நவம்பர் 17, 2010

பொருளியல் வாழ்வும் பொழுதுபோக்கும் - 2 Bread Winners and the Shrinking Paycheque

பொருளாதார வாழ்வு பற்றிய புரிதலுக்கும் தற்கால மனித தேவைகளுக்குமிடையே உள்ள இடைவெளியை எதைக்கொண்டு நிரவுவது என்று நினைப்பதுண்டு. பல சமயங்களில் இது தேவையா (Need) அல்லது விருப்பமா (Want) என்கிற குழப்பங்கள் வேறு. இது இரண்டுக்கும் இடையே எங்களை சமநிலைப்படுத்த முயற்சி செய்து வெற்றி, தோல்வியை கண்டவர்கள் பலர் இருப்போம். சில சமயங்களில் அத்தியாவசிய தேவை கூட அனாவசியம் போல் தோன்றும். ஒரு சில பொழுதுகளில் தேவைக்கு மீறிய விருப்பங்களுக்கு எங்களை பலியாக்கிவிட்டோமோ என்றும் நினைப்பதுண்டு. இதையெல்லாம் நிர்ணயிக்கும் காரணிகள் எது அல்லது எவையென்று யோசித்தால் பதில் ஒன்றிலொன்று தொக்கிநிற்கிறது. தேடலின் முடிவில் எங்கோ தூரத்தில் கண்ணுக்குத்தெரியாத புள்ளியாய் அற்பபதராய் தொலைவது போன்ற உணர்வு தான் மிஞ்சுகிறது. ஆனாலும், தனிமனித பொருளாதார தேவைகள் மற்றும் வருமானம், ஒரு நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் உலகமயமாக்கல் என்று மேலோட்டமாக சுருக்கமாக பதில் சொல்லலாம்.

பொருளாதார சுனாமிக்குப்பின் பொருளாதாரம் இத்தனை வீதத்தால் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று ஓர் நிதியமைச்சர் media stunt அடிப்பதிலோ அல்லது இங்கிலாந்தின் எதிர்கால இளவரசரின் நிச்யதார்த்தமோ வறுமைக்கோட்டை அழிக்கப்போவதுமில்லை; இனப்பிரச்சனைகளை தீர்க்கப்போவதுமில்லை. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை அதிலுள்ள சிக்கல்களை யதார்த்தபூர்வமாக சிந்திக்கலாம் என்று தோன்றுகிறது. வேலை அல்லது தொழில் அதன் மூலம் வரும் வருமானம் தான் வாழ்க்கை தரத்தையும் மனித வாழ்வின் நியாயமான சந்தோசங்களையும் நிச்சயிக்கிறது, நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும். தற்கால தேவைகளை தீர்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு குடும்ப வருமானம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் மாறிக்கொண்டிருக்கிறது. இங்கே கனடாவில் நான் கேட்ட ஓர் சொற்றொடர், "Shrinking Paycheque". வருமானத்தில் வரி, ஓய்வூதியம் அது இதுவென்று எதுக்கெல்லாமோ கழித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டவும் "சம்பளம்" என்று கொஞ்சம் தருகிறார்கள். Bread winners and the Shrinking Paycheque என்று எனக்குள் நானே தத்துவார்த்தமாக சிரித்துக்கொள்வதுமுண்டு, வேதனைப்படுவதுமுண்டு.

