நவம்பர் 24, 2010

ஈழம்- கார்த்திகை 26, 27

கார்த்திகை 26, 27...

11 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

மனம் கனத்து நம்மை விரட்டும் பாடலிது.அடிக்கடி கேட்கும் ஈழத்து நினைவுப்பாடல்.நினைவோடு நிற்கும் ஈழம் கண்ணீருக்குள் !

விந்தைமனிதன் சொன்னது…

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே!

விந்தைமனிதன் சொன்னது…

பூ - உதிரும் என்பது மட்டுமல்ல; புதிய புதிய பூக்கள் மலரும் என்பதும் உண்மை.
- "யுகசந்தி" சிறுகதைத் தொகுப்பில் "பூ மலரும்" சிறுகதையில் ஜெயகாந்தன்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நாளை ஈழம் நிச்சயம் மலரும்.. எமது இனத்தின் தியாகங்கள் ஒரு போதும் வீணாகா...

ஒசை. சொன்னது…

நெடிய போராட்டத்திற்கு பயந்து,
இன்றைய சிறிய சிறிய லாபத்திற்கு மயங்கிவிடக் கூடாது -
இதுவே இந்த நாளில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து, இருப்பவர்களிடம் கேட்பது.

ஜோதிஜி சொன்னது…

மனதிற்கு ஒரு வருடமாக பூட்டி வைத்திருந்த விசயம் இது. இதுபோன்ற பலபாடலகளை கேட்டு இருக்கின்றேன். மேலும் பிரபாகரன் பேசிய பேட்டிகளை புலிகளின் போராட்ட காணோளி விசயங்களை கண்ட போதெல்லாம் எரிச்சலும் கோபமும் தான் எனக்கு உருவானது.

ஜோதிஜி சொன்னது…

பிரபாகரன் மாவீரர் தினம் என்று உருவாக்கியதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு தனிமனித வீரர்களும் முக்கியமானவர்கள். ஒவ்வொருவரின் தியாகமும் போற்றப்பட வேண்டும் என்ற கொள்கையினால் உருவானது. அதைப் போலவே நடந்த நிகழ்வுகளை ஆதாரமாக்குவதும், காணோளி மற்றும் புகைப்படங்கள் மூலம் ஆவணமாக்கிய அவரின் பாங்கு சம காலத்தில் எந்த தலைவர்களிடத்திலும் நான் பார்க்காத ஒன்று.

ஜோதிஜி சொன்னது…

போர் நடந்து கொண்டுருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்கத்தில் உள்ள மற்றவர்கள் அவரவர் வேலையில் இருந்தாலும் பிரபாகரன் அன்றாட பணி என்பது குறிப்பிட்ட சிலரின் வீடுகளுக்கு திடீர் என்று செல்வது. அவர்களின் மகன் மகள் குறித்து தகவல்களை தெரிவிப்பது, அந்த குடும்பத்தின் சுய தேவைகளை பரிசோதித்து வருவது என்று எண்ணிலடங்கா ஆச்சரிய தலைவன்.

ஜோதிஜி சொன்னது…

தமிழீழம் என்றொருதான் நினைத்து வைத்து இருந்த கனவு பிரதேசத்தில் தான் நினைத்தவாறே தமிழ் மொழிக்கு கொடுத்த மரியாதை என்பது சங்க கால புலவர்களும், தமிழர்களை ஆண்ட சேரசோழபாண்டிய மன்னர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள். அந்த அளவிற்கு இனத்தை நேசித்ததைப் போலவே மொழியை உண்மையாகவே நேசித்த மனிதன் பிரபாகரன் என்றொரு மாபெரும் ஆளுமை.

ஜோதிஜி சொன்னது…

ஆனால் இந்த இன வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டிய மேற்கித்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களுக்களுக்கு எதை விட்டுச் சென்றுள்ளார்?

மொத்தத்தில் அத்தனையும் மர்மத்தில் தொடங்கி மர்மத்தை வழிநடத்தி இன்று வரையிலும் என்ன நடந்தது நடந்து கொண்டுருக்கிறது நடக்கப் போகின்றது என்பது வரைக்கும் மர்மமாகவே இருக்கிறது.

அவரவர் நினைத்துக் கொண்டபடியே இந்த இனப் போராட்டமும் எவர் எவர் கையிலே சிக்கி இன்று வரை அவரின் தியாகம் எதுவும் போற்றுதலுக்குரியதாக இல்லாமல் வெட்ட வெளியில் அனாதையாகவே திரிகின்றது என்ற ஆதரங்கம் எனக்குள் உண்டு.

ஹரிஸ் சொன்னது…

நாளை ஈழம் நிச்சயம் மலரும்.. எமது இனத்தின் தியாகங்கள் ஒரு போதும் வீணாகா...

எங்கள் மாவீரர்களுக்கு வீரவணக்கம்..