டிசம்பர் 01, 2010

போர்க்குற்றங்களும்...... புலம்பெயர்தமிழர்களும் - என் புரிதல்கள்

இலங்கையின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்ற மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த Channel 4 ஊடகமும் சர்வதேச சமூகத்திற்கு தங்களால் இயன்றவரை நெருக்கடிகளை கொடுக்கும் இந்த வேளையில் தமிழர்களாகிய நாங்களும் எங்களின் பங்கை சொல்லவும், செய்யவும் வேண்டியது எங்கள் கடமை.                                    

Protesters at Heathrowஇலங்கை ஜனாதிபதி வழக்கமான சிவப்பு சால்வையும், தன்னை யாரும் அசைக்க முடியாது என்கிற வெற்றிப்புன்னகையுடன் இந்தியாவில் பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகளில் கலந்து சிறப்பித்துவிட்டு; இப்போது Oxford பல்கலைக்கழகத்தில் உரையாற்ற Private Visit என்கிற பெயரில் பிரித்தானியா சென்றிருக்கிறார். அங்கு அவர் பாதுகாப்பு செயலரையும் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

இந்தியாவில் இவரை சிறப்பிக்க அழைக்கப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றாலும் அதற்கு நிறையவே கண்டனங்கள் எழுந்ததன. ஐரோப்பா வாழ் ஈழத்தமிழர்கள் தங்களால் இயன்றவரை இலங்கையின் சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணைக்காக பிரித்தானியாவில் கைது செய்யப்படவேண்டுமென்று முயன்றுவருகின்றனர். அந்த முயற்சி போதுமா, போதாதா, வெற்றியளிக்குமா, இல்லையா  என்கிற கேள்விகளையும், சந்தேகங்களையும் கடந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.    

                                  இந்த நேரத்தில் Channel 4 தன் பங்கிற்கு இலங்கையின் போர்குற்றம் தொடர்பான சில காணொளிகளை மீண்டும் வெளியே கொண்டுவந்திருக்கிறது. அது கடந்த வருடம் வெளியிடப்பட்டதன் மேலதிக விவரங்கள் என்று சொல்லப்படுகிறது. இதை வழக்கம் போல் இலங்கை தன் பாணியில் மறுத்திருக்கிறது. ஈழத்தமிழன் சாவு பற்றிய எந்த காணொளியும் உண்மையென உறுத்திபபடுத்தப்பட (Authenticate) வேண்டுமாம்!!! செத்தவன் எழும்பிவந்து, "நான் செத்திட்டன்" என்று சொன்னால் தான் நம்புவார்களோ?

இதோ உலகால் இன்னும் உறுதிப்படுத்தப்படாத எங்கள் உறவுகளின் மரணம். பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள அக்கறை, அவசரம் இதில் இருக்கவேண்டும் என்று யாரும் இலங்கை பற்றிய பொது அறிவுள்ளவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.
16 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நாடு கடந்த தமிழிழ அரசால், இந்த விஷயத்தில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்கலாமா. அதன் கடமையில் இதுவும் ஒன்று தானே.

Rathi சொன்னது…

தமிழ் உதயம்,

நாடு கடந்த தமிழீழ அரசு ஏதும் செய்யுமா, செய்யாதா என்ற கேள்விகளுக்குப்பின்னே முதலில் அது பற்றிய புரிதல் வேண்டுமென்று நினைக்கிறேன். பயந்து விடாதீர்கள் நான் இப்போது அது பற்றி பேசப்போவதில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி நிறையவே விமர்சனங்கள் உள்ளன. சுருக்கமாக நாடு கடந்த தமிழீழ அரசு என்பது அதன் பெயருக்கேயுரிய எல்லா அதிகாரங்களையும் கொண்ட ஓர் அரசு கிடையாது என்பது என் கருத்து. அது ஒரு அமைப்பு. ஆனால் அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டது. அதன் "தேவை" அல்லது "பலம்" என்று யோசித்தால், நிச்சயம் அந்த அமைப்பு எங்களுக்கு தேவை என்பது என் கருத்து. காரணம், ஈழத்தமிழர்களில் சில "மாற்றுத்திறனாளிகள்" (வார்த்தை உபயம்: ஜோதிஜி) இருக்கிறார்கள். கடந்த வருடம் மே மாதத்திற்குப் பின்னே குழம்பிக்கொண்டிருந்த புலத்து தமிழனை நிச்சயம் குறிவைத்து அடித்து இலங்கை அரசின் பக்கம் அல்லது தங்கள் பக்கம் சாய்த்தாலும் சாய்த்திருப்பார்கள். (சிறந்த உதாரணம் கடந்த வருடம் ஈழப்போர் அங்கே நடந்து கொண்டிருக்க "விஜய் நம்பியார்" கனடா வந்து சில விளம்பரப்பிரியர்களை சந்தித்தது). ஈழத்தில் "தமிழ் தேசிய கூட்டமைப்பும்" நாங்கள் வாக்களித்து எங்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் "mandate" தான். இன்று அவர்கள் வெறும் பொம்மைகளாகவே ஆக்கப்பட்டுவிட்டனர்.

