நவம்பர் 01, 2010

பொருளியல் வாழ்வும் பொழுதுபோக்கும்!!


ஆதிகாலத்தில் மனிதன் உயிர்வாழத் தேவையான வாழ்வாதாரத்திற்கு ஏற்றாற்போல் தேவைகளும் பொருளாதாரா வடிவமும் இருந்தன. கால ஓட்டத்தில் மனித தேவைகளும் அதிகரித்து வாழ்க்கைமுறைகளும் கூட மாற்றமடைந்து இன்று கற்பனைக்கும் எட்டாத அற்புத வாழ்வில் மனம் திளைத்து வாழ்ந்து தேய்ந்து கொண்டிருக்கிறோம். மனித தேவைகளை Abraham Maslow ஐந்தாக வரிசைப்படுத்தியுள்ளார். Physiological, Saftety and Security, Love & Belonging, Self-Esteem, Self-Actualization என்பதே அவை. உடற்கூற்றின் தேவைகள் நீர், உணவு முதற்கொண்டு sex என்பது வரையும் (physiological), உயிர்வாழ்தலுக்குரிய பாதுகாப்பும் காவலும் (Safety & Security), எங்கள் மீது அன்புகாட்டவும் நாங்கள் சொந்தம் கொண்டாடவும் ஆன உறவு (Love & Belonging), சுய மதிப்பீடு (Self-Esteem), மேற்சொன்ன நான்கும் ஒருங்கே அமையப்பெற்று அதில் தன்னிறைவு கண்டால் இறுதியாக ஒருவர் தன் அறிவு, திறமைகளின் அடிப்படையின் தன்னைத்தானே இனங்கண்டு சுய விருத்தியை அடைதல் (Self Actualization) என்பனவாகும். இந்த ஐந்தில் எங்கோ ஓரிடத்தில் நிறைவு காணப்படாவிட்டாலும் மனித மனம் சிதைந்து போகும்.


ஆரம்பகாலங்களில் இருந்தது போலல்லாது சமூக, உற்பத்தி, பொருளாதார மாற்றங்களில் உண்டான முரண்பாடுகள் அதன் விளைவாய் உருவான புரட்சிகள் என்று மனிதன் தன் வரலாற்றை பல  இடங்களில் சிறப்பாகவும், சில இடங்களில் குரூரமாகவும் கொடுமையாகவும் இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறான். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினூடே உண்டான மாற்றங்கள் சமூக, பொருளாதார, அரசியல் சமமின்மையை அதன் இடைவெளிகளை அதிகரித்துக்கொண்டே போகின்றன. எதை நோக்கி இந்த ஓட்டம் என்று யாராவது நின்று நிதானித்து கேள்வி கேட்டால் அடுத்தவர் முந்திக்கொண்டு போய்விடுவார் என்ற பயத்தில் கேள்விகளே இன்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரின் வசதிக்கும், அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றாற்போல் white collar job, blue collar job, and general labour என்று உருவாக்கப்பட்டு ஒருவிதமான சமூக சிதைவுக்குள் (Depersonalized Society) எங்களை நாங்களே சிக்கவைத்துக்கொள்கிறோம். இதற்குள்ளிருந்து மீளவேண்டும், மனிதத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று எல்லோரும் ஒதோவொரு சந்தர்ப்பத்தில் நினைப்போம். ஆனால், வழிவகை தான் தெரியாது. அதையெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்க நேரப்பற்றாக்குறை. இருந்தாலும் ஏதோவொரு இடத்தில் இதை ஆரம்பித்துத் தானே ஆகவேண்டும். அது ஏன் ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்து தொடங்கக்கூடாது. எங்களில் யாருமே பரி பூரணமானவர்கள் கிடையாது. இது அறிவுரையல்ல. ஏதோ மனதில் தோன்றியது

இதை தொடரும் என்று போடமுன்....... மனித மனங்களை, தேவைகளுக்கேற்ப மாறும் குணங்களைப் படிப்பதில் எனக்குள்ள ஆர்வக்கோளாறினால் விளைந்த எழுத்து இது. உங்கள் விமர்சங்களை தொடர்ந்து மேற்கொண்டு தொடர்கிறேன்11 கருத்துகள்:

விந்தைமனிதன் சொன்னது…

இதற்கான வழிமுறைகளைத்தான் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும், இயங்கியல் பொருள்முதல்வாதமும் பகுத்தாய்கின்றது என்று எண்ணுகிறேன். எடுத்தவுடனேயே மிக ஆழமான சப்ஜெக்டைத் தொட்டிருக்கின்றீர்கள்.... புலிப் பாய்ச்சலுக்கு வாழ்த்துக்கள்.

Rathi சொன்னது…

ஆஹா!! முதல் பின்னூட்டமே ராஜாராமனுடையதா. சந்தோசம். சகோதரம், நான் சொல்லவருவது "Human Approach". அதில் ஒருவேளை நீங்க சொல்லும் ஏதாவது "இயல்" கலந்திருக்க அல்லது கலக்க வாய்ப்பிருக்கலாம். சார்பின்றி எழுதுமளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. அதில் எனக்கு பரந்த அறிவும் இல்லை. வாழ்த்துக்கு நன்றி. அப்போ பாஸ் ஆயிடுவனா!!!

