அக்டோபர் 29, 2010

எனக்குப் பிடித்த பாடல்

நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல். பகிர்ந்துகொள்கிறேன். என்னை பதிவு தொடங்க நச்சரித்த ஜோதிஜி, ராஜாராமனுக்கு நன்றி.


இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் ஈழம் பற்றிய நினைவுகளில், புலம் பெயர் வாழ்வின் கஷ்டங்களை ஏனோ என்னையுமறியாமல் நினைக்கவைக்கும். K'naan என்ற சோமாலியாவிலிருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் ஒருவரால்; அவர் சாதாரண இசைக்கலைஞராக இருந்த போது பாடப்பட்டது.


இந்தப்பாடலைப் பின்னர் ஹெயிற்றி நிலநடுக்கத்தின் பின் கனேடிய இசைக்கலைஞர்கள் அந்த இழைப்பின் உணர்வுகளை உள்வாங்கிப் பாடுவதுபோல் கொஞ்சம் மாற்றிப்பாடினார்கள். ஆனால், இதைவிட Coca-Cola நிறுவனம் உலகக்கிண்ண கால்பந்துப் போட்டிக்கு Anthem என்று சொல்லிவிட்டு, கடைசி நேரத்தில் "Wakka, Wakka...." என்ற பாடலை தேர்ந்தெடுத்தார்கள். அதன் அரசியல் பின்னணி ஒன்றும் புரிந்துகொள்ள முடியாத சூட்சுமம் அல்ல.


K'naan உடைய இந்த "Waving Flag" என்ற பாடல் அவர் தன் வலிகளினூடே தன் மக்களின் வலிகளை சொன்னதாக அவரே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் பாடிய போது இவரின் ஆங்கில உச்சரிப்பு சரியில்லை, அது இதுவென்று ஆயிரம் நொட்டை சொன்னவர்களை, கனடாவில் இந்தப்பாடலை சிறியவர் முதல் பெரியவர் வரை முணுமுணுக்கவும், செல்லிடப்பேசியின் Ring Tone ஆகவும் ஆக்கவைத்தார்.இந்தப்பாடல் இந்த வரிகளுடன் தான் முதன்முதலாக பாடப்பட்டது. பின்னர், வியாபார நோக்கில் நிறையப்பேரால் நிறையவே மாற்றப்பட்டுவிட்டது. ஈழத்தமிழர்களாகிய எங்களின் வலிகளை இதப்பாடல் வரிகள் சுமந்து வருவதால் எனக்கு மிகவும் பிடிக்கிறது.

14 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

என்னுடைய முதல் விமர்சனத்தை இங்க எழுதி வைப்பதில் அதிக மகிழ்ச்சியடைகின்றேன்.

ஜோதிஜி சொன்னது…

ஆகா என் பெயரை வேறு போட்டு விட்டாச்சா? நான் முதன் முதலாக கேட்ட ஆங்கிலப்பாடல். என்னவொரு அற்புதம். உண்மையிலேயே வீதியில் இருந்து தானே கற்றுக் கொண்டுருக்கிறோம். வார்த்தைகளும் வருவதால் ரொம்பவே சிறப்பு. நண்பர்கள் என்ற பகுதியை சேர்த்து விடுங்கள்.

பலரின் மன வானில் மறக்க முடியாத வலையுலக அனுபவத்தை தர தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள் ரதி.

ஜோதிஜி சொன்னது…

வாய்ப்பு இருந்தால் மின் அஞ்சல் வசதியை உருவாக்கி விடுங்கள்.

விந்தைமனிதன் சொன்னது…

ஹை! வாழ்த்துக்கள் அக்கா! முதல் கமென்ட் என்னோடது. பாட்டு கேட்டுட்டு மறுபடியும் வருவேன்.

வெறும்பய சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரி...

Rathi சொன்னது…

முதலில், நன்றி வெறும்பய. நான் அடிக்கடி நினைப்பதுண்டு இவர் ஏன் இப்படி பெயர் வைத்திருக்கிறார் என்று.

ம்ம்ம்ம்....... ஜோதிஜி, ராஜாராமன் என்ன சொல்ல!! நன்றியத்தவிர.

ஜோதிஜி மின்னஞ்சல் பற்றி யோசிக்கிறேன்.

ராஜாராமன் எனக்குப்பிடித்த பாடல் பற்றிய உங்கள் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன். உங்கள் மின்னஞ்சல் சோதிக்கவும்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அலுவலக நேரம்.. அதனால் பாடல் கேட்க முடியவில்லை ..

பதிவுலகிற்கு அன்புடன் வரவேற்கிறேன் ...

ஹேமா சொன்னது…

வந்துட்டாங்க வந்துட்டாங்க ரதியம்மா.