ஆக, எங்களுக்காக பேச, எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஓர் வலுவான கட்டமைப்பு தேவை. அதன் பலம் என்றால், அதை தீர்மானிக்க வேண்டியவர்கள் நாங்கள்.

மற்றப்படி உங்கள் கேள்விக்கு பதில், ஆம் அவர்கள் தங்களால் ஆனதை ஈழம் சார்ந்த எல்லா விடயங்களிலும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் பேச்சு சர்வதேசத்தில் எடுபட வேண்டுமென்றால் அது ஒவ்வொரு ஈழத்தமிழனின் கைகளிலும் தான் உள்ளது.

பாருங்களேன், ஜோதிஜி நிச்சயம் வந்து மாற்றுக்கருத்தை பதிவார்.

தமிழ் உதயம் சொன்னது…

தங்கள் விளக்கத்திற்கு நன்றி. புலம் பெயர்ந்த ஒரு சாமானியரின் பார்வையில் "நாடு கடந்த தமிழிழ அரசு" எப்படி தோன்றுகிறது என்று அறிய விரும்பி இருந்து இருக்கிறேன். தங்கள் விளக்கம் ஒரு விடை சொல்லி உள்ளது.

karthikkumar சொன்னது…

சேனல் 4 மற்றும் அங்குள்ள தமிழர்களின் செயல்தான் இன்று ஆக்ஸ்போர்ட் இல் ராஜபக்சேவின் உரையை நிறுத்தியிருக்கிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

//சுருக்கமாக நாடு கடந்த தமிழீழ அரசு என்பது அதன் பெயருக்கேயுரிய எல்லா அதிகாரங்களையும் கொண்ட ஓர் அரசு கிடையாது என்பது என் கருத்து. அது ஒரு அமைப்பு. ஆனால் அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டது. அதன் "தேவை" அல்லது "பலம்" என்று யோசித்தால், நிச்சயம் அந்த அமைப்பு எங்களுக்கு தேவை என்பது என் கருத்து.//

ரதி!எனது பதிவில் சதுக்கபூதம் கொடுத்த கார்டியன் இணைப்பில் ////http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/243811 அமெரிக்க அரசும் அதன் தூதரகமும் ராஜபக்சே,பொன்சேகா தொட்டு தமிழ்க்கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன்,மனோ,சிவாஜிலிங்கம் போன்றவர்களைக் குறிப்பிட்டு கேபிள் தகவல்களைப் பதிவு செய்வதன் காரணம் இவர்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்க்ப்பட்டு அரசியலில் இருப்பவர்கள் என்பதால்.நான்,நீங்கள் மற்றும் ஏனைய பதிவர்கள் பகிர்ந்துகொள்ளும் பதிவுகள் என்பவை வெறும் தெருக்கூச்சல் மட்டுமே.மக்களின் குரலுக்கு மறுபெயராக Street voice என்றே அழைக்கப்படுகின்றது.

எனவே மக்கள் ஆதரவுடன் கூடிய ஒரு அமைப்பு அவசியம் என்பதும் குறிப்பாக மக்கள் எண்ணங்களையும்,ஆசைகளையும்,தேவைகளையும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு அமைப்பாக தமிழீழ அரசோ அல்லது நாடு கடந்த தமிழீழ அரசோ அவசியம்.இதில் தமிழீழ அரசுக்கான சாத்தியங்களுக்காய் அடக்குமுறை,சிங்கள Chavanism இருப்பதால் நாடு கடந்த தமிழீழ அரசு நிச்சயம் தேவை.

dineshkumar சொன்னது…

ஈழத்தமிழன் சாவு பற்றிய எந்த காணொளியும் உண்மையென உறுத்திபபடுத்தப்பட (Authenticate) வேண்டுமாம்!!! செத்தவன் எழும்பிவந்து, "நான் செத்திட்டன்" என்று சொன்னால் தான் நம்புவார்களோ?
ஈழத்தமிழன் சாவு பற்றிய எந்த காணொளியும் உண்மையென உறுத்திபபடுத்தப்பட (Authenticate) வேண்டுமாம்!!! செத்தவன் எழும்பிவந்து, "நான் செத்திட்டன்" என்று சொன்னால் தான் நம்புவார்களோ?