சுருங்கிச்செல்லும் வருமானத்தையும் தேவைகளையும் சமப்படுத்த இருக்கவே இருக்கிறது "கடன் அட்டை" (Credit Card) என்று தனியார் வங்கிகள் வரிசையில் நின்று வாரி வாரி (கடன் அட்டையைத்தான்) வள்ளலாய் வழங்குகிறார்கள். இவர்களிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்கமுடியாவிட்டால், "கடன் பட்டார் நெஞ்சம் போல்... " என்ற sentiment எல்லாம் எடுபடாது. அந்த கைங்கரியத்தை மட்டுமா செய்கிறார்கள்! ஏற்கனவே அரச ஒய்வூதியத்திட்டத்திற்கு வருமானத்தில் பிடித்துக்கொள்கிறார்கள். பிறகு இந்த தனியார் வங்கிகள் உங்கள் ஓய்வுக்காலத்தை சந்தோசமாக கழியுங்கள், அதற்காய் இப்போதே சேமியுங்கள் என்று என்னைப்போன்றவர்கள் வங்கிப்பக்கம் போகவே பயப்படுமளவிற்கு பிடித்துவைத்து அறிவுரை சொல்கிறார்கள். ஒருவர் தன் வாழ்வாதாரத்திற்காய் தான் அதையெல்லாம் சொல்கிறார் என்று நினைத்தாலும் சில சமயங்களில் கோபமாய் ஏதாவது சொல்லிவிடுவேனோ என்கிற பயமும் வருகிறது. இருந்தாலும் சில பேருக்கு சொல்லியிருக்கிறேன், "என் சொந்த எதிர்காலம் பற்றிய அக்கறை நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை விட எனக்கு அதிகம் இருக்கிறது. இருந்தாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி" என்று.

".... do not rock the boat. Do not ask difficult questions...' இதைத்தானா!! Charlie Veitch சொல்கிறார். இந்த வீடியோ சொல்லும் செய்தியை ஆர்வமிருப்பவர்கள் கவனியுங்கள்.

தொடரும்....15 கருத்துகள்:

விந்தைமனிதன் சொன்னது…

"வானத்துப்பறவைகளைப் பாருங்கள்! அவை விதைப்பதுமில்லை;அறுவடை செய்வதுமில்லை" என்ற பைபிள் வரி நினைவுக்கு வருகின்றது. (இது கமெண்ட் நெ.1)

இடுகை ஆங்காங்கே அலைவது போல் தோன்றுகின்றது. கொஞ்சம் நேர்க்கோட்டில் இழுத்துப் பிடிக்கலாமேயக்கா! அழகான அற்புதமான தலைப்பு... அடுத்தடுத்த பாகங்களில் பின்னி எடுக்க வாழ்த்துகிறேன். ( இது கமெண்ட் நெ.2)

கடன் அட்டை பற்றி என் கல்லூரிக்காலம் தொட்டுத் தொடர்ந்து வரும் நண்பன் - புரவலனும்தான் - அர. பார்த்தசாரதி ( தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப்பாரம்பரியம் - போத்தீஸ் விளம்பரம் ஞாபகம் வருதா!) ஒரு அருமையான கட்டுரை எழுதி இருக்கின்றான். பாருங்கள் அக்கா. http://parthasarathyrengaraj.blogspot.com/2010/09/blog-post.html & http://parthasarathyrengaraj.blogspot.com/2010/09/2.html ( இது கமெண்ட் நெ.3)

Rathi சொன்னது…

என் இடுகையிலுள்ள குறையை சுட்டிக்காட்டியமைக்கு உண்மையிலேயே நன்றி, ராஜாராமன். அடுத்து எழுதும் பதிவுகளில் அதை நிச்சயம் சரி செய்ய முயற்சிக்கிறேன். அதென்ன number போட்டு comment!! அர.பார்த்தசாரதியின் கட்டுரை இன்னமும் படிக்கவில்லை. படித்துவிட்டு சொல்கிறேன்.

ஹேமா சொன்னது…

இக்கரைக்கு அக்கரை பச்சையா ரதி.இங்கயும் இதே நிலைமாதான்.வெள்ளைக்காரன்போல வார இறுதிக் கொண்டாட்டம்,போக்குவரத்துச் செலவு என்று அதிகம் எடுத்துக்கொண்டால் அவ்வளவும்தான்.தெருவில துண்டு போட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான் !

கிரடிட் காட்...ஐயோ...ஐயோ...என்ன வில்லத்தனமான காட் அது !

மாணவன் சொன்னது…

//பொருளியல் வாழ்வும் பொழுதுபோக்கும் //

நல்ல ஒரு விரிவான அலசல்...

சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Rathi சொன்னது…

ஹேமா, மனிதனையும் அவனது இயல்புகளையும் நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டிய மருத்துவத்துறையும், நீதித்துறையும் புரிந்து வைத்திருக்கிறதோ இல்லையோ இந்த Corporate நிறுவனங்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

மனிதர்களை ஒருவரிலிருந்து மற்றொருவரை வேறுபடுத்துவதில் முக்கியமான ஒன்று பண்பாடு, Culture. Culture is a learned behaviour என்று சொல்வார்கள். கடன் அட்டையை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் புதிதாய் "Credit Card Culture" ஐ ஊக்குவிக்கிறார்கள், அவ்வளவு தான். இதில் வெள்ளையினத்தவர்கள், மற்றவர்கள் என்ற பாகுபாடு கடன் அட்டைக்கு தெரியாது. :)))

Rathi சொன்னது…

மாணவன்,

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஆங் சான் சூகி அம்மையார் பற்றி பதிவுலகில் நீங்கள் ஒருவர் தான் எழுதியிருக்கிறீர்கள் போலுள்ளது. அதற்கு உங்களுக்கு நன்றி.

ஜோதிஜி சொன்னது…

ரதி இது போன்ற கடினமான விசயங்களை நடைமுறை வாழக்கையோடு சம்மந்தப்படுத்தி சுவாரஸ்யமாய சொல்லுங்கள். காட்சியை மீண்டும் வந்து பார்க்கின்றேன். இதை அடிக்க ஒரு விரல் உபயம்.

Rathi சொன்னது…

//ரதி இது போன்ற கடினமான விசயங்களை நடைமுறை வாழக்கையோடு சம்மந்தப்படுத்தி சுவாரஸ்யமாய சொல்லுங்கள்.//

என் பதிவுலக குருஜிக்கள் சொன்னால் கேட்காமலா விடுவேன்! :)

அப்படிப்பட்ட என்னுடைய ஓர் சிறிய முயற்சி தான் இது. இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்.

ஜோதிஜி சொன்னது…

வானத்துப்பறவைகளைப் பாருங்கள்! அவை விதைப்பதுமில்லை;அறுவடை செய்வதுமில்லை

ஏன் ராசா ரதியோட தளம்ன்னா இந்த மாதிரி புகுந்து விளையாடுவீயோ?

அப்புறம் பதிவுலக குருஜீன்னு போட்டு தாக்கியிருக்காங்க. ஆஸ்ரமம் அமைத்தே ஆகனும் ராசா......

விந்தைமனிதன் சொன்னது…

//இதை அடிக்க ஒரு விரல் உபயம். // அது என்ன ஜோதிஜி! எப்பவும் திருக்குறள் மாதிரி பேசிக்கிட்டு? ஒத்தை விரல் மட்டும்தான் நாலஞ்சு நாளா பயன்பாட்டுல இருக்குன்னு தெளிவா சொல்லலாம்ல? இன்னுமா சரியாகல?

விந்தைமனிதன் சொன்னது…

//ஆஸ்ரமம் அமைத்தே ஆகனும் ராசா...... //

அப்டின்னா நீங்கதான் தலைவரு! நாந்தான் செயலாளரு! ஒரு பயலுக்கும் ஒரு போஸ்டிங்கும் கொடுக்கப்படாது. (அமைதிப்படை டயலாக் ஞாபகம் வருதா?)

ஜோதிஜி சொன்னது…

இல்ல ராசா. பழுக்கும் வரை காத்து இருக்க வேண்டுமாம்.

ரதி நீங்க உங்க கனடாவில் கல்வி கற்ற வாழ்க்கையைப் பற்றி ஒரு தொடர் போல எழுதுங்களேன். காரணம் இருக்கிறது.

Rathi சொன்னது…

அட பாருங்கப்பா ரெண்டு பேருக்கும் ஆச்சிரமம் தொடங்குவதில் இருக்கும் ஆர்வத்தையும், அவசரத்தையும். ம்ம்ம்.... வாழ்த்துக்கள். ஜோதிஜி, உங்களை ஏற்கனவே ஹேமா நித்தியின் பக்கதரா என்று கேட்டதாய் ஞாபகம்.

ஹைதர் அலி சொன்னது…

சகோதரி ரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வினவு ஊடாக உங்களுடைய ப்ளாக்கிற்கு வந்தேன்
இன்னும் எதனையும் படிக்கவில்லை
படித்துவிட்டு கருத்து எழுதுகிறேன்

Rathi சொன்னது…

நன்றி, சகோதரர் ஹைதர் அலி. கட்டாயம் மீண்டும் வாருங்கள்.