டிசம்பர் 03, 2010

இந்தியரின் பார்வையில் போர்க்குற்றங்கள்.. ஊடகங்கள்...

கடந்த சில நாட்களாகவே ஈழம், போர்க்குற்றம், பிரித்தானியா, ஐரோப்பா, Channel 4, ராஜபக்க்ஷே, Wiki Leaks என்று செய்திகளிலும், பதிவுலகிலும் படித்தும், பார்த்தும் ஏதோவொரு சின்ன சந்தோசத்தோடு கூடிய கசப்பான மனோநிலைக்குள் எங்களை அறியாமல் தள்ளப்பட்டுவிட்டோம்.

எல்லாமே ஏதோ ஈழம் பற்றிய துன்பங்களுக்கு தீர்வு சொல்லாவிட்டாலும், சின்னதாய் ஓர் நம்பிக்கையை எங்கள் மனங்களில் விதைக்காமலும் இல்லை. ஈழத்தமிழர்களின் இனவழிப்பில் போர்க்குற்றம் ஒழிந்திருக்கிறதா? அல்லது போர்க்குற்றத்தில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் எங்களின் இனவழிப்பு மறைக்கவோ அல்லது வெளிக்கொணரவோ செய்யப்படுகிறதா? இந்தக் கேள்விகள் சுற்றிச்சுற்றி ஏனோ கடந்த சில நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. 

போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்ற ஒரு வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் முனைப்பில், மனிதம்  காப்பாற்றப்பட வேண்டும் என்ற மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடுவதில் உள்ள நியாயங்கள் சில கேள்விகளையும், பொறுப்புகளையும்  எங்களிடம் விட்டுச்செல்கின்றன. 

                                

செய்தி ஊடகங்கள், பதிவுலகம் என்று தொடர்ந்து செய்திகளை கவனித்து வருகிறேன். பதிவுலகில் தமிழ்நாட்டு தமிழர்கள் ஐரோப்பிய தமிழர்களின் ராஜபக்க்ஷேவின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்திற்கு பாராட்டு தெரிவிப்பத்தோடு, ஈழம் பற்றிய இந்திய நிலைப்பாடு குறித்து கேள்விகளையும், விசனங்களையும் வெளிப்படுத்துகிறார்கள். நியாயமானது தான். பிரித்தானியாவின் ஜனநாயகப்பண்பு இந்தியாவில் இல்லை அதனால் இந்தியனாய் வெட்கி தலைகுனிகிறேன் என்றெல்லாம் எது அவர்களை விசனப்பட வைக்கிறது? 

ஆனாலும், பதிவுலகம் தாண்டி மக்கள், அரசு என்கிற அளவுகளில் இதற்கான முனைப்புகளும், அழுத்தங்களும் கொடுக்கப்படுகிறதா என்று யோசித்தால், இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது. ஈழத்தமிழர்கள் இனவழிப்பில், போர்குற்ற விசாரணைகளில் ஓர் வெளிநாட்டு ஊடகம் செய்யும் முன்னெடுப்பை, எப்போதும் ஈழத்திலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது என்று சொல்லப்படும் இந்தியாவும் அதன் ஊடகங்களும் ஏன் செய்யத்தவறுகின்றன என்பது ஆச்சர்யப்படுவதற்குரிய விடயமல்ல. இருந்தாலும் ஓர் இந்தியரின் பார்வையில் இந்தியாவும் ஈழமும் என்கிற சிந்தனை அலைகளை, கேள்விகளை இந்தியர்களிடமும், என்போன்றவர்களிடமும்  விட்டுச்சென்ற ஓர் தளம் இது. தொடர்புடைய பதிவு.

எதுவாயினும் புரட்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் உருவாக்க முடியாது என்கிற இந்த விமர்சனம் இன்றைய நாளில் ஏனோ என்னைக்கவர்ந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

9 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கும் அக்கறை இந்திய அரசியலில் இல்லை.இனி இருக்கப்போவதுமில்லை ரதி.