ஈழத்தமிழன் சாவு பற்றிய எந்த காணொளியும் உண்மையென உறுத்திபபடுத்தப்பட (Authenticate) வேண்டுமாம்!!! செத்தவன் எழும்பிவந்து, "நான் செத்திட்டன்" என்று சொன்னால் தான் நம்புவார்களோ?

http://marumlogam.blogspot.com/2010/12/blog-post.html
இங்க வாங்க சகோ

தவறு சொன்னது…

"இலங்கை ஜனாதிபதி வழக்கமான சிவப்பு சால்வையும், தன்னை யாரும் அசைக்க முடியாது "

அசைக்க முடியாதது ஒன்றும் இல்லை . அசையும் காலம் வரும் பொறுத்திருப்போம்.

Rathi சொன்னது…

தமிழ் உதயம்,
:)

கார்த்திக்குமார்,

உங்கள் முதல் வருகைக்கு நன்றி. இது ஓர் சிறிய வெற்றியே ஆனாலும் சாதனை தான்.

ராஜ நடராஜன்,

முதல் வருகைக்கு நன்றி. //மக்கள் எண்ணங்களையும்,ஆசைகளையும்,தேவைகளையும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு அமைப்பாக தமிழீழ அரசோ அல்லது நாடு கடந்த தமிழீழ அரசோ அவசியம்.இதில் தமிழீழ அரசுக்கான சாத்தியங்களுக்காய் அடக்குமுறை,சிங்கள Chavanism இருப்பதால் நாடு கடந்த தமிழீழ அரசு நிச்சயம் தேவை. ///

உங்கள் ஆணித்தரமான கருத்துக்கு நன்றி. சதுக்க பூதம் கொடுத்த இணைப்பை மேலோட்டமாக பார்த்தேன். மீண்டும் ஆறுதலாக படிக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணைக்கான அவசியமான காரண, காரிய மற்றும் தேவையான சாட்சிகள் (விக்கி லீக்ஸ்) அனைத்தும் இருந்தும் இன்னும் இழுத்துக்கொண்டே இருக்கிறது, அரசியல் முட்டுக்கடை. பார்க்கலாம்.

தினேஷ்குமார்,

உங்கள் வருகைக்கு நன்றி. நிச்சயம் வருவேன், உங்கள் கவிதைகளை படிக்க.

தவறு,

ஒரு சிறிய வெற்றியே ஆயினும் பிரித்தானிய தமிழர்கள் சாதித்திருக்கிறார்கள். ராஜபக்க்ஷேக்கள் அணியும் அந்த "சிவப்பு" சால்வை தான் அவர்களின் கிரீடம் போலும்.

Thekkikattan|தெகா சொன்னது…

இன்று சானல் 4 வெளியிட்ட புது காணொளியை கண்டதிலிருந்து கொஞ்சம் மனச் சோர்வு. எப்படித்தான் இவர்களும் மனிதர்களென்று இத்தனை வன் கொடுமைகளும் செய்துவிட்டு நடமாடித் திரிகிறார்கள் என்று விளங்கவில்லை. :(

Rathi சொன்னது…

தெகா,

அது தான் சிங்கள ராணுவம். எந்த தண்டனை பற்றிய பயமும் இல்லாமல் இவ்வளவு சர்வ சாதாரணமாக இவற்றை செய்யுமளவிற்கு எந்த அதிகாரத்துக்கும் அல்லது அதிகாரிக்கும் பயம் கிடையாது இவர்களுக்கு.

எவ்வளவு சர்வதேச அழுத்தம், ஒரு சிங்கள சிப்பாயாவது விசாரிக்கப்பட்டானா?

உலகத்தின் பார்வைக்கு வராமல் இன்னும் நிறைய இருக்கிறது.

ஜோதிஜி சொன்னது…

எனது தாமத வருகைக்கு எங்க ஊர் இணையத் தொடர்பை தான் நீங்க திட்டனும்.

மற்றொன்று சொல்லியே ஆகனும்.

பொதுவா நாடு கடந்த தமீழழ அரசு பற்றி நீங்க கொடுத்த புரிந்துணர்வுக்கு என் வணக்கம்.

பொதுவாக இப்போதைய சூழ்நிலையில் உள்ளே இருப்பவர்களையும் இவர்கள் கெடுக்கப் போகிறார்கள் என்று சில புத்திசாலிகள் புலம்பிக் கொண்டுருக்கிறார்கள். இது என் பார்வையில் ஈழத் தமிழர்களின் ஆளுமை குறித்த அச்சங்கள் இவர்கள் மூலம் தீர்க்கும் என்ற நம்பிக்கை எனக்குள் நிறைய உண்டு. செயல்பட சாதிக்க காலம் ஆனாலும் பரவாயில்லை.

