அக்டோபர் 29, 2010

எனக்குப் பிடித்த பாடல்

நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல். பகிர்ந்துகொள்கிறேன். என்னை பதிவு தொடங்க நச்சரித்த ஜோதிஜி, ராஜாராமனுக்கு நன்றி.


இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் ஈழம் பற்றிய நினைவுகளில், புலம் பெயர் வாழ்வின் கஷ்டங்களை ஏனோ என்னையுமறியாமல் நினைக்கவைக்கும். K'naan என்ற சோமாலியாவிலிருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் ஒருவரால்; அவர் சாதாரண இசைக்கலைஞராக இருந்த போது பாடப்பட்டது.


இந்தப்பாடலைப் பின்னர் ஹெயிற்றி நிலநடுக்கத்தின் பின் கனேடிய இசைக்கலைஞர்கள் அந்த இழைப்பின் உணர்வுகளை உள்வாங்கிப் பாடுவதுபோல் கொஞ்சம் மாற்றிப்பாடினார்கள். ஆனால், இதைவிட Coca-Cola நிறுவனம் உலகக்கிண்ண கால்பந்துப் போட்டிக்கு Anthem என்று சொல்லிவிட்டு, கடைசி நேரத்தில் "Wakka, Wakka...." என்ற பாடலை தேர்ந்தெடுத்தார்கள். அதன் அரசியல் பின்னணி ஒன்றும் புரிந்துகொள்ள முடியாத சூட்சுமம் அல்ல.


K'naan உடைய இந்த "Waving Flag" என்ற பாடல் அவர் தன் வலிகளினூடே தன் மக்களின் வலிகளை சொன்னதாக அவரே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் பாடிய போது இவரின் ஆங்கில உச்சரிப்பு சரியில்லை, அது இதுவென்று ஆயிரம் நொட்டை சொன்னவர்களை, கனடாவில் இந்தப்பாடலை சிறியவர் முதல் பெரியவர் வரை முணுமுணுக்கவும், செல்லிடப்பேசியின் Ring Tone ஆகவும் ஆக்கவைத்தார்.இந்தப்பாடல் இந்த வரிகளுடன் தான் முதன்முதலாக பாடப்பட்டது. பின்னர், வியாபார நோக்கில் நிறையப்பேரால் நிறையவே மாற்றப்பட்டுவிட்டது. ஈழத்தமிழர்களாகிய எங்களின் வலிகளை இதப்பாடல் வரிகள் சுமந்து வருவதால் எனக்கு மிகவும் பிடிக்கிறது.