டிசம்பர் 08, 2010

என் இனமே, என் சனமே... !!

இதை எழுத வேண்டாமென்று பொறுமை காத்துக்கொண்டிருந்தேன். செய்திகளைப்படித்துவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருந்தேன். இந்த காணொளியை கண்டபின் எனக்குள்ள இனமான உணர்வு என்னை எழுது என்று என் சிந்தனைகளைப் பிராண்டிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எழுதி ஈழத்தமிழனுக்கு எந்த துரும்பையும் நான் நகர்த்தப்போவதில்லை என்று தெரியும். இருந்தாலும் எழுதி வைக்கிறேன்.

ஈழத்தமிழன் புலத்திலும் சரி, ஈழத்திலும் சரி நிறையவே கெட்டிக்காரர்களாக தங்களை கருதும் சில "மாற்றுத்திறனாளிகள்" இருக்கவே செய்கிறார்கள்!! சிங்கள பெளத்த சிந்தனைகளை மட்டுமே புத்தியில் நிறைத்தவர்கள் ஆட்சியில் நிறையவே சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களாம் எம் மக்கள் என்று இவர் போன்றவர் சொல்கிறார்கள். காணொளியில், கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு சந்தோசமாய் இருப்பதாய் ஒப்பிவிட்டு அருகிலிருக்கும் யாரோ ஒருவரைப் பார்த்து, "நான் சொல்லிக்கொடுத்த மாதிரியே சரியா கதைச்சனானோ" என்று யாரிடமோ ஒப்புதல் வாங்குவது போலுள்ளது. இதெல்லாம் ஒரு பிழைப்பு.

                                                                                                                   

இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கபடுவதன் பாரிய விளைவுகளில் இதுவும் ஒன்று, அறியாமை. சர்வதேசத்தில் இலங்கையின் முகமூடி கொஞ்சம், கொஞ்சமாக கிழிந்து தொங்குவது தெரியாமல் தான் "ராஜபக்க்ஷேவின் ரசிகர்கள்" பேசுகிறார்கள் போலும். இப்பிடி பேசிப்பேசியே தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவார்கள். எங்கள் வேலையை குறைப்பார்கள். நீங்க பேசுங்க....

6 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நமது ஆற்றாமை, கவலைகள், இன உணர்வு, நாம் இழந்தவைகள் எல்லாம் சேர்ந்து, நம்மை இப்படி எழுத வைக்கின்றன. நாம் பின்னூட்டமிட்டும் எந்த துரும்பையும் நகர்த்த போவதில்லை என்று தெரிந்தாலும் - வலி உணர்ந்தவனுக்கே அடுத்தவனின் வலி தெரியும்.

விந்தைமனிதன் சொன்னது…

அட நாதாரிப்பயளுவளா!

தவறு சொன்னது…

வேதனைப்படுவதை தவிர வேறுவழியில்லை ரதி.

ஹேமா சொன்னது…

ரதி...ஏன் அவர் எச்சில் முழுங்கி முழுங்கிக் கதைக்கிறார் !

ஜோதிஜி சொன்னது…

எச்சிலை முழுங்கிக் கொண்டால் பேசுபவரின் பிழைப்பு நடக்கும். அவரின் வாழ்க்கை மூழ்கி விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கையாக இருக்கக்கூடும்.

படம் பார்த்து சிரித்தேன் ரசித்தேன் யோசித்தேன்.

Rathi சொன்னது…

தமிழ் உதயம்,

//வலி உணர்ந்தவனுக்கே அடுத்தவனின் வலி தெரியும்.//

உங்கள் புரிதலுக்கு நன்றி.

ராஜாராமன்,

:)

தவறு,

//வேதனைப்படுவதை தவிர வேறுவழியில்லை//

இருந்தாலும் ஈழத்து உறவுகளை விட்டுவிலகியோ அல்லது தவிர்த்துவிட்டோ நினைவுகளை நகர்த்த முடிவதில்லை.

ஹேமா,

ஜோதிஜி சொன்ன பதில் தான்.

ஜோதிஜி,

//படம் பார்த்து சிரித்தேன் ரசித்தேன் யோசித்தேன்.//

இதைத்தான் படிப்பவரிடம், பார்ப்பவரிடம் எதிர்பார்த்தேன். இதுவும் தவறு அவர்களின் தளத்தில் கிடைத்த படம் தான்.