நவம்பர் 13, 2010

மூங்கில் காடுகளே...

இசை என்பதற்கு மயங்காத இதயங்கள் இருக்குமா தெரியவில்லை. இசையை கேட்க, ரசிக்க மட்டுமே தெரியும் எனக்கு. வார்த்தைகள் இல்லாத வாத்திய இசை. வாத்தியங்களே இல்லாத இனிமையான வாய்ப்பாட்டு. இசையும் வார்த்தைகளுமாய் இம்சை செய்யும், ரசிக்க வைக்கும் இசை அல்லது பாட்டு. இப்படி எத்தனையோ வகை.

அநேகமானோரைப்போல் எனக்கும் இசை அறிமுகமானது தமிழ்த்திரைப்படங்கள் மூலம் தான். எப்போதுமே இந்தப்பாட்டு தான் பிடிக்கும். இது காலத்தால் அழியாதது என்று சொல்கிற ரகம் இல்லை நான். புதிதாய் ஏதாவது பாடல்கள் கேட்க, ரசிக்க இனிமையாய் இருந்தால் கேட்பேன். அப்படி எனக்கு பிடித்த ஓர் பாடல் தான் இது. சாமுராய் திரைப்படத்தில் இந்த காட்சி பாடமாக்கப்பட்டதை விட You Tube இல் வேல்ராஜன் (இந்தக்கலைஞானி யாரோ தெரியவில்லை) அழகாய் காட்சிகளோடு தொகுத்த விதம் மனதை மேலும் அதிகமாக பாடலோடு ஒன்றவைக்கிறது. இசை ஹரிஸ் ஜெயராஜ்.

மனித மனங்களின் அழுக்குகளை ஓர் ஐந்து நிமிடங்களேனும் களைந்து நிஷ்களங்கமான மனோநிலைக்குள் நுழையவைக்கும் இந்தப்பாடலின் வரிகளும் இசையும். இயல்புவாழ்க்கையே ஆனாலும் அவ்வப்போது உண்டாகும் மன உளைச்சல்களினால் மனிதப்பிறவியை விடுத்து இயற்கையோடு இயற்கையாய் இரண்டறக் கலந்துபோகத் துடிக்கும் மனங்களின் குரலாய்!!!!

11 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

பாடலோடு தோன்றும் வண்ணக்காட்சிகள் வெகு அற்புதம்.///

திடீரென்று பதிவை காணாததால், பதிவை நீக்கி விட்டீர்களோ என்று நினைத்தேன்.

Rathi சொன்னது…

தமிழ் உதயம், நன்றி. அது, பதிவில் எழுத்துப்பிழையை திருத்திக்கொண்டிருந்தேன். :))

ஜோதிஜி சொன்னது…

இன்று அதிகாலை வேலையில் வேலைகள் தொடங்கும் போது கேட்ட சுகானுபவம்.

விந்தைமனிதன் சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது... வைரமுத்துவைப் பிடிக்கும் மிகச்சில தருணங்களில் இந்தப்பாடல் கேட்கும் தருணமும் ஒன்று.

என் இசையறிவு தமிழ்த் திரைப்பாடல்களோடும், கிராமியப் பாடல்களோடும் முடிந்து விடுகின்றது! இசைரசிகர்கள் மத்தியில் நானொரு பாமரத்தனமான ரசிகன்.

Rathi சொன்னது…

நன்றி ஜோதிஜி.

ராஜாராமன் நலமா!

நான் கர்நாடக சங்கீத அடிப்படைகளை கற்றுக்கொண்டேன், பாடசாலையில். பிறகு ஏதேதோ காரணங்கள், போர்ச்சூழல் இதன் காரணமாக தடைப்பட்டுவிட்டது. சில சமயங்களில் இசை பற்றிய விவாதங்களின் போது ஓர் ஞான சூனியம் போல் உணருவதுண்டு. மற்றப்படி அதற்காய் பெரிதாய் வருந்துவதில்லை.

ஹேமா சொன்னது…

எனக்கும் மிகவும் பிடித்த பாடல் ரதி !

தவறு சொன்னது…

காட்சிகளோடு பாடல் பார்த்து முடிந்ததும் பாடல் மனதில் ஒலித்தது. பகிர்வுக்கு நன்றி ரதி.

Rathi சொன்னது…

ஹேமா,

ஏகாந்தத்தை (solitude) விரும்பும் எல்லோருக்கும் இந்தப்பாடல் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.

தவறு,

நான் மேலே சொன்னது போல் ஏகாந்தத்தை விரும்பும் பொழுதுகளில் கேட்கும் பாடல் இது.

என்னைப்போல் பின்னூட்டம் போடவே Blogger Account தொடங்கியவர்களில் நீங்களும் ஒருவரோ!!. சொந்தக்காரணங்கள் ஏதும் இல்லையென்றால் ஏன் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை மற்றவர்களுக்கு பயன்தரக்கூடியதை எழுதக்கூடாது!!

Rathi சொன்னது…

மன்னிக்கவும், தவறு. நான் வேறோர் நண்பரை நினைத்துக்கொண்டு நீங்க Blog வைத்து எழுதுவதில்லை என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன். நேரமிருக்கும் போது உங்கள் தளத்திருக்கு வருகிறேன். நன்றி.

Thekkikattan|தெகா சொன்னது…

அழகான பாடல்! இந்த பாடலோடு அந்த புகைப்படங்களை இணைத்து விடுவதற்கு எத்தனை பிரயத்தனப் பட்டிருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது என்னே ரசனை, ஹா! :)

Rathi சொன்னது…

தெகா, உண்மையிலேயே அருமையான காட்சிகளின் தொகுப்பு. இயற்கையை அருமையாய் பாடலோடு இழையோட விட்டிருக்கிறார், வேல்ராஜன் என்பவர்.