியது. (தலைப்பு மறந்து விட்டது)

விந்தைமனிதன் சொன்னது…

ஹை! ஜாலியா ஒரு பதிவு! நல்லாருக்கு! இது இது... இதத்தான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்தேன். சீரியஸ் பதிவு எழுதுங்க... ஆனா இந்த மாதிரி லைட்டா அப்பப்ப ஊறுகா மாதிரி சும்மா சுறுசுறுன்னு இருக்கிற மாதிரியும் எழுதுங்க. சிரிக்கத் தெரிந்த மிருகம் மனிதன் மட்டும்தானே?

டோண்ட் வொர்ரி...பீ ஹாப்பீஈஈஈஈஈஈஈஈ!

அப்புறம் அந்த கமெண்ட் மாடரேஷனை எடுத்திடுங்களேன்ங்க்கா! ஜோதிஜிகிட்ட ஒரே பாட்டாப்பாடி இப்பத்தான் எடுத்திருக்காரு! உடனே நல்ல எஃபெக்ட்! "கதவைத் திற... காற்று வரட்டும்!"

எப்டி எடுக்கிறதுன்னு தெரியலன்னு சொன்னீங்க... மெனக்கெட்டு கனடாவுக்கு கோல்மால் பண்ணியாவது விசா எடுத்துவந்து கொரவளையக் கடிச்சித் துப்பிடுவேன். முயற்சி பண்ணுங்க முடியும். நான் மொதமொதல்ல பொட்டிய...அதான் கம்ப்யூட்டர பாக்குறப்ப எப்டி ஆன் பண்ரது எப்டி ஆஃப் பண்றதுன்னு தெரியாம முழிச்சவன் தான்!

Rathi சொன்னது…

செந்தில்,

உலகின் முதல் அழகே குழந்தைகள் தான்.

ஜோதிஜி, விந்தைமனிதன் என்கிற இரண்டு later comers வணக்கமுங்க :)

ஜோதிஜி,

//வலையுலகதில் எழுதும் பெண்களைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியல//

இதென்ன கூத்து புரியலையே!!

அந்த பசங்க மரத்தில் தொங்கிற படத்தையே உங்க பதிவிலேயும் போட்டுடுங்க.

ராஜாராமன்,

அப்பாடா ஒருத்தராவது (நண்பர் தவறு இந்த பதிவின் "அழகு தனி" என்று சொல்லியிருக்கிறார்.) நல்லாருக்கு என்று சொல்லியிருக்கிறீங்க. ஹேமா திட்டினவுடனே "தோத்துட்டனோ" என்று யோசித்தேன் :)

உங்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கருத்துக்களத்தின் கதவை திறந்து விட்டிருக்கிறேன், குருஜி. அது சரி, ஏன் இந்தக் கொலைவெறி :)))

//டோண்ட் வொர்ரி...பீ ஹாப்பீஈஈஈஈஈஈஈஈ!//

நன்றி ஐயா.