இந்திய ஊடகங்கள் ஈழத்து பிரச்சனைகளைக் காட்டி மக்களை அழவைக்க விரும்பவில்லைப்போலும்.ஏனென்றால் சின்னத்திரை நாடகத்துக்கு கண்ணீர் இல்லாமல் போய்டுமெல்லோ !

Rathi சொன்னது…

ஹேமா,

எனக்கென்னவோ தமிழக தமிழர்களிடம் "இந்திய அரசியலுக்கு" நிச்சயம் பயம் இருக்கு என்றுதான் தோணுது. ஆனால், அதை உரிய முறையில் மத்திக்கு எடுத்துச்செல்லவும், சொல்லவும் தலைமை உறுதியாய் இருக்கவேண்டும். இதுக்குமேல என்னத்த சொல்ல......!!

இந்த கட்டுரையைப் படித்துப்பாருங்கள்.

http://maniblogcom.blogspot.com/2010/12/blog-post.html

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கென்னவோ தமிழக தமிழர்களிடம் "இந்திய அரசியலுக்கு" நிச்சயம் பயம் இருக்கு என்றுதான் தோணுது.////

அப்படி இல்லங்க. எங்க அரசியல்வாதிகள் சுயநலமிக்கவர்கள்ங்க. எங்களுக்கு் ள்ளேயே தார்மிக உணர்வு இல்லாமல் தானே வாழ்கிறோம். தமிழக மக்களில் சில சதவித மக்களுக்கு சுத்தமா ஈழம் பற்றின புரிதலே இல்லீங்க. இதை ஆரம்ப கட்டத்துலயே ஈழத்து தேசிய தலைமை புரிந்து கொண்டதால் தான் கடைசி வரை, கடைசி மூச்சு நிற்கும் வரை எந்த உதவியும் கோரல. எதிர்காலத்துல தமிழக தமிழ அரசியல்வாதிகள், மக்கள் மாறலாம். (இது நான் பார்த்த என் அனுபவத்தின் கருத்து)

தவறு சொன்னது…

உணர்வுபூர்வமா செயல்படும் தலைவர்கள் கம்மி.அரசியலுக்காக ஈழத்தை கையில் எடுப்பவர்கள் தான் அதிகம். அரசு எவ்வழியோ ஊடகங்களும் அவ்வழி ரதி.

Rathi சொன்னது…

தமிழ் உதயம், தவறு,

எப்படி யோசித்தாலும் கேள்விகேட்டாலும் அது பூமராங் போல திருப்பி வந்து தாக்குது.

அரசியல், ஊடகங்கள் எப்படி இருந்தாலும் மக்கள் சிந்திக்கத்தொடங்கினால் ஏதாவது நல்லது நடக்காதோ!!!????

விந்தைமனிதன் சொன்னது…

ரெண்டு நாளா வெளியூர்ப் பயணம். இன்னிக்குத்தான் இணையப்பிசாசின் பக்கம்... நல்லாருக்கு! போர்க்குற்றம்...சர்வதேசம்... இன்னுமா சர்வதேசத்தோட அறத்துமேல நம்பிக்கை?! உன் பலம் உன் கையில்...துப்பாக்கியின் மொழிமட்டுமே கேட்கப்படும் செவிட்டு உலகம்...எங்கே போனாய் பிரபாகரா... உன்னைத்தவிர வேறு யாரால் பேச இயலும்?

Rathi சொன்னது…

சர்வதேசம், போர்க்குற்றம் என்று நாங்கள் இன்னும் முயற்சிகளை தொடரத்தான் வேண்டும். ஆது காலத்தின் கட்டாயம். உணர்வுபூர்வமாகப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரியாயிருக்கலாம். ஈழப்பிரச்சனை இனி சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டால் தான் ஏதாவது நல்லது நடக்கும்.