இவர்கள் குறித்து விமர்சனங்கள்?

நம்மவருக்கு எதில் தான் விமர்சனம் இல்லை. ஷகிலா படம் முதல் ஸ்பெக்ட்ரம் வரைக்கும் எல்லாவற்றிலும் விமர்சனம் உண்டு. அவர்கள் அத்தனை பேர்களும் விமர்சிப்பவர்கள் மட்டுமே?

ஜோதிஜி சொன்னது…

என்னுடைய பார்வையில் நீங்கள் இடுகையாக எழுதும் போது வேகம் இருப்பதாக அல்லது கோர்வை இருப்பதாக தெரியவில்லை. அதுவே ஒரு பின்னோட்டத்திறகு பதில் அளிக்கும் போது இந்த ராட்ஸச திறமை எங்கிருந்து வருகின்றது.

ஜோதிஜி சொன்னது…

தெகா நீங்க கொடுத்த விமர்சனத்திற்கு ஒரு 1500 வார்த்தைகளில் பதில் அளிக்க வேண்டும். இருங்க தாளித்து விடலாம். இன்று நீங்கள் அடைந்து கொண்டுருக்கும் மனச் சோர்வு கடந்த 16மாதங்களாக நான் தனிப்பட்ட முறையில் இந்த ஈழத்திற்குள்ளே வாழ்ந்தவர்கள் போல அடைந்த மனச் சோர்வு எழுத்தில் வடிக்க இயலாத ஒன்று.

இத்தனைக்கும் எதிர்மறை நியாயங்களை கோர்த்து பார்த்து படிக்கும் போதும் மனரீதியாக பாதிப்பு வரப் போகிறது என்று வீட்டில் உள்துறை அமைச்சர் திட்டும் அளவிற்கு பல விசயங்கள் நடந்தது. இப்போது தான் சற்று மீண்டு வந்துள்ளேன்.

ஜோதிஜி சொன்னது…

அசைக்க முடியாதது ஒன்றும் இல்லை . அசையும் காலம் வரும் பொறுத்திருப்போம்.


ஈழத்தில் மன்னர் ராஜராஜ சோழன் சாதித்து இருப்பதை பார்க்கும் போதும் சரி, இப்போது அந்த தடங்கள் எங்கே இருக்கிறது என்று யோசித்துப் பார்க்கும் போது இந்த பட்சே வெறும் பச்சகான்.

தவறு நீங்க சொல்வது முற்றிலும் சரியே.

காலமாகும். அவ்வளவுதான்.

ஜோதிஜி சொன்னது…

இதே ஒரு சிங் இனத்தில் நடந்து இருந்தால் விமான நிலையமே ரத்தக்காடாகியிருக்கும்.

Rathi சொன்னது…

ஜோதிஜி,

லேட்டா வந்ததும் இல்லாம சாக்குப் போக்கு வேறயா!!!

கடந்த வருடம் மேமாதத்திற்குப் பிறகு, தேசம், தேசியம், தன்னாட்சி என்ற வட்டுக்கோட்டை தீர்மானம் "நாடு கடந்த தமிழீழ அரசு" மூலம் ஈழத்தமிழர்களாகிய எங்களின் அரசியல் அபிலாஷைகளை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. நீங்கள் சொன்னது போல் அவர்கள் செயற்பட, சாதிக்க காலமாகலாம்.

ஜோதிஜி,

நான் இடுகையாக எழுதும் போது என்னால் கோர்வையாக எழுதமுடியவில்லை என்பது என்னைப்பற்றி எனக்கிருக்கும் சுய விமர்சனமும் கூட. இப்பத்தானே எழுத ஆரம்பித்திருக்கிறேன். கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க.

மற்றப்படி, இடுகையில் அதிக வேகத்தோடு எழுதுவதில்லை என்பது நான் கவனித்தே செய்வது. என்னுடைய அறிவையும், கருத்தையும் திணித்து மட்டுமே எழுதினால் படிப்பவருக்கு மனதில் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் குறைந்து போகும். படிப்பவர்கள் கேள்வி கேட்டு என்னை கொஞ்சம் அறிவாளியாக்குவார்கள் என்ற நம்பிக்கை தான். :)

(அப்பாடா எழுத தெரியாது என்பதை எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.)

தவிர, பதிவை விட பின்னூட்டங்களை மட்டுமே படிப்பவர்கள் பதிவுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

அப்புறமா, இத்தால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், ஜோதிஜி எனக்கு வழங்கிய "பின்னூட்டப் பேரொளி" (போராளி அல்ல) என்கிற பட்டத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்.