ஜோதிஜி சொன்னது…

கல்லூரியில் சீனிவாசன் என்ற வேதியியல் துறை தலைவர் இருந்தார். வேதியியல் எனக்குத் துணைப்பாடம். வகுப்புக்குச் செல்லும் போது எரிச்சலாக இருக்கும். அவரை முதன் முதலாக பார்த்த போது வெளிப்படையாகச் சொல்லப்போனால் தெருவில் நிற்கும் பிச்சைக்காரர் தோற்றத்தில் இருந்தார். இன்னமும் எரிச்சல் அதிகமானது. முதல் வகுப்பில் அவர் பேசியது இன்று கூட மனதில் பசுமரத்தாணி போல இருக்கிறது.

நீங்க எல்லோரும் தமிழ் மூலம் படித்து வந்து இருக்கீங்க. முதலில் தமிழில் பேசி நம்மை புரிந்து கொண்டு பிறகு இந்த வேதி இயலை புரிந்து கொள்வோம் என்று அவர் அன்று நடத்திய ஒரு மணி நேரமும் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருந்தது.

ஒரு வகுப்பு கூட தவற விட்டது இல்லை. அடுத்த இரண்டு வருடத்தில் அவருடன் பழகிய போது அவரின் சொத்து மதிப்பு மயக்கம் போட வைத்தது. ஒரு ஓட்டை சைக்கிளில்தான் வருவார். எளிமை என்பதன் முழுமையான அர்த்தம்.

ஏன் இங்கு இவரைப் பற்றிச் சொல்கின்றேன்.

நான் என்ன எதிர்பார்த்தேனோ அப்படித்தான் உங்கள் எழுத்தும் நோக்கமும் இருக்கிறது.

பாஸா? இது என்ன சின்னப்புள்ளத்தனமான கேள்வி?

ஜோதிஜி சொன்னது…

கொடுமை கொடூரம் என்று எழுதவில்லை. ஒரு சரித்திரத்தையே மனித இனம் இன்று நாகரிகம் என்ற பெயரில் உருவாக்கிக் கொண்டுருக்கிறார்.

பகுத்து அறிதல் என்பது இன்று வெற்றிக்காக உழைத்தல் என்று மாறி வெறித்தனமான செயல்களில் ஈடுபட வைத்துக்கொண்டுருக்கிறது.

Rathi சொன்னது…

நன்றி ஜோதிஜி. ஆளில்லாத கடையில தேத்தண்ணி ஆத்தினாலும் பரவாயில்ல என்பது போல் ஏதோ மனதில் தோன்றியதை எழுதினேன். உங்கள் பின்னூட்டம் எதையோ உணரவைக்கிறது. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் திடீரென்று இந்த தளத்தை ஆரம்பித்தேன். அதே போல் தொடர்ந்தும் எழுதவேண்டும். அல்லது, இனிமேல் எழுதுவதில்லை என்று ஒருவேளை முடிவெடுத்தாலும் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, கவலையோ இன்றி இந்த பதிவுலகத்தை விட்டு போகவேண்டும். அதுவே என் விருப்பம்.

RV சொன்னது…

ரதி, ஆரம்பமே அருமையாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!

Rathi சொன்னது…

RV, நான் பதிவுலகில் சம்பாதித்துக்கொண்ட முதல் நட்பு. முதலில், என்னை உங்கள் தளத்தில் இத்தோடு மூன்றாவது தடவையாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள், நன்றி.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தனி மனித துவக்கம் என்பது மதங்களோடும், சுய நலத்தோடும் பிணைந்து கிடப்பதால் இது வர வாய்ப்பே இல்லை. காலம் முன்பில்லாதபடி வெகு வேகமாக நகரும் சூழலில் instant food மாதிரி உடனடி தேவைகளாக மாறிவிட்டன.. இயங்கியல் பொருள் முதல் வாதம் பற்றிய "உலகாதயம்" பற்றி இப்போதுதான் படிக்க ஆரம்பிக்கிறேன்.. ஒரு நாளைக்கு ஒரு பாரா என்று நகர்வதால் ஆறு மாதங்கள் ஆகும். அதன்பின் எனது புரிதல்களை எழுதுகிறேன்.. இனி கட்டுரைகளை விரிவாக எழுதுங்கள் ...

Rathi சொன்னது…

செந்தில்,

//தனி மனித துவக்கம் என்பது மதங்களோடும், சுய நலத்தோடும் பிணைந்து கிடப்பதால்...//

இது மாறவே மாறாதா என்ற ஆதங்கம் தான் இப்படி எதையாவது எழுத தூண்டுகிறது. உங்கள் புரிதல்களை எழுதுங்கள் படிக்க ஆவலாய் உள்ளேன்.

வானம் சொன்னது…

வணக்கம் ரதி,
வினவில் உங்கள் கட்டுரைகளை படித்திருக்கிறேன்.தேவியர் இல்லம் போனதில் நீங்கள் வலைப்பூ தொடங்கியது அறிந்தேன்.வாழ்த்துகள்.
தொடர்ந்து எழுதுங்கள்

Rathi சொன்னது…

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, வானம். தொடர்ந்து வாருங்கள்.