சிங்கள ராணுவத்தின் போர்க்குற்றங்களை இலங்கையின் நீதித்துறை விசாரிக்கும் என்றோ, ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களையும், மனிதஉரிமை மீறல்களையும், அப்பாவித்தமிழர்களை கொன்று போட்டதை இந்தியா விசாரிக்கும் என்று நம்புவது அறிவீனம் என்று தெரியும். நாங்கள் ஈழத்தின் இந்திய அமைதிப்படையின் குற்றங்களை விசாரிக்க கேட்கவில்லையே!!!

சர்வதேசத்தின் அறம் பற்றி நம்பிக்கை இருப்பது இல்லாமல் போவதும் இரண்டாம் பட்சம் தான். ஈழத்தின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டால் தான் ஓர் இனத்தின் அழிப்பு வெளிச்சத்திற்கு வரும். எங்கள் அயராத முயற்சிகளில், திடமான செயற்பாடுகளில் தான் இருக்கிறது சர்வதேசம் எங்களுக்கு செவி சாய்க்குமா இல்லையா என்பது.

ஜோதிஜி சொன்னது…

விந்தை ராசா எழுதும் எழுத்துக்கள் இன்னும் நூற்றாண்டு காலம் கடந்து உயிர்ப்புடன் வாழும் தன்மை கொண்டது. கவனம் வேண்டும்.

ரதி தமிழ் உதயம் சொன்னது நூறு சதவிகிதம் உண்மை. ராஜிவ் படுகொலையில் நடந்த அத்தனை திறைமறைவு வேலைகளையும் ஊன்றி கவனித்த போது இந்த வாசகம் தான் உண்மை என்று என் மனது சொன்னது. காரணம் பொட்டு அம்மன் பிரபாகரன் உரையாடல். விரிவாக இந்த இடத்தில் பேச இயலாது.

அப்புறம் புரட்சி விழிப்புணர்வு, எண்ணங்கள் போன்ற பலவற்றுக்கும் சிறு பொறி பொதும். ஊடகங்கள் முழுமையாக கொண்டு சேர்க்க முடியாவிட்டாலும் இருவர் உரையாடும் உரையாடலில் நிச்சயம் பேச வைக்கும். இது போலத்தான் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கும் போய்ச் சேரும்.

ஆட்சி மாற்றம் உருவானதும் கவிழ்ந்து போனவர்களின் கதையும் இப்படித்தான். ஒரு வகையில் சந்தோஷம்.

இடுப்புகளைப் பற்றி மட்டுமே எழுதிக் குவித்து மிதந்து கொண்டுருந்த இணையத்தில் இப்பொழுதாவது தர்மம், போர்க்குற்றம், போன்ற வார்த்தைகள் வந்து கொண்டுருப்பதே முதல் முன்னேற்றம் தான்.

ஆரம்ப கட்டத்துலயே ஈழத்து தேசிய தலைமை புரிந்து கொண்டதால் தான் கடைசி வரை, கடைசி மூச்சு நிற்கும் வரை எந்த உதவியும் கோரல.

தவறு சொன்னது…

அரசியல், ஊடகங்கள் எப்படி இருந்தாலும் மக்கள் சிந்திக்கத்தொடங்கினால் ஏதாவது நல்லது நடக்காதோ!!!????

தமிழக மக்களை பொறுத்தவரையில் செம்மறியாட்டு கூட்டமாய் பாதி.
சிந்திக்கிறவர்கள் பேசலாம் சட்டத்திற்கு பயந்தே தன்னை ஒழித்துகொள்பவர்கள் ஒருபகுதி.
தமிழன் என்பதை விட இடைப்பட்ட இன , சாதிய
பாகுபாடு அதிகம்.அதனால் இன்னொரு தமிழனை பற்றி நினைக்க அருகதையற்றவனாக உள்ளான் ரதி.