வாழ்த்துகள் ரதி.சந்தோஷமும் கூட.இனி எண்ணம்போல எழுதுங்க.நாங்களும் மனவானில் சேர்ந்து பறக்க வருகிறோம்.

வினவு சொன்னது…

ரதி,
வலைப்பூ ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி!!

பாடல் நன்றாக இருக்கிறது. ஆனாலும் சற்று பள்ளி மாணவர்களுக்கான ரைம்ஸ் போல வார்த்தைகள் எளிமையாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த பாடலை உலக கோப்பை கால்பந்து போட்டிக்கும் முக்கியமாக கொக்கோ கோலா நிறுவனமும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது நெருடலாக இருக்கிறது.

இந்த செய்திகள் பாடல் தரும் உணர்வு போன்ற குறிப்புகளோடு எழுதியிருக்கலாம் ரதி.

ஜோதிஜி
விமரிசனமே எழுதாமல் முதல் விமரிசனம் என்று நீங்கள் எழுதியதை ஒத்துக் கொள்ள முடியவில்லை!!

அந்த வகையில் வினவு எழுதியிருப்பதுதான் பதிவு குறித்த முதல் விமரிசனம் ! என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் ரதி, தொடர்ந்து எழுதுங்கள்!!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

A9 வீதியின் அனைத்து படங்களையும் பார்த்தேன்.. நீண்ட பெருமூச்சுதான் மிச்சம் ...

Rathi சொன்னது…

செந்தில், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

ஹேமா, //வந்துட்டாங்க வந்துட்டாங்க ரதியம்மா// வேண்டாம், நிறைய நோகுது பிறகு அழுதிடுவன். :)நன்றி ஹேமா.

Rathi சொன்னது…

வினவு என்று பார்த்தவுடனேயே எனக்குரிய அங்கீகாரம் இரட்டிப்பாபாய் கிடைத்ததாய் நினைக்கிறேன். மகிழ்ச்சி. வினவு நீங்கள் சொன்னது போலவே கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கிறேன். உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. தொடர்ந்து உங்களிடமிருந்து என் எழுத்துப் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். நன்றி வினவு.

ஜோதிஜி சொன்னது…

இந்த செய்திகள் பாடல் தரும் உணர்வு போன்ற குறிப்புகளோடு எழுதியிருக்கலாம் ரதி.

வருக தோழா. நான் அவசர வேலையினால் மின் அஞ்சலை சொடுக்காமல் போய்விட்டேன். நீங்கள் சொன்னது முற்றிலும் சரிதான். ரதி சொன்னது போல் பராவயில்லையே. கண்டு பிடித்து வந்துட்டீங்க. அந்த பாட்டு ரைம்ஸ் மாதிரி இருந்தாலும் மன அழுத்தத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் உணர்ந்து கொள்ள கேட்க ஏராளமாய் விசயங்கள் உண்டு.

விமரிசனமே எழுதாமல் முதல் விமரிசனம் என்று நீங்கள் எழுதியதை ஒத்துக் கொள்ள முடியவில்லை!!

நீங்கள் சொல்லியது யோசித்துப் பார்க்கும் போது உண்மையாகத்தான் தெரிகிறது. இதுவொரு விதமான சந்தோஷ மனநிலை. மேடையில் போய் ஏறியவுடன் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி நன்றி சொல்வோம் அல்லவா? இது போல எடுத்துக் கொள்ளலாம் தானே?

எடுத்தவுடன் நீட்டி முழங்கினால் பின்னால் பிடறி தெறிக்க ஓடி விடுவார்கள் அல்லவா?

உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் (முதல்?) ரதியுடன் சேர்ந்து வரவேற்கின்றேன்.

ஜோரா கையைத் தட்டும் சத்தம் கேட்கும் என்று நம்புகின்றேன்.

விந்தைமனிதன் சொன்னது…

பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தோழர் வினவு பள்ளி ரைம்ஸ் போல எளிமையாகக் கட்டமைக்கப் பட்டிருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார். எளிமையே வலிமையாக எனக்குத் தோன்றியது. மேலும் இந்தப் பாடல்தான் நான் முதன்முதலில் ஒன்றிக் கேட்கும் ஆங்கிலப் பாடலும்கூட. மிகவும் பொருத்தமான தேர்வு. (வரிகள் டிஸ்ப்ளே செய்யப் பட்டிருக்காவிட்டால் எனக்கு ஒன்றுமே புரிந்திருக்காது!)

"இன்று நாங்கள் விதைகளாக இருக்கிறோம்.... வனங்களை எமக்குள் கருத்தரித்தபடி!" (பாடலில் முடிவில் எனக்குத் தோன்றியது இந்த வரி)